Sunday, March 25, 2012

இசைஇயக்கம் திடீர் மோதல்!!!

Sunday, March 25, 2012
உலக அழகி போட்டியில கலந்துகிட்ட பார்வதியான நடிகை, தல படத்துல நடிக்கிறாரு. ஏற்கனவே மலையாளத்துல நடிகை நடிச்ச படம் ஓடல. தல படம் ரிலீசாகப்போறதால அந்த மல்லுவுட் படத்தை தூசி தட்டி எடுக்கிறாங்களாம்... எடுக்கிறாங்களாம்... தல படம் வந்ததும் அந்த மல்லு படத்தை தமிழ்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ண தயாரிப்பு முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...
பாஸ் படம் தந்த இயக்கத்துக்கும் யுவ இசைக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்துச்சு. இப்போ திடீர்னு இயக்கத்துக்கும் இசைக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... காட்டன் வீர ஹீரோவை வச்சு இயக்கம் பண்ணப்போற படத்துல யுவ இசை ஒர்க் பண்ண மாட்டாராம்... மாட்டாராம்... ஈகோ பிரச்னைதான் இதுக்கு காரணம்னு இண்டஸ்ட்ரில பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

காதல் நடிகைக்கு தமிழ்ல படங்களே இல்ல. மலையாளத்துல மட்டுமே வாய்ப்புகள் வருதாம்... வருதாம்... கிடைக்கிற செகண்ட் ஹீரோயின், மூணாவது ஹீரோயின் ரோல்கள்ல நடிகை திருப்தியா இருக்காராம். சொந்த ஊரான மலையாள தேசத்துல லீசுக்கு வீடும் எடுத்திருக்காராம். மல்லுவுட்ல பிசி ஆயிட்டா, அங்கேயே தங்கவும் முடிவு எடுத்திருக்காராம்... எடுத்திருக்காராம்...

முதலில் சினிமா.. அப்பறம்தான் குடும்பம்! - ஜெனிலியா!!!

Sunday, March 25, 2012
வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட நேரம் இருக்கிறது. ஆனால் இப்போது நடிப்பில்தான் எனது முழுக்கவனமும் இருக்கிறது என்றார் ஜெனிலியா. பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் வெளியான 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் ஒரிஜினல் தெலுங்கு 'பொம்மரிலு'. இதில் ஹாசினி என்ற பாத்திரத்தில் நடித்தேன். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. இப்படத்துக்கு பிறகு ஆந்திராவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு ஹாசினி என்று பெயர் வைத்தனர். அதேபோல் 'கதா' என்ற படத்தில் சித்ரா என்ற வேடமும் பேசப்பட்டது. ஒரே சாயல் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை அதிகளவில் குறைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. முன்பு வருடம் முழுவதும் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். ரிதேஷை சிறுவயதிலிருந்து தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் உள்ள குணங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போதைக்கு நான் முழுமூச்சாக குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமும், வயதும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துள்ளேன். இந்தியில் நடித்துள்ள 'சந்தோஷ் சுப்ரமணியம்' ரீமேக் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எனக்கேற்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன். ஹாசினி மேடம்... அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக ஆசப்படுறீங்களோ....?.

நந்தி, விருதுபெற்ற நட்சத்திரங்கள்!!!

திரையுலகில் சாதனை படைத்த நடிகைகள் சரோஜா தேவி, சாரதா ஆகியோருக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருது வழங்கப்பட்டது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகைகள் ஜெயசுதா, ஜெனிலியா உள்ளிட்டோருக்கு நந்தி விருது வழங்கப்பட்டது. ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, "அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது" என்றார். பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, "என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது. நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர். பி.என்.ரெட்டி விருது இயக்குநர் ராகவேந்திர ராவ், நரசிங் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி தேசிய திரைப்பட விருதுக்கு மீடியா ஜாம்பவான் ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது. 'மகதீரா'வுக்கு பாப்புலர் பட விருதும், 'சொந்த ஊரு' படத்துக்கு கோல்டன் நந்தி விருதும், வேதம் (தமிழில் வந்த 'வானம்') படத்துக்கு சிறந்த படத்துக்கான கோல்டன் நந்தி விருதும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கூடலின் வாழ்த்துகள்!

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday, March 25, 2012
*லண்டனில் ‘கோச்சடையான் ஷூட்டிங் முடிந்து திரும்பிய பிறகு அஜீத் நடிக்கும் ‘பில்லா 2 படத்தின் பாடல் கேசட்டை ரஜினி வெளியிட பேச்சு நடக்கிறது.

*எஸ்.ஜே.சூர்யா இயக்கிய தெலுங்கு படம் ‘புலியில் நடித்த நிகிஷா, கன்னடத்தில் 3 ரீமேக் படங்களில் நடிக்கிறார். மலையாளம் மற்றும் தமிழ் பட வாய்ப்பும் வந்திருக்
கிறதாம்.

*திரையுலக ஸ்டிரைக் காரணமாகவும், ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்குவதாலும் ஏப்ரல், மே மாதங்களில் ரிலீஸ் ஆவதாக இருந்த பில்லா 2, மாற்றான், விஸ்வரூபம் படங்கள், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

*வெற்றிமாறன் வசனம் எழுத பிருத்வி நடிக்கும் ‘நான் ராஜா ஆகப்போறேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நகுல்.

*ஷாம், வைபவ், நடிக்கும் ‘ராஜா ராணி ஜாக்கி 3டி நகைச்சுவை படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. கவர்னர் ரோசய்யா தலைமை தாங்க சிம்பு ஷூட்டிங் தொடங்கி வைத்தார்.

தமிழ் ஸ்டார் இமேஜ் இந்தியில் எடுபடாது-மாதவன்!!!

Sunday, March 25, 2012
தமிழ் சினிமா ஸ்டார் இமேஜ் பாலிவுட்டில் எடுபடாது என்றார் மாதவன்.
இது பற்றி மாதவன் கூறியதாவது:
கோலிவுட் ஹீரோக்களை பாலிவுட் ரசிகர்கள் ஏற்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இது மொழி, மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. தமிழில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு ஹீரோ இந்தியிலும் அதே இமேஜுடன் நடிக்க வேண்டுமென்றால் எடுபடாது. 10 வருடத்துக்கும் மேலாக இந்தியில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நல்ல கதைகளையும், எனக்கேற்ற வேடங்களையும் ஏற்று நடிப்பதுதான். லுங்கி கட்டிக்கொண்டு பரிதாபமான காட்சியில் நடிப்பதற்கு எனது உடல்வாகோ, முகமோ பொருத்தமானதில்லை. இதை சொல்லிக்கொடுக்க எனக்கென்று யாரும் குரு கிடையாது. நானே படிப்படியாக உணர்ந்துகொண்டேன். பிறகு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்து படங்களை ஒப்புக்கொண்டேன்.ரீமேக் படங்கள் இந்தியில் இப்போது நன்றாக ஓடுகிறது. அதற்காக எல்லா படங்களையும் அப்படி செய்துவிட முடியாது. தமிழில் வெளியான ‘விண்ணை தாண்டி வருவாயாÕ படம் இந்தியில் ‘ஏக் தீவானா தா‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் அது எடுபடவில்லை. ஆக்ஷன் படங்கள் கடந்த சில வருடங்களாக இந்தியில் உருவாகாமல் இருந்தது. அது ரீமேக் என்ற வகையில் உருவானபோது வெற்றி பெற்றது.

இசை அமைப்பாளர், காமெடியனுக்கு கோடி, லட்சத்தில் சம்பளம் வேஸ்ட்!!!

Sunday, March 25, 2012
இசை அமைப்பாளர், காமெடி நடிகர்களுக்கு கோடி, பல லட்சங்களில் சம்பளம் தருவது வேஸ்ட் என்றார் இயக்குனர் விக்ரமன்.
புதுமுகங்கள் ஸ்ரீதரன், ஜெயசேகர், வெண்ணிலா, என்.பி.ராஜ சேகரன் உடையார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘அமிர்தயோகம்Õ. இதன் பாடல் கேசட்டை இயக்குனர் விக்ரமன் வெளியிட இயக்குனர் திருமலை பெற்றார். பிறகு விக்ரமன் பேசியதாவது:

என் படங்களுக்கு நானேதான் நகைச்சுவையும் எழுதுவேன். ஷூட்டிங் நேரத்தில் யாரும் சிரிக்க மாட்டார்கள். தியேட்டரில் வரவேற்பு இருக்கும். அதிகபட்சமாக காமெடி நடிகருக்கு 1 லட்சம்தான் தந்திருக்கிறேன். காமெடி காட்சிக்கு கவுண்டமணியை நடிக்க கேட்டால் 40 லட்சம் ரூபாய கேட்பார். அந்த பணத்தில் முக்கால்பாகம் படத்தை முடித்துவிடுவேன். இளையராஜாவை இசை அமைப்பாளராக போட்டால் அவரது பேருக்காக 10 லட்சம் ரூபாய் கூடுதல் வியாபாரம் இருக்கும். அவர் வாங்கும் சம்பளத்தைவிட யாருக்கும் அதிகமாக தருவது எனக்கு உடன்பாடில்லை. எதற்காக இசைக்காக மட்டும் ஒன்றைகோடி ரூபாய் தர வேண்டும். என் படம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அதில் பிரபல கவிஞரை பாடல் எழுத அணுகினேன். திருத்தங்கள் சொன்னபோது கோபப்பட்டார். நான் சிறப்பு தமிழ் படித்திருக்கிறேன். எனக்கும் இலக்கணம் தெரியும். முட்டாள் இல்லை. உடனே அந்த கவிஞரை வேண்டாம் என்று பழனிபாரதி போன்ற புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்தேன். ஒருவர் வாய்ப்பை மறுக்கும்போது இன்னொருவர் புதிதாக உருவாகிறார். ஒரு படத்துக்கு ராஜா மறுத்ததால்தான் ரகுமான் உருவானார். ரஜினி நடித்த ‘அண்ணாமலை‘ படத்தை இயக்க மாட்டேன் என்று வசந்த் சொன்னதால்தான் சுரேஷ் கிருஷ்ணா உருவானார்.இவ்வாறு விக்ரமன் கூறினார்.இயக்குனர் ஏ.மாணிக்கராஜ் வரவேற்றார்.

400கோடி பட்ஜெட்! ஜாக்கிசானுடன் கமலா? சூர்யாவா?.!!!

Sunday, March 25, 2012
பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் போனவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தன்னைப் பற்றி நிரூபித்தவர் ரவிச்சந்திரன்.

ஜாக்கி சான் நடித்த பெரும்பாலான படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டதன் மூலம் ஜாக்கியின் நண்பரானவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த நல்ல நட்பின் மூலமே தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சான் வந்தார்.

தற்போது ரவிச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்ப்து ஜாக்கி சான் நடித்த 'ஆர்மர் ஆப் காட் -ll' படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் தான். இந்த படத்தில் ஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்கிசான் ரசிகர்களோடு சேர்த்து மற்றவர்களையும் கவர்வதற்காக இந்தி மற்றும் தமிழ் ஹீரோக்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்தியில் சல்மான்கானிடம் பேசப்பட்டு வருகிறது. ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பதால் பெரும்பாலும் சல்மான்கான் ஒப்புக்கொள்வார் என்றே சொல்கிறார்கள்.

தமிழ் ஹீரோக்களில் ரவிசந்திரனுக்கு கமலுடன் நல்ல நட்பு இருப்பதாலும், இந்த வருடம் ரவிச்சந்திரனுக்கு கமல் கால்ஷீட் கொடுப்பதாக கூறியிருப்பதாலும் கமல் தான் நடிப்பார் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் தரப்பிலிருந்து சூர்யாவிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு நடப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 400கோடி ரூபாய் தானாம்.

'பில்லா-2'க்காக கால் கடுக்க காத்திருக்கும் பாரிவேந்தர்!!!

Sunday, March 25, 2012
எப்பவுமே மே 1-ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டும் அஜித்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக 'பில்லா-2'வை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம். ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் 'புதிய தலைமுறை'யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். அப்படிப்பட்டவருக்கு 'பில்லா'வை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில். வரிய பார்க்காம வசூல பாருங்க... பேரம் பேசாம பொட்டிய தட்டிக்கோங்க....!

LOVE ANTHEM-க்கு இறுதிவடிவம் கொடுத்து விட்டேன்: சிம்பு!!!

Sunday, March 25, 2012
ரொம்பவும் மெனக்கெடாமல், மனதில் பட்டதை அப்படியே பேசுபவர் சிம்பு. சிம்பு நடித்து வரும் 'வேட்டை மன்னன்' படம் குறித்தும், தான் தயார் செய்து வரும் LOVE ANTHEM குறித்தும் அவர் கூறியிருப்பது: "வேட்டை மன்னன் ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் கேங்ஸ்டர் படம் என்றால் ரொம்ப ROUGH-வாக எல்லாம் இருக்காது. ரொம்ப LIGHT HEARTED காமெடியாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லி இருக்கிறோம். தொழில்நுட்பத்தில் தரம் உயர்ந்ததாக இப்படம் இருக்கும். எனது படங்களில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் 'வேட்டை மன்னன்'. படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். கணேஷ், சந்தானம் என்ற எனது அணியில், இப்படத்தில் சந்தானம் கிடையாது. கணேஷ் நடிக்கிறார். படத்தின் முதல் பாதி முடியும் தருவாயில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் இரண்டாம் பாதியை படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். 'வானம்' படத்திற்கு பிறகு 'வேட்டை மன்னன்' படத்தில் என்னுடன் யுவன் இணைகிறார். எப்போதும் நானும் யுவனும் சேர்ந்தால் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இப்படத்தின் பாடல்களும் நன்றாக அமையும் என்று நினைக்கிறேன். என்னுடைய LOVE ANTHEM வீடியோவிற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷக்தி இப்படத்தில் பணியாற்றி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் நான் பண்ணும் இரண்டாம் படம் இது.

என்னுடன் 'மன்மதன்', 'வல்லவன்' படங்களில் பணியாற்றிய நெல்சன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் டிவியில் 'ஜோடி நம்பர் ஒன்' இயக்கியவர் இவர் தான். இவர் இல்லையென்றால் நான் 'ஜோடி நம்பர் ஒன்' ஷோ செய்து இருக்க மாட்டேன். இப்படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன். என்னுடைய பாணியில் ஒரு பாடலும் எழுதுகிறேன். நானும் யுவனும் கூட்டணி சேர்ந்தாலே ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்போம். இப்படத்திலும் அவ்வாறு நிறைய விஷயங்கள் செய்ய இருக்கிறோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். YOUTUBEல் LOVE ANTHEM நிறைய பேர் பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் எல்லாம் நான் செய்யவில்லை. இப்போதைக்கு நான் இறுதி வடிவம் எல்லாம் நான் வெளியிடவில்லை. சும்மா ஒரு TEASER தான் வெளியிட்டோம். அந்த TEASER எதற்கு என்றால் இந்த மாதிரி ஒரு CONCEPT-ல் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன் என்பதை தெரிவிக்க தான். அதற்கே இந்த மாதிரி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் முழுவதும் ஆங்கில வார்த்தைகள் அடங்கியது.. அதை எப்படி மக்கள் எடுத்து கொள்வார்கள் என்பதில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதில் வரும் ஒரே தமிழ் வார்த்தை 'காதல்' மட்டும் தான். அமெரிக்காவிற்கு சென்று LOVE ANTHEM-க்கு இறுதிவடிவம் கொடுத்து விட்டேன். இன்னும் 1 அல்லது 2 மாதங்களில் அது தயாரானதும் வெளியிடுவேன்." என்று கூறியிருக்கிறார். அதுசரி.. பொண்ணு பாத்தீங்களே என்னாச்சு?

பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! - ப்ரியாமணி!!!

Sunday, March 25, 2012
பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.

தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.

பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்களில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ... புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டாம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் ப்ரியா மணி.

இதுகுறித்துக் கேட்டபோது, " பாலிவுட்டில் நுழைவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்," என்றார்.

திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்!!!

Sunday, March 25, 2012
வட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன் படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்தவர் திஷா பாண்டே. தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் பெரும்பகுதியை முடித்து விட்டனராம். ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளதாம். இந்த நிலையில் திஷா பாண்டே டேக்கா கொடுத்து வருகிறாராம். அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன்.

தனது புகாரில், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.

இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.

அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன் என்று கூறிவிட்டார்.

அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜேஸ்வரி.

விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிகாரர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திஷா பாண்டேவால் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை!!!

Sunday, March 25, 2012
முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் தனுஷ், இங்கும் ஜெயிப்பார் என்று அவரை இயக்கவிருக்கும் ஆனந்த் ராய் தெரிவித்தார்.

கொலவெறி பாடல் தந்த தாறுமாறான வெற்றியால், தனுஷுக்கு திடீரென்று கிடைத்த வாய்ப்பு ராஞ்சனா படம்.

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாகிறார் தனுஷ். ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

தமிழ் நடிகர்களில் இந்தியிலும் நீண்ட நாட்கள் நடித்தவர், வெற்றி பெற்றவர் என்ற பெருமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

வாரணாசியில் வாழும் சாதாரண குடும்பத்துப் பையனுக்கும், பெண்ணுக்குமிடையிலான காதல் கதைதான் இந்தப் படம்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆனந்த் கூறுகையில், "பாலிவுட் எனும் புயலை வெற்றிகரமாக சமாளிப்பார் தனுஷ்.

பொதுவாக தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். ஆனால் அதுவே நடிகர்கள் என்றால் பாலிவுட்டில் வரவேற்பு இருப்பதில்லை. நிச்சயம் இந்த முறை அதில் மாற்றம் ஏற்படும்.

நல்ல தமிழ்ப் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும்போது, நல்ல தமிழ் ஹீரோக்களை வைத்து இந்தியில் படம் எடுக்காமல் போவது ஏன்?" என்றார்.

பில்லா 2 ஆடியோ - சோனி மியூசிக் வெளியிடுகிறது!!!

Sunday, March 25, 2012
எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல், எல்லா காதுகளும் பில்லா 2 ஆடியோவுக்கு காத்திருக்கின்றன. மங்காத்தாவில் யுவனின் சில டியூன்கள் மிஸ்ஸானாலும் மற்றவை ரசிகர்களை ஆட வைத்தன. அந்த மே‌ஜி‌க்கை பில்லா 2-வில் இன்னும் அழுத்தமாக பதித்திருக்கிறார் யுவன்.

மங்காத்தா ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் பில்லா 2-வின் ஆடியோ ரைட்சையும் அதைவிட மிகப் பெ‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை என்று பட யூனிட் ஆனந்தக் கூத்தாடுகிறது.

மே இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் மே முதல் வாரத்தில் ஆடியோ வெளியிடப்படலாம்.

பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் ககானி!!!

Sunday, March 25, 2012
வித்யாபாலன் நடித்த Kahaani பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் எதிர்பாராத சர்ப்ரைஸ். இந்த க்ரைம் த்‌ரில்லர் படம் இரண்டாவது வார இறுதியில் 43.05 கோடிகளை வசூலித்துள்ளது.

கதையையும், ஸ்கி‌ரிப்டையும் நம்பினால் பெ‌ரிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை என்பது சமீபத்திய தமிழ் உதாரணம் மௌனகுரு. இந்தியில் ககானி. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருக்கும் இந்தப் படம் அவ‌ரின் இமேஜை அதிக‌ரித்திருக்கிறது. இவ‌ரின் டர்ட்டி பிக்சர்ஸ், ககானி இரண்டும் சூப்பர்ஹிட். அதுவும் அடுத்தடுத்து. இரண்டுமே ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட்.

க‌‌ரீனா, கத்‌ரினாவை மறந்து விதயாபாலன் என்று முணுமுணுக்கிறது ரசிகப் பட்டாளம். முக்கியமாக அமீர்கானை இப்படத்தின் வெற்றி பாதித்திருக்கிறது. இவ‌ரின் அடுத்தப் படம் தல்லாஸும் இதேபோலொரு க்ரைம் த்‌ரில்லர். அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த தனது படத்தை நவம்பருக்கு அமீர் தள்ளி வைத்துள்ளார்.

அமீரையே பயப்பட வைத்த வித்யாபாலன் இந்தியில் அறிமுகமாவதற்கு முன் நடிக்கத் தெ‌ரியவில்லை என்று ஒருமுறையும், ரொம்ப சுமார் அழகி என இன்னொருமுறையும் தமிழ்‌த் திரையுலகால் நிராக‌ரிக்கப்பட்டவர்.

நமிதாக்கள் கோலோச்சும் ஊ‌ரில் நடிக்கத் தெ‌ரிந்தவருக்கு என்ன வேலை.

சோனம் கபூர் - சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார்!!!

Sunday, March 25, 2012
சோனம் கபூர். அனில் கபூ‌ரின் மகள். இவருடன் ஜோடி சேர தமிழ் நடிகர்களுக்கு உள்ளூர கொள்ளை ஆசை. அதனை வெளிப்படையாக‌த் தெ‌ரிவித்தவர் சிம்பு மட்டுமே. தனது ஒஸ்தியில் இவரைதான் ஜோடியாக்க சிம்பு விரும்பினார். ஆனால் ‌ரிச்சாவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சிம்புவின் விருப்ப நடிகை தற்போது தனுஷ் ஜோடியாகியிருக்கிறார். இங்கல்ல, இந்தியில்.

தனுஷை பாலிவுட் பக்கம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததற்கு காரணம் அவர் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் அதனால்தான் அடிக்கடி மும்பை வருகிறார் என்று பயமுறுத்தினர் சிலர். ஆனால் இந்தியில் நடிக்கிறார் தனுஷ். Raanjhanaa என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நடிப்பதை முன்னிட்டே மும்பைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சோனம் கபூரை அவருக்கு ஜோடியாக்கியுள்ளனர்.

சோனம் கபூ‌ரின் மீது நடிகர்களுக்கு ஏன் இத்தனை க்ரேஸ் என்று ஆச்ச‌ரியப்படுகிறவர்கள் டெல்லி 6 படத்தில் வரும் மசாக்கலி பாடலை யூ டியூபில் பார்க்கவும்.