Tuesday, March 27, 2012

என்னை மறந்துட்டீங்களா...? - கேட்கிறார் எமி!!!

Tuesday, March 27, 2012
விக்ரமை ரொம்ப பிடிக்கும், அவருடைய படங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று விக்ரமை புகழ்ந்து தள்ளுகிறார் நடிகை எமி ஜாக்சன். கூடவே தமிழ், இந்தி படங்களில் நடித்து கொண்டு இருந்த எமிக்கு இப்போது தெலுங்கு பட வாய்ப்பும் கிடைத்துள்ளதால் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். இங்கிலாநது நாட்டை சேர்ந்த எமியை, தேடி கண்டுபிடித்து தமிழில் 'மதராசப்பட்டினம்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய். முதல்படத்திலேயே நல்ல பெயரை பெற்ற எமி, ரசிகர்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தையும் பிடித்து கொண்டார். அடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீ-மேக்கான 'ஏக் தீவானா தா' என்ற படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றார். இப்போது தமிழில் 'தாண்டவம்' படத்தில் நடித்து வரும் எமிக்கு தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறதாம். 'தாண்டவம்' படத்தில் விக்ரமுடன் நடிப்பது குறித்து எமியிடம் கேட்டால், 'தாண்டவம்' படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட ரோல் சூப்பரானது. டைரக்டர் விஜய் ரொம்ப அழகாக கதையை வடிவமைத்து இருக்கிறார். விக்ரமை ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரணம் அவருடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பு, கேரக்டர் இருக்கும். 'தாண்டவம்' படத்தில் விக்ரம் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவார் என்று விக்ரமை பற்றி அநியாயத்துக்கு புகழ்ந்து தள்ளுகிறார். சரி மொழி பிரச்சினையை எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்டால், ரொம்ப சீக்கிரம் தமிழ் பேச கற்று கொள்வேன் என்று சொல்லும் எமி, என்னை மறந்துட்டீங்களா என்று அவர் ஸ்டைலில் பேசி நம்மை ஆச்சர்யப்படுத்தினார். (துரையம்மாவ மறக்கமுடியுமா..?) மேலும் தெலுங்கு பேச ரொம்ப கஷ்டமா இருக்கு, இருந்தாலும் எல்லா மொழியையும் சீக்கிரத்தில் கற்று கொள்வேன், எல்லா மொழியிலும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார். துரையம்மா.. ரொம்பத்தான் தாண்டவமாடுறீங்க போல.....

பட்டத்தை வெல்ல சென்னை வாசிகளுக்கு தனுஷ் அழைப்பு!!!

Tuesday, March 27, 2012
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.2012) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து வையுங்கள் என வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசியதாவது: "ஒவ்வொரு ஆண்டும் பூமிநேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பூமிநேரம் வரும் 31.03.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு கடைபிடிக்கப்பட இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 6 பெரிய நகரங்கள் இந்திய அளவில் கலந்து கொள்கின்றன. இதில் எந்த நகரத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொள்கிறார்களோ அந்த நகரத்திற்கு 'பூமி நேரத்தின் சாம்பியன் நகரம்' (earth hour champion) என பட்டம் வழங்கப்படும். அந்த பட்டத்தை சென்னை வெல்ல வேண்டும். அதற்கு சென்னைவாசிகள் ஆதரவு தரவேண்டும்" என்றார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம் (World Wild Fund). இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும். புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ்பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அண்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு 4000 நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். 2010-ல் 100 நாடுகளைச் சேர்ந்த 5 கோடி பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 135 நாடுகளில் உள்ள 5200 நகரங்களைச் சேர்ந்த 1.8 பில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். தனுஷ் பேசிட்டிருக்கும்போது கரண்ட் கட் ஆனது தான் இந்த நிகழ்ச்சியோட ஹைலைட்! அணைச்சா கிடைக்கும்னா..... அணைச்சிட வேண்டியதுதான்! அட.. லைட்டங்க....

வில்லனாக மாறிய சூர்யா?!!!

Tuesday, March 27, 2012
தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கான தமிழ் மசாலா சினிமா ஃபார்முலாவில் குறைந்தது அரைடஜன் வில்லன்களை வைத்து கதை பின்னுவதை வழக்கமாக்கி விட்டார்கள். 'கோச்சடையான்' 3டி அனிமேஷன் படமும் இதற்கு விதிவிலக்கு கிடையாதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு மொத்தம் ஆறு வில்லன்கள். அதேபோல விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி'யில் பிரதான வில்லனை அடையும் முன்பு, மூன்று கொடூரமான தாதா வில்லன்களை, மிக புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி போட்டு தள்ளும் விஜய் இறுதியில் போட்டுத்தள்ளும் வில்லனை சோட்டா சகில் போல சித்தரித்திருக்கிறாராம் ஏ.ஆர் முருகதாஸ். இது ஒருபுறம் இருக்க தற்போது கோடம்பாக்கத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் 'மாற்றான்' படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்று மறுத்திருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், அந்தப் படத்தில் சூர்யாவும் ஒரு வில்லன் என்பதை மட்டும் மறைத்து விட்டார் என்கிறார்கள் சூர்யா வட்டாரத்தில்! மாற்றானில் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய மூன்றுபேர் வில்லனாக நடிக்கிறார்கள். ஒருவர் 'நடுநிசிநாய்கள்' படத்தில் அறிமுகமான வீரா, மற்றொருவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' மிலிந் சோமன், முன்றாமவர் 'காக்க காக்க' டேனியல் பாலாஜி! இவர்களோடு நான்காவதாக சூர்யாவும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது திரைக்கதையின்படி இந்தப் படத்தில் சூர்யா ஏற்றிருப்பது வில்லன் கதாபாத்திரம்தானாம்! மங்காத்தா ட்ரெண்ட் செட்டா...?

ஸ்ரீதேவி வயசுக்கு இது சரியல்ல... - பெண்கள் அமைப்பு எச்சரிக்கை!!!

Tuesday, March 27, 2012
யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் 'பதினாறு வயதினிலே' ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை கடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு. பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சினையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள். மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், 'இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல' என்கின்றன. சான்ஸ் மகளுக்கா.. இல்ல இவருக்கானு கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு., இப்பவும் எம்புட்டு அழகா ஒடம்ப வச்சிருக்கேன் பாருங்கனு காட்டுறாரோ என்னவோ...?

புகைப்பட கலைஞர் சுந்தரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆண்ட்ரியா...?!!!

Tuesday, March 27, 2012
சிறந்த பாடகர் மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவும், சிறந்த புகைப்பட கலைஞர் மற்றும் நடிகரான சுந்தர் ராமுவும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் இதழ் ஒன்றில், ”எனக்கும், நடிகை ஆண்ட்ரியாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அது நாளடைவில் காதலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும்” பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது, “சுந்தர் ராமு எனக்கு நெருங்கிய நண்பர். அவரை எனக்கு 10 வருடங்களாக தெரியும். அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல பிரண்ட்ஸிப் இருக்கிறதே தவிர மற்ற படி எதுவுமில்லை. நான் அவரை காதலிக்க வாய்ப்பே இல்லை என்றும், மேலும் திரைப்படத்துறையை பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் மற்றும் சிறந்த நடிகர்” என்று கூறினார்.

நடிகர் சுந்தர் ”மயக்கம் என்ன” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது விரைவில் வெளியாகவிருக்கும் தனுஷின் ”3” படத்திலும் நடித்திருக்கிறார்.

விஜயின் “நண்பன்” சென்ட்ரல் ஜெயில் கைதிகளுக்காக திரையிடப்பட்டது!!!

Tuesday, March 27, 2012
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து ஹிட்டான ”நண்பன”' திரைப்படம் சேலம் சென்ட்ரல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்காக ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்ட்து. இதன் மூலம் கைதிகளை மனிதாபிமானத்துடன் திருத்தும் வகையில் 'சேலம் சென்ட்ரல் ஜெயில்' ஒரு முன்னுதாரணமாக செயல்படுகிறது என தெரிகின்றது. இத்திரைப்படம் கைதிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தது.

மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முலம் கைதிகள் தங்கள் ஜெயில் வாழ்க்கையின் துயரத்தை மறந்து சிறிது நேரம் சந்தோஷமாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறந்த படங்களை தேர்வு செய்து திரையிடுவதன் மூலம், கைதிகளை நல்வழிப்படுத்தவும் முடியும். மொத்தத்தில் ”நண்பன்” திரைப்படம் சேலம் சென்ட்ரல் ஜெயில் கைதிகளுக்கு ஒரு விருந்தாக அமைந்ததோடு, அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு முன்னுதாரமாகவே அமைந்தது என்பது குறிபிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர், ஹிந்தியில் ஹிட்டான ”3இடியட்ஸ்” படத்தினை தமிழில் ”நண்பன்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது இதில் முன்ன்னணி நட்சத்திரங்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் சத்யராஜ் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

த்ரிஷாவின் கருணை மனசு!!!

Tuesday, March 27, 2012
சர்ச்சைகளுக்கு எந்த அளவு பிரபலமோ, அதே அளவு சமூக நலப் பணிகளிலும் த்ரிஷா பிரபலம்.

தனது ஒவ்வொரு பட ரிலீசின்போதும் ஆதரவற்றோருக்கு ஏதாவது உதவி செய்வது அவர் வழக்கம். இதற்காகவே அவரது ரசிகர் மன்றங்கள் செயல்படுகின்றன.

பிறந்த நாள் போன்ற விசேஷங்களின்போது பகல் முழுவதும் பல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்கள், மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவார் த்ரிஷா. மாலையில்தான் நண்பர்களுக்கே நேரம் ஒதுக்குவாராம்!

இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருக்கும் அவர், திடீரென ஒரு நாள் காஞ்சிபுரத்துக்கு கிளம்பிப் போயிருக்கிறார்.

அங்குள்ள மனநலம் பாதித்த குழந்தைகள் காப்பகத்துக்குப் போன த்ரிஷா, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தன் கையால் உணவு வழங்கி நீண்ட நேரம் அவர்களுடன் செலவிட்டாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற அனுபவங்கள்தான் எனக்கு மிகுந்த நிறைவைத் தருகின்றன. அன்றைக்கு காஞ்சிபுரத்தில் அந்தக் குழந்தைகளோடு இருந்தது மறக்க முடியாதது. ஒவ்வொருவரும், தங்களால் முடிந்த அளவு இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுங்கள்," என்றார்.

தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம்!!!

Tuesday, March 27, 2012
தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும்,வேலாயுதம் படங்கள் மூலம் பிரபலமான ஹன்சிகா இப்போது, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்த மஸ்கா என்ற தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கினார். இதில் ஹன்சிகாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து ஹன்சிகா கூறுகையில், "படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். இதில் கேமரா உடைந்துவிட்டது. ஒளிப்பதிவாளரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் லேசான காயம்தான். நல்லவேளை, யாருக்கும் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை," என்றார்.

கன்னடத்திலும் தங்கையாக நடிக்கிறார் சரண்யா மோகன்!

Tuesday, March 27, 2012
சமுத்திரம்’ படத்தின் கன்னட ரீமேக்கில், காவேரி நடித்த தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் சரண்யா மோகன். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘சமுத்திரம்’ எனக்கு மிகவும் பிடித்த படம். பத்து முறையாவது பார்த்திருப்பேன். அதன் ரீமேக்கில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும் காவேரி கேரக்டர் பவர்புல்லானது. படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் காவேரியை காப்பி அடிக்கவில்லை. எனது ஸ்டைலில் நடித்து வருகிறேன். இதுதவிர நான் நடித்த இன்னொரு கன்னடப்படம் விரைவில் வெளிவருகிறது. மலையாளத்தில் அப்பா மகள் உறவை சித்தரிக்கும் ‘பேரினொரு மகன்’ என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் இரண்டு கதைகளுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

மனிதநேய பண்பாளர்களை அரசு அங்கீகரிக்க வேண்டும்- விவேக்!!!

Tuesday, March 27, 2012
ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண் தான முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரேஷுக்கு, ‘சிறந்த மனிதநேயன் விருது’ வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து சுரேஷின் வாரிசுகள் படிக்க, 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய விவேக், பேசியதாவது:

60 வயதை தாண்டிய அய்யப்பன் என்பவர், வறுமை காரணமாக, சுரேஷ் கடையில் லாட்டரி சீட்டுகள் வாங்கினார். அதற்கான பணம் 250 ரூபாயைக் கொடுக்க முடியவில்லை. சுரேஷிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. விஷயத்தை அய்யப்பனிடம் சுரேஷ் சொன்னபோது, ‘லாட்டரி சீட்டுகளுக்கான பணத்தை உங்களிடம் கொடுக்காத எனக்கு இந்த பரிசு கிடைப்பது நியாயம் இல்லை’ என்று மறுத்தார். ஆனால் சுரேஷ் விடாப்பிடியாக, ‘இது உங்களுக்கான சீட்டு. இதற்கான தொகை 250 ரூபாய் கொடுங்கள். நியாயமாக ஒரு கோடி ரூபாய் பரிசு உங்களுக்கே சேர வேண்டும்’ என்று கொடுத்துவிட்டு சென்றார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொண்ட சுரேசுக்கு, மனிதநேய மன்றம் விருது கொடுத்திருப்பதன் மூலம் பார்த்திபன் உயர்ந்துவிட்டார்.

இதுபோல் மனித நேயத்தில் சிறந்து விளங்குபவர்களை அரசு அங்கீகரித்து, உயர்ந்த விருதை வழங்க வேண்டும். இவ்வாறு விவேக் பேசினார். விழாவில், கே.பாக்யராஜ், பிரசன்னா, ரோகிணி, டாக்டர்கள் முருகப்பன், சுஜாதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அமீர் இயக்கும் 'ஆதிபகவான்' படம் தாமதம் ஏன்? நீது சந்திரா!!!

Tuesday, March 27, 2012
அமீர் இயக்கும் 'ஆதிபகவான்' படத்தில் 2 ஆண்டுகளாக நடித்து வருகிறார் நீது சந்திரா.
இது பற்றி அவர் கூறியது:
'ஆதிபகவான்' ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டும். அது முடிந்தால் படம் முடிந்துவிடும். இந்த படத்தில் நடிப்ப தற்காக எனது மற்ற படங்களின் கால்ஷ¦ட்டை மாற்றி நடித்துக் கொடுத்தேன். அதற்கு காரணம், இது அமீரின் படம் என்பதால்தான். அஜீத்தின் 'மங்காத்தா' படத்தில் நடிக்க கேட்டது உண்மைதான். 'ஆதிபகவான்' படத்தில் நடிப்பதால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. வருடத்துக்கு 5 படங்களில் நடிப்பதை விட 2 வருடமாக தயாராகும் எனது திறமையை வெளிப்படுத்தக் கூடிய கனமான வேடத்துக்காக எதையும் இழக்கலாம். அமீர், சிறந்த படைப்பாளி. படத்தை சீக்கிரமாக முடிக்க அவரை நிர்பந்திக்க முடியாது. ஒரு தரமான படத்தை இத்தனை நாட்களுக்குள் எடுத்துவிடலாம் என கணக்கிட முடியாது. படம் வெளியாகும்போது ஏன் தாமதமானது என்பது ரசிகர்களுக்கு புரியும். இந்த படத்தை இந்தியிலும் உருவாக்க அமீர் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு நீது சந்திரா கூறினார்.