Friday, February 24, 2012

இந்தியன் படக் கதையை ரஜினிக்காகத்தான் உருவாக்கினேன் - ஷங்கர்!

Friday, February 24, 2012
இந்தியன் படக்கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஆனால் பின்னர் கமல் நடித்தார் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விகடன் மேடையில் வாசகர் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், "'இந்தியன்’ கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்’ படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியே’ என்று ஆச்சர்யப்பட்டார்.

நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்’ தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.

ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் 'டூப்ளிகேட்' ஆன சூர்யாவின் மாற்றான்!!!

Friday, February 24, 2012
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படம், தெலுங்கில் டூப்ளிகேட் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் பேனரில் தயாரிக்கும் படம் மாற்றான். சூர்யா ஐந்து வித்தியாசமான ரோல்களை இந்தப் படத்தில் செய்கிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

பால்கன் நாடுகள் எனப்படும் ரஷ்யா, செர்பியா, குரேஷியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் என்ற அளவுக்கு பக்காவாக டப் பண்ணப் போகிறாராம் இயக்குநர் கே வி ஆனந்த். தெலுங்கு பதிப்புக்கு டூப்ளிகேட் என பெயர் சூட்டியுள்ளார்.

மே அல்லது ஜூனில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

சவுண்ட் காமெடி ராசி ஹீரோயின்!!!

Friday, February 24, 2012
சந்தான காமெடி சவுண்ட் பார்ட்டியாகி இருக்காராம்... இருக்காராம்... கால்ஷீட் வேணும்னு யாராவது கேட்டா பாக்கலாம்னு சொல்றாராம்... சமீபத்துல அவர தனியா அழைச்ச பிரகாச பிரதர் ஹீரோக்கள் தாங்கள் நடிக்கிற அரை டஜன் படத்துல நீங்கதான் நடிக்கணும்னு அட்வான்ஸ திணிச்சாங்களாம்... காமெடியும் பிகு பண்ணாம வாங்கிக்கிட்டாராம்... வாங்கிக்கிட்டாராம்...

சமந்தமான ஹீரோயினுக்கு கோலிவுட்ல எந்த படமும் சக்சஸ் ஆகாததால நெறய பேர் ராசி பார்த்து நடிகய ஓரங்கட்டுனாங்களாம்... கட்டுனாங்களாம்... ஆனா அவர் டோலிவுட்ல நடிச்ச 3 படம் ஹிட்டானதால மவுசு கூடிப்போச்சாம்... வேணாம்னு ஒதுக்கன இயக்கங்கள் எல்லாம் இப்ப ‘நீங்க ராசியான ஹீரோயின்’னு சொல்லி டேட் கேட்டு காத்திருக்காங்களாம்... அவரோ ‘பெல்’ இயக்கம் படத்துல நடிக்கறதால நெக்ஸ்ட் இயர் பாக்கலாம்னு திருப்பி அனுப்பிடுறாராம்... அனுப்பிடுறாராம்...

சுதீப்பான நடிகரு கோலிவுட்ல பயங்கர வில்லனா நடிச்சாரு... நடிச்சாரு... திடீர்னு சேண்டல்வுட்ல அவருக்கு கிராக்கி ஏற்பட்டதால கோலிவுட் படங்களுக்கு கால்ஷீட் இல்லைனு கைவிரிக்கிறாராம். டைரக்டராவும் ஆயிட்டதாலே இப்ப கிரேடு கூடிப்போச்சாம். எல்லா ஆர்ட்டிஸ்டையும் சக ஆக்டருங்க மாதிரி பாக்காம இயக்குனர் பார்வையிலேயே பாக்கறாராம். இதனால பிரண்ட்ஸா
பழகுனவங்ககூட ஒதுங்கறாங்களாம்... ஒதுங்கறாங்களாம்...

தமிழில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

Friday, February 24, 2012
தமிழ் படத்தில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறினார் ஹீரோயின். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி சுபா புட்லா. தென்னிந்திய அழகி போட்டியில் வென்றவர். கன்னட பட இயக்குனர் ரவிவர்மா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் திடீரென்று அப்படத்தில் இருந்து விலகி தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். இதுபற்றி ரவிவர்மா கூறுகையில், ‘‘என் படத்தில் சுபா நடிக்க இருந்தது. சில நாட்களுக்கு முன்பே இது முடிவானது. ஆனால், அவர் நடிப்பதில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லையாம். நடிக்க கூடாது என்று அவர் சொல்லிவிட்டதால் சுபா அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அம்மாவிடம் பேசியும் அனுமதி கிடைக்கவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை’’ என்றார். கன்னடத்தில் நடிக்காமல் விலகிய சுபா தமிழில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதால்தான் கன்னட படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஏற்கனவே தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் கன்னட படத்தில் நடிக்க முடியவில்லை. புதுமுகமாக நடிக்கலாம் என்று இருந்தேன். கால்ஷீட் பிரச்னையால்தான் நடிக்க முடியவில்லை. பட குழுவுடன் பேசிதான் இந்த முடிவை எடுத்தேன். தமிழ் பட ஷூட்டிங் விரைவில் முடிகிறது. நல்ல வாய்ப்பு வந்தால் கன்னட படங்களில் நடிப்பேன்’ என்றார்.

சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா : வெங்கட் பிரபு பதில்!

Friday, February 24, 2012
சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்றதற்கு பதில் அளித்தார் வெங்கட்பிரபு. இதுபற்றி அவர் அளித்த பேட்டி: மங்காத்தா வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள். மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். சூர்யா நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் - த்ரில்லர் படம். அதே நேரம், ஹீரோக்கள் காமெடி காட்சிகளிலும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது!

Friday, February 24, 2012
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.

பிகினி உடையில் லட்சுமிராய்!!!

Friday, February 24, 2012
தெலுங்குப்படமொன்றில் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிராய், புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்குப்பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் லட்சுமிராய், நடிக்கும் அதிநாயகடு படத்தை டைரக்டர் பரச்சூரி முரளி இயக்குகிறார். படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் ரெடி!

Friday, February 24, 2012
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இதனையடுத்து, ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் முடிவாகிவிட்டதாம். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தாத்தா அமிதாப்பச்சன் வீடு திரும்பியதும் இதற்கான விழா நடக்க உள்ளது.

சாந்தகுமார் இயக்கத்தில் கார்த்தி...?.

Friday, February 24, 2012
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்து, சாந்த குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் வெளிவரும் படங்களுக்கு மத்தியில், சமீபத்தில் புதுமுகம் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு மெளனமாய் வந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் மெளன குரு. பலராலும் பாராட்டப்பட்ட இப்படம், டைரக்டர் சாந்தகுமாருக்கும், நடிகர் அருள்நிதிக்கும் ஒரு பெரிய அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. முன்னணி ஹீரோக்கள் பலரும் சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி அவரது படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மெளன குரு படத்திற்கு பிறகு ஒரு அருமையான கதையை சாந்தகுமார் தயார் பண்ணி இருப்பதாகவும், அந்த கதை கார்த்திக்கு ரொம்ப பிடித்து போக, அவரே நடிக்க ஆர்வம் தெரிவித்து இருப்பதாகவும், கார்த்தியும் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவே இப்படத்தை தயாரிக்க முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

நான் யாரையும் காதலிக்கல! - பாவனா!!!

Friday, February 24, 2012
மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.

சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை டான்ஸ் மாஸ்டர் வருத்தம்!

Friday, February 24, 2012
கமல்தான் நடனம் கற்பதில் ஆர்வம் மிகுந்தவர். இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை’ என்றார் பிரபல டான்ஸ் மாஸ்டர். ‘விஸ்வரூபம்’ படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்காக பிரபல நடன இயக்குனர் பிஜு மஹராஜ் என்பவரிடம் சமீபத்தில் கதக் நடனம் கற்றார். இதுபற்றி மஹராஜ் கூறும்போது,‘‘விஸ்வரூபம் படத்துக்காக கமல் என்னிடம் சமீபத்தில் கதக் நடன பயிற்சி பெற்றார். நான் பார்த்தவர்களில் நடனத்தை ஆர்வமாக கற்றவர் கமல். இந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை. கையையும், காலையும் அசைக்கிறார்கள் அவ்வளவுதான். சமீபத்தில் டிவி ஒன்றில் கேத்ரினா கைப் ஆடிய நடனம் பார்த்தேன். அது நடனமாக எனக்கு தெரியவில்லை. முறையான நடனம் ஆடும் அளவுக்கு அவர் தகுதியாக இல்லை. அந்த கால நடிகைகள் வஹீதா ரெஹமான் அல்லது மீனா குமாரி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இப்போதுள்ள நடிகைகள் ஒன்றுமே இல்லை. மாதுரி தீட்சித் மட்டுமே ஓரளவுக்கு ஆடும் திறமை பெற்றவர். காட்சி முடிந்தபிறகுகூட நடன அசைவு எப்படி இருந்தது என்று ஆர்வமாக கேட்பார்’’ என்றார்.

அசின்-தீபிகா மீது இயக்குனர் தாக்கு!!!

Friday, February 24, 2012
ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இப்போது அவர் 3 முன்னணி நடிகைகளை கடுங்கோபத்துடன் தாக்கி பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அடுத்து ஷாருக்கான் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதுபோல் கரீனாகபூர், அசின், தீபிகா படுகோன் ஆகிய 3 நடிகைகள் பில்டப் செய்து வருகின்றனர். இது மும்பை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது. இதைபார்த்து கோபம் அடைந்த ரோஹித் கூறியதாவது:

அடிக்கடி எனது பேட்டிகளில் கரீனா எனக்கு பிடித்தமான நடிகை என்று கூறி இருக்கிறேன். அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுவரை அவரை நான் அணுகி அதுபற்றி பேசவில்லை. அதற்குள் இப்படத்தில் நடிக்கிறேன் என்றும், நடிக்கவில்லை என்றும் அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார். 5 மாதத்துக்கு முன்பு அவரை சந்தித்தேன். சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை. ஏப்ரல் மாதம்தான் ஹீரோயினை முடிவு செய்வேன். அதேபோல் அசினிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது.

அவரும் அவ்வப்போது ஒரு கருத்து தெரிவிக்கிறார். தற்போது 'போல் பச்சான்' பட ஷூட்டிங்கில இருக்கிறேன். இது முடிந்தபிறகுதான் அடுத்த பட வேலை தொடங்குவேன். யாரோ ஒருவர் போன் செய்து தீபிகாதான் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறாரேமே என்கிறார். இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். அழகான, திறமையான பிரபல நடிகை ஒருவரைத்தான் இப்படத்துக்கு தேர்வு செயதேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடிகை என்பதை முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரோஹித் கூறினார்.

எல்லாம் அதுவா அமையுதுங்க..'மச்சக்காரன்' விஷால்!!!

Friday, February 24, 2012
ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் வரும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷால் மச்சக்காரன் தானே.

நடிகர் விஷால் மச்சக்காரன் தான். இல்லையென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் உள்ள படமாக அவருக்கு கிடைக்குமா என்ன. திரு இயக்கிய தீராத விளையாட்டுப் பிள்ளையில் ஒன்றல்ல, இரண்டல்ல நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா மற்றும் சாரா ஜேன் டயஸ் என மூன்று நாயகிகளுடன் நடித்தார். தற்போது என்னவென்றால் சமரனில் அவரது தோழியான த்ரிஷா மற்றும் சுனைனாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

என்ன விஷால், உங்கள் படத்தில் பல நாயகிகள் வருகிறார்களே என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

நான் கதாநாயகிகளைத் தேர்வு செய்வதில்லை. அதுவாக அமைகிறது. சமரன் படத்திற்கு 2 நாயகிகள் தேவைப்பட்டனர். அதனால் த்ரிஷா மற்றும் சுனைனாவைத் தேர்வு செய்தனர். த்ரிஷா என்னுடைய தோழி என்பதால் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். சுனைனா ஒரு திறமையான நடிகை. நான் சமரன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். ஒரு மாதமாக பாங்காக்கில் தங்கி படப்பிடிப்புக்குச் செல்வது நல்ல அனுபவமாக உள்ளது.

என்னுடைய தீராத விளையாட்டுப் பிள்ளை காதல் கலந்த காமெடிப் படம் என்பதால் தற்போது த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன். வரும் ஏப்ரலுக்குள் படப்பிடிப்பை முடித்து கோடையிலேயே ரிலீஸ் பண்ணலாம் என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஆமாமா, சீக்கிரம் வெளியிடப் பாருங்க...!