Sunday, January 15, 2012

நண்பன் படத்திற்கு தடை கோரி மனு!!!

நண்பன் படத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை களங்கப்படுத்தி, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள, இயக்குனர் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன், காவல் துறை கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஷங்கர் இயக்கிய, "நண்பன் படத்தில், மோசடி கதாபாத்திரத்திற்கு, "பாரிவேந்தர் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இன்னொரு பெண் கதாபாத்திரம் மதுபோதையில், "பாரிவேந்தராவது, பூரிவேந்தராவது என்றும்; மற்றும் ஒரு இடத்தில், "பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்றும், வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், பல லட்சம் மக்களால் பாரிவேந்தர் என்று அழைக்கப்படுகிற எங்கள் கட்சியின் நிறுவனர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு முன்பாக, அவர் இயக்கிய, "சிவாஜி படத்தில், தமிழினத்தின் அடையாளமான வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும், கறுப்பாக சித்தரித்து, தமிழ்ப் பெண்கள் கறுப்பானவர்கள் என்றும், யாரும் அவர்களை உரிமையாக்கிக் கொள் ளலாம் என்றும் சித்தரித்திருக்கிறார்.

வேறு ஒரு படத்திலும், பல லட்சம் கட்சி மற்றும் பார்க்கவ குல சமுதாயத்தால் போற்றப்படுகிற எங்களுடைய தலைவரின் பெயரை, குடிகாரனுக்கு சூட்டி, அவன், பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போல காட்சி அமைத்து, அவர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு, எங்கள் நிறுவனத் தலைவர் புகழை கெடுக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர், அவதூறான, தரக்குறைவான, சட்டத்திற்கு புறம்பானவைகளை, தவறான உள்நோக்குடன் பயன்படுத்தி, தன் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.எங்கள் நிறுவனர், அவரை பின்பற்றுகிற கட்சி மற்றும் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தி களங்கம் கற்பித்த, "நண்பன் பட இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

எதிர்கால தொலைக்காட்சித் துறை வல்லுனர்கள்!!!

Sunday, January 15, 2012
இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
•இதற்காக ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர்.
•தொலைக்காட்சித் துறையானது மிக வேகமாக வளர்ந்து வரும் மிக பிரகாசமான எதிர்காலம் கொண்ட துறையாக உள்ளது.
•இத்துறையில் நுழைய விரும்பும் எதிர்கால தொலைக்காட்சித் துறை வல்லுனர்களை ஊக்குவிக்க ’தினமலர்’ விரும்புகிறது. உண்மையின் உரைகல்லாகத் திகழும் தினமலர் எப்போதும் சமூக நலனிலும், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.
•இந்த வகையில், மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
•ஊடகவியல் துறையில், குறிப்பாக தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத்துறையினை தமது துறையாக தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்காக ”மாணவ இயக்குனர்” எனும் இந்த ஆறு நாள் குறும்படத் தயாரிப்புப் பயிற்சியினை முழுக்க, முழுக்க இலவசமாக தினமலர் மற்றும் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை வழங்க உள்ளது.
•இதற்காக ஆகும் பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை உட்பட அனைத்து செலவுகளையும் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.
•நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமிரா, மற்றும் எடிட்டிங் உபகரணங்களோடு, திரைக்கதை, வசனம், இயக்குதல் ஆகிய அடிப்படைப் பயிற்சிகள் மற்றும் படத்தயாரிப்புப் பயிற்சி ஆகியவை இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட உள்ளன.

அனுமதித் தகுதி மற்றும் வழிமுறைகள்:

◦இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான தகுதியானது தற்போது தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் +2 படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மேலும் தமது எதிர்காலத்தை ஊடகவியல் துறை எனக் கருதுபவராக இருத்தல் வேண்டும்.
◦இப்பயிற்சிக்கான விண்ணப்பத்தை தினமலர் இணையதளத்திலிருந்து இறக்கிப் பூர்த்தி செய்து அனுப்பவும். அவ்வாறு அனுப்பும்போது மாணவர்கள் அத்துடன் ஊடகவியலை அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பினை ஏன் தங்களது எதிர்காலமாகக் கொள்ள விரும்புகின்றனர் என்பது குறித்த கட்டுரை ஒன்றை சுமார் இரு பக்க அளவில், 400 வார்த்தைகளுக்குக் குறையாமல் எழுதி வரும் 10 பிப்ரவரி 2012-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
◦அத்துடன் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள், ஏதாவது இருப்பின், இத்துடன் இணைத்து அனுப்பலாம். ஆயினும் இது கட்டாயமில்லை.
◦தங்களது கட்டுரை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
◦தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு வரும் 2012 ஏப்ரல் மாதம் மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் இப்பயிற்சி முகாம் நடைபெறும்.
◦ பயிற்சி முகாமில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ’மாணவ இயக்குனர்’ எனும் சான்றிதழ் வழங்கப்படும்.
◦பயிற்சி முகாமில் மாணவர்களால் தயாரிக்கப்படும் படங்கள் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
◦மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தினமலர் இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இணையதள முகவரி:
http://www.rlinstitutes.com/rliams/event/App.pdf

ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா, அனூஷ்கா!

Sunday, January 15, 2012
சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம், ‘சிங்கம்’. மெகா ஹிட்டான இந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது. இதில் மீண்டும் சூர்யாவும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் ஹரியிடம் கேட்டபோது கூறியதாவது: சூர்யா, அனுஷ்கா ஜோடியுடன் மீண்டும் இணைகிறேன். மேலும் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு வரும். இது ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் யார் என்பது முடிவாகவில்லை. மார்ச் இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட இருக்கிறது.

பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி: ரஜினி மகள் சவுந்தர்யா புகார்!

Sunday, January 15, 2012
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கோச்சடையான் பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரஜினி நடிக்கும் இப்படத்தை சவுந்தர்யாவே இயக்குகிறார்.

இதில் ரஜினி ஜோடியாக நடிக்க கத்ரினா கயூப்புடன் பேசி வருகின்றனர். இதற்கிடையில் பேஸ்புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக சவுந்தர்யா புகார் கூறி உள்ளார்.

இதுபற்றி சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:-

பேஸ்புக்கில் எனது பெயரில் நிறைய போலி அக்கவுண்டுகள் உள்ளன. அது நான் அல்ல. அவற்றில் எனது படங்களையும் நான் தெரிவித்த கருத்துக்களையும் போட்டு வைத்துள்ளனர். நான் பேஸ்புக்கில் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். டுவிட்டரில் மட்டும் இருக்கிறேன்.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

வித்யாபாலனுக்கு ரஜினி பாராட்டு: மறைந்த நடிகை சவுந்தர்யா இடத்தை நிரப்புகிறார்!

Sunday, January 15, 2012
சில்க்ஸ்மிதா வேடத்தில் த டர்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தவர் வித்யாபாலன். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். வித்யாபாலனை ரஜினி பாராட்டியுள்ளார்.

நடிகை சவுந்தர்யா மறைந்த பிறகு அவரது இடம் காலியாக இருந்தது என்றும் அந்த இடத்தை வித்யாபாலன் நிரப்புகிறார் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

இதற்கு வித்யாபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ரஜினி, திரையுலகின் சகாப்தம். அவர் சவுந்தர்யாவுடன் என்னை இணைத்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் விருது வழங்கும் விழா ஒன்றில் என்னையும் இந்தி நடிகைகள் சிலரையும் மேடைக்கு அழைத்து அருகில் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் என்றும் மறக்க முடியாதது.

தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக கதைகள் கேட்டு இருக்கிறேன். ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவும் விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்.