Thursday, April 26, 2012

அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை!!!

Thursday, April, 26, 2012
பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர்.

வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது.

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார்.

ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...!

சன்னி லியோனிடம் 'அதை' எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!!!

Thursday, April, 26, 2012
செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை ... இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சினிமா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.

ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய 'முதலீடு' செய்தாக வேண்டும். பல 'முதலாளிகளைப்' பார்த்தாக வேண்டும். அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம்.

இந்த நிலையில் கடல் கடந்து பாலிவுட்டில் நடிகையாகியுள்ள கனடாவின் சன்னி லியோனுக்கும் கூட இந்த 'செக்ஸ் பக்' கடித்துள்ளதாம். கனடாவின் ஆபாசப் பட நடிகைதான் சன்னி. இவர் காட்டிய கவர்ச்சியைப் போல யாரும் காட்டியிருக்க முடியாது. டாப்லெஸ், பாட்டம்லெஸ் என்று இவர் போகாத ஏரியா இல்லை. இந்த நிலையில் இவரிடமும் 'அதை' எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டுள்ளனராம்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சன்னி லியோனும் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை சில தயாரிப்பாளர்கள் அணுகி, வாய்ப்பு தருவதாகவும், தங்களைக் கவனிக்குமாறும் வெளிப்படையாகவே கேட்டனராம்.

சன்னியிடம் இப்படி பகிரங்கமாகவே அவர்கள் கேட்டதற்குக் காரணம் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால்தானாம். ஆபாசப் படங்களில் நடிப்பவர்தானே, நாம் கேட்டால் மாட்டேன் என்றா கூறி விடப் போகிறார் என்பது அவர்களின் எண்ணமாம். ஆனால் தன்னிடம் செக்ஸை எதிர்பார்த்து வந்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரையும் ரிஜக்ட் செய்து விட்டாராம் சன்னி லியோன்.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் ரெடியாக இல்லை என்று கூறும் சன்னி லியோன், அப்படி எந்த ஒரு முன் நிபந்தனையும் இல்லாமல் ஜிஸ்ம் 2 பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம். இப்போது அவர் பாலிவுட்டில் புக்காகியுள்ள படங்களிலும் கூட அப்படித்தான் சுதந்திரமான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.

இதுகுறித்துக் கேட்டால், நான் ஆபாசப் பட நடிகைதான். அதை மறுக்கவில்லை, ஆனால் நான் விபச்சாரி இல்லை என்று பொட்டில் அடித்தது போலக் கூறுகிறார் சன்னி.

ஜெயம் ரவிக்கு ஜோடி நயன்தாரா அல்ல... அமலா பால்!!!

Thursday, April, 26, 2012
முன்னணி நடிகை என்ற பெயர் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடாதவர் அமலா பால்.

இப்போது அந்தக் குறையும் தீர்ந்துவிடும் போலிருக்கிறது.

இவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவி!

ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்ற கூறப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் நிறுவனத்தினர்.

படத்தின் கதையைக் கேட்ட அமலாப் பால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படுவதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அமலா பால் நடித்து சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தாலும், அவர் தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் தந்துவந்தார்.

அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங்கர்!!!

Thursday, April, 26, 2012
தனது அடுத்த மெகா படத்தின் ஹீரோ யார் என்பதில் இயக்குநர் ஷங்கர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதிர்ப்பார்த்த மாதிரியே, விக்ரம்தான் அவரது அடுத்த பட ஹீரோ.

இந்தப் படத்துக்கு முதல் முறையாக எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) வசனம் எழுதுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தில் முதலில் விக்ரம் நடிப்பார் என்றும், இல்லையில்லை சூர்யா நடிப்பார் என்றும் மாறிமாறி தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிந்ததும் ஷங்கர் படத்துக்கு வந்துவிடுவாராம் விக்ரம்.

ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நானே - ஜாக்கி ஷெராப்!!!

Thursday, April, 26, 2012
ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நான்தான். அதை கோச்சடையானில் நீங்கள் பார்க்கலாம், என்கிறார் நடிகர் ஜாக்கி ஷெராப்.

ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானில் அவருடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. தீபிகா படுகோன், ருக்மணி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஆதி இவர்களுடன் ஜாக்கி ஷெராபும் நடிக்கிறார்.

இவர்தான் படத்தில் ரஜினிக்கு பிரதான வில்லன்.

இதுகுறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "ரஜினி என் நெருங்கிய நண்பர். அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மிகச் சிறந்த நடிகர் ரஜினி. அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது.

கோச்சடையான் படத்தில் என் பெயர் ராஜா. ஆனால் முழுக்க முழுக்க பக்கா வில்லன் வேடம். நானும் ரஜினியும் மோதும் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டுவிட்டன. அவருக்குப் பொருத்தமான வில்லன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், படம் வந்ததும். இதற்கு மேல் சொல்ல முடியாது," என்றார்.

நண்பனின் நூறாவது நாள் கொண்டாட்டம்!!!

Thursday, April, 26, 2012
கடந்த காலங்களில் விஜய் நடித்து ஹிட் ஆன முதல் படமான 'நண்பன்' 100-வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் மூன்று கதாநாயகன்கள் ஒன்றாக இணைந்து நகைச்சுவைக் கதையில் நடித்து ஹிட் ஆகியுள்ள இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தை ஏப்ரல் 21-ம் தேதி படக்குழுவினர் கொண்டாடினர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்த இப்படம், ஷங்கரின் முதல் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் இலியானா தவிர படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

ரூ.23 கோடிக்கு விலை போன 'சகுனி'!!!

Thursday, April, 26, 2012
நடிகர் கார்த்தி நடிக்கும் 'சகுனி' படத்திற்கு ரூ.23 கோடி விலை பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 'சிறுத்தை' பட வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படம் 'சகுனி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆண்டனி சேவியர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக 'உதயன்' படத்தின் நாயகி ப்ரணிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்க உள்ளார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயாள் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் 'சகுனி' படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம் வேந்தர் பிலிம்ஸ் என்ற நிறுவனம். சமீபத்தில் 'அரவான்' படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருந்ததும் இதே நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது

கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!!!

Thursday, April, 26, 2012
புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் பிரிவில்' தமிழ்ப் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்படுகிறது.

சர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் இந்தப் பிரிவில் 2004-ம் ஆண்டு முதல் படங்களைத் திரையிடுகிறார்கள். உலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இடம்பெற்றுள்ள அமைப்பு இது.

இந்த விழாவுக்கு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் வரும் மே 16 முதல் 27-ம் தேதி வரை இந்த விழா நடக்கிரது. இதில் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17 முதல் 23 வரை நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் டீமுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. 22-ம் தேதி படம் திரையிடப்படுகிறது.

"இதனை மிகப்பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம்," என்று படத்தின் இயக்குநர் எல்ரெட் குமார் கூறியுள்ளார்.

எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் இந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் இவரே!

12-வது திருமண நாளை கொண்டாடிய அஜித்-ஷாலினி!!!

Thursday, April, 26, 2012
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு நேற்று 12-வது திருமண நாள். நடிகை ஷாலினியும், அஜித்தும் 'அமர்க்களம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷாலினியைக் கரம் பிடித்தார் அஜித். காட்டாற்று வெள்ளமாக இருந்த அவர் வாழ்க்கை அதன் பிறகு ஒரு கட்டுக்குள் வந்தது. திருமணத்துக்குப் பின்னர்தான் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். மிகுந்த பக்குவப்பட்ட மனிதராக மாறினார். பேச்சைக் குறைத்துக் கொண்டு, தன் வேலைகளில் கவனம் செலுத்தினார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக ஓடுகின்றன. 'பில்லா', 'மங்காத்தா' ஹிட் படங்கள் வரிசையில் அடுத்து 'பில்லா-2' வர இருக்கிறது. இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர். தனது திருமண நாளை மனைவி, குழந்தை, குடும்பத்தினருடன் சென்னையில் கொண்டாடினார் அஜித். அவருக்கு நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

கவிப்பேரரசின் 'முப்பது ஆண்டு முத்துக்கள்'!!!

Thursday, April, 26, 2012
கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படங்களுக்காகவும், மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழும் ஆயிரக்கணக்கான பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். எத்தனை நூற்றாண்டுகளானாலும் அழிக்க முடியாத பல திரைப்பட பாடல்கள், கவிதைகள், உலகம் முழுவதும் தமிழர்களிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன. 'முப்பது ஆண்டு முத்துக்கள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் 200 பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல்கள் பிறந்த கதைகளையும் அவர் குரலிலேயே பதிவு செய்துள்ள பாட்டுப்பேழை (சி.டி) வெளியிடப்பட்டுள்ளது. இந்த சி.டி.யோடு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:- என் அன்புக்குரியவர் நீங்கள்; 200 பாடல்களையும் கேளுங்கள்: இரவின் மடியிலும், இளைப்பாறும் நொடியிலும், நீண்ட பயணத்தின் நெடுஞ்சாலைகளிலும் இந்தப் பாடல்கள் உங்களைத் தூங்கவிடாமல் தாலாட்டக் கூடும். என்னோடு சேர்ந்து நீங்கள் 'ஹலோ எப்.எம்' வானொலிக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பாடல்கள் ஒலிக்கும் போதெல்லாம் உங்களோடு நானிருப்பேன்; என்னோடிருங்கள் எப்போதும்; இசையும் தமிழுமாய் இணைந்து செல்வோம். இசையோடு தமிழிருந்தால் வேறென்ன வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 'ஹலோ எப்.எம்'முக்காக வைரமுத்து நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பே இந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் எனக்கு எப்போதும் நன்மைதான் செய்வார்: சமந்தா!!!

Thursday, April, 26, 2012
எனக்கு எல்லாமே கௌதம் மேனன்தான்' என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குநர் கௌதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தை கௌதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் 3 மொழியிலும் ஹீரோயின் சமந்தாதான். இதுபற்றி சமந்தா கூறியதாவது: இப்போதைக்கு இந்தி படம் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனாலும் கௌதம் மேனன் இயக்கும் இந்தி உள்ளிட்ட 3 மொழி படத்தில் நடிக்கிறேன். 3 மொழியிலும் ஒரே ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ஒப்புக்கொண்டேன். அவரது கணிப்பை மதிக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு நன்மைதான் செய்வார். அவர் என் குரு. எனக்கு எல்லாமும் அவர்தான். மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் என்ன வேடம் என்கிறார்கள். அது மிகவும் ரகசியம். இப்போதைக்கு அதுபற்றி சொல்லமாட்டேன். இந்த வருடம் எனக்கு சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணுகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன் என்றார்.

அது ரொம்ப தப்புனு இப்ப புரியது: நயன்தாரா!!!

Thursday, April, 26, 2012
நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபுதேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன். பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும். த்ரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

கோடம்பாக்கம் கோடங்கி : லவ் சீனில் பல டேக் வாங்கும் நடிகை!!!

Thursday, April, 26, 2012
புரம், கபடி சிறு பட்ஜெட் படங்கள் சக்ஸஸ் ஆனப்போ புற்றீசல் போல லோ பட்ஜெட் படங்கள் எடுத்தாங்க. ஆனா, எல்லாம் விற்பனை ஆகாம தேங்கிடுச்சாம். பெரிய படங்கள் ரிலீஸ் ஆகறதுல இப்ப சிக்கல் இருக்கறதால பெட்டிக்குள்ள முடங்கி கிடந்த சின்ன படங்கள் வரிசையா ரிலீசாகுது. அதிலயும் ஒண்ணு ரெண்டு படங்களை தவிர மத்த படங்கள் வந்த சுவடு தெரியாம போயிடுச்சாம்... போயிடுச்சாம்... லோ பட்ஜெட் இயக்கம் தயாரிப்புங்க ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சிருந்த படங்களை வாங்க ஆள் இல்லையாம்... இல்லையாம்...

பிரபுதேவாவுடன் காதலா? த்ரிஷா பதில்!!!

Thursday, April, 26, 2012
நடிகர் பிரபுதேவா கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தன் வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். மிட்-நைட் பார்ட்டியாக அரம்பித்து காலை வரை நீடித்த அந்த பார்ட்டியில த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி! என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்திலும் அந்த
பார்ட்டியை பற்றிய தகவல் வெளிவந்தது. அதன் பின் பிரபுதேவா ’துன்பம் வரும் வேலையில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என பேசினார்.

பார்ட்டியில் த்ரிஷாவுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவினால் பிரபுதேவா த்ரிஷாவுடன் இணைத்து கதை கதையாக பேசினார்கள்.

இதை பற்றி பேசிய த்ரிஷா “தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம்.நட்பு காரணமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதனால் அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றேன்.

அதற்குள் ஏகப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் நண்பர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது ‘சமரன்’ படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன்.

எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கக் கூட என்னிடம் நேரம் இல்லை. ” என்று கூறினார்.

இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.

விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!!!

Thursday, April, 26, 2012
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரையில் நடந்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியண்ட் மூவீஸ் முதன் முதலில் தயாரித்தது விஜய் நடித்த குருவி படத்தைத் தான் என்பதால் நீங்கள் மறுபடியும் நடிகர் விஜய்யுடன் இணைவீர்களா என நிரூபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த உதயநிதி “ விஜய்க்கு ஏற்ற கதை கிடைத்து, அவரது கால்ஷீட்டும் கிடைத்தால் கண்டிப்பாக மற்றொரு படத்தில் அவருடன் இணைவேன்” என்று கூறினார். விஜய்யும் உதயநிதியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அ.தி.மு.கவிற்கு ஆதரவளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது உதயநிதி ஸ்டாலின் விஜய்யுடன் மிண்டும் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி தன் நிலையை தெரிவித்துவிட்டதால், விஜய்யின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில நாட்களுக்கு முன் நண்பன் படத்தின் நூறாவது நாள் விழாவை கொண்டாடிய விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.

இன்னும் சில பாடல்கள் மட்டுமே மீதம் இருப்பதால், மற்ற வேலைகள் எல்லாம் முடிந்து ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று துப்பாக்கி வெளியிடப்படலாம் என்று கூறுகின்றனர்.

நான் உங்கள் மனைவி ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகை!!!

Thursday, April, 26, 2012
நான் உங்கள் மனைவி எனக் கூறிக்கொண்டு இந்தி நடிகரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நடிகை வாஸ்தவிகா. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் ‘ஜப் வி மெட், கமீனே உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஷாஹித் கபூர். கரீனாகபூரின் முன்னாள் காதலர். மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார். இவரது மகள் வாஸ்தவிகா. ‘எய்ட்Õ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் ஷாஹித் கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியேறினார். அன்று முதல் ஷாஹித்துக்கு பிரச்னை ஆரம்பமானது.

வாஸ்தவிகா தன்னை ஷாஹித்தின் மனைவி என்று கூறிக்கொண்டார். ஷாஹித் ஷூட்டிங் புறப்பட்டால் அவரை பின்தொடர்வது, வாசல் கேட்டிலேயே ஷாஹித் வரும் வரை காத்திருந்து வரவேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஷாஹித்துக்கு பின்னர் இதுவே பெரிய இம்சையாக மாறியது. இதுபற்றி வாஸ்தவிகா குடும்பத்தினர் கூறும்போது, ‘சில வருடத்துக்கு முன் ஷாஹித்தை நடன வகுப்பில்தான் சந்தித்தார் வாஸ்தவிகா. அன்று முதல் அவரை காதலிக்க தொடங்கிவிட்டார்.

இதற்கு மன்னிப்பு கேட்டு ஷாஹித்துக்கு வாஸ்தவிகாவின் அம்மா கடிதம் எழுதினார். என் சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடாதீர்கள். இது என் கணவருக்கு பிடிக்காது என வாஸ்தவிகா குடும்பத்தினரை திட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் செக்யூரிட்டிகளை ஏமாற்றிவிட்டு 13வது மாடியிலிருக்கும் ஷாஹித் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரச்னை பெரிதானது. ஆனால், வாஸ்தவிகா மனநலம் பாதித்தவர் அல்ல என்றனர். இது குறித்து ஷாஹித் கபூரின் மேனேஜர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நன்குமார் மெடர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

ப்ரியாணி மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கும கார்த்தி-வெங்கட்பிரபு கூட்டணி!!!

Thursday, April, 26, 2012
நடிகர் கார்த்தியும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் புதிய படம் ஒன்றில் கைகோர்க்க உள்ளனர். ஆனால் இந்த படத்தோடு டைடில் என்னனு கேட்டீங்கனா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க. என்னங்க தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா. சரிங்க நானே சொல்லிடுறேன். படத்துக்கு பெயரு ப்ரியாணி. என்னங்க நான் சொன்னது சரிதானே. ஆமாங்க இந்த பெயர கேள்விபடாத ஆளே இருக்க முடியாதுங்க. முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் கார்த்தியும் வெங்கட்பிரபு கூட்டணியும் இணையப்போகுது. இதேசமயம் இந்தப் படத்த ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்காங்க.

கண்ணா! ரெண்டாவது லட்டு திங்க ஆசையா! சூர்யாவின் சிங்கம்-2 !!!

Thursday, April, 26, 2012
சிங்கம் என்று அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது படம். பாலிவுட்டிலும் படம் ஹிட்டானது. அதில் அஜய் தேவ்கன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

அடுத்து தமிழில் சிங்கம் படத்தின் பார்ட்-2வில் ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கிறார். சிங்கம் படத்தின் ரீம் அனைவரும் இதில் மீண்டும் இணைகிறார்கள்.

அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் சேர்ந்து ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்க இருக்கிறார். விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர் ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல கதாபாத்திரங்கள் இணைய உள்ளனர். காமெடிக்கு கூடுதலாக சந்தானமும் களமிறங்குகிறார்.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஹைத்ராபாத் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. இயக்குனர் ஹரி முதல் முறையாக பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்க இருக்கிறாராம்.

முதல் பாகத்தில் ஆட்டம் போடும் இசையக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இதற்கும் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சிங்கம் படத்தின் முதல் பாகத்தை விட சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரு லட்டு திண்ணவங்க ரெண்டாவது லட்டுக்கு ஆசைப் படுவது சகஜம் தானே!