Thursday, May 10, 2012

கவுண்டமணியை இமிடேட் பண்ணவில்லையாம்! - சொல்கிறார் சந்தானம்!!!

Thursday, May, 10, 2012
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம்.

தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர். அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார்.

அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டன வாய்ப்புகள். இன்றைய தேதிக்கு அவர்தான் நம்பர் ஒன் காமெடியன்.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவர் கவுண்டமணியைக் காப்பியடித்து காமெடி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் இதை ஒப்புக் கொண்டவர்தான் சந்தானம்.

ஆனால் ஒரு கட்டத்தில், கவுண்டமணி பெயரை உச்சரிப்பதைக் கூட தவிர்த்தார் சந்தானம். எனக்குப் பிடித்த காமெடி நடிகர் தங்கவேலுதான் என்று கூற ஆரம்பித்தார். அட ங்கொக்கா மக்கா... இப்படி தெரிஞ்சே புளுகறாரே என்று பலரும் கமெண்ட் அடித்த நிலையில், ஆனந்த விகடனில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் சந்தானம்.

அந்த கேள்வியும் சந்தானம் அளித்த பதிலும்...

''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?''

''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம். என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க. ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா.

ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை!''

கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்? - ரம்யா நம்பீஸன்!!!

Thursday, May, 10, 2012
பீட்ஸா விற்கும் கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திப்பான்?

இதையெல்லாம் ஒரு சினிமாவாகக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர் பெயர் கார்த்திக் சுப்பாராவ். படத்துக்குப் பெயரே பீட்ஸா-தான்.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அசத்திய விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அட்டகத்தி என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் திருக்குமரன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக நடிப்பவர் ரம்யா நம்பீஸன். குள்ளநரிக் கூட்டத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் தனது வேடம் பற்றி ரம்யா கூறுகையில், "என்னுடைய நடிப்பு திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு இந்தப் படம். மொழி பிரச்சினை காரணமாக இதுவரையான படங்களில் டப்பிங் பேசவில்லை.முதன்முறையாக இப்படத்தில் தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசப்போகிறேன்.

தமிழில் எனக்கென்று தனி இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கிளாமர் ரோல்களில் நடிப்பதில் தவறில்லை. நான் அப்படி நடிக்கமாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரி கவர்ச்சி வேடம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். நீச்சல் உடைகளில் நடிப்பதில்தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது," என்றார்.

சரி... நீங்க நடிக்கும் படத்துக்குப் பெயர் பீட்ஸா.. உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் அதுதானா? என்றதற்கு,

"ம்ஹூம்... எனக்கு பீட்ஸாவெல்லாம் பிடிக்காது. பிரியாணி அதுவும், சிக்கன் பிரியாணிதான் ரொம்ப பிடிக்கும்," என்றார்.

கரீனா படத்தில் ரஜினி பாடல் நஷ்டஈடு கேட்டு திடீர் வழக்கு!

Thursday, May, 10, 2012
கரீனாவும் அவரது காதலன் சைப் அலிகானும் நடித்துள்ள இந்தி படத்தில் ரஜினி பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படுகிறது. நீண்ட வருட காதலர்கள் கரீனாவும், சைப் அலிகானும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சைப் தயாரித்து நடித்த ‘ஏஜென்ட் வினோத் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார் கரீனா. இப்படத்தில் ரஜினியின் ‘தளபதி படத்தில் இடம்பெற்ற ‘ராக்கம்மா கைய தட்டு.. பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் திடீரென்று பெங்களூரை சேர்ந்த பாடல் கேசட் நிறுவனம், அனுமதி இல்லாமல் Ôராக்கம்மா கைய தட்டுÕ பாடலை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி சைப்பிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது பற்றி பாடல் கேசட் கம்பெனி நிர்வாகி வேலு கூறும்போது, ‘ராக்கம்மா கைய தட்டு பாடலின் சர்வ தேச உரிமையை எங்கள் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் சைப் அலிகான் தனது படத்தில் இப்பாடலை பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக எங்களிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து பட குழுவினர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.