Monday, May 7, 2012

அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு : ரகுமான் பூரிப்பு!

Monday, May, 07, 2012
லாஸ் ஏஞ்சல்ஸ்::வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பூரிப்புடன் கூறினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது. அதையேற்று கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றார் ரகுமான். பலத்த கரகோஷத்துக்கு இடையே டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.

இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்தநேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர். திரையுலகில் ரோஜா படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள். இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர். அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

மனச ரிலாக்ஸா வச்சிக்கிட்டா என்றும் இளமை தான்! - நதியா!!!

Monday, May, 07, 2012
1980களில ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை நதியா. டைரக்டர் பாசிலின் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நதியா தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னதம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா, பூமழை பொழியுது உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். 4வருடம் சினிமாவில் இருந்த நதியா பல வெற்றி படங்களை கொடுத்தவர், நடித்து கொண்டிருக்கும்‌போதே வங்கி அதிகாரியாக இருந்த தனது குடும்ப நண்பரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் அம்மாவாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா தினமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ...

தமிழ் சினிமாவில் நான் நடித்த சில படங்கள் பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் தான் அதிகம் நடித்தேன். நிறைய ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். பல பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பா என்னுடைய ஸ்டைல் ரொம்ப பேசப்பட்டது. ஆனா, நான் ரொம்ப சாதாரணமா ஒரு டிரஸ் போட்டு கொண்டாலும் அது எல்லோருக்கும் பிடிச்சது. ரோட்டில் விற்பனையான குறைந்த விலையில் உள்ள பிளாஸ்டிக் தோடுகளை தான் அதிகம் அணிந்தேன். ஆனா அது கூட ஒரு ஸ்டைலாச்சு. இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த பெண் சனம்(15), 2வது பெண் ஜனா(11). இப்போ நாங்க மும்பையில் இருக்கோம். இரண்டு பேரும் என்னை அப்படி வேலை வாங்குவாங்க. விளையாட்டு, மியூசிக் என்று எல்லா கிளாஸ்க்கும் நான் தான் அழைத்து போகணும். என் குழந்தைகளுக்கு சுத்தமா சினிமா ஆர்வம் கிடையாது.

என் கணவருக்கு நான் பாதியில் நடிப்பை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது கொஞ்சம் வருத்தம். அதனால் தான் இப்பவும் என்னை நடிக்க சொல்லுவார். அதனால் தான் சில படங்களில் நடித்து வருகிறேன். எல்லோரும் நான் இன்னும் அப்படியே இளமையா இருக்கேன் என்று சொல்றாங்க. நாம எந்தளவு உணவு உட்கொள்கிறமோ, அந்தளவுக்கு உடற்பயிற்சியும் அவசியம். மனச எப்பவும் ரிலாக்ஸா வச்சிக்கணும். அது போதும் எத்தனை வருஷம் ஆனாலும் எல்லோரும் இ‌ளமையாக இருக்கலாம் என்று சொல்லி முடித்த நதியா, அடுத்து தெலுங்கில் தன்னுடைய படம் ஒன்று ரிலீஸ் ஆக இருப்பதாக கூறினார்

நடிகர் நடிகையருக்கு தனியே "வெட்டிங் பார்ட்டி' கொடுக்கும் சினேகா!!!

Monday, May, 07, 2012
சினேகா வீட்டில் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது. குடும்பத்தினரோடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்து கல்யாண பத்திரிக்கையைக் கொடுத்த அவர் தற்போது தனது திருமண விழா ஏற்பாடுகளில் தீவிரமாகி விட்டார்.

தமது திருமணத்தை 4 நாள் விழாவாக நடத்துகிறாராம் சினேகா. முதல் நாளில் அவர் நடிகர், நடிகைகள் மற்றும் நட்பு வட்டாரத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை "வீட்டிலேயே" கொடுத்து அசத்த இருக்கிறார்.

அப்புறமாக மெஹந்தி, சங்கீத் என்று 2 விழாக்களை ரொம்பவும் ஆடம்பரமாக நடத்த உள்ளார். இருக்கிற எல்லா நிறத்திலுமே பட்டுச் சேலைகளை வாங்கிக் குவித்திருக்கிறாராம். பட்டுச் சேலை சினேகாவுக்கு பிடித்தமானவை மட்டுமல்ல, அவருக்கு அவை படு பாந்தமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

காஞ்சிபுரத்துக்கு தானே நேரடியாக சென்று முகூர்த்த பட்டுப் புடவையை வாங்கியிருக்கிறார். பிரசன்னா பிராமணர் என்பதால் இந்தத் திருமணம் இரண்டு முறைப்படி நடக்கவிருக்கிறது. முதலில் சினேகாவின் நாயுடு முறைப்படியும், பின்னர் பிராமண முறைப்படியும் கல்யாணம் நடைபெறவுள்ளது.

பிராமண முறைப்படி நடைபெறும் திருமணத்தின்போது மாமிகள் கட்டுவது போல மடிசார் கட்டிக் கொண்டு பிரசன்னாவைக் கரம் பிடிக்கவுள்ளார் சினேகா.

மாதுரி தீட்சித் போல காக்ரா உடையிலும் திருமண நாளில் உலா வருகிறார் சினேகா. சினேகாவின் அனைத்து டிசைன்களையும் அவரது அக்காதான் வடிவமைத்து வருகிறார். திருமணத்தை நினைத்தாலே சினேகாவுக்கு "மனசுக்குள் ஆயிரம்பட்டாம் பூச்சிகள் பறக்கிறதாம்"...

பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்!!!

Monday, May, 07, 2012
பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.

நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.

முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.

"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

மீண்டும் கதிரேசனுடன் இணையும் தனுஷ்!!!

Monday, May, 07, 2012
தனுஷின் பொல்லாதவன் படத்திற்காக காத்திருந்தது இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமல்ல, தயா‌ரிப்பாளர் கதிரேசனும்தான். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்காக இவரும் பல மாதங்கள் காத்திருந்தார். பொல்லாதவன் ஒரு நல்ல இயக்குனரையும், ஒரு நல்ல தயா‌ரிப்பாளரையும் தந்தது.

மீண்டும் கதிரேசன் தயா‌ரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை சற்குணம் இயக்குகிறார். தனுஷ் ஹீரோ. சற்குணம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் இல்லை பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர் தனுஷ்.

சீ‌ரியஸாக எடுத்த வாகை சூட வா ஓடாத காரணத்தால் களவாணி போன்ற எளிமையான காமெடி சப்ஜெக்டை இந்தமுறை முயற்சி செய்கிறார் சற்குணம்.

சிம்புவின் வாலு - இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!!

Monday, May, 07, 2012
முதலில் வேட்டை மன்னனை முடிப்பாரா இல்லை போடா போடியா? தயா‌ரிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருக்க இன்று தனது வாலு படத்தின் வேலையை தொடங்குகிறார் சிம்பு. வேட்டை மன்னனை தயா‌ரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

வாலு படத்தில் ஹன்சிகா ஹீரோயின். தமன் இசை. படப்பிடிப்பு தொடங்கும் முன் டீஸர் வெளியிடுவது ஃபேஷன் என்பதால் இன்று சென்னையில் அதற்கான வேலைகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து போட்டோசெஷன்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார்.

சம்பளத்தை குறைத்து தமன்னா படத்தை தட்டிப் பறித்த காஜல் அகர்வால்!!!

Monday, May, 07, 2012
நயன்தாரா, திரிஷா இடையே ஏற்கனவே பனிப்பேர் நீடித்து வருகிறது. நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்ததாலும் இதையடுத்து நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டதாலும் திரிஷா சந்தோஷப்பட்டார்.

நயன்தாராவுக்கு செல்லவிருந்த பல படங்கள் திரிஷாவுக்கு வந்தது. இதனால் சம்பளத்தை உயர்த்தினார். இப்போது காதலை முறித்து நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளதால் இருவருக்கும் தகராறு மூண்டுள்ளது. விஜய்யுடன் நயன்தாரா நடிப்பதாக இருந்த குருவி பட வாய்ப்பை திரிஷா பறித்தார். சத்யம் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க திரிஷாவுக்கு போன வாய்ப்பை நயன்தாரா பிடுங்கினார். அந்த மோதல் இப்போதும் நீடித்து வருகிறது.

இவர்களை போல் தமன்னா, காஜல் அகர்வால் இடையிலும் சண்டை மூண்டுள்ளது. இருவரும் ஒருவர் படத்தை ஒருவர் தட்டி பறிக்கின்றனர். 'மகதீரா' ஹிட்டுக்கு பின் தெலுங்கில் முன்னணி நடிகையானார் காஜல் அகர்வால். தமிழிலும் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதனால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தினார். அவர் படங்களை பிடுங்க தமன்னா சம்பளத்தை குறைத்துள்ளார்.

இதனால் காஜலுக்கு போன பல படங்கள் தமன்னாவுக்கு திரும்பின. இதற்கு பதிலடியாக தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் தமன்னா நடிக்க இருந்த படமொன்றை காஜல் அகர்வால் பறித்துக் கொண்டார். அந்த படம் கைமாறியதால் காஜல் மேல் தமன்னா கொலைவெறி கோபத்தில் இருக்கிறாராம்.

மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!!!

Monday, May, 07, 2012
தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்கும்.

எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது!

'கழுவி கழுவி'.... சந்தானத்திடம் தாய்க்குலம் கேட்ட சந்தேகம்!!!

Monday, May, 07, 2012
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசினார் நகைச்சுவை நடிகர் சந்தானம். விமல் - நிஷா அகர்வால் நடித்துள்ள இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் சந்தானம்.

வழக்கம்போல, இந்த நிகழ்ச்சியிலும் நாலு வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார் ஹீரோ விமல்.

ஆனால் சந்தானம் அரைமணி நேரம் பேசுவார் என பிஆர்ஓ மவுனம் ரவி அறிவிக்க, சிரித்த படி வந்த சந்தானம் சீரியஸாகவே சற்று அதிக நேரம் பேசினார்.

"எங்கிட்ட நிறைய பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் உடனடியாக தர முடியவில்லை. காரணம், நிற்க நேரமில்லாத அளவுக்கு ஷூட்டிங். ஆனா கண்டிப்பா தந்துடுவேன்..." என்று எடுத்த எடுப்பில் எக்ஸ்க்யூஸ் கேட்டவர், சினிமாவில் ஒருவர் நல்ல நிலைக்கு வரக் காரணத்தை விளக்கினார்.

"திறமை 90 பர்சென்ட் இருந்தாலும் ஒருவருடைய கேரக்டர்தான் அவரது வெற்றியைத் தீர்மானிக்கிறது. அடிப்படை குணம் சரியாக இருந்தால், இருக்கிற திறமையை வைத்து முன்னுக்கு வந்துவிடலாம்," என்றார்.

உங்களை வைத்துதான் இன்றைக்கு பட பிஸினஸ் நடக்கிறது எனும் அளவுக்கு வந்துவிட்டீர்கள். இன்னும் ஹீரோவின் காதலுக்கு உதவும் வேடம் ஏன்... ஹீரோவாக நடிப்பதுதானே? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

பதறிய சந்தானம், "இதுக்குதான் நான் அதிகமா பேட்டியெல்லாம் குடுக்கிறதில்ல. ஏங்க, நமக்கு என்ன வருமோ அதை செஞ்சிட்டு போறதுதான் நல்லது. எனக்கு காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகுது. ஹீரோவா நடிக்க பல பேர் இருக்காங்க.

தமிழ் சினிமாவுல 1000 காமெடியன்கள் இருந்தாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு 10 பேர்தான் இருப்பாங்க. அந்த பத்துப் பேர்ல ஒருத்தனா இடம்பிடிச்சா போதும்னு நினைக்கிறேன்," என்றார்.

மொக்க பிகர், சப்ப பிகர்னு நீங்கள் கிண்டல் பண்றதை .. பெண்கள் அமைப்புகள் எதிர்க்கிறார்களே?

"ஏங்க, நான் என்ன ரோட்ல போற பெண்களையா கிண்டல் பண்ணேன். படத்துல வர்ற, அதுவும் நான் சம்பந்தப்பட்ட கேரக்டர்களை அப்படி கிண்டல் பண்ணியிருப்பேன். அந்த காட்சிக்கு அது தேவையா இருந்தாதான் செய்யறோம். இதுல தப்பு என்னன்னு தெரியலையே," என்றார்.

அடுத்து வந்த கேள்வியை ஒரு பெண் நிருபர் கேட்டார். சந்தானமே எதிர்ப்பார்க்காத கேள்வி அது...

கழுவிக் கழுவி ஊத்தறது, அப்பா டக்கர்னு படத்துல நீங்க பயன்படுத்தற சில பஞ்ச் லைனை எங்கிருந்து புடிக்கிறீங்க? என்று அவர் கேட்க, கழுவி கழுவி ஊத்தறதுன்னா என்னன்னு நீண்ட விளக்கத்தைத் தந்தார் சந்தானம்!

பூஜா, சனா கான் - இது வதந்திகளின் காலம்!!!

Monday, May, 07, 2012
அந்த நடிகைக்கு இந்த ஹீரோவுடன் காதல் என்று எழுதினால் ச‌கி‌த்துக் கொள்வார்கள். அதேநேரம் நீலப் படத்தில் நடித்தார், விபச்சாரத்தில் கைது செய்யப்பட்டார் என்றெல்லாம் எழுதினால்...?

சனா கான் என்ற பெயருடைய யாரோ விபச்சாரத்தில் கைது செய்யப்பட்டார். உடனே அது சிலம்பாட்டத்தில் நடித்த சனா கான் என்று சிலர் எழுதினார்கள். கடும் கோபத்துடன் அதற்கு பதிலளித்துள்ளார் சனா கான்.

பூஜாவின் நிலை இன்னும் மோசம். பிட்டுப் படத்தில் பூஜா நடித்தார் என்று கன்னடப் பத்தி‌ரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. கோபமான பூஜா அந்த செய்திக்கு பகிரங்க மன்னிப்பு கேட்காவிடில் கோர்ட்டுக்கு போவேன் என்றார். பத்தி‌ரிகை மன்னிப்பு கேட்கவில்லை. பூஜா மானநஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார்.

இதே போல் மும்தாஜை லெஸ்பியன் போல் சித்தி‌ரித்ததற்காக பத்தி‌ரிகையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செ‌ன்னை ஏ‌ர்‌போ‌ர்‌ட்டி‌ல் நடிகை நய‌னிட‌ம் 40 நிமிடம் ‌விசாரணை!!!

Monday, May, 07, 2012
பா‌ங்கா‌க்‌கி‌ல் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்த நடிகை நயன்தாராவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் 40 நிமிடங்கள் விசாரனை நடத்தியு‌ள்ள ‌நிக‌ழ்வு ‌சி‌னிமா உல‌கி‌ல் பரப‌ர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ந‌ம் நா‌ட்டின‌ர் வெ‌ளிநா‌ட்டி‌ல்தா‌ன் ‌விசா‌ரி‌க்‌‌கி‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ல் நமது நா‌ட்டிலு‌ம் இதே ‌நிலையா எ‌ன்று வேதனையுட‌ன் செ‌ன்றா‌ர் நய‌ன்தாரா.

நடிக‌ர் பிரபு தேவாவை பிரிந்தபின் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு புதிய தெலுங்கு படங்களிலும், அஜீத் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் அவர் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

அஜீத் பட வேலை தொடர்பாக கேரளாவில் இருந்து சென்னை வந்த நயன்தாரா தனது மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோருடன் விமானம் மூலம் பாங்காக் சென்றார். வேலையை முடித்துக் கொண்டு பாங்காக்கில் இருந்து மீணடும் அவர் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நய‌ன்தாரா இறங்கியபோது, பாங்காக் சென்று வந்தது தொடர்பாக சுங்க இலாகா கமிஷனர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருடைய மானேஜர் ராஜேஷிடம் இன்னொரு அறையில் தனியாக விசாரணை நடந்தது. இரண்டு பேரின் சூட்கேஸ்களையும் அதிகாரிகள் சோதனை நட‌த்‌தின‌ர்.

40 நிமிடங்கள் நடந்த ‌விசாரணை, சோதனையா‌ல் நயன்தாரா தவித்துப் போனார். 40 நிமிடங்களுக்குப்பின் நயன்தாராவையும் அவருடைய மானேஜர் ராஜேஷையும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

ந‌ம் நா‌ட்டின‌ர் வெ‌ளிநா‌ட்டி‌ல்தா‌ன் ‌விசா‌ரி‌க்‌‌கி‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ல் நமது நா‌ட்டிலு‌ம் இதே ‌நிலையா எ‌ன்று வேதனையுட‌ன் செ‌ன்றா‌ர் நய‌ன்தாரா.

யாரோ ஒரு நபர், சுங்க அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்த‌தி‌ன் பே‌ரி‌ல் அதிகாரிகள், விமான நிலையத்தில், நயன்தாராவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்