Tuesday, March 13, 2012சிவாஜி கணேசன் நடித்த மிகப் பிரம்மாண்டமான காவியப் படம் கர்ணன். 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 48 ஆண்டுகள் கழித்து இப்போது மறுவெளியீடு செய்கின்றனர் சிவாஜியின் ரசிகர்கள்.
டிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதி துவங்குகிறது.
சென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. அதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாட சிவாஜியின் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். மொத்தம் 16 பாடல்கள். அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார்.
எஸ் ஏ அசோகன், என்டி ராமாராவ், தேவிகா, சாவித்ரி, முத்துராமன், எம் ஏ ராஜம்மா என பெரும் கலைஞர்கள் இந்தப் படத்தில் மகாபாரதப் பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
Comments
Post a Comment