Monday, January 2, 2012

ராஜபாட்டை >> விமர்சனம்!!

Monday, January 02, 2012
கலை படங்களையும், கமர்ஷியல் படங்களாக நடித்து ரசிகர்களை கவருவதில் வல்லவரான விக்ரம், முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ராஜபாட்டை".

சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் ஜிம்பாயாக சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் விக்ரம், ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் முதியவரான கே.விஸ்வநாத்தை காபந்து செய்து, தன் கூடவே தங்க வைத்து கொள்கிறர். விக்ரம்-தீக்ஷா சேத்தின் காதலுக்கு கலர்ஃபுல் டிப்ஸெல்லாம் தரும் கலக்கல் பெரியவரான கே.விஸ்வநாத் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம்! அதாகப்பட்டது, தன் மறைந்த மனைவி பெயரில் விஸ்வநாத் நடத்தி வரும் அனாதை சிறுவர்கள் ஆசிரமத்தை, தன் அரசியல் லாபத்திற்காக அடித்து பிடுங்குகிறார் அவரது மகன் அவினாஷ்! அதை அவரிடமிருந்து ஆட்டையை போடுகிறார் அரசியல் தலைவியும், நிலமோசடி ராணியுமான அக்கா ரங்கநாயகி எனும் சனா. அவருக்கு ஆதியும் அந்தமும் ஆதரவாக இருக்கிறார் வாப்பா எனும் பிரதீப் ராவத். மகன் அவினாஷிடமிருந்து பெரியவர் கே.விஸ்வநாத்தை காக்கும் விக்ரம், அக்கா சனா, வாப்பா பிரதீப் இருவரிடமிருந்து அனாதை ஆசிரம நிலத்தை மீட்டு மீண்டும் விஸ்வநாத் விருப்பபடி அந்த இடத்தில் அனாதை சிறுவர் விடுதிக்கு அடிக்கோள் நாட்டுவது தான் "ராஜபாட்டை" படத்தின் மொத்த கதையும்!

விக்ரம் ஜிம்பாயாக, பெரிய ஹீரோவாகும் ஆசையில் கோலிவுட்டை ரவுண்ட் அடிப்பது வரை ஓ.கே. அதில் சி.பி.ஐ. ஆபிஸராக, சீக்கிய ஆபிஸராக மாறி நிலமோசடி விவகாரத்தில் வாப்பாவை வதைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரிகிறது! இது மாதிரி படக்காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சிகளிலும் சேர்த்து 17 வேடங்களில் விக்ரம் வருவதெல்லாம் கதைக்கேற்ற காட்சிகளை பிடிக்காமல் இயக்குநருடன் சேர்ந்து விக்ரமும் கண்ணாமூச்சி காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது!

படத்தின் புதுமுகநாயகி தீக்ஷா சேத்திற்கே போதுமான சீன்கள் இல்லாத பட்சத்தில் க்ளைமாக்ஸ் முடிச்சு, ஸ்ரேயாவுடனும், ரீமா சென்னுடனும் விக்ரம் ஆடிப்பாடும் பாடல்காட்சி ஏதோ எடுத்து விட்டோம் காசை கொட்டி என வலிய திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தீக்ஷாவின் நடிப்பை அடுத்த படத்தில் பார்த்துவிட்டு தான் விமர்சிக்க முடியும்! இதில் அவ்வளவு சின்னரோல் அம்மணிக்கு பாவம்! கே.விஸ்வநாத், தம்பி ராமையா, பிரதீப்ராவ், அவினாஷ், சனா, அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்!

யுவனின் பின்னணி இசையும் (பாடல்கள் அல்ல...) மதியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்! வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை என யதார்த்தமான படங்களை எளிமையாகவும், இனிமையாகவும் இயக்கிய சுசீந்திரன், கமர்ஷியலாக இயக்கிய "நான் மகான் அல்ல" அளவிற்கு கூட ராஜபாட்டையில் கலக்காதது வருத்தமே!

தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலமோசடி விவகார வழக்குகளை விளையாட்டாக படமாக்கி இருக்கிறார்கள்! இன்னும் சற்று விளையாட்டை குறைத்து அதன் வீரியத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருந்தால் "ராஜபாட்டை", "ரசிக்கும் பாட்டை"யாக இருந்திருக்கும்!

குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு...!

Monday, January 02, 2012
தெலுங்கில், ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கிறாராம் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. இந்தியில் சூப்பர் ஹிட்டான சல்மான் கானின் தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இப்போது இதே தபாங் படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதற்கு கபார்சிங் என்று பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர். ஹரிஸ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தபாங்கில் வந்த முன்னி, தமிழில் வந்த கலசலா பாடல் போல, தெலுங்கிலும் ஒரு அருமையான குத்தாட்ட பாடல் இருக்கிறதாம். இந்த பாடலுக்கு ஆட தான் நடிகை பிபாஷா பாசுவை அணுகியுள்ளனர் கபார்சிங் படக்குழுவினர். பிபாஷாவும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். ஆனால் அதேசமயம் ரூ.1கோடி சம்பளம் கேட்டாராம். ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா...! என்று வாயடைத்து போன கபார்சிங் படக்குழுவினர், அவ்வளவு முடியாது வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் தருவதாக பேசியுள்ளனர். ஆனால் பிபாஷா பாசு முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு யாராவது ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதுநாள் வரை எத்தனை தமிழ்படங்கள்...?!

Monday, January 02, 2012
தமிழ் சினிமா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை எத்தனை தமிழ் படங்கள் உருவாகியுள்ளன என்பதை பற்றி புள்ளி விபரம் இதோ...

தமிழ் சினிமா தயாரிப்பு பணி தொடங்கிய 1931 முதல் 2001 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ்படங்கள் : 4002
2002 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ் படங்கள் : 1119
மொத்தத்தில் 1931 முதல் 2011 வரை வெளியாகி இருக்கும் நேரடிபடங்கள் படங்கள் : 5121
1931 முதல் 2010 வரை தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத படங்கள் : 210
2011ல் தணிக்கை செய்யப்பட்டு வெளிவர இருக்கும் படங்கள் : 57
மொத்தத்தில் 1931 - 2011 வரை தயாரிக்கப்பட்ட மொத்த படங்கள் : 5388 என்கிறார் தமிழ் திரைப்பட புள்ளி விபர தொகுப்பினை கடந்த 58 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியீட்டு வரும் பத்திரிக்கையாரும், மக்கள் தொடர்பாளருமான பிலிம் நியூஸ் ஆனந்தன்.

எல்லாம் சரி வெளிவந்த 5121 படங்களில் நிஜமான வெற்றி படங்கள் எத்தனை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

பிரதமருக்கு கடமைப்பட்டுள்ளேன் : விருந்தில் பங்கேற்ற தனுஷ் பேட்டி!

Monday, January 02, 2012
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று விருந்தில் பங்கேற்ற தனுஷ் கூறியிருக்கிறார். நம்மில் பலருக்கு 2011-ம் ஆண்டு எப்படியோ, ஆனால் நடிகர் தனுஷை பொறுத்தமட்டில் பொன்னான ஆண்டு, என்று தான் சொல்ல வேண்டும். முதலில் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இப்போது சமீபத்தில் வெளியான கொலவெறி பாடல் அவரை எங்கயோ கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இப்பாடலால் உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் தனுஷ்க்கு, மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்தது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த விருந்தில் மன்மோகன் சிங், ஜப்பான் பிரதமர் யோசிகோ நோடா ஆகியோருடன் நடிகர் தனுஷூம் விருந்து உண்டார்.

இந்த அனுபவம் குறித்து மகிழ்ச்சி பொங்க தனுஷ் கூறியிருப்பதாவது, பிரதமர் அளித்த விருந்தில் நான் பங்கேற்ற ‌போது, மன்மோகன் சிங் அவர்கள் என்னுடைய கையை பிடித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். கூடவே என்னுடைய கொலவெறி பாடலுக்கும் வாழ்த்தும், அப்படியே என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்தார் என்றார்.

மேலும் பிரதமர் விருந்தில் நான் பங்கேற்றது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், ஜப்பான் பிரதமருடன் சேர்த்து என்னையும் அழைத்தமைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

திமிர் பிடித்தவளா? ஸ்ருதி ஹாசன்!

2nd of January 2012
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: சிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்களுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பிடிப்புக்காக அவர் செல்லும் பல நகரங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதிகொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப்பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகிறது. இதை சுகமாக அனுபவித்து வருகிறேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். sஸ் இப்படி சொல்பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பற்றி அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். நான் அப்படியான குடும்ப சூழலில் இருந்து வரவில்லை. ஒவ்வொரு நாள் தூங்கச் செல்லும்போது நான் யார் என்பதை மட்டும் எனக்குள் கேட்டுக்கொள்வேன். எனது நோக்கம் சினிமாவில் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்லாமல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பதையோ, பேசுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது நடிகையாக இருந்தாலும் சரி, பக்கத்து வீடு என்றாலும் சரி. எனது தங்கை அக்ஷரா, எப்போது நடிகையாக போகிறாள் என்கிறார்கள். அவள் சிறந்த டான்சர். என்னவாக வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்யவேண்டும். ஒரு சகோதரியாக அவளது அனைத்து முயற்சிகளுக்கும் உதவி செய்வேன். ஆனால் ஒரு போதும் அட்வைஸ் பண்ண மாட்டேன். என் குடும்பத்துக்கே அதில் நம்பிக்கை இல்லை.

தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : தமன்னா!

2nd of January 2012
என்னுடைய பிறந்த நாளில் தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது’ என்று தமன்னா கூறினார். தமன்னா கூறியதாவது: சமீபத்தில் மும்பையில் எனது பிறந்தநாள் விழா கொண்டாடினேன். இதில் இலியானா, ஸ்ருதி ஹாசன், தனுஷ், அக்ஷரா உள்பட நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலியானாவும், ஸ்ருதியும் என் உயிர்த் தோழிகள். அடிக்கடி மும்பையில் சந்திப்போம். எங்களுக்குள் ரகசியம் கிடையாது. எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசுவோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் எனக்காக ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடலை பாடினார். இதை என் பிறந்த நாளுக்கு அவர் அளித்த மறக்க முடியாத பரிசு.

காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!

2nd of January 2012
காதலனுடன் புத்தாண்டு கொண்டாட கோலிவுட் ஹீரோயின்கள் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர். நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.

காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட பிளான் போட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் ‘இரண்டாம் உலகம்Õ பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் ‘துப்பாக்கிÕ பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.

மனைவி சங்கீதா, குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தையுடன் ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு பறந்துவிட்டார். குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி., குழந்தைகளுடன் கோலாலம்பூர் செல்கிறார். ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.

குழந்தைகளுடன் புத்தாண்டு ஹன்சிகா மகிழ்ச்சி!

2nd of January 2012
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடியதாக, ஹன்சிகா மோத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு வருட புத்தாண்டையும் சிறப்பாகக் கொண்டாடுவேன். 2011ம் வருடம் எனக்கு சிறப்பானது. ‘வேலாயுதம்’ உட்பட நான் நடித்தப் படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன. அடுத்து, உதயநிதி ஸ்டாலினுடன், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களும் எனக்கு பெயரைக் கொடுக்கும். இந்த வருட புத்தாண்டை எங்கு கொண்டாடினீர்கள் என்று கேட்கிறார்கள். நான் தத்தெடுத்துள்ள 20 குழந்தைகளுடன் லோகண்ட்வாலாவில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லை அஜீத்துக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்!

2nd of January 2012
அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.

பில்லா’ முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ‘பில்லா 2’ படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘சிறுத்தை’ ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.