Monday, May 21, 2012

அப்செட்டில் சரத் மகள்!!!

Monday, ,May, 21, 2012
போடா போடியில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி அறிமுகம். படத்தின் கதைக்கு நல்ல டான்ஸராக ஹீரோயின் இருக்கணும், அதனால்தான் வரலட்சுமியை செலக்ட் செய்தோம் என்று சிம்பு அளித்த ஆரம்ப அறிமுகம் அட்டகாசமாகவே இருந்தது. ஆனால் கன்னித்தீவு கதையாக படப்பிடிப்பு ஜவ்வாக இழுத்து பல வருடங்களை விழுங்கியது. இன்னும் படம் முடிவதாயில்லை.

முதலில் சிம்பு கேட்டுக் கொண்டதால் வேறு படங்கள் எதையும் கமிட் செய்யவில்லை இவர். வருடங்கள் பல கரைந்து போனதால் கடைசியில் ராதாமோகன் தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் அப்படத்திலிருந்து வரலட்சுமியை தூக்கியிருக்கிறார்கள். ஆந்திர ரசிகர்களின் மசாலா வாடைக்கு வரலட்சுமி சூட் ஆக மாட்டார் என்று ஹீரோ தரப்பு பிரஷர் தந்ததால்தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.

இடைத்தேர்த‌‌லி‌ல் கள‌த்‌தி‌ல் இற‌ங்‌கிய ரஜினி மன்ற‌ம்!!!

Monday, ,May, 21, 2012
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் ரஜினிகாந்த் மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இன்று மனுத்தாக்கல் செய்து‌ள்ளா‌ர்.

புதுக்கோட்டை தொகு‌தி‌க்கு வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர சில சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மாவ‌ட்ட ரஜினிகா‌ந்‌த் மன்ற செயலாளர் ஸ்ரீதர் இ‌ன்று வே‌‌ட்பு மனு தா‌க்க‌ல் ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ஸ்ரீதர் கூறுகை‌யி‌ல், 1983ஆம் ஆண்டு முதல் ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ளேன். 1998 முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறேன்.

ரஜினிக‌ா‌ந்‌த் ரசிகர் மன்றத்தின் மூலம் நாங்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளதால் மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தயக்கம் காட்டுகிறார்.

அவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கை காட்டுவதற்காக நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இது நாங்களாக எடுத்த முடிவு. ஆனாலும் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். தற்போதைய எதிர்க்கட்சியை விட நாங்கள் அதிக ஓட்டு பெறுவோம் எ‌ன்றா‌ர்

கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் சுந்தர் சி & கோ!!!

Monday, ,May, 21, 2012
கரண்ட் இல்லாத கொடுமை, பாக்கெட்டைக் கிழிக்கும் விலைவாசி, எப்போதுமில்லாத உக்கிர வெயில், ஒன்றுமே செய்யாவிட்டாலும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்... இந்த இம்சைகளையெல்லாம் மறந்துவிட்டு, மூன்று மணி நேரத்தைச் செலவிட வேண்டும் என்றால்... அது சினிமாதான்.

அந்த சினிமாவும் அழுது வடியாமல்... கலகலவென கடைசி வரை சிரிப்பும் கும்மாளுமாக இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என மக்கள் விரும்புவதை அப்படியே பிரதிபலிப்பது போல படங்களும் அமைந்துவிட்டால்...

அப்படி அமைந்ததால்தான் ஒரு கல் ஒரு கண்ணாடியும், கலகலப்பும் மெகா வெற்றியைப் பெற்றுள்ளன.

இப்போது கோடம்பாக்கம் எங்கும் காமெடி படங்களுக்கான டிஸ்கஷன்தான் சீரியஸாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

புதிதாக ஒரு கான்செப்டை உருவாக்கி திரைக்கதை அமைப்பதைவிட, ஏற்கெனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தமிழிலும் வெற்றியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர் யுடிவி நிறுவனத்தினர்.

விமல், அஞ்சலி, ஓவியா, சிவா, சந்தானம், இளவரசு என அதே கூட்டணியுடன் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள். சுந்தர் சி இயக்குகிறார். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவதில் உறுதியாக உள்ளது யுடிவி நிறுவனம்.

'தனுஷ் - ஸ்ருதி நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா டென்ஷனானது உண்மைதான்!!!

Monday, May, 21, 2012
தனுஷ் - ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், " தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டுலதான் சண்டை இல்லாம இருக்கு.

தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான். எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டரா அந்த சீன் சரியா வந்தாலும், மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான். காரணம், ஐஸ்வர்யாவோட அன்பு அப்படி. மருமகளுக்கும் மகனுக்கும் அப்பப்போ இப்படி சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா அவங்க பிரிஞ்சு வாழறாங்கன்னு சொல்றது தப்பு.

தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலும் உடைக்க முடியாது!", என்றார்.

படவாய்ப்பை தட்டிப் பறிப்பதா?: டாப்சி மீது ரிச்சா பாய்ச்சல்!!!

Monday, May, 21, 2012
டாப்சி ரிச்சா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் படம் மூலம் டாப்சி பிரபலமானார். ரிச்சாவுக்கு மயக்கம் என்ன, சிம்புவின் ஒஸ்தி படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது நாயகியாக ரிச்சாவை தேர்வு செய்தனர். அஜீத் படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் அவர் துள்ளி குதித்தார். அதில் நடிப்பதற்காக வேறு படங்களை உதறி விட்டு காத்து இருந்தார்.

ஆனால் திடீரென்று டாப்சி குறுக்கிட்டு வாய்ப்பை தட்டி பறித்து விட்டார். அஜீத் படத்தில் ரிச்சாவுக்கு பதில் டாப்சி நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாப்சி மேல் ரிச்சா கடும் கோபத்தில் உள்ளார். இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

வாங்கிய சம்பளத்துக்கு பாதிகூட சில நடிகைகள் வேலை பார்ப்பதில்லை : மம்தா மோகன்தாஸ்!!!

Monday, May, 21, 2012
வாங்கிய சம்பளத்துக்குகூட சில நடிகைகள் வேலை பார்ப்பதில்லை என்றார் மம்தா மோகன்தாஸ். சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியதாவது: திருமணத்துக்கு பிறகு குடும்பத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். இதற்காக நடிப்பை கைவிடவில்லை. நல்ல வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து நடிக்கிறேன். ஒருநாள் அதற்கும் முடிவு வரும். திருமணத்துக்கு பிறகு சம்பளம் உயர்த்திவிட்டீர்களா என்று மல்லுவுட்டில் கேட்கிறார்கள். இதை உயர்வு என்ற சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் வாங்கும் சம்பளம், இதைவிட 4 மடங்கு அதிகம். எத்தனை நாட்கள் நடிக்கிறோம் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் கணக்குப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் இது அவர்களுக்கு இழப்பாக அமைகிறது. ஏனென்றால் சில நடிகைகள் கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றபடி பாதி நாட்கள்கூட வேலை செய்வதில்லை. இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.

கிராபிக்ஸ் வேலையால் பட ரிலீஸ் பாதிப்பு!!!

Monday, May, 21, 2012
கிராபிக்ஸ் வேலை முடியாததால் ‘நான் ஈ' பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. நானி, சமந்தா, சுதீப் நடிக்கும் படம் ‘நான் ஈ'. இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் ராஜ்மவுலி கூறும்போது, ‘நான் ஈ' படம் இம்மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக கிராபிக்ஸ் பணிகளை குறிப்பிட்ட தினத்தில் முடித்துவிட எண்ணினோம். ஆனால் அது தவறான கணிப்பாகிவிட்டது. அதற்காக இன்னும் நாட்கள் தேவைப்படுகிறது. இதையடுத்து ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளுக்காக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

வெளிநாட்டு அழகிகள் வரவால் நம்மூர் ஹீரோயின்கள் திணறல்!!!

Monday, May, 21, 2012
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), மல்லுவுட்டில் ஃபரிஸா (அன்னும் இன்னும் என்னும்), சீன நடிகை சாங் ஷு மின் (அராபி கதா), ஆஸ்திரேலியா நடிகை டனிலியா (ஸ்பேனிஸ் மசாலா), டோலிவுட்டில் ஈரானை சேர்ந்த மரியம் ஸக்கரியா (100 பர்சன்ட் லவ்), நதாலியா கவுர் (ராம் கோபால் வர்மா தயாரிக்கும் படம்) என வெளிநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் வட, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகரித்திருக்கிறது.

திரையுலகில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் நம்மூர் ஹீரோயின்களை திணற வைத்திருக்கிறது. குறிப்பாக கிளாமர் காட்சிகளில் அவர்களுக்கு ஈடுகொடுப்பது சவாலாக இருக்கிறது. முன்னணி நடிகர், இயக்குனர் படங்களில் இவர்களின் கை ஓங்கி வருவதால் அந்த வாய்ப்புகளை நம்மூர் முன்னணி நடிகைகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த புதிய டிரெண்ட் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும¢போது, Ô‘பாலிவுட்டில் முதல் படம் இயக்குகிறேன்.

சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர வெளிநாட்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகை பொருத்தவரை சமீபகாலம் வரை மும்பை நடிகைகளை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். அதுதான் இப்போது வெளிநாட்டு நடிகைகளின் அறிமுகத்துக்கு வழிவகுத்திருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். அதன் மற்றொரு பரிணாம வளர்ச்சிதான் வெளிநாட்டு நடிகைகளை அறிமுகப்படுத்துவதும். இதனால் நம்மூர் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் இப்போது ஹாலிவுட் உள்பட வெளிநாட்டு படங்களில் நடிக்கிறார்கள்' என்றார்.

எல்லோரையும் டாப் நடிகை என்பதா?- சமந்தா!!!

Monday, May, 21, 2012
எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ, ‘மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: இந்த வருடம் நான் நடித்து 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் என்ன என்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் நடிகைகள் என்று சொல்கிறார்கள். என்னையும் அந்த பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். நான் கேட்கிறேன், நம்பர் ஒன்னாக ஒருவர்தானே இருக்க முடியும். ஆனால் அத்தனைபேரையும் நம்பர் ஒன் என்று எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையின் தலையெழுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் நிஜம்.

மணிரத்னம், கவுதம் மேனன் என பெரிய இயக்குனர்களுடனும், மகேஷ் பாபு, நாக சைதன்யா உள்ளிட்ட டாப் நடிகர்களுடனும் நடித்து வருகிறேன். இதுதவிர ஒப்புக்கொள்ளாத படங்கள் நிறைய உள்ளன. பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதை நானாக தேர்வு செய்யவில்லை. அது தன்னால் அமைந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்து 2 வருடங்களில் இவ்வளவு பெரியவர்களுடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்ற கருதுகிறேன். ஒரே படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பள்ளி மாணவி தோற்றத்துக்காக உடல் இளைக்க வேண்டி உள்ளது. கல்லூரி மாணவிக்காக சற்று குண்டாக வேண்டி உள்ளது. இதெல்லாம் புதிய அனுபவம். மணிரத்னம் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதைவிட பயமாகவே உணர்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் அவருடைய எதிர்ப்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.