Tuesday, April 10, 2012

ஜோடியின் பிளான்!!!

Tuesday, April 10, 2012
எப்போ பிரதரை ஹீரோவாக்கப்போறீங்கன்னு பாக்க¤றவங்க எல்லாரும் தாஸ் இயக்கத்தை கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... Ôஸ்கிரிப்ட் ரெடி, இயக்கம் ரெடி, ஹீரோயின் ரெடி, ஷூட்டிங்தான் பாக்கிÕன்னு பதில் சொல்லி நழுவிட்டிருந்தாராம். இப்போ சத்தமில்லாம பிரதர் பட ஷூட்டிங்கை தொடங்கிட்டாராம். படம் முடிஞ்சி ரிலீஸுக்கு தயாராகுற வரை இதுபத்தி யார்கிட்டேயும் மூச்சுவிடக்கூடாதுன்னு பிரதருக்கும், இயக்கத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்... அதுக்கு காரணம், இந்த படம் ஒரு வெளிநாட்டு படத்தோட உல்டாவாம்... உல்டாவாம்...

நயன ஹீரோயின், நடன இயக்கம் விரிசல் உண்மை கிடையாது. ஜோடியே தங்களுக்குள்ள போட்ட பிளான்தான்னு கோலிவுட்ல பேசுறாங்களாம்... பேசுறாங்களாம்... ஹீரோயினோட பேங்க் பேலன்ஸ் சர்ருன்னு இறங்கிப்போச்சாம்... இறங்கிப்போச்சாம்... அதை ஏத்துறதுக்கு ஒரே வழி ரீஎன்ட்ரிதான்னு முடிவு பண்ண¤னாராம். ஜோடிபோட்டுகிட்டு சுத்துனா சான்ஸ் வராதுன்னு டிசைட் பண்ண¤னவங்க, காதல் முறிவுன்னு சொல்லி பிரிஞ்சா நிறைய வாய்ப்புகள் வரும்னு கணக்கு போட்டாங்களாம்... போட்டாங்களாம்... அதன்படியே நடந்ததால ஜோடிக்கு சந்தோஷமாம். அதனாலதான் நயனம், பச்சை குத்தின நடனத்தோட பெயரை அழிக்க விரும்பலேன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

இனிய நடிகை ரெண்டுங்கெட்டான் நிலைல இருக்காராம்... இருக்காராம்... டாப் இயக்கம்னு ஒட்டுமொத்தமா பாரதி கிங் இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுத்தாராம். இதனால இடைல வந்த படங்களை ஏத்துக்கலையாம். திடீர்னு கிங் இயக்கம் தன்னை படத்துலேயிருந்து தூக்கிட்டதால அழாத குறையா முழிக்கிறாராம்... முழிக்கிறாராம்... வேற வழியில்லாம யாராவது குறைச்ச சம்பளத்துக்கு டேட் கேட்டாலும் ஓகே சொல்ல ரெடியா இருக்காராம்... இருக்காராம்...

இளம் அம்மா, ஆன்ட்டி ரோலா... ரோஜா ரெடி!!!

Tuesday, April 10, 2012
அரசியலில் நினைத்தது ஒன்றும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. பதவி வரும்போது வரட்டும், இப்போதைக்கு தனக்கு மிகவும் பரிச்சயமான சினிமாவிலிருந்தால் நாலு காசாவது பார்க்கலாம் என்று நினைத்து, நடிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகை ரோஜா.

ஏற்கெனவே அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இப்போது பாரதிராஜாவின் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து முழு வீச்சில் சினிமாவில் நடிக்கப் போகிறாராம்.

இந்தப் படம் தவிர, கார்த்தி - ப்ரணீதா நடிக்கும் சகுனியில் வக்கீல் வேடத்தில் வருகிறாராம் ரோஜா.

இவை தவிர இன்னும் மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அருமையான கிராமத்து அம்மா வேடம். கார்த்திகா எனக்கு பெண்ணாக நடிக்கிறார். பாரதி ராஜா படம் வேறு. மிகுந்த மன திருப்தியுடன் நடிக்கிறேன்.

அடுத்தது கார்த்தி - ப்ரணிதா நடிக்கும் சகுனியில் வக்கீலாக வருகிறேன். இந்த இரண்டாவது சுற்று ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது," என்றார்.

விரைவில் ஸ்ரீராமராஜ்யம் படம் வேறு தமிழில் வரவிருக்கிறது. இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார் ரோஜா.

ரோஜாவின் வரவு, இளம் அம்மா நடிகைகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்!

பிரசன்னாவுடன் நரேன்...!!!

Tuesday, April 10, 2012
'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'அஞ்சாதே', போன்ற படங்களில் நடித்த நரேன் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'முகமூடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் 'தம்பிக்கோட்டை' படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக தமிழ் படத்தில் களம் இறங்குகிறார். இப்படத்தை 'முரண்' டைரக்டர் ராஜன் மாதவ் இயக்குகிறார். மேலும் படத்தில் நரேன் உடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்கவுள்ளார்.

பிசியான ஸ்டார்களை தேடிப்போக மாட்டேன்!!!

Tuesday, April 10, 2012
பிசி ஸ்டார்களை தேடிப் போவதில்லை என்றார் செல்வராகவன். ‘மயக்கம் என்ன?' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்Õ. ஆர்யா, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கோவாவில் 15 நாட்கள் நடந்தது. ஒரு மாதத்துக்குமேல் திட்டமிடப்பட்டிருந்த ஷூட்டிங் திரையுலக ஸ்டிரைக்கால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பட குழுவினர் சென்னை திரும்பினர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதுபற்றி செல்வராகவன் கூறும்போது, ‘Ôஆர்யா, அனுஷ்கா இருவருமே தொழில் ரீதியான நடிகர்கள் என்பதால் காட்சிகள் படமாக்குவதில் சிரமம் இல்லை. இருவரும் எந்த தலையீடும் செய்யவில்லை. 35 சதவீத ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இரண்டு முன்னணி ஸ்டார்கள் தவிர பிஸியாக இருக்கும் வேறு யாரையும் இப்படத்திற்கு தேர்வு செய்யவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பிஸி கிடையாது. இப்போது அவரும் பிஸி என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். நான் எப்போதுமே பிசியான ஸ்டார்களை தேடிப்போவதில்லை' என்றார்.

ரெக்கை கட்டி பறக்கும் ஈ!!!

Tuesday, April 10, 2012
'ஈகா' படத்தின் பணிகளையும் முடித்து விட்டார் ராஜமௌலி. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 'வில்லன்களை பழிவாங்கும் ஈ' என்னும் விட்டலாச்சார்யா கதைதான் என்றாலும், கிராஃபிக்ஸ் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்களாம். 'ஈகா' படம் தமிழில் 'நான் ஈ' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. படத்தின் இசையை வெளியிட்ட சூர்யா படத்தின் டிரெய்லரே படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு சாட்சி என்று கூறினார். இந்நிலையில் இந்தியின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் 'இந்தப் படம் ஒரு காவியம். இதைப் பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். YOU TUBE இணையத்தில் 'கொலவெறி' பரவியது போல், இப்போது 'ஈகா' படத்தின் டிரெய்லர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது

அஜித் ஹாட் அண்ட் கோல்ட்!!!

Tuesday, April 10, 2012
அஜித்தின் காட்டில் ஒரே ஒரு சிங்க ராஜாதான். அந்த ஒரு ராஜாவும் அவர்தான் என்கிற கோட்பாட்டை முதன் முதலில் மாற்றிய படம் 'மங்காத்தா'. பி அண் சி ஏரியாவில் அதே வலுவுள்ள அர்ஜுனும் இருந்தார் அப்படத்தில். சொல்லி வைத்தாற்போல கலெக்ஷனும் இரு மடங்கானது. அதே யுக்தியைதான் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் புதுப்படத்திலும் பின்பற்ற போகிறார்களாம். அஜித்துடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஆர்யா. மார்க்கெட்டில் குண்டூசி பலமே உள்ள நடிகர்கள்கூட சிலுப்பிக் கொண்டு திரியும்போது, ஆர்யா மட்டும் அந்த விஷயத்தில் டவுன் டூ எர்த். நல்ல வாய்ப்புகள் என்றால் ஈகோ பார்க்காமல் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் ஆபீசுக்கே போய் விடுவார். நான் உங்க கூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்படுறேன். இதோ என்னோட மொபைல் நம்பர். எப்ப வேணும்னாலும் கூப்பிடலாம் என்று மலர மலர சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ஆர்யாவின் என்ட்ரிக்கு அஜித் சம்மதம் கொடுத்த விஷயத்திலும் இப்படி ஏதாவது நடந்திருக்கலாம். இந்த சந்தோஷமான செய்தி ஒரு புறம் இருக்க, மார்ச்... ஏப்ரல் என தள்ளிக்கொண்டே போன அஜித்தின் 'பில்லா 2' பாடல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் தேதி குறித்தபாடில்லை. இத்தனைக்கும் படத்தின் இசையமைப்பாளர் யுவன், தன் பணிகளை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டாராம். படம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் என்று கூறி வந்தவர்கள், இப்போது இன்னும் தாமதமாகும் என்று அறிவித்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தாலும் சரி, எளிமையாக நடந்தாலும் சரி, அது ரஜினியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பதில் அஜித் பிடிவாதமாக உள்ளாராம். இன்னொரு பக்கம், 'மங்காத்தா' வெற்றியில் திளைக்கும் அஜித் ரசிகர்கள், அந்த சூடு ஆறும் முன் 'பில்லா 2' வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஜூன் 2-ம் வாரத்தில் ஒருவேளை படம் வெளியாகலாம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறிவருகின்றனர். கடைசி நேரத்தில் இதுவும்கூட மாறலாம். ஏனென்றால் நல்ல விஷயம் எது நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து முடிச்சை அவிழ்க்கதான் சில பிரகஸ்பதிகள் காத்துக் கொண்டேயிருப்பார்களே. ஆனால் ஹீரோ வழக்கம் போல அமைதி காக்கிறார். 'பில்லா 2'-ல் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

சூர்யாவா? விக்ரமா? இயக்குநருக்கு பெருத்த மண்டையிடி!!!

Tuesday, April 10, 2012
கதையை மிகவும் காதலித்து '3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீமேக் செய்தார் ஷங்கர். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததில் அவருக்கு வருத்தம்தான். என்றாலும் படத்தால் நஷ்டமில்லை என்ற அளவில் ஆறுதல் அடைந்து கொண்டார். ஆனால் அடுத்த படம் ஷங்கர் பிராண்ட் படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இம்முறை ஷங்கர் இயக்க இருப்பது தனது ஃபேவரைட் கதைக்களமான பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர். 'ஜென்டில்மேன்', 'முதல்வன்', 'இந்தியன்' படங்களைத் தொடர்ந்து தற்போது இரட்டை எழுத்தாளர்கள் சுபாவிடம் தனது கதையைச் சொல்லி திரைக்கதை வசனம் எழுதச் சொல்லியிருக்கிறார். கே.வி.ஆனந்த் அடுத்து தமிழ், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை இயக்க இருந்த படத்துக்கான திரைக்கதையில் பிஸியாக இருந்த இவர்கள், தற்போது அந்த பணியை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, ஷங்கர் படத்துக்கான திரைக்கதை வசனத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால், செம கடுப்பில் இருக்கிறாராம் 'கோ' பட இயக்குநர். இந்தப் படத்தில் விக்ரம், சூர்யா இருவரில் யாரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்வது என்பதில் மண்டையிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். விக்ரமோ, 'தாண்டவம்', 'டேவிட்' ஆகிய படங்களை ஜூன் இறுதிக்குள் முடித்து விட்டு வந்து படம் முடிகிறவரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் நடித்துக் கொடுக்க தயார் என்று உறுதி கொடுத்திருக்கிறாராம். ஆனால் விக்ரமுக்கு தற்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் சேர்த்து 30 முதல் 40 கோடிக்குள் மட்டுமே பிஸினஸ் என்ற சூழ்நிலை இருப்பதால் ஷங்கர் கொஞ்சம் தயங்கினாலும் விக்ரமின் டெடிகேஷனை ரொம்பவே யோசிக்கிறார் என்கிறார்கள். அதேநேரம் சூர்யா என்றால் இரண்டு மொழிகளிலும் 70 கோடிக்கு படத்தை சுலபமாக விற்று விடலாம். இதனோடு ஷங்கர் பேக்டரும் சேர்ந்து கொண்டால் குறைந்தது 90 கோடிக்கு பிஸினஸ் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம். ஆனால் சூர்யா தற்போது இருக்கும் கமிட்மெண்டுகளில் இருந்து வந்து ஷங்கர் படத்தில் நடிக்க இந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் சாத்தியம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் 'மாற்றான்' முடிந்தபிறகு ஹரி இயக்கும் 'சிங்கம் 2', வெங்கட் பிரபு படம் இரண்டிலும் மாற்றி மாற்றி நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் சூர்யா. இதனால் இருதலைக் கொள்ளியாக தவித்து வருகிறாராம் ஷங்கர்! சட்டுபுட்டுனு ஒரு முடிவெடுத்திட்டு நிம்மதியா இருங்க சார்......

விலை மாதர்களுக்கென ஸ்ரேயா தொடங்கும் புதிய சங்கம்!!!

Tuesday, April, 10, 2012
சென்னை::விபச்சாரத்தைத் தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களுக்கென புதிய சங்கம் ஒன்றைத் தொடங்குகிறார் நடிகை ஸ்ரேயா.

விபச்சாரி வேடத்தில் நடிப்பது, விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக உதவுதல் போன்றவற்றில் நடிகைகள் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர். மும்பையில் இதனை பெரிய சமூகப் பணியாக சத்தமின்றி செய்து வருகின்றனர் பல முன்னணி நடிகைகள்.

இது தவிர்த்த சமூக நலப் பணிகள், பிராணிகள் பாதுகாப்பு போன்றவற்றிலும் நடிகைகள் அக்கறை காட்டுகின்றனர்.

ஸ்ரேயாவுக்கும் இந்த மாதிரி சேவைகளில் நாட்டம் அதிகம். ஏழைகளுக்கு விளம்பரம் இல்லாமல் உதவி வருகிறார். அத்துடன் ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்ற வற்றில் ஈடுபடுகிறார். கோவையில் ஒரு ஆசிரமத்துக்கு ரெகுலராகப் போய் வருவது ஸ்ரேயா வழக்கம்.

விபச்சாரத்தை தொழிலாகக் கொண்டு வாழும் பெண்களின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை மிகவும் பாதித்துவிட, வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள் போன்றோருக்கு உதவ தனி அமைப்பை தொடங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

செக்ஸ் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்!

செம தில்லுமா!

சினிமா நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்த ரகுராம்: புதிய சங்கத்தை அறிவித்தார்!!!

Tuesday, April 10, 2012
சென்னை: நடனக் கலைஞர்கள் சங்கத்தை இரண்டாக உடைத்தார் மூத்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம். தனது தலைமையில் நடன இயக்குநர்கள் சங்கத்தை அறிவித்துள்ள அவர், யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம். எந்த அணியிலும் நாங்கள் இல்லை என அறிவித்துள்ளார்.

இது, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் எனத் தெரிகிறது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி)த்தில் மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. அதில், தென்னிந்திய திரைப்பட நடன கலைஞர்கள் சங்கமும் ஒன்று. இந்த சங்கத்தில் நடன கலைஞர்களும், நடன இயக்குனர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

இருதரப்பினருக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து வரும் இந்த சூழ்நிலையில், நடன கலைஞர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகர் பர்கிட் ரோட்டில் உள்ள நடன கலைஞர்கள் சங்கம் நேற்று இழுத்து மூடப்பட்டது.

புதிய சங்கம்

உடனடியாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம் தலைமையில், 'தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்கள் சங்கம்' என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது (இனி நடனக் கலைஞர்கள் வேறு, நடன இயக்குநர்கள் வேறு... இரண்டுக்கும் தனித்தனி சங்கங்கள்!).

நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு சாதகமான வேலையா என்று ரகுராமிடம் கேட்டபோது, "நடன கலைஞர்களுக்கும், நடன இயக்குனர்களுக்கும் இடையே சரியான புரிதலும், அணுகுமுறையும் இல்லை. எனவே நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடன இயக்குனர்கள் விலகி விட்டோம். எங்களின் புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் தயாரிப்பாளர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் நடுநிலை வகிக்கிறோம். யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம். எங்களைப் பொறுத்த வரை ஊதிய விவகாரம் முடிந்துவிட்டது," என்றார்.

உங்கள் வரைக்கும் எல்லாம் முடிந்தால் போதும் என்று மற்ற சங்கங்களை விட்டுவிட்டீர்களே... என்றதற்கு, "ஆமாங்க, வேலையில்லாம நாங்க சும்மா இருக்க முடியாதே. எங்களுக்கு பிரச்சினை தயாரிப்பாளர்களுடன் இல்லை. எங்கள் சங்கத்துக்குள்ளேயே பிரச்சினை இருக்கிறது," என்றார்.

ரகுராமுக்கு ஆதரவாக கல்யாண், அசோக்ராஜ், தாரா ஆகியோரும் வீதியில் நின்றபடி மாறி மாறி பேட்டி கொடுத்த வண்ணமிருந்தனர்!