Wednesday, March 21, 2012

கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு: இந்தி நடிகை அனுஷ்காவுடன் சுரேஷ் ரெய்னா காதல்!!!

Wednesday,March,21,2012
கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. அந்த வகையில் நடிகைகளை திருமணம் செய்துகொண்ட வீரர்களும் உண்டு.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவும் தற்போது காதல் வலையில் சிக்கியுள்ளார். இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், அவருக்கு காதல் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்திலும், பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து வருகிறார்கள். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

அப்போது லண்டன் நகரில் ரெய்னாவும், அனுஷ்காவும் ஒன்றாக ஊர் சுற்றி திரிந்தார்கள். அனுஷ்கா படப்பிடிப்பை ரத்து செய்து ரெய்னாவுடன் சுற்றியுள்ளார்.

ரெய்னாவுடன் அனுஷ்காவுக்கு காதல் இருப்பதை அவரது மானேஜர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அனுஷ்காவின் மேலாளர் கூறும்போது, இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் அவ்வளவுதான். மற்றபடி இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

23 வயதான அனுஷ்கா சர்மா பெங்களூரில் பிறந்தவர். தற்போது அவர்களது குடும்பத்தினர் உத்தரகாண்டில் வசித்து வருகின்றனர். 2008-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் ரப் நே பனாதி ஜோடி என்ற இந்திப் படம் மூலம் அறிமுகம் ஆனார். 2010-ம் ஆண்டு அவர் நடித்து வெளியான பேண்ட் பாஜா பாரத் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் கார்த்திக, பியா!!!

Wednesday,March,21,2012
விஜயகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சட்டம் ஒரு இருட்டறை. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி இருந்தார்.

இப்படம் தற்போது ரீமேக் ஆகிறது. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது. இவர் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். தற்போது பிரபு சாலமன் இயக்கும் கும்கி படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிகள் வேடத்துக்கு கார்த்திகா, பியா இருவரும் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் கோ ஹிட் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கார்த்திகாவும், பியாவும் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பியா இதுபற்றி கூறும்போது, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்க தன்னை அணுகி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார்.

இந்த படத்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார். புதுமுக டைரக்டர் இயக்குவார் என தெரிகிறது.

சினிமா தயாரிப்பாளர்- பெப்சி மோதல் நீடிப்பு: நடிகர், நடிகைகள் தவிப்பு!!!

Wednesday,March,21,2012
சினிமா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகிறார்கள். வேலை நிறுத்தம், உண்ணாவிரதங்களை நடத்தினர். இதையடுத்து அரசு தொழிலாளர் நல ஆணையம் இதில் தலையிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள நிர்ணய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சம்பளத்தை கூட்டி தராத தயாரிப்பாளர்கள் படங்களில் தொழிலாளர்கள் பணியாற்ற மறுப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில தயாரிப்பாளர்கள் ஊதியத்தை அதிகரித்து கொடுக்க முன்வந்தனர். அவர்கள் படங்கள் முடங்காமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்கள் மோதலால் நிறைய படங்கள் முடங்கி உள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் தவிப்பாகி இருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விதார்த் நடிக்கும் 'காட்டு மல்லி' படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இவர்கள் தகராறினால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய் உள்ளது.

தனுசின் '3' படம் கடந்த பொங்கலுக்கே ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வருகிற 30-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் காதலர் தினத்தில் ரிலீசாவதாக இருந்தது. தற்போது அப்படம் ஏப்ரல் 6-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அஜீத்தின் 'பில்லா 2' படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ல் ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சூர்யாவின் 'மாற்றான்' படம் ஏப்ரலில் ரிலீசாக இருந்தது. அப்படத்தை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். கார்த்தியின் 'சகுனி' படம் பொங்கலுக்கு வர இருந்தது. அதை ஏப்ரல் 13-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

ரஜினியின் 'கோச்சடையான்' படத்தை சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 15-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. கமலின் 'விஸ்வரூபம்' படம் மே மாதம் வருவதாக இருந்தது. தற்போது அது ஜூலைக்கு தள்ளிப்போகிறது.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,March,21,2012
* முதியோர் இல்லம் தொடங்க திட்டமிட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி அதை நடத்துவதற்கு நிதி திரட்ட தான் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்த உள்ளார்.

*‘ வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நயன்தாரா.

* கிஷோர், அர்ஜுன் நடிக்கும் ‘வனயுத்தம் படத்தில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் முக்கிய வேடமொன்றில் நடிக்க ஜோடியாக ஷிகா நடிக்கிறார்.

* ஐஸ்வர்யா இயக்க தனுஷ்- ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘3 படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

* பாக்ஸராக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு புது இயக்குனர் கல்யாண் ஹீரோயின் தேடி வருகிறார்.

கண்டிஷன் போடும் ஹீரோ!!!

Wednesday,March,21,2012
சம்பளம் தவிர, பட லாபத்துல பங்கு, டப்பிங் ரைட்ஸ்னு இப்போவே உச்ச நடிகரு ரேஞ்சுல பிரகாச நடிகரு பிகு பண்றாராம்... பண்றாராம்... இதுல எல்லாம் இணக்கமா போற தயாரிப்புக்குதான் கால்ஷீட்டுன்னு கண்டிஷனும் போடுறாராம்... போடுறாராம்... இதனால இடையில சில வாய்ப்புகளும் பறிபோனதாம். அதனாலதான் மத்த தயாரிப்புகளுக்கு பதில், தன்னோட சொந்த கம்பெனி படங்கள்லேயே அடிக்கடி நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...

இந்தியில ரெண்டு முறை கையை சுட்டுக்கிட்டாரு கவுதம இயக்கம். இருந்தாலும் பாலிவுட் ஆசை போகலையாம்... போகலையாம்... மூணு மொழியில படம் எடுக்கிறாரு. இதை இந்தியில வாங்க வினியோகஸ்தருங்க தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்... பேசாம இந்தி ரீமேக்கை மட்டும் கைவிட்டுவிடலாம்னு பைனான்ஸ் பண்றவரு அட்வைஸ் பண்ணினாராம். Ôமுடியாது. இந்தியில நான் ஜெயிச்சி காட்டுறேன் பாருங்க. எப்படியும் படத்தை விக்கலாம்னு இயக்கம் பிடிவாதம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...

நீண்ட காலமா காதல் நடிகருக்கு கைகொடுக்கிற மாதிரி படங்கள் எதுவும் வரல. நடிச்சிருந்த சில படங்களும் பாதியில நின்னு போச்சு. இதனால நடிகரு வருத்தமா இருக்காராம்... இருக்காராம்... வீட்ல பெண் பார்க்கிற படலம் நடந்துச்சாம். ஆனா நடிகரு, இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு மனசு உடைஞ்சு சொல்றாராம்... சொல்றாராம்... ஒரு ஹிட் கொடுத்திட்டு கல்யாணம் பண்ணலாம்னு நடிகரு யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

தமிழில் மும்பை திருநங்கை!!!

Wednesday,March,21,2012
மும்பையில் வாழ்ந்துவந்த திருநங்கை தமிழ் படத்தில் நடித்தார். திருநங்கையின் காதலை மையமாக வைத்து ‘சொல்லாக் கதை என்ற படம் உருவாகிறது. இதுபற்றி பட இயக்குனர் சிவகுமார் கூறியதாவது: சமுதாயத்தாலும், பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் பற்றிய படம் ‘சொல்லாக் கதை. ஏற்கனவே ‘பால் என்ற பெயரில் உருவாகி வந்தது. இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோ சுதிரை காதலிக்கிறார் கற்பகா. ஆனால் சுதிரோ மற்றொரு நாயகி வினிதாவை காதலிக்கிறார். வினிதாவும் காதலுக்கு சம்மதிக்கிறார். கற்பகாவும் சுதிரை காதலிப்பது அறிந்து தற்கொலைக்கு முயல்கிறார் வினிதா. அதை தடுக்கும் கற்பகா தான் ஒரு திருநங்கை என்பதை சொல்லி அவரை காப்பாற்றுகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. இப்படத்தில் நடிப்பதற்காக அச்சு அசப்பில் பெண்போலவே தோன்றும் திருநங்கையை தேடினோம். பெரும்பாலும் திருநங்கை களை அவர்களது பாடி லாங்வேஜ் வைத்து அடையாளம் தெரியும். இக்கதைக்கு அதுபோல் இல்லாமல் பெண் தோற்றத்துடன் கூடிய திருநங்கை தேவைப்பட்டார். இதற்காக மும்பையிலிருந்து கற்பகா என்ற திருநங்கையை தேர்வு செய்தோம். அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்.

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில், கார்த்தி நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்!!!

Wednesday,March,21,2012
கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பலரும் ஏங்கியிருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி கௌதம் மேனன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்.

கார்த்தியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று அவரை சந்தித்துக் கேட்டால், "எந்த கதையாக இருந்தாலும் அது எனக்கு பொருந்துமா என்றுதான் முதலில் நான் பார்ப்பேன். கௌதம் மேனன் கதையில் மிகவும் மென்மையான இளைஞனுக்கும், இளைஞிக்கும் இடையே ஏற்படும் அழகான ரொமான்டிக் காதல் தான் கரு. அந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக பொருந்தமாட்டேன் என்று எனக்கு தோன்றியது. அதனால்தான் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்" என்கிறார் நம்ம சிறுத்தை.

தற்போது கார்த்தி சகுனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்க கையெழுத்திட உள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் என்றாலே, ரொமான்டிக்-காமெடி என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது என்கிறார் கார்த்தி.

சண்டை காட்சியில் சொதப்பியதால் வில்லன் நடிகர் திடீர் நீக்கம் கார்த்தி படம் தள்ளிப்போகிறது!!!

Wednesday,March,21,2012
கார்த்தி நடிக்கும் படத்தில் ஸ்டன்ட் காட்சியில் சொதப்பியதால் வில்லன் நடிகர் சலீம் கவுஸ் நீக்கப்பட்டார்.கார்த்தி, பிரணிதா நடிக்கும் படம் ‘சகுனி. இப்படத்தை சங்கர் தயாள் இயக்குகிறார். இப்படத்திற்காக கார்த்தி, வில்லன் சலீம் கவுஸ் நடிக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. சமீபத்தில் அக்காட்சிகளின் டபுள் பாசிடிவை தயாரிப்பாளர் திரை யிட்டு பார்த்தார். அதில் சலீம் கவுஸ் ஸ்டன்ட் காட்சிகளில் சொதப்பி இருந்தது தெரிந்தது. கார்த்தி குத்து விடும் காட்சிகளும் பொருத்தமாக இல்லை. இதையடுத்து அக்காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படமாக்க முடிவு செய்தார். அதே நேரம் சலீம் கவுஸுக்கு பதிலாக வேறு வில்லன் நடிகரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரிடம் 10 நாள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளது. இதற்கு பெரிய தொகை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. கார்த்தி, பிரகாஷ்ராஜ் மோதும் சண்டை காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட இருந்த இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம்தான் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பாலா படத்துக்கு தலைப்பு 'பரதேசி?'.-பாலாவின் பரதேசியில் அதர்வா!!!

Wednesday,March,21,2012
படங்களுக்கு தலைப்பு வைப்பதில் பாலாவின் பாணியே அலாதி. யாரும் எதிர்ப்ப்பார்க்காத தலைப்பை சூட்டுவது அவர் வழக்கம்.

நான் கடவுள் முடிந்த பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, 'உங்க அடுத்த படம் தலைப்பு என்ன?' என்றோம்.

அவன் இவன்னு வெச்சுக்கலாமா? என்றார் தமாஷாக. சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அதுதான் தலைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய், பரதேசி என்ற பேச்சு வழக்கு சொல்லை தலைப்பாக்க முடிவு செய்துள்ளாராம் பாலா.

மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை பாலா இந்த முறை படமாக்குவதாகத் தெரிகிறது. இதே தலைப்பை அவர் பயன்படுத்தக் கூடும் என சொல்லப்பட்டது. ஆனால் பாலா இப்போது தலைப்பை மாற்றுகிறாராம்.

பரதேசி என்ற பெயர் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதுகிறாராம். பரதேசி என்றால் தமிழில் உயர்ந்த அர்த்தங்கள் உண்டு. தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாதவன், அனைத்தையும் தன் தேசமாகவே கருதுபவன் என்றெல்லாம் ஏகப்பட்ட அர்த்தங்கள். ஆனால் பேச்சு வழக்கில் இந்த சொல் இழிவாகத் திட்ட பயன்படுத்தப்படுகிறது.

இதுதான் இறுதியா என்பது உறுதியாகத் தெரியாது. பாலாவே அறிவித்தால்தான் உண்டு.

படத்தில் அதர்வா, வேதிகா ஜோடியாகவும், முக்கிய பாத்திரங்களில் பூஜா, உமா ரியாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பாலாவின் பரதேசியில் அதர்வா!!!

இருட்டில் உள்ள நிஜங்களை படம் பிடித்து காட்டும் பெருமை பாலாவையே சாரும். தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் வரிசையில் உள்ள பாலா அடுத்து எடுக்கவிருக்கும் படத்திற்கு எரியும் தணல் என்று பெயர் வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அப்பெயரை மாற்றி பரதேசி என்று வைத்துள்ளார். தனது கதைக்கு இந்த பெயர்தான் மிகச் சரியாக பொருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தில் அதர்வா - வேதிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதையில் எழுத்தாளர் ஜெயமோகன் உதவி செய்கிறார். இவர் ஏற்கனவே நான் கடவுள் படத்தில் பாலாவிற்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், பாலாவின் படத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் உருவாகும் படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பிரியாமணி மறுப்பு!!!

Wednesday,March,21,2012
அபுசலீம் பற்றி இந்தியில் உருவாகும் படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பிரியாமணி மறுத்துள¢ளார். போஜ்புரி நடிகரான கமால் ஆர்.கான், தேஷ் துரோஹி என்ற படத்தை இந்தியில் இயக்கி ஹீரோவாக நடித்தார். இப்போது தேஷ் துரோஹி 2 என்ற படத்தை உருவாக்க உள்ளார். இது நிழல் உலக தாதாக்கள் பற்றிய கதை கொண்ட படமாம். அதனால் அபுசலீம் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு காட்சிகள் அமைக்க உள்ளார். இதில் அபுசலீமின் காதலியான நடிகை மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பலரை கேட்டார். சர்ச்சைக்குரிய வேடம் என்பதால் இந்தி நடிகைகள் மறுத்து வந்தனர். இந்நிலையில் Ôராவண்¢, Ôரக்த சரித்ரா ஆகிய இந்தி படங்களை பார்த்த கமால் கான், அதில் நடித்திருந்த பிரியாமணியை தேர்வு செய்ய முடிவு செய்தார். பிரியாமணியின் செல்போன் நம்பர் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவரது இமெயில் முகவரி கிடைத்து வ¤ட்டது. இதையடுத்து, எனது படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். இது பற்றி விரிவாக பேச விரும்புகிறேன். உங்கள் மேனேஜர் செல்போன் நம்பர் கொடுங்கள் என கேட்டு கமால் கான் மெயில் அனுப்பினார். ஆனால் பல நாட்களாகியும் அவருக்கு பதிலே வரவில்லையாம். ஸ்பெயினில் ஷூட்டிங்கில் இருந்த பிரியாமணி சமீபத்தில்தான் நாடு திரும்பினார். இதற்கிடையே தனது மெசேஜுக்கு பிரியாமணி பதில் கூட அனுப்பவில்லை என டுவிட்டரில் கமால் கான் கவலை தெரிவித்திருந்தார்.
இது பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, மெயிலில் தகவல் வந்தது பற்றி எனக்கு தெரியாது. அதை நான் பார்க¢கவும் இல்லை என்றார். மோனிகா பேடி வேடத்தில் நடிப்பீர்களா என கேட்டபோது, அந்த படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை என கூறினார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு 74 கோடி சொத்து!!

Wednesday,March,21,2012
ஐதராபாத்::நடிகர் சிரஞ்சீவிக்கு ரூ.74 கோடி சொத்து உள்ளது என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்பட 14 மாநிலங்களில் இருந்து 58 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. ஆந்திராவில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, முன்னாள் மாநில அமைச்சர் கோவர்த்தன் ரெட்டி உள்பட 4 பேரும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் ரமேஷ், முன்னாள் மாநில அமைச்சர் தேவேந்தர் கவுடு ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது அளித்த விவரத்தின்படி, சிரஞ்சீவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.74 கோடி. இதில் ரூ.58 கோடி மட்டும் மனைவி பெயரில் உள்ளது. மேலும், 14 கிலோ தங்கம் மற்றும் வைரங்களும் உள்ளன. மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் ரபோலு ஆனந்த பாஸ்கருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான சொத்துகளே உள்ளன. முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ரூ.24 கோடி அசையா சொத்துகள் தனது பெயரிலும், ரூ.31.68 கோடி சொத்துகள் கணவர் பெயரிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தம்பதிக்கு அசையும் சொத்துகள் ரூ.11 கோடிக்கு உள்ளது. கோவர்த்தன் ரெட்டிக்கு ரூ.1.72 கோடி சொத்து அவரது பெயரிலும், ரூ.60 லட்சம் மனைவி பெயரிலும் உள்ளது. தேவேந்தர் கவுடுவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.149 கோடி. மேலும் 5.5 கிலோ தங்கமும் உள்ளது என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன்னா ஸ்லோ... காஜஸ்...ஸ்பீட்!!!

Wednesday,March,21,2012
பிரபல நடிகை தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதாநாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது. அவர் கால்ஷீட் ஒதுக்கி தர இருந்தார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு படம் தொடங்கப்பட்டது. ஆனாலும் கதாநாயகி முடிவாகாமல் இருந்ததால் படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு புதுமுகங்களை அழைத்து தேர்வும் நடந்தது. ஆனால் பொருத்தமான கதாநாயகி கிடைக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் இருந்து தூது வரவே இயக்குநர் அவரிடம் பேசினார். ஏற்கனவே 'பிசினஸ்மேன்' என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்திருந்ததால் இதிலும் அவர் ஜோடி சேர மகேஷ் பாபு சம்மதித்தார். உடனடியாக கால்ஷீட் வழங்கினார் காஜல். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தமன்னா வாய்ப்பை காஜல் பறித்திருப்பதால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்ப வாத்து முட்டை போடும்னு காத்துக்கிடந்துச்சாம் அடைக்கோழி!

ரொமாண்டிக் மூடில் செல்வராகவன்!!!

Wednesday,March,21,2012
செல்வராகவன் தன் படங்களில் கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடல்களுக்கும் கொடுப்பவர். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடலாசிரியராகவும், 'மயக்கம் என்ன' படத்தில் பாடியும் பாடல்களில் தன் சிறிய பங்களிப்பை பதிவு செய்தார். யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் இணைந்த படங்களிலும் சரி, ஜீ.வி. பிரகாஷ் உடன் இணைந்த படங்களிலும் சரி, படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்போது முதன் முறையாக, 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்துள்ளார் செல்வராகவன். வைரமுத்து எழுதி, கார்த்திக் பாடிய பாடலின் ஒலிப்பதிவு முடிந்துள்ளது. இந்த ரொமாண்டிக் பாடல் செல்வராகவனை கவர்ந்துள்ளதாம். இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் செல்வராகவன். பாத்து சார்... அப்டியே மெய்மறந்து அடுத்த உலகத்துக்கு போயிடாதீங்க.....

'ஏஜெண்ட் வினோத்'த்துக்கு பாகிஸ்தானில் தடை!!!

Wednesday,March,21,2012
சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் 'ஏஜெண்ட் வினோத்' படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் படம் 'ஏஜெண்ட் வினோத்'. இதில் அவருக்கு ஜோடியாக அவரது காதலி கரீனா கபூர் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் தயாரித்துள்ள இந்த படத்தை சைபுடன் சேர்ந்து தினேஷ் விஜன் தயாரித்துள்ளார். சைப் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த த்ரில்லர் படம் வரும் 23-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் அவர் உளவாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பற்றி பேசப்பட்டுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் வரும் 'பியார் கி பங்கி' என்ற பாடலின் இசை காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய இசைக்குழுவான 'பாரோபாக்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பாடலின் இசை காப்பியடித்ததில்லை என்று இணை தயாரிப்பாளர் தினேஷ் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏஜெண்ட்டுக்கே பேண்டேஜா..?!

சவுந்தர்யாவை சிலாகிக்கும் ஆதி!!!

Wednesday,March,21,2012
நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா எதிர்காலத்தில் நல்ல இயக்குநராக வருவார் என்று நடிகர் ஆதி கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க தன்னை தயார்படுத்தி, அதில் நடித்து பெயர் வாங்கும் திறமை படைத்தவர் நடிகர் ஆதி. அதற்கு நல்ல ஒரு உதாரணம் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த 'அரவான்' படம். அந்த படத்தில் அவரது நடிப்பும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் நல்ல பெயரை பெற்று தந்தது. அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தில் ஆதியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இதற்காக லண்டன் செல்லும் ஆதி, நம்மிடம் பேசுகையில், நான் ரொம்ப உற்சாகமாக இருக்கேன். இந்தபடத்தில் அப்படி ஒரு அருமையான ரோல் எனக்கு. இந்த படத்தில் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் நல்ல ஸ்கிரிப்ட், வசனம் எல்லாம் ரொம்ப அருமையாக எழுதி இருக்காங்க. முதன்முறையாக ஒரு பெண் இயக்குநரின் டைரக்ஷனில் நடிக்க போகிறேன். முதன்முதலாக என்னுடைய ரோல் பற்றி சவுந்தர்யா பேசும்போது, அவரை பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், ரொம்ப இயல்பாக, என்னுடைய ரோல் பற்றி சொல்லும் போது, சவுந்தர்யாவின் மெச்சூரிட்டி தெரிந்தது. யார்கிட்டேயும் அவங்க இதுவரைக்கும் ஒர்க் பண்ணியதில்லை. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கு. நிச்சயமாக சொல்றேன், சவுந்தர்யா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார் என்றார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா...?

ஜீவி பாட்டுக்கு தயாநிதி பாராட்டு!!!

Wednesday,March,21,2012
'க்ரீன் ரூட் புரொடக்ஷன்ஸ்' பேனரில் வெற்றிமாறன் தயாரிக்க, சித்தார்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. படத்திற்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இப்படத்தின் தயாரிப்பில் தயாநிதி அழகிரியும் இணைந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல் ஒன்று தயாநிதியை கவர்ந்துள்ளது. தயாநிதி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுக்கு டிவிட்டர் வழியே தன் பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அதற்கு ஜீவி பிரகாஷ் நன்றி சொல்லி, மொத்தமுள்ள 6 பாடல்களில் 2 பாடல்கள் நிறைவு செய்திருப்பதாகவும், இரண்டுமே நன்றாக வந்திருப்பதாகவும் பதிலளித்திருக்கிறார். சார்.. அந்த கானாவ ஒங்க சம்சாரம் பாடியிருக்காங்களா....?

தெய்வத்திருமகளுக்கு சர்வதேசவிருது-கொடுமையா,பெருமையா!!!

Wednesday,March,21,2012
வெளிநாட்டுக்காரன் நம்மூருக்கு வந்து நம் தண்ணியை எடுத்து நம்மை வைத்தே சுத்திகரித்து நமக்கே அதை விற்பதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது சினிமாக்காரர்கள்தான். அவர்கள் படத்தை சுட்டு அவர்களுக்கே திரையிட்டு காட்டி விருதும் வாங்குவது சாதாரண விஷயமா?

ஆனால் தெய்வத்திருமகள் விஷயத்தில் சின்ன வித்தியாசம். சுட்டது ஹாலிவுட்டில் விருது வாங்கியது ஜப்பானில்.

ஐ யம் சாம் படத்தின் காப்பியான இதனை காட்ஸ் ஓன் சைல்ட் என்ற பெயரில் ஜப்பானில் நடக்கும் ஆசிய திரைப்படவிழாவான ஒசாகா திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்கு அனுப்பினர். பஞ்சத்தில் நடக்கும் விழா போலிருக்கிறது. மொத்தமே 9 திரைப்படங்களைதான் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று ஜுரிகள். நமது காப்பிக்கு சிறந்த படத்துக்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது, சிறந்த என்டர்டெயினர் படத்துக்கான விருது என இரண்டு கிடைத்திருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் இயல் விருதை சர்வதேச விருது என்று டபாய்த்து விழா எடுத்த மாதிரி இவர்களும் ஏதாவது செய்வார்கள் என்று தோன்றுகிறது.

வர வர சர்வதேச விருதோட தொல்லை தாங்க முடியலைப்பா.

ட்விட்டர் மூலம் விராத் கோஹ்லிக்கு காதல் வலை வீசுகிறார் பூனம் பாண்டே!!!

Wednesday,March,21,2012
இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பாராட்டியுள்ள கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி. அதிரடியாக விளையாடும் இளம்வீரரான இவர், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 183 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதனயைடுத்து விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை சகவீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டினர். அதேபோல கவர்ச்சி மாடல் அழகியும், கிரிக்கெட் ரசிகையுமான பூனம் பாண்டேவும் அவரை பாராட்டி ட்விட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

என்ன அருமையான ஆட்டம் விராத். நான் உன்னை காதலிக்கிறேன். சிறப்பாக ஆடும் உங்களின் உணர்வுகளை (நான்) அதிகமாக பாராட்டுவதில்லை. ஆனால் இன்று நீங்கள் ஆடின ஆட்டம் மூலம் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எப்போது நினைவில் வைத்திருப்போம். பாகிஸ்தான் பந்துகளை துவஷம் செய்ய கோஹ்லி உள்ளார். அவர் ஒரு ரத்தினம். என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றால், முழு நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக பூனம் பாண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பூனம் பாண்டே, இந்தியா கோப்பையை வென்ற போது பூசி மெழுகி, மழுப்பி கடைசி வரை நிர்வாண தரிசனம் தராமல் எஸ்கேப் ஆகி விட்டார். இருந்தாலும் தற்போது தனது இணையதளம் மூலமாக அவ்வப்போது கவர்ச்சிப் படங்களையும், வீடியோக்களையும் போட்டு தொடர்ந்து களேபரப்படுத்தி வருகிறார். தற்போது கோஹ்லியை காதலிப்பதாக கூறியுள்ளார்.

போக்கிரி ராஜா: புகாரை வாபஸ் பெற்றார் ஸ்ரேயா!!!

Wednesday,March,21,2012
ராஜா போக்கிரி ராஜா என்ற படத்தை வெளியிட தடை கோரி புகார் கொடுத்திருந்த ஸ்ரேயா இப்போது, அந்தப் புகார் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

மம்முட்டி, ப்ருத்வி நடித்த போக்கிரி ராஜா என்ற மலையாளப் படம் தமிழில் ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. மலேஷியா பாண்டியன் என்பவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

மலேஷியா பாண்டியன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன், ஸ்ரேயாவையும் அவரது தந்தையையும் நேரில் சந்தித்து, தனது நிலையை விளக்கினார். இதைத் தொடர்ந்து, புகார்களை வாபஸ் பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளார் ஸ்ரேயா.

என்னால் ஒரு தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்துக்குள்ளாவதை விரும்பவில்லை என்று கூறிய ஸ்ரேயா, உடனே வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், படத்தை வெளியிடும் வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியதாகவும் மலேசியா பாண்டியன் தெரிவித்தார்.

நயன்தாரா நடிக்கும் புது படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

Wednesday,March,21,2012
தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' ஆகியப் படங்களை தனது கடைசிப் படங்களாக அறிவித்த நயன்தாரா, மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார். தெலுங்கு முன்னணி ஹீரோவான கோபிசந்த், முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பூபதிபாண்டியன் இயக்க, ஜெயபாலாஜி ரியல் மீடியா (பி) லிமிடெட் சார்பில் கோமரி வெங்கடேஷ், தண்டரா ரமேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல், சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பிறகு புத்தம் புது பொலிவோடு நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல மாதம் சென்னையில் துவங்க இருக்கிறது.(

கொந்தளிப்பை ஏற்படுத்தும் இயக்குனர்கள்!!!

Wednesday,March,21,2012
இலங்கை இருக்கிறவரை மீனவர் பிரச்சனை இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்நிலையில் மணியானவரும், பருவக் காற்றை இயக்கியவரும் தத்தமது படங்களுக்காக கடல் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதில் இரண்டாமவர், மீனவர்களின் நெருக்கடியைதான் எடுக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டே கடலுக்கு கேமராவுடன் சென்றிருக்கிறார். மணியானவரின் கதை காதல் என்றாலும் மீனவர் பிரச்சனையும் வருகிறதாம்.

எரிகிற பிரச்சனையை இருவரும் எப்படி அணுகப் போகிறார்கள் என்று இப்போதே கடலோரத்தில் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே ஈழத்தை எடுக்கிறேன் என்று இஷ்டத்துக்கு மணியானவர் கதைவிட்டதால் எழுந்த காய்ச்சல்தான் இது. கடலை கொந்தளிக்க வச்சிடாதீங்க பாஸ்.

ரேஸில் முந்தப்போவது யாரோ?.

Wednesday,March,21,2012
ரேஸ்' ஹிந்திப்படம், சைப் அலிகான் நடித்து பெரும் வெற்றிபெற்ற த்ரில்லர் படம். இப்படத்தைத் தமிழில் எடுக்க உள்ளனர். இதில் அஜித்தை வைத்து இயக்க மூன்று இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது. அஜித் தற்போது நடித்துவரும் "பில்லா-2' படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்து "சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதையடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் "ரேஸ்' படத்தை விஷ்ணுவர்தனிடம் தரலாமே என யோசனை சொன்னராம் "சிறுத்தை' சிவா. ஆனால் "மங்காத்தா' இயக்குநர் வெங்கட் பிரபுவை சொன்னாராம் அஜித். படத்தைத் தயாரிக்கும் மும்பை நிறுவனமோ பிரபுதேவா இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறதாம். இயக்குநர் ரேஸில் முந்தப்போவது யாரோ?

தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற அசின்: தற்போது கோலிவுட் பக்கம் திரும்பும் எண்ணமே இல்லையாம்!!!



Wednesday,March,21,2012
கேரளாவைச் சேர்ந்த அசின், தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர். இவருக்கு இப்போதைக்கு கோலிவுட் பக்கம் திரும்பும் எண்ணமே இல்லையாம்.

பாலிவுட்டில் 3 படங்களில் நடித்து முடித்துவிட்டவர் அசின். தற்போது அவரது 4வது படம் ஹவுஸ்புல் 2 ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது.

அவரை சந்தித்து பாலிவுட் அனுபவம் எவ்வாறு உள்ளது என்று விசாரிக்கக் கிளம்பினோம். வரவேற்பே படு அமர்க்களமாக இருந்தது.

இனி அவரே பேசுகிறார்..

இப்போதுதான் பாலிவுட் எனக்கு சற்று பரிச்சயமாகியுள்ளது. பாலிவுட்டிற்கென உள்ள ஸ்டைல், மொழி, பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போதுதான் பிடிபட்டுள்ளது. எனது அடுத்த படங்களில் நானே சொந்த குரலில் பேச உள்ளேன். இதனை நினைக்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது என்கிறார் கண்களில் உற்சாகம் பொங்க.

நான் எங்கு போனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படத் தயாரிப்பாளர்களை மறக்க மாட்டேன். அவ்வப்போது எனக்கு நல்ல படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு தமிழிலோ, தெலுங்கிலோ படம் பண்ணும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மிகச் சிறந்த கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் சற்று ஆறுதலாகப் பேசினார்.

கோலிவுட்டில் எப்போதுமே இயல்பான, ஒரே சமயத்தில் வெவ்வேறு வகையான கதைகள் திரைப்படமாக எடுக்கப்படும். கோலிவுட்டில் பணியாற்றியதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

நிச்சயமாக எனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது என தன்னம்பிக்கையோடு பேசுகிறார் நம்ம அசின்.

வாழ்த்துகளைக் கூறி விட்டு விடை பெற்றோம் நாம்.. மகிழ்ச்சி துள்ளலோடு படப்பிடிப்பிற்கு கிளம்பினார் அம்மணி.

'வெற்றிச் செல்வன்' படப்பிடிப்பில் விபத்து: கதாநாயகன்- கதாநாயகி படுகாயம்!!!

Wednesday,March,21,2012
நடிகர் அஜ்மல் கதாநாயகனாகவும், ராதிகா ஆப்தே கதாநாயகியாகவும் நடிக்கும் படம் வெற்றிச்செல்வன். இப்படத்தை ருத்ரன் இயக்கி வருகிறார். வெற்றி செல்வன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் கதாநாயகன் அஜ்மல், கதாநாயகி ராதிகா ஆப்தே ஆகியோர் ஒரு ஆட்டோவில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

டைரக்டர் ருத்ரன் அக்காட்சியை எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆட்டோ ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் தடுக்காவிட்டால் ஆட்டோ பள்ளத்தில் உருண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆட்டோ கவிழ்ந்ததில் கதாநாயகன் அஜ்மல், காதாநாயகி ராதிகா ஆப்தே, டைரக்டர் ருத்ரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை படப்பிடிப்பு குழுவினர் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டைரக்டர் ருத்ரன் கூறியதாவது:-

ஊட்டியில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். நேற்று கதாநாயகனும், கதாநாயகியும் ஆட்டோவில் செல்வது போன்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் இல்லாவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தில் இருந்து மீள வெகு நேரமாகிவிட்டது.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊட்டியில் பல்வேறு இடங்களில் படப் பிடிப்பு நடத்தி உள்ளோம். பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இதனை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.