Tuesday, May 15, 2012

இந்தியில் பட வாய்ப்புகள்: மும்பையில் தங்க வீடு பார்க்கிறேன்- பிரபுதேவா!!!

Tuesday, ,May, ,15, 2012
பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய 'வாண்டட்' படம் ஹிட்டானதால் அங்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அக்ஷய்குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகிறது. 'எனிபடி கேன் டான்ஸ்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்கு தலா ஒரு படங்கள் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக நீண்ட நாட்கள் மும்பையில் இருக்க வேண்டி உள்ளதால் அங்கு தங்குவதற்கு வீடு பார்க்கிறார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நடப்பதாக இருந்த திருமணம் நின்றுபோனது. இருவரும் காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதுவும் பிரபுதேவா மும்பை குடிபெயர்வதற்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது.

இதுபற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் மும்பையில் தங்க முடிவு செய்து இருப்பது உண்மைதான். அங்கு இது வரை வீடு எதுவும் வாங்கவில்லை. விரைவில் வாங்குவேன். மும்பையிலேயே நிரந்தரமாக தங்கி விடமாட்டேன். சென்னையை விட்டு நான் எங்கே போக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிக்கிறேனா?!!!

Tuesday, ,May, ,15, 2012
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்Õ படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே... யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும்வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான். ‘போடா போடிÕ படம், பெரும்பகுதி முடிந்துவிட்டது.

பாடல் மற்றும் சில விடுபட்ட காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளது. அடுத்து ‘வாலுÕ படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். ‘வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, ,May, ,15, 2012
அறிவழகன் இயக்கத்தில் நகுல் நடிக்கும் Ôவல்லினம்Õ படத்தில் கூடைபந்து கோச்சாக வில்லன் நடிகர் அதுல் குல்கர்னி நடிக்கிறார்.

ராஜேஷ் இயக்கும் Ôஆல் இன் ஆல் அழகுராஜாÕ படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க பேச்சு நடக்கிறது.

சினேகா,பிரசன்னா வழங்கிய திருமண சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் சூர்யா,ஜோதிகா, ஜெயம் ரவி,ஆர்த்தி, அப்பாஸ்,எரும் ஜோடிகளும், மீனா, சிம்ரன், மணிரத்னம், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

அஜய் தேவ்கன், சல்மான் நடிக்கும் 2 இந்தி படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ள பிரபுதேவா சொந்தமாக மும்பையில் வீடு வாங்க முடிவு செய்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஜெசிகா சிம்சன் தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை ரூ.4 கோடிக்கு அமெரிக்க பத்திரிகையொன்றுக்கு விற்றிருக்கிறார். ஏற்கனவே ஜெனிபர் லோபஸ் தனது இரட்டை குழந்தை படத்தை ரூ.32 கோடிக்கு விற்றார்.

*‘நண்பன்’ படத்தையடுத்து ஷங்கர் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பதில் மூழ்கி இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் ஸ்கிரிப்ட் முடிந்தபிறகே இறுதி முடிவு எடுப்பாராம் ஷங்கர்.

*‘வால்மீகி’, ‘அய்யனார்’ படத்தில் நடித்துள்ள மீரா நந்தன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகும் ‘ஜித்தன்’ ரமேஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

*பாலிவுட்டில் தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கும் ‘மரியன்’ படத்திற்கு 2 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து தர, அதன் ஷூட்டிங் ஆப்ரிக்காவில் நடக்கிறது.

*குழந்தை தொழிலாளர் பற்றிய படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் சத்யராஜ் மகள் திவ்யா.

*ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கும் ‘முகமூடி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை காரைக்காலில் படமாக்குகிறார் மிஷ்கின்.

என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு!!!

Tuesday, ,May, ,15, 2012
என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார். அவர் கூறியதாவது: 4 வயது முதலே நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்டுடியோவை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்றுதான் வாழ்க்கை கழிந்தது. நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன். என் மகள் ஜானவி, குஷி இருவரையும் பள்ளிக்கு அழைத்து சென்று விடும்போதும் அவர்கள் ‘மம்மிÕ என்று என்னை அழைத்தபோதும் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாது. அந்த தருணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் சின¤மாவிலிருந்து விலகியே இருந்தேன். கடவுள் பக்தி,

பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன். ‘ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி ந¤ச்சயம் நடிக்க வரமாட்டார்.

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு!!!


Tuesday, ,May, ,15, 2012
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் என்றாலே ஒளிந்து கொள்ளும் நயன்தாரா, இப்போது கூப்பிட்டுப் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டியொன்றில், "சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு சம்பாதித்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம்.

நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்," என்றார்.

நேபாள விமான விபத்தில் சோகம் : பிரபல குழந்தை நடிகையும் பலி!!!

Tuesday, ,May, ,15, 2012
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமன்றி, தமிழில் அறிமுகமான குழந்தை நட்சத்திர நடிகையும் அவருடைய அம்மாவும் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உள்பட விபத்தில் மரணம் அடைந்த 15 இந்தியர்களின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவன விமானம், பொகாராவில் இருந்து நேற்று காலை ஜோம்சாம் விமான நிலையத்துக்கு சென்றது. அங்கு விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மலை உச்சியில் மோதி கீழே விழுந்தது. இதில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் இறந்தனர். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீகாந்த், மனைவி லதா, மகள்கள் ஸ்ரீவர்த்தினி (9), ஸ்ரீபதா (6) ஆகியோர் சுற்றுலா சென்றனர். மேலும், கும்பகோணத்தை சேர்ந்த ஆன்மீக குழுவினரும் நேபாளம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற விமானம்தான் விபத்தில் சிக்கி நொறுங்கி உள்ளது. இதில் லதா, ஆன்மீக குழுவை சேர்ந்த அர்ச்சகர் சுதர்சன் பட்டாச்சாரியார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீகாந்த் உள்பட மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகவல் லதாவின் மாமனார் சீனிவாசனுக்கும், சுதர்சன் பட்டாச்சாரியாரின் சகோதரர் சவுந்தர்ராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் தமிழ் நடிகை ஒருவரும் இறந்தது தற்போது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வெற்றிச்செல்வன்Õ. இப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி.

மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் ‘வெள்ளி நட்சத்திரம்Õ, ‘சத்யம்Õ படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிச்செல்வன் படத்தின் ஹீரோயின் ராதிகா ஆப்தேவுடன் தருணி நடித்த காட்சிகள் சமீபத்தில் ஊட்டியில் படமானது. வரும் 25ம் தேதி மீண்டும் சென்னையில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் தருணி. இதற்கிடையில் நேபாளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். தருணி இறந்த தகவலை வெற்றிச்செல்வன் பட இயக்குனர் ருத்ரனுக்கு, தருணியை அறிமுகம் செய்து வைத்த கோ ஆர்டினேட்டர் ருக்மணி என்பவர் இன்று காலை தெரிவித்தார். அதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். தருணி இறந்தது பற்றி இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார். ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்தியில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பாÕ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். ஷூட்டிங்கில் எந்த இடையூறும் செய்ய மாட்டார். சொன்ன நேரத்துக்கு ரெடியாகி வந்துவிடுவார். பூண்டு சேர்க்காமல் உணவு கொடுங்கள் என்று மட்டும் கேட்பார். மற்றபடி இதுவேண்டும், அதுவேண்டும் என்று பந்தா செய்ய மாட்டார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் காஸ்ட்யூம் ஒன்றை விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார்.

அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ‘25ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள்Õ என்று கூறினார். இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. ஷூட்டிங் ஏற்பாடுகள் செய்து வந்தேன். இந்நிலையில்தான் தருணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கோ ஆர்டினேட்டர் இன்று காலை எனக்கு போன் செய்து விமான விபத்தில் தருணியும் அவரது அம்மாவும் இறந்தது பற்றி தகவல் தெரிவித்தார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலை யில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு ருத்ரன் கூறினார். குழந்தை நட்சத்திரமான தருணி விமான விபத்தில் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கு விரைந்துள்ளனர். உடல்களை சென்னை கொண்டுவர நடவடிக்கை நேபாள விமான விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த லதா, கும்பகோணத்தை சேர்ந்த சுதர்சன் பட்டாச்சாரியார், குழந்தை நட்சத்திரம் தருணி, அவருடைய அம்மா ஆகிய 4 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவிர விபத்தில் இறந்த மற்ற இந்தியர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு உடல்களை அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!!!

Tuesday, ,May, ,15, 2012
துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் குலதெய்வ கோயிலில் பிரசன்னா - சினேகா!!!

Tuesday, ,May, ,15, 2012
தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.

கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம்தான் பிரசன்னாவின் பூர்வீகம். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். முக்கிய காரியங்கள் செய்யும் முன் இங்கு வருவது அவர் வழக்கமாம்.

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு சென்னை திரும்பினர். அப்புறம்தான் தனிக்குடித்தனம் போனார்களாம்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்தக் கோயிலுக்குப் போய் வந்தபிறகுதான் நான் எந்த விஷயத்தையும் தொடங்குவேன். அது ரொம்ப நாள் சென்டிமென்ட். இப்போதும் நானும் சினேகாவும் எங்கள் வாழ்க்கையை எங்கள் குல தெய்வ ஆசியுடன் தொடங்குகிறோம்," என்றார்.

அஜீத் அடுத்த படம் - ஆர்யா- நயன் - டாப்ஸியுடன் இணைகிறார்: மே 31-ல் படப்பிடிப்பு!!!

Tuesday, ,May, ,15, 2012
தன் அடுத்த படம் யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்.

ஏ எம் ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

முதல் முறையாக இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைகிறார் ஆர்யா.

அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாராவும், ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், "வெற்றிப் பட கூட்டணியான அஜீத் - விஷ்ணுவர்தன்-யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர்.

கதை திரைக்கதையை விஷ்ணுவர்தனுடன் இணைந்து எழுதியுள்ளனர் எழுத்தாளர்கள் சுபா. பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சுபா வசனம் எழுதுகிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மே 31-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் முடிந்த பிறகு, விஜயா நிறுவனத்தின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.

கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு!- கே.எஸ். ரவிக்குமார் தகவல்!!!

Tuesday, ,May, ,15, 2012
ரஜினியின் கோச்சடையான் படத்தில், மறைந்த நடிகர் நாகேஷ் 'நடிக்கிறார்.' அனிமேஷன் முறையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ராணாவில், வடிவேலு மற்றும் விவேக் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்தார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஜினிக்கு மாமாவாக ஒரு காமெடி கேரக்டர் வருகிறது கோச்சடையானில். அதில் சந்தானம் போன்ற நடிகர்கள் நடித்தால் சரியாக வராது... வாடா போடா என்று கூப்பிட முடியாது என்பதால், மறைந்த நாகேஷை அனிமேஷனில் மீண்டும் உருவாக்கியிருக்கிறோம். கஷ்டமான காட்சி என்றாலும், மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கி வருகிறார்கள் சௌந்தர்யா குழுவினர்.

ராணாவில் வடிவேலு, விவேக் என பெரிய காமெடியன்கள் உள்ளனர். அதற்கு நிகராக வரவேண்டும் என்பதால் கோச்சடையானில் இப்படிச் செய்திருக்கிறோம்," என்றார்.

ஓகே ஓகே, கலகலப்பு.... பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!!!

Tuesday, ,May, ,15, 2012
தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எங்கு திரும்பினாலும் காமெடி படங்களாகவே இருக்கும் போலிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தியேட்டருக்கு வந்து அதிகம்பேர் பார்த்த படம் என்ற வகையில், சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அருகில் வந்துவிட்டது (முதலிடம் எந்திரன்தான்!).

6 வாரங்களாகியும் திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஓகேஓகே.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பு - மசாலா கபேயும் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது பாக்ஸ் ஆபீஸில். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் இந்தப் படம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலுமே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று மற்ற படங்களைவிட, காமெடி படங்களைத்தான் மக்கள் தியேட்டரில் வந்து அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

விளைவு, சுந்தர் சி, ராஜேஷ் எம், சற்குணம் ஆகிய இயக்குநர்களை நாடும் தயாரிப்பாளர்கள், 'நல்ல காமெடியா எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க பாஸ்' என கேட்க ஆரம்பித்துள்ளார்களாம்.

சினிமா எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு உள்ள ஏவிஎம் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள், சின்ன பட்ஜெட்டில் காமெடி படம் முயற்சிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ட்ரெண்டில், சந்தானம் காட்டில்தான் பேய் மழை. இதற்கு முன் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு பெரிய சம்பளத்துக்கு அவர் தாவிவிட, இன்னொரு சந்தானத்தை உருவாக்கிட்டா போச்சு என, அடுத்த கட்ட காமெடியன்களைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் முன்னணி இயக்குநர்கள்.

இவர்களின் சாய்ஸ் இப்போது பரோட்டா சூரிதான். டைமிங் காமெடி மற்றும் வடிவேலு மாதிரி உடல்மொழி உள்ள நடிகர் என்பதால் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள்.

இன்னொரு பக்கம் புதிய காமெடி நடிகர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர் பிரபல இயக்குநர்கள்.

எப்படியோ மக்களைச் சிரிக்க வைத்தால் சரி!

யாருடனும் ஈகோ இல்லை : சாந்தனு!!!

Tuesday, ,May, ,15, 2012
யாருடனும் ஈகோ இல்லை என்று சாந்தனு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது ‘அமளி துமளி’ படத்தில் நடித்து வருகிறேன். நான், நகுல், சுவாதி ஆகியோருக்கு இடையேயான பிரச்னைதான் படம். கதையை விட மூவரின் கேரக்டர்கள்தான் பேசப்படுவதாக இருக்கும். சிறப்பான கேரக்டர் இது. இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. யாருடனும் ஈகோவும் இல்லை. இனி சினிமா பார்க்க வருபவர்கள் மல்டி ஸ்டார் படத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் யாருடனும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.