Saturday, April 28, 2012

கார்த்திகாவா? யார் அது? - ஹன்ஸிகா ஆவேசம்!!!

Saturday, April, 28, 2012
கார்த்திகாவா... யார் அது? அப்படி ஒருவரை எனக்கு தெரியவே தெரியாதே என்று தன் ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஹன்ஸிகா.

ஏன் இந்தக் கோபம்... அதுவும் பிரபல நடிகையான கார்த்திகாவை தெரியாது என்று கூறும் அளவுக்கு?

சுந்தர் சிதான். இவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தமானவர் ஹன்ஸிகா. அப்புறம் என்ன நினைத்தாரோ, திடீரென்று ஹன்ஸிகாவை தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இதனால் பயங்கர கடுப்பாகிவிட்டாராம் ஹன்ஸிகா. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்... அப்ப பாத்துக்கறேன் என்று கமெண்ட் அடித்தாராம்.

ஹன்ஸிகாவிடம், சமீபத்தில் இந்த மோதல் குறித்து கேட்டபோது, "கார்த்திகாவா... யார் அது? அவருடன் நான் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இது வதந்திதான். நான் தற்போது 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடிக்கிறேன். டெல்லி பெல்லி தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளேன். சினிமாவில் அவரவர்களுக்கென்று தனித்தனி இடங்கள் உள்ளன. அதை யாரும் தட்டி பறிக்க முடியாது," என்றார்.

3 சினிமா படத்தில் வரும் கொல வெறிடி பாடலுக்கு மலேசிய பிரதமரும் ரசிகர்!!!

Saturday, April, 28, 2012
கோலாலம்பூர்::நடிகர் தனுஷ் நடித்த 3 சினிமாவில் வரும் கொல வெறிடி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இங்கு வசிக்கும் தமிழர்களை சந்தித்து பேசுகையில், தனுஷ் நடித்த படத்தில் வரும் கொல வெறிடி பாடல் எனக்கும் பிடிக்கும். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த பாடலை ரசித்து கேட்டார் என்று கேள்விப்பட்டேன் என்றார்.மேலும், ரேடியோவில் வரும் கலக்கல் காலா நிகழ்ச்சியில் நஜிப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளோம். தமிழர்கள் உள்பட சிறுபான்மையினத்தவருக்கு அரசு நிறைய திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. தமிழ் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது.

இந்திய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மலேசியர்களை போலவே மற்ற இனத்தவர்களும் இங்கு முன்னேற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது தமிழ் நேயர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த சில தமிழ் சொற்களை சொல்கிறேன் என்று கூறி, அச்சமில்லை, நம்பிக்கை, ஒரே மலேசியா போன்ற சொற்களை கூறினார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, April, 28, 2012
* இங்கிலாந்தில் இருந்து தமிழ் படத்தில் இடம்பிடித்த எமி ஜாக்ஸன் தற்போது பாலிவுட், டோலிவுட் படங்களில் நடிப்பதுடன் இந்திய சோப்பு நிறுவனம் ஒன்றிற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

* சசிகுமார் நடிக்கும் ‘சவுந்திரபாண்டியன்’ படத்தை அவரது உதவியாளர் பிரபாகரன் இயக்குகிறார். ‘கும்கி’ படத்தில் நடிக்கும் லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.

* இளையராஜா தலைமையில் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தும் பவதாரணி அடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்.

* சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது தெலுங்கு படமொன்றில் அல்லாரி நரேஷின் அத்தையாக நடிக்கிறார். இதற்காக பெரிய சம்பளம் வாங்கி இருக்கிறாராம் ரம்யா.

* ‘கோச்சடையான்’ படத்தில் தன்னுடன் நடித்த ஆதியின் உயரத்தை ரசித்த ரஜினி அவரிடம் உங்கள் உயரம் என்ன என்று விசாரிக்க 6 அடி 2 இன்ச் என்றதும் வெரிகுட் என்று பாராட்டினார்.

* ஏற்கனவே 30 பாடல்கள் சொந்த குரலில் பாடி இருக்கும் மோகன்லால் அடுத்து ஜோஷி இயக்கும் ரன் பேபி ரன் என்ற படத்துக்கு சொந்த குரலில் பாடுகிறார்.

* விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா தம்பி சத்யா ஜோடியாக நடிக்கிறார் ‘யுவன்’ பட ஹீரோயின் ரகுல் பிரீத் சிங்.

* ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படம் 65வது கேன்ஸ் சர்வதேச பட விழாவில் திரையிடப்படுகிறது.

கிரிக்கெட் வீரருடன் ஹரி ப்ரியா குத்தாட்டம்!!!

Saturday, April, 28, 2012
கிரிக்கெட் வீரருடன் ஹரி ப்ரியா குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கிரிக்கெட் வீரர்களுடன் கோலிவுட் ஹீரோயின்கள் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குகின்றனர். சமீபத்தில் டோனியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் லட்சுமிராய். இதுபோல் பல்வேறு பாலிவுட் நடிகைகளும் இப்பிரச்னையில் சிக்கி உள்ளனர். புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ‘முரண்’ பட ஹீரோயின் ஹரி ப்ரியா. இவர் கன்னடத்தில் ‘கில்லாடி கிட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல் கேசட் விழா சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இந்த விழாவுக்கு ஐபில் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிரிஸ் கெய்ல் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

விழாவில் பங்கேற்ற கிரிஸ் அங்குள்ளவர்களிடம் சகஜமாக பேசினார். அவரிடம் ஹரி ப்ரியாவை அறிமுகப்படுத்தினார்கள். அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூறினார் கெய்ல். பட கேசட் வெளியானது. பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது கெய்ல் ஆர்வமிகுதியால் குத்தாட்டம் போட்டார். அவரை பார்த்து உற்சாகம் அடைந்த ஹரி ப்ரியா தானும் அவருடன் இணைந்து குத்தாட்டம் போட ஆரம்பித்தார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர். இதுபற்றி ஹரி ப்ரியா கூறும்போது. ‘‘கெய்ல் என்னை பார்த்ததும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பாராட்டினார்’’ என்றார்.

வித்யா வேடத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி ஆர்வம்!!!

Saturday, April, 28, 2012
சில்க் வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா ஷெட்டி வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கிறார்.சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’. இதில் சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். ‘வேறு நல்ல கதை அம்சமுள்ள படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பேன்’ என்று கூறினார். இந்நிலையில் வித்யாபாலன் நடித்த ‘கஹானி’ என்ற படம் பாலிவுட்டில் வெளியாகி ஹிட்டானது. கர்ப்பிணி ஒருத்தி கொல்கத்தாவில் காணாமல்போன தனது கணவனை தேடி கண்டுபிடிப்பதே கதை. இப்படத்தை அனுஷ்கா ஷெட்டி பார்த்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘வித்யாபாலன் நடித்த இக்கதாபாத்திரம் சவாலானது. இப்படத்தை தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்தால் நடிக்க தயார். எந்த நேரத்திலும் இதற்கு கால்ஷீட் தருவேன்’ என்று கூறினார். இதையடுத்து இப்படத்துக்கு மவுசு கூடியது. தெலுங்கு, தமிழில் இப்படத்தின் உரிமையை வாங்க பிரபல நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன.

கௌதம் படம் ட்ராப்!!!

Saturday, April, 28, 2012
விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌ரீமேக் ஏக் தீவானா தா பெருத்த தோல்வியை‌க் கண்டது. ஆனாலும் வீம்புக்காக தனது நீதானே என் பொன்வசந்தத்தை இந்தியிலும் இயக்கி வெளியிடுவேன் என்று கூறி வந்தார் கௌதம். இந்தப் படம் தமிழில் ‌ஜீவா நடிப்பிலும் தெலுங்கில் நானி நடிப்பிலும் உருவாகி வருகிறது.

இந்திப் பதிப்புக்கு பெயரெல்லாம் தேர்வு செய்திருந்தார் கௌதம். ஆனால் படத்தை எடுத்தால் விற்பனையாக வேண்டுமே. தவிர விண்ணைத்தாண்டி வருவாயா போ‌ல்தான் நீதானே என் பொன்வசந்தமும் தயாராகி வருகிறது.

மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா என இரு படங்களை ‌ரீமேக் செய்து இரு ப்ளாப்கள் கொடுத்ததால் கொஞ்சம் உஷாராகியிருக்கிறார் கௌதம். தமிழ், தெலுங்கில் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து இந்தியில் ‌ரீமேக் செய்வது என்று தற்காலிகமாக இந்தி பதிப்பை ட்ராப் செய்திருக்கிறார்.

புத்திசாலித்தனமான முடிவு.

கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது : காஜல் அகர்வால் பேட்டி!!!

Saturday, April, 28, 2012
கமர்ஷியல் படங்களில் கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது என்றார் காஜல் அகர்வால்.தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுன் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் நடித்த படம் ‘தடா’. இப்படம் தமிழில் ‘டைகர் விஷ்வா’ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. காஜல் அகர்வால், சமிக்ஷா நடிக்கின்றனர். இதுபற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:
தமிழில் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘மாற்றான்’ படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கில் நான் நடித்த படங்கள் இப்போது தமிழில் டப்பிங் ஆகி வருகிறது. நாக சைதன்யாவுடன் நடித்த ‘தடா’ என்ற படம் ‘டைகர் விஷ்வா’ என்ற பெயரில் வருகிறது. இப்படத்தை அஜெய் இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசை. இதில் மற்றொரு நாயகியாக சமிக்ஷா நடித்துள்ளார்.

தாதாவிடம் ஹீரோ மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் ஹீரோயின் அண்ணன் தாதாவிடம் வேலை செய்கிறார். அவர் எப்படி மீட்கப்படுகிறார் என்பது கதை. இப்படத்தின் ஷூட்டிங் மறக்க முடியாது. ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்தபோது தெலங்கானா பிரச்னையால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை. பின்னர் சென்னையில் ஷூட்டிங் நடந்தது. ஒரே படத்தில் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் கவர்ச்சி போட்டிக்கு வழிவகுக்கிறதா என்கிறார்கள். கதைக்கு தேவைப்படும்போது இரண்டுக்கு அதிகமான நடிகைகள் கூட நடித்திருக்கிறோம். கமர்ஷியல் படம் என்றால் கவர்ச்சி ஒரு அம்சமாகிவிடுகிறது. அதை தவிர்க்க முடியாது. இது எல்லா மொழி படங்களுக்கும் பொருந்துவதாகிவிட்டது.

கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தருவதா? இயக்குனர் மீது 2 ஹீரோயின்கள் பாய்ச்சல்!!!

Saturday, April, 28, 2012
கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஒதுக்குவதா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது 2 ஹீரோயின்கள் கோபம் அடைந்தனர். ராம்கோபால் வர்மா இயக்கும் படம் ‘டிபார்ட்மென்ட்’. இதில் அஞ்சனா சுகானி, லட்சுமி மன்சு, நாதாலியா கவுர் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷனில் அஞ்சனா, லட்சுமி இருவரையும் ஓரம்கட்டிவிட்டு கவர்ச்சி நடிகை நாதாலியா கவுருக்கு வர்மா முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சனா, லட்சுமி இருவரும் இயக்குனர் மீது கோபமாக இருக்கிறார்கள், ‘இதுபழிவாங்கும் செயல்’ என்று லட்சுமி மன்சு கூறியதாக தகவல் வெளியானது.

இதுபற்றி மன்சுவிடம் கேட்டபோது, ‘‘இது வர்மாவின் படம். அவருடைய படத்தை எப்படி புரமோஷன் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம். இன்னும் சொல்லப்போனால் அவர் படத்தில் நடித்தது பெருமை. ராம்கோபால் வர்மாவைவிட வேறு யாரும் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை கவுரவமாக நடத்த மாட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறேன். ஆந்திராவின் உட்புற பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. டாப்ஸி, சுதீப் கிஷன் மற்றும் ஆதி நடித்துள்ளனர். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நடந்த முக்கிய சம்பவமொன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது’’ என்றார்.

ரகசியத்தை உடைத்த நடிகை : சத்தம் போட்ட இயக்குனர்!!!

Saturday, April, 28, 2012
பிரமாண்ட இயக்கம் திரும்ப கதை பண்ண உட்கார்ந்தா, லஞ்சம், ஊழலுக்கு எதிரான ஹீரோயிசம்னு அவரோட பழைய எண்ணங்களே காட்சியா வருதாம்... வருதாம்... நொந்துபோனவரு, ஸ்கிரிப்ட் டீமையே கலைச்சிட்டாராம்... கலைச்சிட்டாராம்... ஆனந்த இயக்கத்தோட ஸ்கிரிப்ட் டீமை தன்னோட படத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணினவரு, அந்த டீமோடு உட்கார்ந்து டிஸ்கஷன் பண்றாராம்... இனி என்னோட பாணி புதுசா இருக்கும்னு இயக்கம் சொல்லிக்கிறாராம்...

ஷூட்டிங் ஸ்பாட்ல மன்சுவான நடிகையை மணியான இயக்கம் சத்தம் போட்டாராம்... சத்தம் போட்டாராம்... ஷாட் சரியா வந்துச்சு, நடிகையும் நல்லாத்தான் நடிச்சாங்க. அப்புறம் ஏன் சத்தம் போட்டாருன்னு யூனிட்காரங்க குழம்பிபோனாங்களாம்... நைட்பார்டடியில தனக்கு நெருக்கமான இண்டஸ்ட்ரிகாரங்ககிட்ட மணியானவரு படத்துல தன்னோட ரோல் என்னாங்கிற ரகசியத்தை மன்சு நடிகை போட்டு உடைச்சிட்டாராம்... இந்த தகவல் எப்படியோ மணி காதுக்கு போச்சாம். அந்த
கோபத்தைதான் ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்கம் காட்டினாராம்...

இந்தியல பாடிகாட் படம் பண்ணின சித்திக்கான இயக்கம், திரும்ப இந்தி படம் பண்ண முயற்சி பண்ணினாரு. கானை வச்சு படம் எடுத்தவரு, அடுத்ததா தன் படத்துல நடிக்க இன்னொரு கான் வருவாருன்னு எதிர்பார்த்தாராம்... ஆனா அது நடக்கல. இயக்கத்துக்கும் இந்தியில பெரிய ஹீரோக்களை அப்ரோச் பண்ற டெக்னிக் தெரியலையாம்... தெரியலையாம்... இதனால இரண்டாம் தர ஹீரோவை வச்சு ஒரு படம் பண்ண ரெடி ஆயிட்டாராம்...

மே 1 கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் புரமோ!!!?

Saturday, April, 28, 2012
கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் கேன்ஸில் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது. அதுவும் போட்டிப் பி‌ரிவில். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இந்நிலையில் மே 1ஆ‌ம் தேதி படத்தின் 30 வினாடி புரமோவை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.

கமல் படங்கள் எப்போதும் சமுத்திரத்தில் போட்ட கல்லாக சைலண்டாக இருக்கும். ‌ரிலீஸ் தேதி நெருங்குகையில் தனது புத்திசாலித்தனமான விளம்பரங்கள் மூலம் - அது விளம்பரம் என்று தெ‌ரியாத வகையில் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்குவார் கமல். விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை இதுவரை சைலண்டாக இருந்த கமல் மே 1 முதல் விளம்பர களத்தில் இறங்குகிறார்.

பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் என்று சகலப் படங்களையும் விரைவில் பின்னுக்கு தள்ளியும்விடுவார்.

அதுதான் கமல்.

ஆதியின் உயரத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி: கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!!!

Saturday, April, 28, 2012
ஆதியின் உயரத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி: கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தின் 'கோச்சடையான்' படத்தின் சூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினி, மீண்டும் கோச்சடையான் படம் மூலம் தன்னுடைய பழைய வேகத்தில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தின் ஷூட்டிங் போது தன்னுடன் நடித்த ஆதியின் (ஈரம் படத்தின் ஹீரோ) உயரத்தை ரசித்த ரஜினி அவரிடம் உங்கள் உயரம் என்ன என்று விசாரிக்க 6 அடி 2 இன்ச் என்றதும் வெரிகுட் என்று பாராட்டினாராம்...

கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!

ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இப்படத்தில் நடிப்பது குறித்து ஆதி கூறியதாவது:-

ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு இதன் மூலம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கேரக்டரில் ஒன்றி நடித்தேன். அதே நேரம் சவாலாகவும் இருந்தது. ரஜினியை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது. நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது.

என்று கூறினார்.

த்ரிஷா படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்!!!

Saturday, April, 28, 2012
த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த்ரிஷா, கோ கார்த்திகா, ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தெலுங்கு படம் தம்மு. நாளை ரிலீசாகிறது. இப்படம் கர்நாடகாவில் மட்டும் 150 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. பெரிய ஹீரோவின் கன்னட படத்துக்கு இணையாக இத்தனை தியேட்டர்களில் இப்படம் ரிலீசாவதால் கன்னட திரையுலகம் கொதித்துப் போயுள்ளது. இதற்கு முன் கர்நாடகாவில் ரிலீசான ரச்சா தெலுங்கு படம் அங்கு வசூலை குவித்தது. இதனால் தம்மு படத்தை போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதே நேரம், இந்த போக்கு கன்னட ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மற்ற மொழி படங்களை கர்நாடகாவில் தாமதமாகவே ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கன்னட சினிமா சங்கத்தினர் கொண்டு வந்தனர். பலத்த எதிர்ப்புகள் காரணமாக அந்த விதிமுறை நீக்கப்பட்டது. இப்போது கன்னட படங்களுக்கு இணையாக தம்மு படம் ரிலீஸ் ஆவதால், அதே நாளில் திரைக்கு வரும் 3 கன்னட படங்களின் வியாபாரம் பாதிக்கப்படலாம் என தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் கதி கலங்கியுள்ளனர். அப்பட ஹீரோக்களும் இதனால் டென்ஷனில் உள்ளனர். நாளை திரைக்கு வரும் 3 கன்னட படங்களில் உபேந்திராவின் காட்ஃபாதர் படமும் அடங்கும். இதற்கிடையே கன்னட தயாரிப்பாளர் சங்கம், இது பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று மொழி படங்களுக்கு குறிப்பிட்ட அளவு தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? தமன்னா பதில்!!!

Saturday, April, 28, 2012
புது படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்டு வாங்கியதாக வந்த தகவல் பற்றி பதிலளித்தார் தமன்னா. அவர் கூறியதாவது: இப்போது தெலுங் கில் நடித்து வரும் 2 படங்களை தவிர புது படங்கள் எதுவும் ஏற்கவில்லை. இதற்கிடையே ஒரு படத்துக்கு நான் ரூ.1 கோடி வாங்கியதாக தகவல் பரவியுள்ளது. இதில் துளியும் உண்மை கிடையாது. ஏதேனும் ஒரு படத்துக்கு அதுபோல் சம்பளம் வாங்கியிருந்தால் மீடியாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில் யாரும் என்னிடம் இதுபோல் கேள்வி எழுப்பியிருக்க மாட்டீர்கள்.

இந்தியில் நடிக்கப்போவதாகவும் நிறைய தகவல் வருகிறது. சில வாய்ப்புகள் வருவது உண்மைதான். இடைவெளி இல்லாமல் இப்போது கால்ஷீட் கொடுத்துவிட்டு நடித்து வருகிறேன். இதற்கிடையே இந்தியில் நடிக்க கால்ஷீட் உடனே ஒதுக்க முடியாது. அதற்காக நேரம் எடுத்து நான் தயாராக வேண்டும். இந்தியில் அறிமுகமானவள்தான் நான். இனி இந்தியில் நடிக்க வேண்டுமானால் அது பெரிய படமாக இருக்க வேண்டும். யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை எனக் கேட்கிறீர்கள். தமிழ், தெலுங்கில் பல நடிகர்களுடன் இதுவரை நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன். குறிப்பிட்டு ஒரு நடிகருடன்தான் நடிப்பேன் என சொல்ல மாட்டேன்.

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களே நிஜ ஹீரோக்கள் -அஜீத்!!!

Saturday, April, 28, 2012
அஜீத்தின் பில்லா-2 படம் ரிலீசுக்கு தயாராகிறது. இப்படத்தை ரூ.28 கோடிக்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 1-ந்தேதி படத்தின் பாடல் சி.டி.யை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

இப்படத்தில் ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டை காட்சியொன்றில் அஜீத் உயிரை பணயம் வைத்து நடித்து இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி அஜீத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால் தான் படம் சிறப்பாக வரும் நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது. அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு அஜீத் கூறினார்.

என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி!

Saturday, April, 28, 2012
பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார்.

சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்ஏற்பட்ட தகராறில் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் சென்று வந்தார். சினிமாவில் பட்ட கஷ்டங்களை படமாக்கப் போவதாக சோனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே டைரக்டு செய்யப் போகிறேன்.

சில மாதங்களாக சினிமா பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். யுனிக் என்ற நிறுவனத்தை துவங்கி வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

இந்த நிறுவனம் பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்த உள்ளது. இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

பின்னர் பேஷன் ஷோவில் பங்கேற்கும் அழகிகளை சோனா அறிமுகப்படுத்தினார். நடிகை சோனியா அகர்வால், சிட்னி ஷெல்டன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

படு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... தப்பான நினைப்போட என்கிட்ட வராதீங்க - அஜீத் ஹீரோயின்!!!

Saturday, April, 28, 2012
அஜீத் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டனுக்கு ஏக முன் ஜாக்கிரதை. நடித்த முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பலே கண்டிஷன் போட்டுள்ளார்.

அது, "படுகவர்ச்சியாக நடிப்பேன் என்ன நினைப்பிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடனோ என்னை யாரும் அணுக வேண்டாம்," என்பதுதான்.

உலக அழகி போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற பார்வதி ஓமனகுட்டன், 'பில்லா-2' படத்தின் மூலம் சினிமா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தில் இவர்தான் அஜீத்துக்கு ஜோடி.

'பில்லா-2' ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வதி ஓமனகுட்டன் கூறுகையில், "முதல் படத்திலேயே அஜீத் ஜோடியாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

அஜீத்தை சந்திப்பதற்கு முன்பு அவர் ஒரு பந்தா பார்ட்டியாக இருப்பார் என்று நினைத்தேன். பழகிய பிறகுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு எளிமையானவர் என்று. அவர் ஒரு உதாரணமான மனிதர். நான், அவருடைய மனைவி ஷாலினியின் தீவிர ரசிகை. இதை அவரிடம் சொன்னபோது, அவரும் ஷாலினியின் ரசிகராக இருந்தவர் என்று தெரியவந்தது. அவர் ரசித்த பெண்ணே வாழ்க்கை துணையாக வந்ததற்காக, நான் அவருக்கு வாழ்த்து சொன்னேன்.

'பில்லா-2' படத்தின் கதையை என்னிடம் கேட்காதீர்கள். அதைச் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும். அஜீத்துக்கு ஜோடியாக, படத்தின் கதையை திசை திருப்பும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கும் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

பார்வதி ஓமனகுட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற தவறான கண்ணோட்டத்துடன் யாரும் என்னை அணுக வேண்டாம். நான் நடிக்கிற வேடத்துக்கு எந்த அளவுக்கு கவர்ச்சியும், நெருக்கமும் தேவைப்படுகிறதோ, அதை நான் தயங்காமல் செய்வேன்.

நடிப்பு திறனை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரம் அமைந்து, அந்த கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவைப்பட்டால், நிச்சயம் செய்வேன்.

மிக சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். எவ்வளவு கனமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனகுட்டன் வெளுத்துக் கட்டுவார் என்ற பெயர் வாங்க வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்காக இரவு-பகலாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி!!!

Saturday, April, 28, 2012
நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் இணைந்து பணிபுரிந்த படங்கள் ஆறு, வேல், சிங்கம். இந்த மூன்று படங்களும் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் மீண்டும் இணைகிறார்கள். அந்தபடம் ஏற்கனவே வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக சிங்கம்-2 என்ற பெயரில் உருவாகிறது.

தற்போது டைரக்டர் ஹரி, தனது குலதெய்வம் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் தன்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளைக்கு வந்துள்ளார்.

சிங்கம்-2 படம் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:-

எனது சொந்த ஊரான சக்கனாவிளையில் எங்களின் குலதெய்வம் கோவிலான நாராயணசுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்போது நடந்துவருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன்.

சிங்கம்-2 தூத்துக்குடி சம்பந்தப்பட்ட கதையாகும். இந்த படத்தின் கதை தென்னிந்தியாவில் தொடங்கி தென்ஆப்ரிக்காவில் முடிகிறது. சிங்கம்-2 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தூத்துக்குடியில் தொடங்குகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடி மாவட்டத் திலேயே படமாக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

இதில் நடிகர்கள் சூர்யா, விவேக், சந்தானம், நடிகைகள் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சிங்கம்-2 படத்தின் உச்சகட்ட காட்சிகள் தென் ஆப்ரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு டைரக்டர் ஹரி கூறினார்.