Friday, April 13, 2012

மன்சூரலிகான் ஹீரோவாக நடிக்கும் 'லொல்லு தாதா பராக் பராக்'!!!

Friday, April, 13, 2012
புவியரசி சினி பிளானர் வழங்கும் ராஜ்மென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தினர், இந்தியில் புதுமுகங்கள் நடித்து வெற்றி பெற்ற 'குல்லு தாதா' என்ற படத்தை தமிழில் 'லொல்லு தாதா பராக் பராக்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் ஹீரோவாக மன்சூரலிகான் நடிக்கிறார். ஹீரோயினாக ஷில்பா நடிக்கிறார்.

இப்படத்தில் மன்சூரலிகான் ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்திற்கு இசையமைத்து, பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடியாக பணம் வசூலிக்கும் மன்சூரலிகான், "நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன். ஒழுங்கா பணம் கட்டினா ஒஸ்தியா வாழ்வே...இல்லாட்டி நாஸ்தியா போயிடுவே" என்று அடிக்கடி உச்சரித்துகொண்டு கந்துவட்டி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி, போண்டாமணி, வெங்கல் ராவ், வெ.ஆ.மூர்த்தி, நெல்லை சிவா, பாண்டு உள்ளிட்ட பெரிய காமெடி பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வியாசன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ரவிசீனிவாஸ், நடனம் விஜயலட்சுமி, வாசு, சண்டைப்பயிற்சி நித்யானந்தம், தயாரிப்பு நிர்வாகம் ஷெரீப் அகமது.

இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர், ஏலகிரி போன்ற படங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் தயாரான 'டேம் 999' படத்தின் இசைக்கு விருது!!!

Friday, April, 13, 2012
முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட 'டேம் 999' படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. கேரளாவை சேர்ந்த சோகன் ராய் இயக்கினார். இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளம் ஊருக்கு வருவது போன்றும் நிறைய பேர் நீரில் மூழ்கி பலியாவது போன்றும் காட்சிகள் இருந்ததால் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து தமிழகத்தில் 'டேம் 999' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்கு 'டேம் 999' படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

தற்போது குளோபல் மியூசிக் கவுரவ விருது (ஜி.எம்.ஏ.) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி இசை மற்றும் ஒலி அமைப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

பாலிவுட்டில், இசையில் கொடிகட்டி பறந்தவர்: தமிழ்படத்திற்கு பாட்டு பாடிய பிரபல இந்தி இசையமைப்பாளர்!!!

Friday, April, 13, 2012
பாலிவுட்டில், இசையில் கொடிகட்டி பறந்தவர் பாப்பி லஹரி. ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அவர் முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பாட்டு பாடியிருக்கிறார். பாப்பி லஹரிக்கு பாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பு குறைந்தாலும், தொடர்ந்து ஆல்பம் மற்றும் பாடல்களை பாடி வருகிறார். சமீபத்தில் வித்யாபாலன் நடிப்பில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளிவந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், ஊலலா... என்ற பாடல் செம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பாடியிருக்கிறார். பிரபுராஜ சோழன் இயக்கத்தில், அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் கருப்பம்பட்டி என்ற படத்தில், நாட்டி ராஜா ராஜா.. என்ற பாடலை பாப்பி லஹரி பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்காக அவருக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்துள்ளனர். தமிழ்படம் புகழ் கண்ணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பாட்டும் நன்றாக வந்திருப்பதாக டைரக்டர் பிரபுராஜா சோழன் கூறியிருக்கிறார்.

அஜீத்துடன் நடித்ததால் டென்ஷன் : பார்வதி பேட்டி!!!

Friday, April, 13, 2012
அஜீத்துடன் நடிக்கும்போது டென்ஷனாக இருந்தது என்றார் பார்வதி ஓமனகுட்டன். ‘பில்லா 2படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: உலக அழகி போட்டியில் பங்கேற்றதால்தான் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. மணப் பெண்களுக்கான ஆடை அணி வகுப்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சிக்கு ‘பில்லா 2' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வந்திருந்தார். மேடையில் என்னை பார்த்த அவர் பின்னர் சந்தித்து பேசினார். அப்போதுதான் அஜீத் ஜோடியாக நடிக்க கேட்டார். உடனே ஏற்றுக்கொண்டேன். அஜீத் முன்னணி நடிகர். அவருடன் நடிக்கும்போது மிகவும் டென்ஷனாகவும், நடுக்கமாகவும் இருந்தது. எனது பயத்தை புரிந்துகொண்ட அஜீத், என்னிடம் அன்பாக பழகி எனது தயக்கத்தை போக்கினார். மேலும் செட்டில் இருக்கும் எல்லோரிடமும் சகஜமாக பேசி அவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். ‘சினிமாவிலும், பேஷன் ஷோவிலும் பங்கேற்றதில் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்? என்கிறார்கள். வித¢தியாசம் எதுவுமில்லை. சிறுவயதிலிருந்தே நான் சினிமா ரசிகைதான். பேஷன் ஷோ விழாக்களில் பங்கேற்றதற்கு காரணமே நடிகை ஆவதற்கு அது பொருத்தமான வழியாக இருக்கும் என்பதால்தான். இதற்கு முன் உலக அழகிகள் இதுபோன்ற ஷோக்கள் மூலமே சினிமாவுக்கு வந்து பாப்புலர் ஆனார்கள்.

கேத்ரினா கைப் நீச்சல் உடை அணிய மறுத்ததால் அந்த வாய்ப்பை பறிக்கிறார் தீபிகா!!!

Friday, April, 13, 2012
கேத்ரினா கைப் நீச்சல் உடை அணிய மறுத்ததால் அந்த வாய்ப்பை பறித்து நடிக்க தயாராகிறார் தீபிகா. பாலிவுட்டில் சினிமா மற்றும் விளம்பர படங்களில் வாய்ப்பை தக்க வைப்பதில் கேத்ரினா கைப், தீபிகா படுகோன் இடையே போட்டி நிலவுகிறது. ‘தூம் 3, ‘யே ஜவானி ஹே திவானி ஆகிய இரண்டு படங்களில் யார் ஹீரோயின் வாய்ப்பை பெறுவது என்பதில் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. ‘யே ஜவானி.. பட இயக்குனர் அயன் முகர்ஜி, ஹீரோ ரன்பிர் கபூர் என இருவருடனும் கேத்ரினா நட்புடன் இருக்கிறார். ஏற்கனவே ரன்பிருடன் 2 ஹிட் படங்கள் தந்ததால் மீண்டும் அவருடன் கேத்ரினாவை ஜோடி சேர்க்க இயக்குனர் எண்ணி உள்ளார். ஆனாலும் ஒரு பக்கம் தீபிகா பெயரும் ஹீரோயின் ரோலுக்கு அடிபடுகிறது. ‘தூம் 3 படத்தை பொறுத்தவரை புதுமுகம் ஒருவரையே ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். பொருத்தமான புதுமுகம் கிடைக்காத பட்சத்தில் பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்யும் எண்ணம் உள்ளது. அதிலும் கேத்ரினாவே முதல் சாய்ஸாக இருப்பார் என பட வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் படத¢தில் இடம்பெறும் நீச்சல் உடை காட்சியில் நடிப்பதற்கு கேத்ரினா ஒப்புக்கொள்ள மாட்டார் என்கிறார்கள். கேத்ரினா ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் தீபிகாவை ஒப்பந்தம் செய்ய எண்ணி உள்ளனர். இதற்கிடையே அந்த வாய்ப்பு தனக்கு வந்தால் உடனடியாக கால்ஷீட் தர தயாராக இருப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளார் தீபிகா. இப்போதே நீச்சல் உடை அணிந்து நடிப்பதற்கு ஏற்ப வசீகரமாக தனது தோற்றத்தை உடற்பயிற்சி செய்து தயார்படுத்தி வருகிறார் தீபிகா.

இளம் ஹீரோக்கள்தான் எனக்கு நண்பர்கள்: அவர்களுடன் சுற்றுவதை நிறுத்த மாட்டேன்’ என்கிறார் எமி ஜாக்ஸன்!!!

Friday, April, 13, 2012
இளம் ஹீரோக்கள்தான் எனக்கு நண்பர்கள். அவர்களுடன் சுற்றுவதை நிறுத்த மாட்டேன்’ என்கிறார் எமி ஜாக்ஸன். ‘மதராச பட்டணம்’ படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். அவர் கூறியதாவது: பழைய மெட்ராஸ், புதிய சென்னை இரண்டையுமே நான் பார்த்துவிட்டேன். எனது முதல் படமான ‘மதராச பட்டணம்’ சுதந்திரத்துக்கு முந்தைய கதை என்பதால் பழைய மெட்ராஸ் எப்படி இருக்கும் என்பதை தத்ரூமாக செட் அமைத்தார்கள். அங்கு நடித்துவிட்டு சிட்டிக்குள் சென்றால் முற்றிலும் புதிய சிட்டிக்குள் வந்ததுபோல் உணர்வேன். தமிழ் எனக்கு வேற்றுமொழியாக இருந்தாலும் அதில் நடிக்க வந்தபோது இயக்குனரும், பட யூனிட்டாரும் தந்த ஆதரவு என்னை படத்தோடு ஒன்ற வைத்தது. இதற்கு முன்பு வெளிநாட்டு நடிகை ஒருவர் கோலிவுட் படத்தில் நடித்திருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. அதேநேரத்தில் வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டது சந்தோஷம்.

இந்தியில் ‘ஏக் திவான தா’ படத்தில் நடித்தேன். தற்போது ‘தாண்டவம்’ படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சமூக அமைப்புகளில் எனக்கு ஆர்வம் உண்டு. திரையுலகம் மற்றும் வேறு துறையிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர்கள் எல்லாருமே இளம் நடிகர்கள்தான். அவர்களுடன் மட்டுமல்ல, மற்ற துறை நண்பர்களுடனும் வெளியில் சுற்றுவதை விரும்புகிறேன். ‘இளம் நடிகர்களுடன் மட்டும் பழகுவது ஏன்?’ என்று கேட்கிறார்கள். அவர்களுடன்தான் நான் நடிக்கிறேன். அவர்களிடம் பழகாமல் எப்படி நடிப்பது? கோலிவுட்டை பொறுத்தவரை எனக்கு இப்போதைய நண்பர் ஆர்யா மற்றும் மதராச பட்டணம் டீம்தான். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.

டேவிட்டுடன் ஜீவா!!!

Friday, April, 13, 2012
'கோ' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் ஜீவா. கௌதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்', மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தியில் வரவேற்பைப் பெற்ற 'சைத்தான்' படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் தற்போது விக்ரமை நாயகனாக வைத்து 'டேவிட்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. 'டேவிட்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜீவா. இது குறித்து ஜீவா "பிஜாய் நம்பியார் இயக்கும் டேவிட் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் நடிக்க இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்றிலும் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். 'நண்பன்' படத்தினை அடுத்து நான் நடிக்கும் மல்டி ஸ்டாரர் படம் இது" என்று தெரிவித்து இருக்கிறார். இப்படத்தில் ஜீவாவிற்கு ஸ்கோர் பண்ண அருமையான கதாபாத்திரமாம். பிஜாய் நம்பியார் நம்ம மணிரத்னம் கிட்ட உதவி இயக்குநரா வேலை செஞ்சவர்.

நாளை முதல் விஜய்யின் 'துப்பாக்கி' முன்னோட்ட படங்கள்!!!

Friday, April, 13, 2012
விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸும் ஹீரோ விஜய்யும்.

விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை திரையுலகை பெருமளவு பாதித்தது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டாலும், துப்பாக்கி மட்டும் எந்தத் தடங்களும் இல்லாமல் ஜோராக முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!

நல்ல படங்களையே பார்க்கின்றனர்: தமிழ் ரசிகர்களுக்கு திரிஷா பாராட்டு!!!

Friday, April, 13, 2012
திரிஷா தமிழில் விஷால் ஜோடியாக 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த 'தம்மு' படம் ரிலீசுக்கு தயாராகிறது. 'என்றென்றும் புன்னகை' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை எனக்கு பிடித்த இடம். இதை எனது தாய் வீடு மாதிரி பார்க்கிறேன். இங்கு நான் விரும்பாத இடமே கிடையாது. கிழக்கு கடற்கரை சாலை எனக்கு ரொம்ப பிடித்தமான இடம். அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் தோன்றும். அங்குதான் எனக்கு பிடித்தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிக்கிறேன்.

நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன். திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம். அவர்களின் படங்களை பார்க்க அனுமதிப்பார்கள். முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாது. இப்போது நடிகையாகி விட்டதால் பிரிமியர் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடியாது. இப்போதும் ரசிகர்களுக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்களை பார்க்கிறேன்.

ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையையும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர். இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர். தெலுங்கு ரசிகர்களைபோல் நடிகர்கள் பின்னால் அலைவது இல்லை கதாநாயகர்களின் புகழ்பாடுவதும் இல்லை.

இவ்வாறு திரிஷா கூறினார்.

'பில்லா 2'-க்கு கிடைத்த கலர்ஃபுல் பெருமை!!!

Friday, April, 13, 2012
அஜித் நடித்து வரும் 'பில்லா 2' படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பில்லா 2' படம் பெற்றிருக்கிறது. அஜித்தின் 'பில்லா' படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து 'பில்லா 2'-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதாரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள். 'பில்லா 2' முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜித்தின் தோற்றமும் நடிப்பும் பேசும்படி இருக்கும். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துப் பட்டம் பெற்றவர். ஹீரோயின்களாக பார்வதி ஒமணக்குட்டனும், பிரேசில் நாட்டு மாடலான ப்ரூனா அப்துல்லாவும் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆசியாவிலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தாத எபிக் (Epic) கேமராவை பயன்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். அதீநவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக திகழும் எபிக் கேமராவின் மூலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் படமாக உருவாகியிருக்கிறது 'பில்லா 2'. ....
'பில்லா 2'க்கான டிஜிட்டல் போஸ்டரை ரெடி பண்ண நீங்க ரெடியா?

இந்தி திரையுலகினர் தங்களது படத்திற்கு வெவ்வேறு வகையில் விளம்பரபடுத்தி வருகிறார்கள். தற்போது இந்த விஷயத்தில் பாலிவுட்டை பின்பற்றுகிறது கோலிவுட். விரைவில் வெளியாக இருக்கும் 'பில்லா 2' படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல, இணையவாசிகளைக் கவர, புது யுக்தியை கையாள்கிறார்கள். அஜித்தின் ரசிகர்களுக்கு' பில்லா 2' படக்குழு புதுப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. "தமிழ்ப் புத்தாண்டு முதல் படம் வெளியாகும் வரை 'பில்லா 2' படத்தினை விளம்பரப்படுத்த இருக்கிறோம். ரசிகர்களுக்கான போட்டி ஒன்றையும் அறிவிக்கிறோம். 'பில்லா 2' படத்திற்கான டிஜிட்டல் போஸ்டரை நீங்களே வடிவமைக்கலாம். இதுவரை வெளியான 'பில்லா 2' போஸ்டர்களையும், இனி வெளிவர இருக்கும் புகைப்படங்களையும் அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னணி இசைக்கு பில்லா தீம் மியூசிக்கையோ அல்லது பிற இசையையோ பயன்படுத்தி 10 முதல் 15 நொடிகளுக்குள் 'பில்லா 2' டிஜிட்டல் போஸ்டரை உருவாக்கி billa2contests@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மே மாதம் 15-ம் தேதி வரை இப்போட்டி நடக்கும். சிறந்த 10 டிஜிட்டல் போஸ்டர்களைத் தேர்ந்தெடுத்து ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இணையங்கள் வழியே பதிவேற்றம் செய்யப்படும். அங்கு நடைபெறும் வாக்கெடுப்பில் 5 சிறந்த டிஜிட்டல் போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு,' பில்லா 2' படத்திற்கான சிறப்புக் காட்சிக்கும் வரவேற்கப்படுவார்கள்" என அறிவித்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு. அப்டிபோடுங்க!அசத்தலாயிருக்குமே.. ஆர்வமா செய்வாங்க.. விளம்பரச் செலவும் மிச்சம்... !

'இளைய தளபதி' போய் 'தலைவரா'ன விஜய்!விஜய்யின் விருந்தும் விருதும்!!!

Friday, April, 13, 2012
தனக்காக ரசிகர்கள் உருவாக்கிய 'விஜய் கீதம் (Vijay Anthem)' என்ற இசை ஆல்பத்தை நேற்று வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ஆன்லைன் ரசிகர்கள் பத்துப் பேர் இணைந்து இந்தப் பாடல் தொகுப்பை உருவாக்கினர்.

விஜய் ரசிகர்கள் அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை. வரிக்கு வரி அவரை தலைவர் என்று புகழ்ந்து பாடலை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பாடலை வெளியிட்டுள்ள சரிகமபதநீ நிறுவனத்தின் ராஜா கூறுகையில், " இந்தியாவிலேயே ரசிகர்கள் இசையமைத்து உருவாக்கியுள்ள ஆல்பம் இதுவே," என்றார்.

நடிகர் விஜய் கூறுகையில், "வணிக நோக்கமில்லாமல் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பாடல்கள் இவை. என்னிடம் வந்து, இந்தப் பாடல்களை வெளியிட வேண்டும் என அனுமதி கேட்டனர். பாடல்கள் நன்றாக இருந்ததால், வெளியிட ஒப்புக் கொண்டேன். இதனை உருவாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்," என்றார்....

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பயிலும் மாணவர்களுக்கான தேர்வில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்க இருப்பதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் ரசிகர்களினால் 'இளைய தளபதி ஆன்தம்' என்ற பெயரில், உருவாக்கப்பட்ட, விஜய் குறித்த வீடியோ பாடல் ஆல்பத்தினை உருவாக்கி, யு டியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதை சி.டியாகவும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இந்த ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட, சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ராஜா பெற்றார். ஆல்பத்தில் பங்கேற்ற வல்சன், தினேஷ், இயக்குநர் கோகுல், சங்கிலி முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில், ரசிகர்களை எப்போதுமே என் நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். நான் சொல்லாமலே, அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்கின்றனர். சமீபத்தில் எனது மக்கள் இயக்கம் சார்பில், மும்பையில் பல நிகழ்ச்சிகள் நடத்தி, நற்பணிகள் செய்தனர். இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். தமிழக அளவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களை ஒருநாள் முழுவதும் என்னுடன் தங்க வைத்து விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளேன். அவர்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேர விசாரணை!!!

Friday, April, 13, 2012
நியூயார்க்::பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க குடியேற்ற துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளின் இந்த அதிகாரத்தோரணையை தான் அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் பார்க்க முடிகிறது என்றார்.

நியூயார்க் யாலே பல்கலை.,யில் முகேஷ் அம்பானியின் மகள் படித்து வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஷாரூக்கான் , மற்றும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சென்றனர். நியூயார்க் சென்ற விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் வழக்கமான பல்கட்ட சோதனைகள் நடக்கும். இந்த சோதனையில் , ஷாரூக்கான் என்ற பெயரை கேட்டதும், கூடுதல் விசாரணைக்குப்படுத்த முன் வந்தனர். ஷாரூக்கானை விமான நிலையத்திலலேயே நிறுத்தி வைத்தனர். குடியேற்றதுறை , பாதுகாப்பு மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பலகட்டமாக துருவி. துருவி கேள்வி எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை ஓடியது. நிகழ்ச்சிக்கு வராத ஷாரூக்கான் நிலை குறித்து யாலே பல்கலை., நிர்வாகிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்ட போது இவ்வாறு விசாரணை நடப்பது தெரியவந்தது.

ஷாரூக்கானிடம் இது போன்று அமெரிக்காவில் விசாரணை நடத்தப்படுவது 3 வது முறை. கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்கா சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இது பார்லி.,யில் நமது எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.