Thursday, April 5, 2012

பிரபுதேவா பார்ட்டியில் விஜய், த்ரிஷா!!!

Thursday, April 05, 2012
பெண்களுடனான உறவை துண்டிக்கும் போதெல்லாம் மனம் நெகிழும் வகையில் சொல்லும் வசனங்களை இந்தமுறையும் பிரபுதேவா வாசித்திருக்கிறார். பேசியிருக்கிறார் என்பது அபத்தம். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்... நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... யாரையும் குற்றம் சொல்லவில்லை.... நான் தனியாகவே இருக்கிறேன்... ஆ, காது வலிக்குது.

நயன்தாராவுடன் வெற்றிகரமாகப் பிரிந்ததையொட்டி தனது நலம்விரும்பிகளுக்கு பிரமாண்ட பார்ட்டி அளித்தார் பிரபுதேவா. இந்தப் பார்ட்டியில் விவிஐபிகளுக்கு மட்டுமே அழைப்பு. இரண்டாம்கட்ட நடிகர்களுக்குகூட கதவடைப்புதான். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலைப் படித்தால் நடன இயக்குனரின் பவர் தெரியும்.

விஜய், த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி, சூர்யா, இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி... பரம ரகசியமாக நடந்த இந்தப் பார்ட்டியை உலகம் முழுவதும் தெரியப்படுத்திய பெயருமை திடீர் அரசியல்வாதி குஷ்புவை சாரும். கணவர் சுந்தர் சி.யுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இவர் ஆஹா இதல்லவா பார்ட்டி என்று இணையத்தில் பூரித்ததில் பூலோகம் முழுக்க பார்ட்டி பிரபலமாகிவிட்டது.

அரசியல்வாதி அரசியல்வாதிதான்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday, April 05, 2012
காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா ராஜுக்கு தமிழை விட மலையாளத்தில் வரவேற்பு அதிகம். பியூட்டிஃபுல் என்ற மலையாள படத்தில் நடித்தவருக்கு, அப் பட குழுவின் அடுத்த படமான ‘திருவனந்தபுரம் லாட்ஜ் படத்திலும் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.

காதலில் சொதப்புவது எப்படிÕ பட இயக்குனர் பாலாஜி மோகன் தனது படங்களுக்கு குறிப்புகள் தேவைப்பட்டால் அதை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில்தான் சேகரிக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் மூலம் ரீஎன்ட்ரியாகும் அரவிந்தசாமி திடீர் விபத்தில் சிக்கியதில் தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு தெலுங்கில் பிருந்தாவனத்தில் நந்தகுமாரடு என்று பெயரிட முடிவு செய்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

புது இயக்குனர் விஜய் இயக்க சிம்பு நடிக்கும் படத்துக்கு ‘வாலு என்று பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் இணைகிறார் தீபிகா!!!

Thursday, April 05, 2012
ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.

நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.

நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன் : சிம்பு திடீர் முடிவு!!!

Thursday, April 05, 2012
நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன் என்று திடீரென அறிவித்திருக்கிறார் சிம்பு.
‘வல்லவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது முதலே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் காதல் மலர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ‘வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர். சுமார் 2 வருடத்துக்கும் மேலாக இவர்கள் காதல் தொடர்ந்து. தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் நுழையலாம் என்ற எண்ணத்துடன் இருந்த நயன்தாரா படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார். ஆனால் பிரபுதேவாவுடனான காதல் தோல்வி அடைந்ததையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொன்னதாகவும் அடுத்தடுத்து தனது படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடிப்பார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்திருக்கிறார் சிம்பு. இது பற்றி சிம்பு கூறும்போது, ‘நயன்தாரா நான் நடிக்கும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி அவருடன் என்னை இணைத்து வேண்டாம். அவருடன் எந்த படத்திலும் நான் நடிக்கப்போவதில்லை என்றார்.

மன நலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சி!!!

Thursday, April 05, 2012
ஆட்டிசம்நோய் மற்றும் மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடிகர், நடிகைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் சென்னையில் நடக்கிறது. லிமெரியன் ஓட்டலில் வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது.

பேஷன் ஷோவில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா, ஜீவா, மகத், சித்தார்த், நடிகைகள் டாப்சி, சோனியா அகர்வால், நர்கீஸ் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான மேடை '3டி' அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் துரை தயாநிதி மனைவி அனுஷா 'நெபர்தரி' என்ற அமைப்பை துவங்கி அதன்மூலம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

வசூலாகும் தொகையில் ஒருபங்கு மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனமான அரவிந்த் பவுண்டேஷனுக்கு வழங்கப்படுகிறது.

சிம்புடன் நடிக்க நயன்தாரா நிபந்தனை!!!

Thursday, April 05, 2012
சினிமாவில் தென்னிந்திய மொழி படங்களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகி நயன்தாரா. புகழின் உச்சத்தில் இருந்த அவர் பிரபுதேவாவுடன் காதல் வசப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார். இதற்காக பிரபுதேவாவும் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

ஆனால் மனைவி-குழந்தைகளை அவரால் நிரந்தரமாக பிரிய முடியவில்லை. ரகசியமாக குழந்தைகளை சந்தித்தார். இதை அறிந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் உறவை துண்டித்துக் கொண்டார். பிரபுதேவாவை மணப்பதற்காக புதுப்படங்களில் நயன்தாரா நடிக்காமல் இருந்தார். கடைசியாக தெலுங்கில் ராமராஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.

காதல் முறிவால் மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்து இருக்கிறார். இதை அறிந்த தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் பலர் நயன்தாராவை அணுகி தங்களது படங்களில் நடிக்க முயற்சி செய்தனர். ஆனால் நயன்தாரா ஒப்புக் கொள்ளவில்லை. சிறந்த பெரிய பேனர் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். சிம்புவுடன் ஏற்கனவே வல்லவன் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல்-மோதல் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் பிறகு சிம்புவுடன், நயன்தாரா ஜோடி சேரவில்லை.

இப்போது மீண்டும் சிம்புவுடன் நடிக்க அழைப்பு வந்திருப்பதால் நயன்தாரா 3 நிபந்தனைகள் விதித்து இருக்கிறார். தனக்கு சம்பளமாக மிகப் பெரிய தொகை வேண்டும் என்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடன் நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ கூடாது, எனது கேரவனுக்கும் (சொகுசு ஓய்வு வேன்) சிம்பு வரக்கூடாது என்றும் நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் இந்த நிபந்தனை புத்திசாலித்தனமானதா? அல்லது சிம்புவுடன் நடிப்பதை தவிர்ப்பதற்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

'பிருந்தா'வனத்தில் த்ரிஷா!!!

Thursday, April 05, 2012
பிருந்தாவனமாகி வருகிறது பிருந்தா வீடு. தமிழ்சினிமாவின் டாப் மோஸ்ட் டான்ஸ் மாஸ்டரான இவர் வீட்டில் அடிக்கடி கெட் டு கெதர் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழ் திரையுலகின் முன்னணி பின்னணி நடுவிணி நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் நட்சத்திர தம்பதி ஒருவரது வீட்டில்தான் இப்படியெல்லாம் நடக்கும். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த அந்த கொண்டாட்டங்கள் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. புல்லாங்குழல் இருக்கும் வரைக்கும் இசைக்கு பஞ்சமேயில்லை என்பது போல, நட்சத்திரங்கள் இருக்கும் வரை இதுபோன்ற கொண்டாட்டங்கள் எப்படி முடிவுக்கு வரும்? அப்படியே இடத்தை மட்டும் ஷிப்ட் பண்ணிவிட்டார்கள். அந்த இடம்தான் பிருந்தா வீடு. ஒருவகையில் இந்த சந்திப்புகள் நல்லதுதான் என்கிறார்கள் இந்த கூட்டம் பற்றி மன ரீதியாக அலசுகிற அன்பர்கள். பொதுவாக நடிகைகளுக்குதான் மன அழுத்தம் அதிகம் வரும். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சட்டென்று யாரையும் நம்பி விடுவதால் ஏற்படும் தொந்தரவுகள் என்று வாழ்க்கையே சடுகுடு ஆட்டமாக இருக்கும். சக நடிகர் நடிகைகளுடன் இங்கு வரும்போது மன அழுத்தம் முற்றிலும் குறையும். அவர்களும் ரிலாக்ஸ் ஆக இருப்பார்கள் அல்லவா என்கிறார். அலசி ஆராய்ந்தால் தப்பு கூட ரைட்தான். ரைட் கூட தப்புதான். இந்த பார்ட்டிகளில் தவறாமல் பங்கேற்கும் ஒரே நடிகை த்ரிஷாதானாம்!

பெப்சி ஸ்ட்ரைக் அறிவித்துள்ள ஏப் 7ம் தேதி முதல் நாங்கள் வேலை செய்வோம்! - எஸ்ஏ சந்திரசேகரன்!!!

Thursday, April 05, 2012
திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி காலவரையற்ற முழு ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள தினமான ஏப்ரல் 7 முதல், அதை எதிர்த்து தீவிரமாக பணிகளைத் தொடங்குவோம். அனைத்து படப்பிடிப்புகளும் நடக்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), 50 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழி படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றன.

காலப்போக்கில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரிந்து, தனித்தனி கூட்டமைப்பை தொடங்கி விட்டார்கள். இங்கு மட்டும் தென்னிந்திய தொழிலாளர் அமைப்புடன் இணைந்து வேலை செய்து வந்தோம்.

அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் (பெப்சி), தமிழ்ப்பட உலகின் இன்றைய நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல், பலவிதத்தில் தமிழ் படங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார்கள்.

பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் இங்கே வேலை நிறுத்தம் செய்துவிட்டு, பிறமொழி படங்களில் போய் வேலை செய்வார்கள். இங்கு நடைபெறும் வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு நஷ்டம் அல்ல. தமிழ்ப்பட தயாரிப்பாளர்களின் கதி என்ன? எந்த காலகட்டத்திலும் வேலை நிறுத்தம் கூடாது என்பதுதான் நடைமுறை.

தமிழ்ப்படங்களுக்கு என தனியாக ஒரு தொழிலாளர் அமைப்பு இருந்தால் நல்லது என்று தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதை நாங்கள் தீர்மானமாக நிறைவேற்றினோம்.

தமிழ்ப்பட உலகின் நிலைமையையும், தயாரிப்பாளர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு, தமிழ் படங்களுக்கு தனியாக யாராவது ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கினால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தொழிலாளர்களுடன் விரோதம் கிடையாது. அவர்களுடன் எங்களுக்கு பகை இல்லை.

வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்துவோம் என்றும், படம் தொடர்பான மற்ற வேலைகளையும் நிறுத்துவோம் என்றும் பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். 7-ந் தேதி முதல் நாங்கள் வேலை செய்வோம். வேலை நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. எந்த தொழில்நுட்ப கலைஞரோ, தொழிலாளியோ எங்களை நம்பி வரும் பட்சத்தில், அனைவரையும் அரவணைத்து, இணைந்து வேலை செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர்கள் கோவை தம்பி, கே.ராஜன், எச்.முரளி, வி.சேகர், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் இருந்தனர்.

டகால்டி பிக்சரில் ஸ்ரேயா!!!

Thursday, April 05, 2012
ரன்வே காலியா கிடக்குன்னு நடை வண்டி ஓட்டி பார்த்தானாம் சிறுவன். அப்படி ஆகிருச்சு ஸ்ரேயாவின் நிலைமை. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழி சினிமாவும் ஸ்ரேயா என்ற நடிகையை கை கழுவி பல மாதங்கள் ஆகிறது. இதற்கெல்லாம் காரணம் யார், எது, எப்படி என்ற ஏராளமான கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டுக் கொள்கிற ஸ்ரேயா எதற்கும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரை செக்ஸியாக நடிக்க சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறாராம் ஒரு தெலுங்கு இயக்குநர். கதைப்படியே இதில் விலைமாதுவாக ஸ்ரேயா நடிக்க வேண்டிய நிலை. அப்படியென்றால் 'பிட்டு'களுக்கு எப்படி பஞ்சம் இருக்கும்? முதலில் யோசித்த ஸ்ரேயா 'டர்ட்டி பிக்சர்' மாதிரி, இது டகால்டி பிக்சராக இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இவரது சம்மதத்தின் பேரில் சில லட்சங்கள் அட்வான்சாக கைமாறியிருக்கிறதாம். உடம்பெல்லாம் குறைந்து ஜீரோ சைசுக்கு வந்துவிட்டார் ஸ்ரேயா. இந்த நேரத்தில் இப்படி ஒரு விலைமாது கேரக்டர்..

'தெய்வத்திருமகள்' கூட்டணி இயக்குநர் விஜய் - விக்ரம் இணைந்து இருக்கும் 'தாண்டவம்'!!!

Thursday, April 05, 2012
யு.டிவி நிறுவனம் தமிழ் திரையுலகில் கால்பதித்து பிரம்மாண்ட படங்களை தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறது. யு.டிவி நிறுவனம் தயாரிப்பில் 'தாண்டவம்', 'முகமூடி', 'மசாலா கஃபே' என மூன்று படங்கள் உருவாகி வருகிறது. 'தெய்வத்திருமகள்' கூட்டணி இயக்குநர் விஜய் - விக்ரம் இணைந்து இருக்கும் 'தாண்டவம்' படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன. 'தாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், யு.டிவி நிறுவனம் படத்தின் FIRST LOOKஐ வெளியிடவில்லை. 'தெய்வத்திருமகள்' படத்தின் FIRST LOOKஐ போலவே இதுவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யு.டிவி நிறுவனம் வெளியிட்ட 'தாண்டவம்' படத்தின் FIRST LOOK அமைந்து இருக்கிறது. 'தாண்டவம்' படத்தில் விக்ரம், ஜகபதி பாபு இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். படம் நெடுக போலீஸ் உடையில் நாயகன் வருவது போல அல்லாமல் வித்தியாசமாக கதைக்களம் அமைத்து இருக்கிறாராம் விஜய். 'தாண்டவம்' படத்தில் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், ஜகபதி பாபு, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

கவர்ச்சி கோதாவில் அஞ்சலி, ஓவியா!!!

Thursday, April 05, 2012
இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோவாக நடித்து வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சுந்தர்.சி நடிக்காமல், விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து 'மசாலா காஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கவர்ச்சி இருக்கும் என்பதை 'மசாலா காஃபே' படத்தின் புகைப்படங்கள் சொல்கிறது. அதிலும் அஞ்சலி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கவர்ச்சியில் இப்படத்தின் பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார். அஞ்சலிக்கு சளைத்தவள் நானல்ல என்று, ஓவியாவும் அவருடைய பங்குக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.

பெட்டி கடையில் உடை மாற்றிய ஹீரோயின்!!!

Thursday, April 05, 2012
விகாஷ் சுவாஷிகா நடிக்கும் படம் கண்டதும் காணாததும். சீலன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: காதலனை தவறாக புரிந்துகொள்ளும் காதலியால் பிரச்னை ஏற்படுகிறது. அதன் விளைவுகளே கதை. இதன் ஷூட்டிங் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்தது. ஹீரோ யின் சுவாஷிகா ஏற்கனவே வைகை கோரிப்பாளையம் படங்களில் நடித்தவர். வெளிப்புற படப்பிடிப்பு நடந்த போது கேரவன் உள்ளிட்ட எந்த வசதியும் கேட்கவில்லை. காஸ்டியூம் மாற்றுவதற்குகூட லொகேஷன் அருகே இருந்த பெட்டிக்கடையை பயன்படுத்திக்கொண்டார்.

இப்பட ஷூட்டிங் பிலிம் கேமரா ரெட் கேமரா செல்போன் கேமரா 16 எம்.எம் கேமரா உள்பட 6 கேமராவில் நடந்துள்ளது. எல்லாவற்றையும் இணைத்து முழுபடமாக்கி கியூபில் மாற்றப்பட்டது. இந்த புதுமுயற்சிக்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர்தான். ஐஐடியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெளிநாடுகளில் பணியாற்றியவர். அமெரிக்காவில் சில காட்சிகளை அவரே கேமராவில் படமாக்கி வந்தார். அதுவும் இப்படத்தில் இடம்பெறுகிறது. இசை சார்லி. தயாரிப்பு எஸ்.சங்கரநாராயணன் எஸ்.இந்து.

விஜய்க்காக நடிக்கிறேன்!: ஏ.ஆர். முருகதாஸ்!!!

Thursday, April 05, 2012
விஜய் ரசிகர்கள் தற்போது இணையங்களில் அதிகமாக விவாதித்து வருவது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பது பற்றி தான். விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOKல் விஜய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். 'துப்பாக்கி' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் "படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு சிறு பாடல் இருக்கிறது. 'துப்பாக்கி' படத்திற்கான THEME MUSIC வரும் வாரத்தில் தயார் செய்ய இருக்கிறோம். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 12-ம் தேதி முதம் துவங்க இருக்கிறது. படத்தில் விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருக்கிறேன். 'துப்பாக்கி' படத்திற்கான FIRST LOOKல் பணியாற்ற உள்ளோம். விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டால் அவர் தனது போனை தொடக்கூட மாட்டார். வேலையில் அவர் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது" என்று தெரிவித்து இருக்கிறார். நீங்களுமா? அடுத்த படத்துல ஹீரோவாயிடாதீங்க சார்.....

ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன்! - கமல்!!!

Thursday, April 05, 2012
'3' படத்தில் மகளின் நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாஸன். லாஸ் ஏஞ்சல்ஸூக்குப் புறப்படும் முன் இந்தப் படத்தை கமலுக்கு போட்டுக் காட்டினார்களாம் தனுஷும், ஐஸ்வர்யாவும். படம் பார்த்துவிட்டு, மகளை பாசத்துடனும் பெருமையுடனும் தழுவி உச்சிமுகர்ந்த கமல், யாருடைய பயிற்சியும் அறிவுரையும் இன்றி தன் சுய முயற்சியில் இத்தனை தூரம் நடிப்பில் ஸ்ருதி முன்னேறியிருப்பதை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் கமல். அவர் கூறுகையில், "பொதுவாக ஸ்ருதி அவரது அம்மா போல இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன். இதை ஒரு தந்தையாக இருந்து சொல்லவில்லை. ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார். துணிச்சலான பெண் இயக்குநர், இதுவரை எந்த பெண் இயக்குநரும் இந்த மாதிரி முயன்றதில்லை என ஐஸ்வர்யாவையும் பாராட்டியுள்ளார் கமல். இந்தப் படம் மே மாதம் இந்தியில் வெளியாகிறது. இந்திப் பதிப்பில் சில மாறுதல்களைச் செய்யுமாறு அட்வைஸூம் கொடுத்துள்ளார் கமல். தமிழ்ப் படம் என்பதைக் காட்டும் சில காட்சிகளை மட்டும் இந்திக்கேற்ப மாற்றச் சொன்னாராம்.

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளை வாங்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்!!!

Thursday, April 05, 2012
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளை வாங்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் தவிர இந்தி ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கிறார் ரகுமான். பெரும்பாலும் வெளிநாடுகள் மும்பையில் அவர் தங்குவதால் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்கும்பொருட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது தங்குவதற்காக ஒரு சில நாடுகளில் சொந்தமாக வீடு வாங்கி வைத்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் மும்பையிலும் அடுக்குமாடி குடியிருப்பில் அருகருகே இருக்கும் வகையில் 2 ஆடம்பர வீடுகள் வாங்கினார். தமிழ் படங்களுக்கு இசை அமைக்கும்போது சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவிலேயே அப்பணியை மேற்கொள்வார். குறிப்பாக இரவு நேரத்தில் தொடங்கி விடிய விடிய இசை கம்போசிங் பணியை அவர் மேற்கொள்வது வழக்கம்.

இந்தி படங்களுக்கு இசை அமைக்க மும்பை செல்லும்போது ஓட்டலில் தங்க வேண்டும் இசை கம்போசிங் ஒலிப்பதிவுக்கு நவீன வசதிகளுடன்கூடிய பிரபல ஸ்டுடியோக்களை தேட வேண்டி உள்ளது. இதற்காக அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் சொந்த பிளாட் வாங்க எண்ணி இருந்தார். அதன்படி சமீபத்தில் அருகருகே இருக்கும் இரண்டு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டை நவீன வசதிகளுடன் கூடிய ஒலிப்பதிவு ஸ்டுடியோவாக மாற்றினார். புதியவீட்டை சமீபத்தில் மனைவியுடன் சென்று பார்வையிட்டு வந்தார் ரகுமான்.

நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை- பிரபு தேவா!!!

Thursday, April 05, 2012
தனது முன்னாள் காதலியாகிவிட்ட நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை என நடிகர் பிரபு தேவா கூறினார்.

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துவிட்டது. இதுவரை பத்திரிகைச் செய்தியாக இருந்ததை, நயன்தாராவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

"பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டு கொடுத்தேன். நான் 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபு தேவா இல்லை. அதனால் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் தற்போது முறிந்து விட்டது. பிரபு தேவா துரோகம் செய்துவிட்டார்," என்று பேட்டியளித்திருந்தார் நயன்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் பிரபுதேவா. அவர் கூறுகையில், "என்னைப்பற்றி நிறைய செய்திகள் வெளி வருகின்றன. நான் எதையும் பாராதது போல, கேளாதபோல் இருக்கிறேன்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியும். என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால் சிலர் மனது காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன்.

நடந்த விஷயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவை என் சொந்த விஷயங்கள். காதல் பற்றி நான் எது சொன்னாலும் அது செய்தியாகிவிடும். இந்த விஷயங்களை வெளிப்படையாக பேசாததற்காக எனது ரசிகர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இக்காட்டான நேரத்தில் தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை," என்றார்.

நடிகர் தர்மேந்திரா,சபனா ஆஸ்மி உள்பட 51 பேருக்கு பத்ம விருதுகள்: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்!!!

Thursday, April 05, 2012
புதுடெல்லி::கலை, இலக்கியம், மருத்துவம், வர்த்தகம், பொதுநலச்சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறது. இந்த ஆண்டு பத்ம விருது வழங்குவதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் தர்பார் அரங்கில் நேற்று கோலாகலமாக நடந்தது.

விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், வர்த்தகத்துறை மந்திரி ஆனந்த் சர்மா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது விருதான பத்ம விபூஷண் விருது மறைந்த கார்டூனிஸ்ட் மரியோ மிராண்டாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதை அவரது மகன் ராகுலிடம் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, ஜனாதிபதியிடம் பத்மபூஷண் விருதினைப் பெற்றபோது, தர்பார் அரங்கில் பார்வையாளர்கள் வரிசையில் கரவொலி எழுந்தது. இதேபோன்று பிரபல நடிகையும், சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி பத்மபூஷண் விருதுபெற்றார்.

வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டாடா உருக்கு நிறுவன துணை தலைவர் பி.முத்துராமன், கணிதவியல் வல்லுனர் ரகுநாதன், வக்கீல் பி.சந்திரசேகரராவ், ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் விட்டல், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ஜார்ஜ் யாங்க். பூன் எவோ உள்ளிட்டவர்களுக்கும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பு செய்தார்.

தொழில் அதிபர் சுவாதி பிரமால், நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன், முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ்.நடராஜன், முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் ஜப்பார் இக்பால், வில்வித்தை வீரர் லிம்பா ராம், கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சதுர்வேதி, ஒடிசி கலைஞர் மினாட்டி மிஸ்ரா, இஸ்ரோ பேராசிரியர் யக்னசாமி உள்பட 38 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

நேற்றைய விழாவில் மொத்தம் 51 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல ஓவியக்கலைஞர் கே.ஜி.சுப்பிரமணியன் (பத்மவிபூஷண் விருது), சத்தியநாராயண் கோயங்கா, ஜோஸ் பெரைரா (பத்மபூஷண் விருது) ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

இவர்களுக்கு மற்றொரு நாளில் விருது வழங்கப்படும். கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த விழாவில் ஏற்கனவே பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு விட்டது நினைவு கூறத்தக்கது.