Wednesday, May 9, 2012

பாலா பட வாய்ப்பு போச்சே! - புலம்பும் பூஜா!

Wednesday,May,09,2012
பாலா படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு நழுவிப் போனது பூஜாவைப் புலம்ப வைத்துள்ளது.

நான் கடவுள் வெளியான பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் பூஜா. பெங்களூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டார், திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி அவ்வப்போது செய்திகள்.

இந்த நிலையில் திடீரென சென்னைக்கு வந்த அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

இன்னொருபக்கம் பாலா இயக்கும் பரதேசி படத்தில் கதாநாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இதை உறுதிப்படுத்தி பேட்டியும் கொடுத்தார் பூஜா. ஆனால் திடீரென இப்போது தன்ஷிகாவை கதாநாயகியாக்கியுள்ளார் பாலா. பூஜாவின் கால்ஷீட் பிரச்சினை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஷாக்கான பூஜா, புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறுகையில், "பாலா என்னை தன் புதிய படத்தில் நடிக்க தேர்வு செய்தபோது என்னுடைய கேரக்டருக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார். இதனால் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாத சூழல்.

நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தேன். ஏமாற்றமாகிவிட்டதே," என்றார்.

மார்க்கெட் தளர்ந்ததால் 'ஐட்டத்துக்குத்' தாவிய சதா!!!

Wednesday,May,09,2012
நடிகை சதா வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடனம் ஆடும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார்.

ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மும்பை அழகி சதா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு சங்கரின் அந்நியன் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. மாதவனுடன் எதிரி, வினயுடன் உன்னாலே உன்னாலே, ஆர்.கே.யுடன் புலி வேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரை ஆளையே காணோம்.

தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்காததால் இந்தி, போஜ்புரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். அங்கும் சிறிது காலத்தில் அவருக்கு மார்க்கெட் போய்விட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த அவர் தற்போது ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சியாக வந்து ஆடிவிட்டு போகும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார். சில நாயகிகள் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டால் இப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடி வாய்ப்பு வாங்குவதும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியாட்டத்தையும் முதலில் கோலிவுட்டில் இருந்தே துவங்கியிருக்கிறார். விஷாலை வைத்து சுந்தர் சி. எடுக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஒரு பாட்டுக்கு சதா கவர்ச்சியாக ஆடியுள்ளாராம். அந்த பாடல் ஒரு மில்லில் படமாக்கப்பட்டுள்ளது.

சதா அரைகுறை ஆடையில் இருந்தததால் அடையாள அட்டை வைத்திருந்த ஊழியர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை அந்த பக்கமே விடவில்லை.

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?.

Wednesday,May,09,2012
அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.

விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.

இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள்.

அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா?

ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்!

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஆதி - லட்சுமி மஞ்சு!!!

Wednesday,May,09,2012
மறந்தேன் மன்னித்தேன் படத்தின் படப்பிடிப்பில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர் நடிகர் ஆதி மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மஞ்சு. அருகிலிருந்த மீனவர்கள் இருவரையும் கரை சேர்த்தனர்.

நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடிக்கும் படம் மறந்தேன் மன்னித்தேன். இந்தப் படத்தில் நாயகனாக ஆதி நடிக்கிறார். இன்னொரு இணையாக தப்சியும் சுதீப் கிஷனும் நடிக்கின்றனர். நாகேந்திர குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி நதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதற்காக ஆற்றின் ஓரம் 170 குடிசைகள் அமைத்து, அவை வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல காட்சி. வெள்ளம் வருவது போல காட்சியை எடுக்க, அருகிலிருந்த அணையை சிறிது நேரம் திறக்க சிறப்பு அனுமதி பெறப்பட்டிருந்தது. 20 கேமராக்களில் இந்தக் காட்சியை படமாக்க அனைவரும் தயாராக இருந்தனர்.

நள்ளிரவு 12.15-க்கு அணையின் 6 மதகுகளை திறந்துவிட்டனர். தண்ணீர் பெரும் வேகத்தில் பாய்ந்து வர, குடிசைகளின் அருகில் நின்ற ஆதியும் லட்சுமி மஞ்சுவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 400 அடி தூரத்துக்கு ஆற்றில் சென்றுவிட்டனர்.

உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் நதியில் பாய்ந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே - மகளுக்கு ரஜினி அட்வைஸ்!!!

Wednesday,May,09,2012
கோச்சடையான் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவுடன் காதல் காட்சிகளை மிக நெருக்கமாக இருக்கும்படி அமைக்க வேண்டாம். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணாராம்.

கோச்சடையான் 3 டி அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் வெகு வேகமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது பாடல் காட்சிகள் சென்னையில் படமாகி வருகின்றன.

ஒரு பாடல் காட்சியில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் செய்வது போல பாட்டுக்கு நடனம் அமைத்த சரோஜ்கான் நடன அசைவுகள் வைத்திருந்தாராம்.

இதனைக் கவனித்த ரஜினி, "இந்த அளவு நெருக்கம் வேண்டாமே," என்று இயக்குநரான தன் மகள் சௌந்தர்யாவிடமும், நடன இயக்குநரிடமும் கேட்டுக் கொண்டாராம்.

தன்னை விட மிக இளம் வயதான தீபிகாவுடன் அத்தனை நெருக்கமாக நடிப்பது சங்கடமாக உள்ளதாகவும், இந்தக் காட்சிகள் கண்ணியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும் ரஜினி கூறினாராம்.

இந்தப் பாடல் குறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "அது உண்மையிலேயே ஒரு பிரில்லியன்ட் பாடல். ரஹ்மான் அத்தனை அருமையாக ட்யூன் கொடுத்துள்ளார். பரத நாட்டியத்துடன் இணைந்த ரொமான்டிக் பாடல். பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் மிக இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் 'லக்கா கிக்கா'..!!!!

Wednesday,May,09,2012
லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் ‘லக்கா, கிக்கா’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.

வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் வி‌டை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும்.

2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.

3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

அப்பட அடுத்த 'ஜாக்கெட்' சண்டை ரெடி... !

பச்சை குத்தியது அழிப்பா? நயன்தாரா திடீர் கோபம்!!!

Wednesday,May,09,2012
பச்சை குத்திய பிரபுதேவா பெயரை நீக்க வெளிநாடு போக வேண்டிய அவசியம் இல்லை என்றார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்து கொண்ட நயன்தாரா, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த பிரபுதேவா பெயரை லேசர் சிகிச்சை மூலம் அழிக்க பாங்காக் செல்ல நயன்தாரா முடிவு செய்தார் என்றும், அப்போது விமான நிலையத்தில் அவரிடம் அதிகாரிகள் 40 நிமிடம் சோதனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது:

இது எந்த ஆதாரமும் இல்லாத செய்தி. இதற்காக யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. என்னை பற்றி பத்திரிகைகளில் இப்படிதான் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன. என் கையில் குத்திக் கொண்ட பச்சையை நீக்குவதற்கு நான் ஏன் பாங்காக் செல்ல வேண்டும். அதை இந்தியாவிலேயே எங்கு வேண்டுமானாலும் எளிதாக அழித்துவிடுவேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பச்சை குத்தியதை அழித்து விட்டேனா என்பதை வந்து சோதித்து பாருங்கள். விமான நிலையத்தில் என்னை அதிகாரிகள் சோதித்தார்கள் என்பதை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார். நயன்தாரா தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். அடுத்த வாரம் முதல் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.

கோவாவில் காதலனுடன் நீது சந்திரா!!!

Wednesday,May,09,2012
ஆதிபகவன் ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற நீது சந்திரா, பாலிவுட் ஹீரோ ரன்தீப்புடன் அங்கு பொழுதை கழித்தார். ஜெயம் ரவி ஜோடியாக ‘ஆதிபகவன்Õ படத்தில் நடிக்கிறார் நீது சந்திரா. இதன் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. இதற்காக அங்கு தங்கி இருந்தார் நீது. இதற்கிடையில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹுடாவுடன் இணைத்து நீது பற்றி கிசுகிசு பரவியது. ரன்தீப் ஏற்கனவே சுஷ்மிதா சென்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். சீனியர் நடிகையுடன் தனது பெயர் இணைத்து பேசப்படுவதை ரன்தீப் விரும்பவில்லை. இதை தவிர்க்கும் பொருட்டு மீடியாவிடமிருந்து விலகி சென்றார்.

அதற்கு மாற்றுவழி இளம் நடிகையுடன் பழகுவதுதான் என நண்பர்கள் யோசனை கூறினர். அந்த நேரத்தில் நீதுவின் நட்பு கிடைத்தது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசியும், டேட்டிங் செய்தும் நெருக்கமானார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பழகி வருகின்றனர். ஆனால் இருவருமே இதை மறுக்கின்றனர். இந்நிலையில் நீதுவுக்கு கிரேக்க மொழி படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதற்காக 2 மாதத்துக்கும் மேல் அவர் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. இதற்கிடையில் ரன்தீப்புடன் ஜோடியாக இருக்க விரும்பினார். அதற்கேற்றார்போல் ரன்தீப் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. அதில் பங்கேற்க சென்றார். ‘ஆதிபகவன்' ஷூட்டிங் முடிந்து பட குழுவினர் கோவாவில் இருந்து புறப்பட்ட பிறகும் ரன்தீப்புக்காக நீது மட்டும் அங்கேயே தங்கி இருந்தார். அவர் வந்தவுடன் அவருடன் ஷாப்பிங், டேட்டிங் என பொழுதை கழித்துவிட்டு வெளிநாடு புறப்பட்டு சென்றார் நீது.