Friday, April 20, 2012

ரஜினியிடம் கேட்கவில்லை... நஷ்ட ஈடு தர தனுஷ், ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டனர் - நட்டி குமார்!!!

Friday, April, 20, 2012
3 படத்தின் தெலுங்கு விநியோகத்தில் ஏற்பட்ட பெரிய நட்டத்தை ஈடுகட்டுமாறு நான் ரஜினியிடன் கேட்கவில்லை. ஆனால் அவர் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும் இந்த நட்டத்தை ஈடுகட்டித் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார் நட்டி குமார்.

தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படத்தின் தெலுங்கு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டார் நட்டி குமார் என்பவர்.

ஆனால் தெலுங்கில் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்துவிட்டது. இந்த நட்டத்தை ரஜினி ஈடுகட்டுவார் என நட்டி குமார் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, அது பரபரப்பைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினி அறிக்கை விட வேண்டி வந்தது. மேலும் தனுஷும், ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டார்.

இந்த நிலையில் நட்டி குமார் மீண்டும் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "ஆந்திராவில் 3 படத்தை வாங்கி நான் வெளியிட்டேன். படம் தோல்வி அடைந்ததால் 80 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்பேன் என்று நான் கூறவில்லை. ரஜினி உதவுவார் என எதிர்ப்பார்ப்பதாகத்தான் கூறினேன்.

ரஜினி இந்த படத்தின் விநியோகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் 3 படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

இந்த படத்தை 6.5 கோடி செலவில் தயாரித்தனர். கொலவெறி பாடலை வைத்து ரூ.50 கோடிக்கு விற்றுவிட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம். எவ்வளவு தொகை வசூலானது என்று விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி ஆறுதலாக சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கொடுப்பதைக் கொடுக்கட்டும்," என்றார்.

பூலோகத்தில் ஜெயம் ரவியின் காதலி நயன்தாரா?!!!

Friday, April, 20, 2012
ஜெயம் ரவியின் அடுத்த படமான பூலோகத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு ஸ்டோரி ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் துவங்குகிறது. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.

அடடா அத்தனை இயக்குனர்களும் நயன் திரும்ப நடிக்க வரமாட்டாரா என்று காத்திருந்தார்கள் போலும். நயன் ரிட்டர்ன் ஆனவுடனேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களே.

எதுவாக இருந்தால் என்ன, நயன் காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது...

இயக்குனர்களின் கட்டாயத்தால் கவர்ச்சியாக நடித்தேன் : ஸ்ரேயா புகார்!!!

Friday, April 20, 2012
கவர்ச்சி வேடத்தில் எனக்கு விருப்பமில்லை. இயக்குனர்கள்தான் அப்படி நடிக்க வைத்தார்கள் என்றார் ஸ்ரேயா. இது பற்றி அவர் கூறியதாவது:
ஸ்ரேயா என்றதும் கவர்ச்சியான இமேஜ்தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக்குனர்கள்தான் என்னை அதுபோல் நடிக்க வைத்தனர். விருது பெறும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம்,

ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். இனிமேல் அதுபோன்ற வேடங்கள் வரும் என்று நம்புகிறேன். அஜீத், சூர்யாவுடன் இதுவரை நடிக்கவில்லை. அவர்களுடன் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். நடிப்பை விட்டு விலகுவதற்கான எண்ணம் எனக்கு இல்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் ‘லைஃப் ஈஸ் பியூட்டிபுல், மற்றும் தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்Õ படங்கள் வெளிவரவுள்ளன.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Friday, April 20, 2012
விஷால், த்ரிஷா நடிக்கும் சமரன் படத்துக்காக இறுதிகட்ட படப்பிடிப்பு நடத்த செல்லும் முன்பு மூணாறில் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் திரு.

எழில் இயக்கும் மனம் கொத்தி பறவை படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக கும்பகோணம், முணாறில் நடந்து முடிந்தது.

நெடுஞ்சாலை படத்தில் நடிக்கும் ஷிவதா மலையாளத்தில் பாசில் இயக்கிய லிவிங் டு கெதர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

காதல் தீவு படத்தில் வில்லனாக நடிக்கும் மனோஜ், தனது போட்டோக்களை தந்தை பாரதிராஜாவிடம் காட்டியபோது, ‘வில்லனாக ஒரு ரவுண்டு வருவாய்Õ என்றாராம்.

பஞ்சாபி மாடல் சுபா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சிம்பு நடிக்கும் வடசென்னை படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் உடனடியாக தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

ஜனநாதன் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க உள்ளார் நயன்தாரா.
ராம்கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்’ படத்தில் இடம்பெறும் ‘அடுத்தவாரிசு’ படத்தில் ரஜினி ஆடிப்பாடிய ‘ஆசை நூறுவகை..’ பாடலுக்கு நதாலியா கவுர் நடனம் ஆடுகிறார்.

வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமாகும் மனிஷா யாதவ் தெலுங்கில் எம்.எஸ்.ராஜு இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார்.

படங்களில் அடிக்கும் கமென்ட்டை கண்டு ரசிகர்கள் சிரிப்பதுபோல் எனது நண்பர்களோ, குடும்பத்தினரோ நான் அடிக்கும் கமென்ட்டை கேட்டு சிரிப்பதில்லை என வருந்துகிறார் சந்தானம்.

கோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா... கோயில் கட்ட கூட்டம் ரெடி!!!

Friday, April, 20, 2012
தமிழ் ரசிகர்களுக்கு 'பன்' மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது.

அந்த மயக்கத்தின் உச்சம் குஷ்பு, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டிப் பார்த்தனர்.

இப்போது அவர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி ஹன்ஸிகா மோத்வானி.

வந்த புதிதில் இரண்டு ப்ளாப்கள் கொடுத்து டல்லடித்து நின்றவர், இப்போது வேலாயுதம், ஓகே ஓகே ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

அவர் கைவசம் உள்ள அடுத்த இரண்டு படங்களுமே கொஞ்சம் நம்பிக்கை தருபவை. சிம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 என பெரிய பட்ஜெட் படங்கள். வாசலில் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் வரிசையில்!

விளைவு... சம்பளம் கிர்ரென்று உயர்ந்து ரூ 75 லட்சத்தில் நிற்கிறது. டெல்லி பெல்லி ரீமேக் படத்துக்குதான் இந்த சம்பளம். அதற்கடுத்த படங்களுக்கு இப்போதே ஒரு கோடி என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டாராம்.

ஹன்ஸிகா இதுவரை 4 படங்களில்தான் நடித்துள்ளார், தமிழில் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொரு பக்கம், ரசிகர்கள் மன்றம் அமைக்கவும், சின்ன குஷ்பு என்ற பெயரில் திருச்சி பக்கத்தில் கோயில் கட்டவும் அம்மணியின் அனுமதி வேண்டி விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள்!

போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி பட ஷூட்டிங் : கேரள அமைச்சர் ஏற்பாடு!!!

Friday, April, 20, 2012
கேரளாவில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ள ரஜினிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
ரஜினி நடிக்கும் படம் ‘கோச்சடையான்’. சவுந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் 10 நாட்களுக்கு மேல் நடந்தது. ரஜினிகாந்த் லண்டன் சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றார். சரத்குமார், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. சில நாட்கள் ரஜினியும் மற்ற நட்சத்திரங்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் சென்னை திரும்பினார் ரஜினி. மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளை லண்டனில் படமாக்கி வந்தார் சவுந்தர்யா. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டிடுயோ வளாகத்தில் படமாக்க திட்டமிடப்பட்டது.

திருவனந்தபுரம், கோவலம் சாலையில் திருவல்லம் என்ற இடத்தில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. அங்கு ஷூட்டிங் தொடங்கியது. இந்த ஸ்டுடியோ கேரள மாநில திரைப்பட வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஒலிப்பதிவு பொறியாளர் மாநில விருது வென்றிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என் கருண் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளதால் பிரத்யேகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாநில அமைச்சரும் மற்றும் நடிகருமான கே.பி.கணேஷ்குமார் ரஜினியின் தீவிர ரசிகர். கோச்சடையான் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே முன்னின்று செய்துகொடுத்துள்ளார்.

அரவிந்த் சாமியின் தங்கை நடிக்கும் 'மதில் மேல் பூனை'!!!

Friday, April, 20, 2012
ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நாயகனாக நடித்த அரவிந்த் சாமியின் தங்கை விபா 'மதில் மேல் பூனை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இப்படத்தின் இயக்குனர் பரணி ஜெயபால் கூறியதாவது:

வளரும் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பதைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.

படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.

இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். தம்பி ராமையா காமெடி பகுதியை பார்த்துக் கொள்கிறார்.

பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றார்.

இப்படத்தின் நாயகி விபா கூறியதாவது;

நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற படம் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம். எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. ''நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு''ன்னு அண்ணன் சொன்னார்.

இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா கூறியதாவது:

இப்படத்துல மொத்தம் 5 பாடல்கள். அதுல இன்டர்வெல் பிளாக்ல ஒரு பாடல் வரும். அதை கவிஞர் தாமரை எழுதியிருக்காங்க. அந்த பாட்டு இப்படத்தின் கதைக்கே உயிர்நாடி. சென்னை பத்தி ஒரு பாட்டு இருக்கு. இதை புதுமுக கவிஞர் அன்சரா பாஸ்கர் எழுதியிருக்கார். இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பது இதன் ஹைலைட். படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு, மூன்று காடசிகளில் மட்டுமே டயலாக் இருக்கும். மீதமுள்ள காடசிகளை எல்லாம் ரீ ரிக்காடிங் இசையால் நகர்த்தியிருக்கிறோம்.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.

அஜீத் பிறந்த நாளில் ஆடம்பரமில்லாமல் 'பில்லா 2' இசை வெளியீடு!!!

Friday, April, 20, 2012
பில்லா 2 படத்தின் இசைக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் இசை, மேலும ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

இதன்படி வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பில்லா 2-ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள். படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைவெளியீட்டு விழாவை ஆரம்பத்தில் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது ரஜினி வீட்டில் அல்லது மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி மூலம் இந்த ஆடியோ வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.

சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்: ராக்கி சாவந்த்!!!

Friday, April, 20, 2012
கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய 'கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த், மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர், "கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்'' என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

ஆனால் இப்போது கூலாகிவிட்டார் ராக்கி. நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், "கொலைவெறி' பாட லுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை திட்டினேன். இப்போது மன்னித்து விட்டேன்.

ரஜினி சாரை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்காக தனுஷை விட்டுவிடுகிறேன். அந்தப் பாட்டும் எனக்குப் பிடித்திருந்தது. நான் திரையுலகிற்கு வந்த போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி. தனுஷ் இந்தியில் நடிக்க வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்," என்றார்.