Tuesday, March 13, 2012

பில்லா 2 ஷூட்டிங் இடையே பட குழுவினருக்கு பிரியாணி சமைத்து போட்டார் அஜீத்!!!

Tuesday, March 13, 2012
‘பில்லா 2 பட குழுவினர் 150 பேருக்கு தானே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார் அஜீத். இது பற்றி படக்குழுவினர் கூறியது: வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத் தில் நடித்தபோது தானே சமையல்காரராக மாறி பிரியாணி சமைத்த அஜீத், அதை இயக்குனர்கள் குழு மற்றும் உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பரிமாறினார். மீண்டும் ஒருமுறை சமையல்காரராக அவர் மாறி இருக்கிறார். கோவாவில் ‘பில்லா 2Õ ஷூட்டிங் நடந்தது. படத் தில் 150 பேர் பணியாற்றினார்கள். திடீரென்று அவர்களுக்கு கமகம பிரியாணி பரிமாறப்பட்டது. பிறகுதான் அது அஜீத் சமைத்த பிரியாணி என்பது தெரிந்தது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ‘அஜீத் நல்ல நடிகர் என்பதுடன் சிறந்த செஃப் (சமையல்காரர்). படத்திற்காக போடப்பட்ட அரங்கிலேயே சிக்கன், மட்டன் என இருவகை பிரியாணி சமைத்தார். பிரியாணி செய்வதற்காக வேறு யாருடைய உதவியும் நாடாமல் தேவையான நேரம் எடுத்துக்கொண்டு சமையலில் ஈடுபட்டார். ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் அவர் பிரியாணி யின் பக்குவத்தை அடிக்கடி சென்று பார்த்தார். ருசியான அஜீத்தின் பிரியாணியை மீண்டும் சுவைக்க ஆவலாக இருக்கிறோம் என பட குழுவினர் கூறினர்.

அசைவத்துக்கு சைவம் தேடும் அம்மா!!!

Tuesday, March 13, 2012
த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது. பிள்ளையை பெற்றவர்கள் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் தங்கள் கடமை முடித்து விட்டதாக திருப்தியடைவார்கள். இந்த எண்ணம் தான் த்ரிஷா அம்மாவுக்கும். அதனால் வேகமாக மாப்பிள்ளை தேடிவருகிறார், தாய்க்குலம். இதற்காக புரோக்கர்கள் பலரும் முடிக்கி விடப்பட்டுள்ளார்கள். மாப்பிள்ளை பிராமணராக இருக்க வேண்டும். படித்த பண்புள்ள குடும்பமாக இருக்க வேண்டும் என்று த்ரிஷா அம்மா எதிர்பார்க்கிறார். பண வசதி தேவையில்லை. இந்தத் தகுதி உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. மேடத்துக்கு மந்திரம் ஓதவா...?

புதுமுக நடிகர்களுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்

Tuesday, March 13, 2012
செல்வா இயக்கிய படம் ‘நாங்கÕ. இதில் 5 ஜோடிகளில் ஒரு ஜோடியாக நடித்திருக்கின்றனர் வினோத், விஷ்ணுபிரியா. இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியானது. இதுபற்றி வினோத் கூறியதாவது: நடன பள்ளி யில் ஆசிரிய ராக இருந்தேன். நாங்க படத்தில் இயக்குனர் செல்வா வாய்ப்பு கொடுத்தார். 5 ஜோடிகளின் காதல் கதையான இதில், எனது காதலியாக விஷ்ணுபிரியா நடித்திருந்தார். படத்தில்தான் காதலர்களாக நடித்தோம். ஷூட்டிங்கில் வசனம் தவிர வேறு எதுவும் அவரிடம் பேசியதுகூட கிடையாது. ஆனால் எங்களுக்குள் காதலா என்கிறார்கள். இதில் நடித்த அனைவரும் இயக்குனர் செல்வாவுடன் சென்று ரஜினிசாரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர், ‘என்னை தேடி வாழ்த்து பெற நீங்கள் வந்ததுபோல், எதிர்காலத்தில் உங்களை தேடி மற்றவர்கள் வரும் அளவுக்கு உழைத்து முன்னேற வேண்டும்Õ என்றார். அவர் சொன்ன வார்த்தை புதுமுகங்களாக நடிக்க வரும் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது. அந்த வாழ்த்து மனதில் பதிந்திருக்கிறது என்றார்.

கோச்சடையான் குழு மார்ச் 21-ல் லண்டன் பயணம்!!!

Tuesday, March 13, 2012
கோச்சடையான் படப்பிடிப்பு நாளை மறுதினம் தொடங்குகிறது. சம்பிரதாயமாக படத்தை ஆரம்பித்துவிட்டு, வரும் மார்ச் 21-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லண்டனுக்குப் பறக்கிறது கோச்சடையான் யூனிட்.

'கோச்சடையானில் ரஜினிக்கு இவர் டூப் போடவிருக்கிறார்... அவர் டூப் போடுகிறார்' என்ற ரீதியில் வரும் செய்திகள் அனைத்துமே பக்கா கப்சா. காரணம், தன்னால் முடியாமல் போனால் அந்த படமே வேண்டாம் எனும் அளவுக்கு இந்த விஷயத்தில் கறாராக உள்ளாராம் ரஜினி.

சண்டைக் காட்சிகள், அப்பா - மகன் வேடங்கள் என அனைத்திலுமே தானே நடிக்கவிருக்கிறார் ரஜினி. இதற்காக பிரிட்டிஷ் ஸ்டன்ட் கலைஞர்கள் குழுவை ஏற்பாடு செய்துள்ளனர். ரஜினிக்கேற்ப அவர்கள்தான் காட்சிகளை வடிவமைக்கிறார்கள். பீட்டர் ஹெயின் அதை இயக்குவார்.

ஏற்கெனவே ஹாங்காங் போன படத்தின் இயக்குநர் சவுந்தர்யா, அங்கு படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை முடிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவின் முதல் ஹை டெக் படம் என்பதால் பக்கா திட்டமிடலுடன் படத்தை தொடங்குகிறார்கள்.

மணியை கோபத்துக்கு ஆளாக்கிய சமந்தா!!!

Tuesday, March 13, 2012
மீனவர்கள் பிரச்சினையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படம், 'கடல்'. இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கிவிட்டது. 'கடல்' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் சமந்தா வசனமே இல்லாத ஒரு காட்சிக்கு நடித்தாராம். அதுவும் அவர் 15 டேக் வாங்கித்தான் ஒழுங்காக நடித்திருக்கிறார். இதனை பார்த்த மணிரத்னம் கடுப்பாகிவிட்டாராம். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் படப்பிடிப்பின்போது இருந்த டெக்னீஷியன்கள் மேல் மணிரத்னம் எரிஞ்சி விழுந்தாராம். எங்கே நடிகையிடம் கோபத்தை காட்டினால் அவர் நடிக்க மாட்டாரோ என்று எண்ணிதான் மணிரத்னம் இவ்வாறு நடந்துகொண்டதாக பேசிக்கொள்கிறார்கள். சாரு, கதாநாயகியை தேடித் தேடி கண்டுபிடிச்ச இலட்சணம் இதானாக்கும். அழகா இருந்தா மட்டும் போதாதம்ணி.. சமத்தாவும் நடிக்க தெரியணும் ஆமா......

'பில்லா-2'வில் இலங்கை அகதியாக அஜித்?.

Tuesday, March 13, 2012
அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பில்லா - 2'. சக்ரி டோலோட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பாடல் வெளியீடு ஏப்ரல் 15 - 25-க்கும் இடைப்பட்ட தேதிகளில் இருக்கும். தேதி மற்றும் இடம் இன்னும் முடிவாகவில்லை. மே மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். இந்நிலையில், 'பில்லா 2' படத்தில் அஜித் இலங்கை அகதியாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தில் இலங்கையில் பிறந்த தமிழராக நடித்து இருக்கிறார் அஜித். படத்தில் அவர் இலங்கை அகதியாக நடிக்கவில்லையாம். டேவிட் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதை ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக கலந்து இருக்கிறார் சக்ரி டோலோட்டி. 'பில்லா 2' படத்தின் டிவி உரிமைகள் அனைத்தையும் சன் டிவி பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. போகிற போக்க பார்த்தா 'மங்காத்தா'வெல்லாம் தூக்கி சாப்ட்ருவாரு போலயே......

ஐஸ்வர்யா விரும்பினால் நடிக்கலாம் - அபிஷேக் பச்சன்!!!

Tuesday, March 13, 2012
குழந்தை குடும்பம் என புதிய உலகில் இருக்கும் தன் மனைவி ஐஸ்வர்யா ராய் விருப்பப்பட்டால் மீண்டும் நடிக்கலாம் என்று அபிஷேக் பச்சன் கூறினார்.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக நடித்த படம் குஜாரிஸ். நடிக்க ஒப்புக் கொண்டு, கர்ப்பம் காரணமாக பின் விலகிய படம் ஹீரோயின்.

ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த வருடம் நவம்பர் 16-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையுடன் விளையாடிக் கொண்டும், குழந்தைக்குத் தேவையானதை செய்து கொண்டும் முழு நேரமும் செலவிடுகிறார்.

ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பாரா என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது கணவர் அபிஷேக் பச்சன் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் முழு நேரமும் செலவிடுகிறார். அவர் நடிப்பதா வேண்டாமா என்பது ஐஸ்வர்யாராய்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் எப்போது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது நடிக்கலாம். நிறைய பேர் இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்," என்றார்.

இந்தி நடிகருடன் சேர்ந்து வாழ்கிறேனா? : எமி ஜாக்சன் பரபரப்பு பேட்டி!!!

Tuesday, March 13, 2012
இந்தி நடிகருடன் சேர்ந்து வாழ்வதாக கூறப்படுவது குறித்து எமி ஜாக்ஸன் பதில் அளித்தார். ‘மதராச பட்டினம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். அடுத்து கவுதம் மேனன் இயக்கிய ‘ஏக் தீவானா தாÕ என்ற இந்தி படத்தில் நடித்தார். இதில் ஹீரோ, பிரதீக். இவர்கள் இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதற்கு பதில் அளித்த எமி ஜாக்ஸன் கூறியதாவது: நடிகையாவேன் என்று கனவில்கூட நினைத்தது கிடையாது. இயக்குனர் விஜய், Ôமதராசபட்டினம்Õ படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தியில் கவுதம் மேனன் இயக்கிய Ôஏக் தீவானா தாÕ படத்தின் மூலம் அறிமுகமானேன். இதற்கு முன் நடித்த அனுபவம் கிடையாது. தமிழ் திரையுலகம்தான் நான் நடிப்பு பயின்ற முதல் இடம். இந்தியில் நடித்தபோது பிரதீக்குடன் காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசு வருகிறது. 2 வருடத்துக்கு முன் கவுதம் மேனன் வீட்டில்தான் பிரதீக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மனம்விட்டு பேசினோம். பிடித்துவிட்டது. ஆனால் நாங்கள் காதலிக்கிறோம் என்பது உண்மை அல்ல. எனக்கு ஏற்றவரை காண்பதற்காக காத்திருக்கிறேன். பிரதீக்கை பொறுத்தவரை இந்தி படத் தில் எனது லவ்வராக நடித்தார். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்வதாக சொல்வதும் தவறு. இந்தி பட புரமோஷனுக்காக என் வீட்டுக்கு பிரதீக் மட்டுமல்ல பட குழுவே அடிக்கடி வந்திருக்கிறது. அடுத்து தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறேன். இம்மாதம் ஷூட்டிங். விக்ரமுடன் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கிறேன்.

எக்கச்சக்க துணி - கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய சோனா!!!

Tuesday, March 13, 2012
சென்னை விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான துணிகளைக் கொண்டு வந்த நடிகை சோனா, அதற்கான வரியைச் செலுத்தாமல் சுங்க அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். கடைசியில், பணத்தை பின்னர் செலுத்திவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு கிளம்பினார்.

அடிக்கடி வெளிநாடு போய் புதுப்புது துணிகள், பேஷன் பொருட்களை வாங்கி வருபவர் சோனா. இது அவரது வியாபாரமும் கூட.

நேற்று நள்ளிரவு பாங்காங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தார் சோனா. இதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது நடிகை சோனா கொண்டு வந்த உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அவர் ரூ.27 ஆயிரத்திற்கும் அதிகமான ரெடிமெட் துணிகளை கொண்டு வந்தது தெரிய வந்தது (தாய்லாந்தில் துணிகளின் விலை மிகக் குறைவு!).

"இந்த துணிகளுக்கு சுங்க தீர்வை கட்ட வேண்டும்'' என்று சுங்க இலாகா அதிகாரிகள் சோனாவிடம் கூறினார்கள்.

ஆனால் நடிகை சோனா சுங்க தீர்வை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் நடிகை சோனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் செலுத்தவே மாட்டேன் என மல்லுக்கட்டிப் பார்த்தார் சோனா.

'சுங்க தீர்வை செலுத்தாமல் பொருட்களை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' என்று அதிகாரிகள் கறாராகக் கூறினார்கள்.

அதற்கு சோனா, 'என்னிடம் இப்போது பணம் இல்லை; சுங்க தீர்வையை நானோ என் உதவியாளரோ செலுத்தி பொருட்களை எடுத்து செல்கிறேன்' என்று கோபமாகக் கூறி விட்டுச் சென்றார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, March 13, 2012
சுந்தர்.சி. இயக்கும் ‘மசாலா கபே’ படத்தில் நடிக்கும் விமல் நகைச்சுவை ததும்பும் ஹீரோவாக வேடமேற்று கோபிசெட்டிபாளையத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

புனேவில் புதிய பங்களாவுக்கு குடியேறி இருக்கும் பூனம் பஜ்வா வீட்டை அலங்கரிக்கும் பணியில் பிஸியாக இருப்பதுடன் கோலிவுட்டில் நடித்து வரும் ‘எதிரி எண் 3’ ஷூட்டிங் அழைப்புக்காக காத்திருக்கிறார்.

நூற்றெண்பது’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்த பிரியா ஆனந்த் ‘இங்லிஸ் விங்லிஸ்’ என்ற இந்தி படத்தில் ஸ்ரீதேவியுடன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகிறது.

‘சென்னை 28’, ‘தமிழ் படம்’ ஆகிய படங்களில் நடித்த ஷிவா அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய முடிவு செய்திருக்கிறார்.

குழந்தை பெற்று ஓய்வில் இருக்கும் ஐஸ்வர்யராய் குண்டாகிவிட்டாராம். அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியான அவரது பப்ளிமாஸ் புகைப்படத்தை பார்த்து நழுவிக்கொண்டிருக் கிறார் களாம்.

மாற்றான் - சூர்யா, கே.வி.ஆனந்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை!!!

Tuesday, March 13, 2012
தமிழ்நாட்டில் தாயே தமிழே என்பவர்கள் ஆந்திரா சென்றால் அப்படியே மாறிவிடுவதை பார்த்திருக்கிறோம். எனக்கு தமிழ் ரசிகர்களைவிட ஆந்திரா ரசிகர்களையே பிடிக்கும் என்று ஒருமுறை கார்த்தி கலாய்த்தது நினைவிருக்கலாம். நடிகைகளும் தெலுங்கு சினிமா என்றால் தங்களது அல்டாப் வாலை சுருக்கிக் கொள்வார்கள். அதேபோலொரு சம்பவம்.

மாற்றான் படத்தின் கதையையோ, புகைப்படத்தையோ தமிழ் மீடியாவின் கண்ணில் காட்டாத சூர்யாவும், கே.வி.ஆனந்தும் ஹைதராபத் சென்று ஸ்பெஷல் பிரஸ்மீட் நடத்தியிருக்கிறார்கள். ஒரு நேரடி தமிழ்ப் படத்தின் முதல் பிரஸ்மீட்டை தெலுங்குதேசத்தில் நடத்தியது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.

மாற்றான் தமிழ்ப் படம். இதனை மொழிமாற்றம் செய்துதான் தெலுங்கில் வெளியிட இருக்கிறார்கள். அப்படியிருக்க தெலுங்குக்கு முதல் ம‌ரியாதை செய்திருக்கிறார்கள் நமது பச்சைத் தமிழர்கள். இப்படியொரு செயலை தெலுங்கு நடிகர் ஒருவர் செய்திருந்தால் ஆந்திராவே அவரை புறக்கணித்திருக்கும். தெலுங்கில் மாற்றானுக்கு டூப்ளிகேட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ச‌ரியாகதான் வைத்திருக்கிறார்கள் நமது டூப்ளிகேட் தமிழர்கள்.

கோலிவுட் ஹீரோயின்கள் தாங்கள் நடித்த வேடங்களுக்கு தாங்களே டப்பிங் பேசுவதில் திடீர் ஆர்வம்!!!

Tuesday, March 13, 2012
கோலிவுட் ஹீரோயின்கள் தாங்கள் நடித்த வேடங்களுக்கு தாங்களே டப்பிங் பேசும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய கறுப்பு வெள்ளை படங்களில் நடித்த சாவித்ரி முதல் சரோஜாதேவி வரை தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு தாங்களே டப்பிங் பேசினர். பின்னர் தமிழ் தெரியாத நடிகைகளை கோலிவுட்டில் நடிக்க படையெடுத்து வந்தனர். இவர்கள் ஷூட்டிங்கில் வசனங்களையே பேச முடியாமல் தடுமாறினார்கள். ஆங்கிலத்திலும், இந்தியிலும் தமிழ் வசனங்களை எழுதி வைத்து ஒப்பித்தார்கள். இன்னும் பல நடிகைகள் அந்த பாணியில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க வேறு ஒருவர் தேவைப்பட்டது. இதற்காக உருவாகி உள்ள டப்பிங் கலைஞர்கள் அமைப்பிலிருப்பவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

சமீபகாலமாக தமிழில் தாங்கள் நடித்த பாத்திரங்களுக்கு தாங்களே சொந்த குரலில் டப்பிங் பேசுகின்றனர். நடிக்க வந்ததுமுதல் த்ரிஷாவுக்கு வேறுவொருவர் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். 2 வருடத்துக்கு முன்பு ‘மன்மதன் அம்புÕ படத்தில் அவரே டப்பிங் பேசினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அந்த முயற்சியை தொடர்கிறார். ‘7ஆம் அறிவு படத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தானே டப்பிங் பேசினார். தற்போது மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில நடிக்கும் சமந்தாவும் டப்பிங் பேசி நடிக்கிறார்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் 'எதிரி எண் 3' !!!

Tuesday, March 13, 2012
உண்மைச் சம்பவங்கள் படமாவதும், சில சமயங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் போல் உண்மையில் நடப்பவையும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையர்களின் என்கவுண்டர் நிஜ சம்பவம் 'எதிரி எண் 3' படத்தின் கதை மற்றும் சம்பவங்களுடன் அப்படியே பொருந்தியிருக்கிறது.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதைப்படி, அதிபுத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளைக் கும்பல் தங்களது திருட்டுத் தொழிலுக்கும், வங்கிக் கொள்ளைக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டுகிறது. முதலில் யோசிக்காமல் இதற்கு சம்மதிக்கும் ஸ்ரீகாந்த், யோசிக்க ஆரம்பித்த உடன் நிகழ்கிற சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்காக வங்கி கொள்ளை மற்றும் என்கவுண்டர் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் நிஜ வங்கி கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவம் நடந்தது என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராம்குமார்.

இதில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜெயபிரகாஷ், சுமன், கஜினி ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தரண் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார்.

சேரனின் முயற்சியால் 'காயம்' ஆன 'வெங்காயம்!!!

Tuesday, March 13, 2012
கடந்த 2011ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகமே தூக்கி வைத்து கொண்டாடிய படங்களில் முக்கியமான ஒரு படம் 'வெங்காயம்'. திரையுலகத்தினர் இப்படத்தைப் பார்த்து கொண்டாடினார்களே தவிர, ரசிகர்கள் அல்ல. அதற்கு காரணம், விளம்பர உலமான இன்றைய காலகட்டத்தில் பெரிய படங்களின் பட்ஜெட் மற்றும் நட்சத்திர பலத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனதால்தான் வெங்காயம் என்ற ஒரு படம் வெளிவந்ததா? என்று ரசிகர்கள் கேட்கும் நிலை இப்படத்திற்கு ஏற்பட்டது.

இருப்பினும் திரையுலகத்தினர் முயற்சியில், அதிலும் இயக்குநர் சேரனின் முயற்சியால் இப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமார் என்ற இளைஞர் இயக்கி தயாரித்த இப்படத்தை இம்முறை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சேரன் தனது சொந்த பேனரில் 'காயம்' என்ற தலைப்பில் இப்படத்தை மீண்டும் வெளியிடுகிறார்.

இதுவரை கேமரா முன் நிற்காத சாதரண மக்களை நடிகராக்கி, எதார்த்தத்தையும் உண்மையையும் தைரியமாக சொல்லிய இப்படம் வரும் மார்ச் 23ஆம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குநர்களுக்கு சிறப்பு சலுகை - கோரிக்கை வைத்த இயக்குநர் ஜனநாதன்!!!

Tuesday, March 13, 2012
மீராவுடன் கிருஷ்ணா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சங்க பொருளாலர் எஸ்.பி.ஜனநாதன் அறிமுக இயக்குநர்களுக்காக புதிய கோரிக்கை ஒன்றை திரைத் துறையினரிடம் வைத்தார்.

கணவன் மனைவிக்கு உள்ள செக்ஸ் மட்டும் இல்லற வாழ்க்கை அல்ல. அதற்கும் மேலே உள்ள ஒரு விஷயம் புரிதல் இந்த புரிதல்தான் இல்லறத்தை நல்லறம் ஆக்கும் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான் 'மீராவுடன் கிருஷ்ணா' புதுமுகமான கிருஷ்ணா, கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதுடன் இப்படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

துவார்கமயி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ.விஜய் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.கே.செந்தில்பிரசாத் என்ற புதுமுகம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரகனி, சாந்தகுமார், சசி, சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஜனநாதன், "தமிழ் சினிமா நூறு ஆண்டுகளை கடக்கப் போகிறது. இங்கு பல நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் கூட காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலை இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு மட்டுமே. ஒரு கேமரா யூனிட் வைத்திருப்பவர் உள்ளிட்ட சினிமா தொழில் செய்பவர்கள் எப்போதுமே செழிப்பாகத்தான் இருக்கிறார்கள். எப்போதும் கேமராக்கள் பிஸீயாகத்தான் இருக்கிறது. பிலிம் விற்பனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நட்சத்திரங்கள் மட்டும் அவ்வப்போது கஷ்ட்டப்படுகிறார்கள். இதற்காக நான் சினிமா தொழி செய்பவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கேமராவின் வாடாகை ரூ.10000 என்றால் அறிமுக இயக்குநருக்கு அதை ரூ.2000 மாக குறைக்க வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறையும். அப்படி பட்ஜெட் குறையும் பட்ஜெத்தில் பெரிய தயாரிப்பாளர்கள் கூட புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். புதியவர்கள் வந்தால் புதிய முயற்சிகள் வரும். இது சாத்தியமான விஷயம்தான். இந்த கோரிக்கையை இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாகவும் வலியுறுத்த இருக்கிறேன்." என்றார்.

நடிகை வெளியிடும் கிக் வீடியோ!!!

Tuesday, March 13, 2012
சமந்த ஹீரோயினோட போலி பேர்ல உருவாக்குன டுவிட்டர் பக்கத்துல தப்பு தப்பா அவரை பத்தி மேட்டர்
வந்துச்சாம்... வந்துச்சாம்... இதை பார்த்து நொந்துபோன நடிகை, உடனே தன்னோட டுவிட்டர் பக்கத்துலேருந்து வெளியேறிட்டதா சொன்னாராம். இரும்பு பிடிச்ச கை சும்மா இருக்காதுன்றதுபோல மறுபடியும் வேற ஐடியோவோட டுவிட்டர் பக்கத்துல ஜாயின் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... திரும்பவும் யாராவது ஏடாகூடமா தான் எழுதமாதிரி எழுதிடுவாங்களோன்னு பயத்துலயே இருக்காராம்... இருக்காராம்...

ஹீரோக்களோடு கிசுகிசுக்கப்பட்டாலும் பரபரப்பு வந்தளவுக்கு சினேமான உல்ல நடிகைக்கு பட வாய்ப்பு வரலையாம்... வரலையாம்... இதனால சமீபத்துல கிக்கான வீடியோ ஆல்பம் தயார் பண்ணி நெட்ல ரிலீஸ் பண்ணாராம். அது பத்தி ந¤றைய பேர் விசாரிச்சதால உச்சி குளிர்ந்து போனவரு, மறுபடியும் ஒரு கிக் வீடியோ ஆல்பத்தை நெட்ல ரிலீஸ் பண்ண முடிவு பண்ணியிருக்காராம்... இருக்காராம்...

காட்டன் வீர ஹீரோ நடிக்கிற சகு படத்துக்கு ரீஷூட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... ஏற்கனவே இவரோட சலீமான வில்லன் நடிச்சாராம். அவரோட பிரச்னை ஏற்பட்டதால பிரகாச வில்லன புக் பண்ணிட்டாங்களாம்... பண்ணிட்டாங்களாம்... சலீமான வில்லன் நடிச்ச காட்சிகளை மறுபடியும் பிரகாச வில்லனை வெச்சி எடுக்கறதுக்கு பட குழு முடிவு பண்ணியிருக்காம்... பண்ணியிருக்காம்...

நிர்வாண சர்ச்சையும் நிற்காத வாய்ப்புகளும்!!!

Tuesday, March 13, 2012
நடிகைகள் சர்ச்சையில் சிக்குவது என்பது சித்தெறும்பு சர்க்கரையில் மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானது. ஒரே இனிப்பு மயம்தான்.

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக அறிமுகமானவர் சரண்யா. ஓ.. அப்படியா என்று சொல்லக் கூடிய அளவில்தான் நேற்று வரை நிலைமை இருந்தது. இன்று.... தயா‌ரிப்பாளர்கள் தேடி வந்து அட்வான்ஸ் தருகிறார்கள். எல்லாம் நிர்வாண போஸ் சர்ச்சையால் வந்த திடீர் வசந்தம்.

மழைக்காலம் படத்தில் சரண்யா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தார் என பரபரப்பாகப் பேசப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த சர்ச்சைக்குப் பின்னால் சரண்யா காட்டில் பரவலாக வாய்ப்பு மழை. முயல் என்ற புதிய படம் இந்த சர்ச்சைக்குப் பின்னால் கிடைத்திருக்கிறது. மேலும் சில படங்களில் நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம். பேராண்மை படத்தில் கிடைக்காத பாப்புலா‌ரிட்டி மழைக்காலம் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது என பூ‌ரிக்கிறார்.

படம் வெளிவந்தால் மேலும் பல வாய்ப்புகள் சரண்யாவுக்கு கிடைக்கக்கூடும்.

சினிமா எழுத்தாளர்கள் மீது பிருத்விராஜ் தாக்கு!!!

Tuesday, March 13, 2012
திருவனந்தபுரம் சினிமா எழுத்தாளர்களுக்கு இந்த காலத்து இளைஞர்களுக்கான கதை எழுத தெரியவில்லை என்றார் பிருத்விராஜ். மலையாள படங்கள் சமீபத்திய தேசிய விருதில் பின் தங்கியது. இதையடுத்து பிருத்விராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமகாலத்து கதைகள் எழுதுவதில் பஞ்சம் இருக்கிறது. பல்வேறு மலையாள எழுத்தாளர்கள் இந்த தலைமுறையினர் கிடையாது. இதனால் கதைகளிலும் புதுமை இல்லை. அந்த காலத்து கதைகள் போலவே இருக்கிறது. சமீபத்திய ஹிட் படங்களான ‘பியூட்டிபுல்’, ‘டிராபிக்’ ஆகிய படங்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள் எழுதியது. அது வெற்றிக்கு உதவியது. தங்களை சுற்றி இன்றைய காலகட்டத்தில் என்ன நிகழ்கிறதோ அதை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கிறார்கள்.

அதுதான் வெற்றிக்கு காரணம். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துவிட்டதால் நான் சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியாது. நான் ஒரு சாதாரண நடிகன். பட்டம் வைத்திருக்கும் நடிகர்களிடம்தான் பட்டத்தினால் என்ன முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை கேட்க வேண்டும். இவ்வாறு பிருத்விராஜ் கூறினார். ராவணன் படத்துக்கு பிறகு தமிழில் பிருத்விராஜ் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா - அமீர் காரணமா?.

Tuesday, March 13, 2012
கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என பெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த எதிர்ப்பின் பின்னணியில் இயக்குநர் அமீர் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையம் அருகே இன்று அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது.

ஃபெப்சி பிரச்சனையால் தமிழ் சினிமாவில் தற்போது எல்லா படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஷூட்டிங் மட்டும் எப்படி நடத்தலாம் என பெப்சி அமைப்பினர் நேரில் கேள்வி எழுப்பினர். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரகளை ஏற்பட்டது. பிரச்சனை முடியும் வரை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று தயாரிப்பாளரை ஃபெப்சி தொழிளாலர்கள் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தயாரிப்பு தரப்பில் கூறுகையில், "இயக்குனர் அமீரின் தூண்டுதலால்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். பருத்தி வீரன் தகராறை மனதில் வைத்துக் கொண்டு இவ்வளவும் செய்கிறார்," என்றனர்.

தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி தொழிளலார்களுக்கும் இடையே சம்பள விஷயத்தில் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பெப்சி சார்பில் பேசவும் முடிவெடுக்கவும் அமீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

எனவேதான், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதில் அமீருக்கு பங்கிருக்கலாம் என ஞானவேல்ராஜா கருதுகிறார்.

ஆனால் இதுகுறித்து அமீர் கூறுகையில், தொழிலாளர்களின் நலனைக் கருதி அவர்களுக்காக பேசுவதுதான் என் பொறுப்பு. என் சொந்தப் பிரச்சினைக்காக அவர்களைப் பயன்படுத்துமளவுக்கு நான் இறங்கிப் போக மாட்டேன். திரையுலகில் அனைவரும் பெப்சி பிரச்சினை முடிவுக்கு வருவதற்காக காத்திருக்கும் சூழலில், ஒரு சிலர் அதை மீறியதால் வந்த பிரச்சினை இது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை," என்றார்.

நிகில் முருகனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது!!!

Tuesday, March 13, 2012
தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் தொடர்பாளராக இருந்து வரும் நிகில் முருகனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருதினை மீடியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி வழங்கி கவுரவித்தது.

ரஜினி, கமல் உள்பட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும் பிஆர்ஓவாகப் பணியாற்றி வருபவர் நிகில்.

சென்னை நீலாங்கரையில் உள்ள மீடியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி தனது இரண்டாம் ஆண்டு விழாவில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதினை நிகிலுக்கு வழங்கியது. இயக்குநர் ஜெயம் ராஜா இந்த விருதினை நிகிலிடம் வழங்கினார்.

முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் ஜெயம் ராஜா, நிகிலைப் பாராட்டிப் பேசினார்.

விருது பெற்ற நிகில் கூறுகையில், "என் வேலை என்னவோ அதைச் சரியாக செய்வதாக நம்புகிறேன். இந்த விருது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்துடன் எனக்கு ஒரு புதிய பயமும் வந்திருக்கிறது. இருக்கிற பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்பதுதான் அது.

இந்த பெருமை எனக்கு கிடைத்ததில் என் உதவியாளர்களுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. ஒருவரை தேரை நிலைக்கு கொண்டுவர முடியாது. உடனிருந்து இழுத்துக் கொண்டுவர மேலும் ஆட்கள் வேண்டுமல்லவா...

நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த போது, இந்த மாதிரி விருதுகள் வரும் என்றோ, முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றே நினைக்கவில்லை.

'இதைச் செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே வேலை செய்தால் நம்மால் எதையும் சரியாக செய்ய முடியாது. அனைத்தையும் சரியாக செய்து கொண்டே இருப்போம், மரியாதையும் பலனும் தானாகக் கிடைக்கும்' என்பார் இயக்குநர் ஷங்கர். அதை மனதில் கொண்டே நான் பணியாற்றுகிறேன். விருதை நினைத்துப் பணியாற்ற ஆரம்பித்தால், இந்த மாசம் எந்த விருது, அடுத்த மாசம் எது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்," என்றார்.

என்னைப் பத்தி எழுதும்போது... - இது அசின் வேண்டுகோள்: விழாவுக்கு அவசரமாக வந்த சக நடிகைக்கு காஸ்ட்யூம் கொடுத்து உதவிய அசின்!!!

Tuesday, March 13, 2012
என்னைப் பத்தி எழுதும்போது... - இது அசின் வேண்டுகோள்: விழாவுக்கு அவசரமாக வந்த சக நடிகைக்கு காஸ்ட்யூம் கொடுத்து உதவிய அசின்!!!
ஏதோ ஒரு வகையில் தன்னைப் பற்றிய செய்தி சினிமாவுலகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு கலை. சினிமாவில் தானும் இருப்பதை உலகுக்கு உறுதிப்படுத்தும் ஒரு டெக்னிக் அது.

அசினுக்கு அந்தக் கலை நன்றாகவே கைவந்துள்ளது. எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தன்னைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். 'செல்ஃப் பிஆர்!'

சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்த அசின், அங்கு நிருபர்களைச் சந்தித்து, தான் ரொம்ப ரொம்ப பிஸியாக இருப்பதாகக் கூறினார்.

பெரும்பாலும் சினிமா பின்னணி உள்ளவர்கள்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆனால் நான் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். போராடி ஜெயித்தேன் என்றார்.

தன் குடும்பத்தில் தான் ஒருத்தி மட்டுமே திரைத்துறையில் இருப்பதாகவும், வேறு யாரும் வரவில்லை என்றும் கூறினார். எதற்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்றபோது, "எனது இந்தப் பின்னணி தெரியாமல் என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இனி எழுதும்போது இதனை ஞாபகம் கொள்ளுங்கள்," என்றார்...

விழாவுக்கு அவசரமாக வந்த சக நடிகைக்கு காஸ்ட்யூம் கொடுத்து உதவிய அசின்!!!

மும்பை பாலிவுட்டில் சக நடிகைக்கு தனது காஸ்டியூம் கொடுத்து உதவினார் அசின். பாலிவுட்டில் ஹீரோயின்களுக்கிடையே பலத்த போட்டி நடக்கிறது. ஒரு நடிகைக்கு வாய்ப்பு வந்து பிரச்னை எழுந்தால் அந்த பட வாய்ப்பை மற்றொரு ஹீரோயின் தட்டி பறித்து விடுவது வாடிகையாகிவிட்டது. அசினை பொறுத்தவரை தனது அணுகுமுறையில் வித்தியாசம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்தி நடிகைகள் நிறைய பேருடன் நட்பை வளர்த்து வருகிறார். இதற்கிடையே ஒரு நடிகைக்கு தனது ஆடைகளை கொடுத்து உதவியுள்ளார். இவர் நடித்துள்ள ‘ஹவுஸ்புல் 2Õ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மும்பயில் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அசின் பங்கேற்க சென்றார்.

அதே விழாவுக்கு படத்தில் நடித்த மற்றொரு நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் வந்திருந்தார். வந்தது முதல் அவர் முகம் வாட்டத்திலேயே இருப்பதை பார்த்தார் அசின். விழாவில் பங்கேற்கும் அவசரத்தில் சரியான உடை அணியாமல், மேக் அப் போடாமல் வந்துவிட்டதே ஜாக்குலினின் மூட் அவுட்டுக்கு காரணம் என்று தெரிந்துகொண்டார். தனது மேக்அப் மேனை அழைத்து ஜாக்குலினுக்கு மேக்கப் போட்டுவிடும்படி சொன்னதுடன் தனக்காக அணிய கொண்டுவந்திருந்த உடைகளில் சிலவற்றை ஜாக்குலினிடம் கொடுத்து அணிந்துகொள்ளும்படி கூறினார். அதன் பின் அசின் அளித்த ஆடையுடன் விழா மேடை ஏறினார் ஜாக்குலின்.

மார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்!!!

Tuesday, March 13, 2012
சிவாஜி கணேசன் நடித்த மிகப் பிரம்மாண்டமான காவியப் படம் கர்ணன். 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 48 ஆண்டுகள் கழித்து இப்போது மறுவெளியீடு செய்கின்றனர் சிவாஜியின் ரசிகர்கள்.

டிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதி துவங்குகிறது.

சென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. அதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாட சிவாஜியின் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். மொத்தம் 16 பாடல்கள். அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார்.

எஸ் ஏ அசோகன், என்டி ராமாராவ், தேவிகா, சாவித்ரி, முத்துராமன், எம் ஏ ராஜம்மா என பெரும் கலைஞர்கள் இந்தப் படத்தில் மகாபாரதப் பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.