Sunday, March 18, 2012

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday, March 18, 2012
*நடிப்பு கல்லூரியில் சொகுசாக நடிப்பு கற்கிறவர்கள் வெளியுலகுக்கு வரும்போது அங்குள்ள முரட்டுத்தனத்தை எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும். திரையுலகுக்கு வரும்போது படித்த திமிர் இருக்கக்கூடாது என நடிப்பு பயிற்சி தரும் ஆல்கெமி அமைப்பின் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றி மாறன் குறிப்பிட்டார்.

*அரவான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த், ஏற்கனவே யாரடி நீ மோகினி, நளதமயந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

*இடது கைகட்டை விரல் அருகில் ஸ்டாம்ப் சைஸில் டாடூ வரைந்திருக்கிறார் கார்த்தி.

*த்ரிஷாவின் நெருங்கிய நண்பரும், காஸ்டியூம் டிசைனருமான ஷிட்னி ஷெல்டன் பிரபலங்கள், மாடல் அழகிகளை வைத்து ஆடை அணிவகுப்பு நடத்த உள்ளார்.

*துப்பாக்கி படத்துக்காக டூயட் பாட விஜய், காஜல் அகர்வால் பாங்காக் பறந்துள்ளனர்.

பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!!!

Sunday, March 18, 2012
2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது.

ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி.

அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா.

அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர்... இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.

ஏப்ரல் 3-ம் தேதி பிரபு தேவாவுக்கு இன்னொரு விசேஷமான நாள். அன்றுதான் அவரது பிறந்த நாள். இந்த நாளில் இப்படியொரு பிரமாண்ட ஷோவில் அவர் ஆடுவது இதுதான் முதல்முறை!

தெலுங்கில் ரிலீசான சித்தார்த் படங்களை தமிழில் டப்பிங் சித்தார்த் படங்கள்!!

Sunday, March 18, 2012
தமிழில் ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதைத் தொடர்ந்து தமிழில் ஒருசில படங்களிலேயே நடித்தார். பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கு முன்னணி நடிகராக உள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்து தமிழில் ரிலீசான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் தமிழில் கதை கேட்கிறார்.

தற்போது ‘ஆடுகளம்’ வெற்றி மாறன் தயாரிக்கும் படமொன்றுக்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ரிலீசான சித்தார்த் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் பணிகளும் நடக்கின்றன.

இந்தியில் ரீமேக் ஆகும் ‘துப்பாக்கி’ -இந்தியில் விஜய் நடிக்கும் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது!

Sunday, March 18, 2012
ஏ.ஆர். முருகதாஸ் ‘7-ஆம் அறிவு’ படத்தையடுத்து அவர் இயக்கும் படம் ‘துப்பாக்கி’. இப்படத்தில் விஜய், காஜர் அகர்வால் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். என்கவுண்டர் போலீஸ்காரரின் கதையே இப்படத்தின் கரு. தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை இந்தியிலும் இயக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ்.

இந்தியில் விஜய் நடிக்கும் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரே இசை ஆல்பத்தில் விக்ரம், சாய்னா, ஸ்ரீசாந்த்!!!

Sunday, March 18, 2012
ஒரே இசை ஆல்பத்தில் விக்ரம், அசின், சாய்னா, ஸ்ரீசாந்த் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பாடுகிறார்கள்.வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருவை மையமாக வைத்து ஒன் என்ற பெயரில் இசை ஆல்பம் உருவாகிறது. பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான ஜார்ஜ் பீட்டர் இதை உருவாக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:இந்தியாவில் பல்வேறு மொழியினர் இருந்தாலும் இந்தியன் என்ற ஒரு சொல்லில் இணைந்திருக்கின்றனர். நாட்டுபற்று, சகோதரத்துவம் போன்றவற்றை உறுதிபடுத்தும் வகையில் இந்த இசை ஆல்பம் உருவாகிறது. இதில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இணைந்து பாடுகின்றனர். விக்ரம், மம்மூட்டி, சுதீப், மோகன்லால், சுரேஷ்கோபி, விவேக் ஓபராய், ஜாயித் கான், அசின், கார்த்திகா, லட்சுமிராய், மம்தா, பாவனா, விளையாட்டு துறையை சேர்ந்த சாய்னா, ஸ்ரீசாந்த், இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களான பிளாசே, சுவேதா, மோகன், சங்கர் மகாதேவன், வசுந்த்ரா தாஸ், சித்ரா, உஷா உதூப், உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், ஜேசுதாஸ், விக்கு வினயாக்ராம், ஸ்டீபன் வேசே உள்ளிட்ட பலர் இதில் இணைகின்றனர். இவ்வாறு ஜார்ஜ் பீட்டர் கூறினார். இதன் புரமோஷனல் கிளிப்பிங்ஸ் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.

ஷூட்டிங்கில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றது ஏன்? சிம்பு பேட்டி!!!

Sunday, March 18, 2012
மூன்று படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றது ஏன்? என்பதற்கு சிம்பு பதில் கூறினார்.
போடா போடி, வேட்டை மன்னன், வட சென்னை ஆகிய 3 படங்களில் சிம்பு நடிக்கிறார். இப்படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் 1 மாத காலம் வெளிநாடு சென்ற¤ருந்தார். அவர் கூறியதாவது:
ஒஸ்தி படம் முடிந்து ரிலீஸ் ஆன பிறகு அமெரிக்கா சென்றுவிட்டேன். லவ் ஆன்த்தம் என்ற பெயரில் இசை ஆல்பம் உருவாக்குகிறேன். சர்வதேச அளவில் வெளியிடுவதற்காக இதை உருவாக்குவதால் இது பற்றி இசை கலைஞர்களுடன் ஆலோசிக்க அமெரிக்க சென்றேன். அங்கு புகழ்பெற்ற பாடகர்கள், இசை கலைஞர்களை சந்தித்து பேசினேன். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஆல்பத்தில் சில பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சில பாடல்களுக்கு நான் இசை அமைக்கிறேன். இருவரும் பாடுகிறோம். வெளிநாட்டு கலைஞர்களும் பாடுகின்றனர். காதல் என்ற கருவை வைத்து இந்த ஆல்பத்தை உருவாக்குகிறேன். இதேபோன்ற கருத்துடன் பலர் பாடல் உருவாக்குகிறார்கள்.

3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு சுமார் 1 மாதம் அமெரிக்கா சென்றது ஏன் என்கிறார்கள். என்னால் இதன் படப்பிடிப்பு தடைபடவில்லை. ஏற்கனவே கடந்த 1 மாதமாக ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. எந்த ஷூட்டிங்கும் நடக்கவில்லை. என் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் தினமும் தொடர்பில் இருந்தேன். எந்த இடத்தில் தங்கி இருக்கிறேன் என்பதை அவர்களிடம் அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருந்தேன். Ôபோடா போடிÕ படத்திற்காக 4 பாடல்கள் முடிக்க வேண்டி உள்ளது. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்ல உள்ளோம்.வேட்டை மன்னன் ஏற்கனவே பாதிபடம் முடிந்திருக்கிறது. விரைவில் இப்படத்துக்காக பிரேசில் செல்கிறோம். இப்படங்கள் முடிந்ததும் வெற்றி மாறனின் வடசென்னை படத்தில் நடிப்பேன்.

இளையராஜா, நயன்தாராவுக்கு தெலுங்கு சினிமா விருது!!!

Sunday, March 18, 2012
தெலுங்கில் சிறந்த இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்படுகிறது. சென்னையில் 23ம் தேதி நடக்கும் விழாவில் கவர்னர் ரோசையா விருது வழங்கு கிறார்.சென்னையில் இயங்கிவரும் ஸ்ரீகலா சுதா அசோசியேஷன்ஸ் யுகாதி தெலுங்கு புத்தாண்டை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி சிறந்த தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு சினிமா நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

14வது ஆண்டு தெலுங்கு புத்தாண்டையொட்டை ‘மஹிலா ரத்னா’ மற்றும் ‘யுகாதி புரஸ்கார்’ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.சிறந்த நடிகருக்கான விருது ‘ஸ்ரீராமராஜ்யம்‘ படத்திற்காக ராமகிருஷ்ணாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.மற்ற முக்கிய விருது களில் சிறந்த இயக்குனர்பப்பு (ஸ்ரீராமராஜ்யம்)சிறந்த படம்ஸ்ரீராமராஜ்யம், இசையமைப்பாளர்இளையராஜா (ஸ்ரீராமராஜ்யம்)சிறந்த அறிமுக நடிகைஸ்ருதி ஹாசன் (ஓ மை பிரண்ட்) ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வரும் 23ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசையா பங்கேற்று விருது வழங்குகிறார்.

'ஸ்பைடர்மேன்’ கதையை மிஞ்சும் ‘முகமூடி!!!

Sunday, March 18, 2012
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘முகமூடி’. இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் தொடக்கவிழா பூஜையே மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஹாலிவுட்டில் பிரபலமான ஸ்பைட்மேன் கதையையும் மிஞ்சுவதாக இருக்கும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். மேலும் இதில் சூப்பர் மேனாக ஜீவா வருகிறார். மேலும் முதன்முதலாக நரேன் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார் என்றும் கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் மிஷ்கினின் கனவுப்படம் என வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
.

தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஹீரோயின¢ ஆனார்!!!

Sunday, March 18, 2012
தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஹீரோயின¢ ஆனார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது. அவர் கால்ஷீட் ஒதுக்கி தர இருந்தார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு படம் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்ததால் ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு புதுமுகங்களை அழைத்து தேர்வும் நடந்தது. ஆனால் பொருத்தமான ஹீரோயின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் இருந்து தூது வரவே இயக்குனர் அவரிடம் பேசினார். ஏற்கனவே ‘பிசினஸ்மேன்Õ என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்திருந்ததால் இதிலும் அவர் ஜோடி சேர மகேஷ் பாபு சம்மதித்தார். உடனடியாக கால்ஷீட் வழங்கினார் காஜல். இதையடுத்து ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமன்னா வாய்ப்பை காஜல் பறித்திருப்பதால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினேகாவின் இடத்தைப் பிடிப்பீர்களா..?: விண்மீன்கள் நாயகி ஷிகா பதில்!!!

Sunday, March 18, 2012
தற்போது திரைக்கு வந்திருக்கும் 'விண்மீன்கள்' படத்தின் கதாநாயகி ஷிகா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கும் பெங்களூர் அழகியான ஷிகா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

திரைப்படத்துறையில் தங்களது அறிமுகம்..?

இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா (Galipatta) என்னும் கன்னட படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுடன் அதில் வரும் 'நதீம் தீம் தானா' என்கிற பாடலும் மிகவும் பிரபலமடைந்த்து. அதே பாடலில் நான் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது... தொடர்ந்து வாரேவா, மயதானத மலே, காகன சுக்கி ஆகிய கன்னடப் படங்களின் நடித்தேன்.

தமிழுக்கு எப்படி வந்தீர்கள்...?

இயக்குனர் மதுமிதாவின் கொலகொலயா முந்திரிக்காவில் படத்தில் நான் அறிமுகமானேன். அதன் பிறகு இன்று விண்மீன்களில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. விண்மீன்களில் அம்மாவாக நடித்திருக்கிறீர்களே..? ஆம், அந்தப் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் மேனன் என்னிடம் சொல்லியபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசிவிடும் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அதன் பெற்றோர் எவ்வளவு சிரத்தை எடுத்துப் பராமரிக்கின்றனர்.

அப்படிப் பட்ட ஒரு அம்மாவாக நான் நடித்ததில் எனக்குப் பெருமையே... செரிப்ரல் பால்ஸி (Cerebral palsy) என்னும் ஒருவகைக் குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு மூளையைத் தவிர கிட்டத்தட்ட மற்ற பாகங்களின் இயக்கம் துண்டிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட பாதி இறந்த மாதிரிதான். இருந்தும் அந்தக் குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டி சமுதாயத்தில் மிகவும் நல்ல நிலைமைக்கு வளர்த்தெடுக்கும் அம்மா வேடம். அதற்காக காட்டன் புடவைகளையே கட்டி நடித்தேன்... மூன்றில் ஒரு பங்கு எடையையும் கூட்டினேன். எனக்கு அந்த அம்மா கதாபாத்திரம் ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது... அந்தப் பரீட்சையில் ரசிகர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது..

தமிழுக்கு வருவதற்கு முன் தமிழ் தெரியுமா..?

இல்லை... சுத்தமாகத் தெரியாது.... கொல கொலயா முந்திரிக்காவில் ஒப்பந்தமானவுடனே நானாகவே தமிழ் கற்கத் தொடங்கினேன்... வசனங்களைப் புரிந்து சரியான முகபாவனைகள் வெளிப்படுத்தத் தேவையான அளவிற்குத் தமிழைக் கற்றுக் கொண்டேன்... தமிழ் ஒரு அற்புதமான மொழி, இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்...

தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி..?

ஏ.எம்.ஆர்.இயக்கத்தில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் வனயுத்தம் படத்தில் சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனின் நண்பனான குருநாத்தின் காதலி சாந்தினியாக நடிக்கிறேன்... அது ஒரு காட்டுவாசிப்பெண் வேடம்.. முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது... மேக் அப் இன்றி காடு மலை என்று மிகவும் சிரத்தையெடுத்து நடிக்கிறேன்... துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டே நடக்க வேண்டும்... நிச்சயம் இந்தப் படம் எனக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித்தரும்... படம் பார்த்துக் கதை சொல் என்னும் படத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் போட்டோகிராபார் வேடம் ஏற்று நடிக்கிறேன்... முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது... எனக்கோ கேமராவைச் சரியாகப் பிடிக்கவே தெரியாது அந்தப் படத்தின் கேமரா மேன்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார்.... தருண் சத்ரியாவின் காதலியாக நடிக்கும் படம் பார்த்துக் கதை சொல் ஒரு ஆக்‌ஷன் படம்...

எந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை..?

எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எந்தவிதமான வேடங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறேன்...

விண்மீன்களில் புடவை கட்டி வந்த நீங்கள் சினேகா போல இருப்பதாகச் சொல்கிறார்கள்.. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் அவரது இடத்தைப் பிடிப்பீர்களா..?

நான் அடிப்படையில் சுஹாசினி, ரேவதியின் மிகப்பெரிய ரசிகை...சினேகாவின் ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்... என்னிடமும் பலர் சினேகாவைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள்... அதில் எனக்குப் பெருமை... எனக்கு மிகவும் மரியாதை கிடைத்ததைப் போல் உணர்கிறேன்... அதேசமயம் அவரது இடத்தைப் பிடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது...

தங்களது அழகின் ரகசியம்..?

சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்வதற்கு நல்ல புத்தகங்கள் படிப்பேன்... எல்லா நல்ல படங்களையும் விடாமல் பார்த்துவிடுவேன்.. மற்றபடி எனது நடனப்பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் என்னை அழகான உடம்புக்குச் சொந்தக்காரியாக வைத்திருக்கின்றன.

தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!!!

Sunday, March 18, 2012
தனுஷே எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலை வெறி' பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.

கொலை வெறி பாடல், `3' படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.

ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3' படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.