அறிமுக இயக்குநர்களுக்கு சிறப்பு சலுகை - கோரிக்கை வைத்த இயக்குநர் ஜனநாதன்!!!

Tuesday, March 13, 2012
மீராவுடன் கிருஷ்ணா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சங்க பொருளாலர் எஸ்.பி.ஜனநாதன் அறிமுக இயக்குநர்களுக்காக புதிய கோரிக்கை ஒன்றை திரைத் துறையினரிடம் வைத்தார்.

கணவன் மனைவிக்கு உள்ள செக்ஸ் மட்டும் இல்லற வாழ்க்கை அல்ல. அதற்கும் மேலே உள்ள ஒரு விஷயம் புரிதல் இந்த புரிதல்தான் இல்லறத்தை நல்லறம் ஆக்கும் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான் 'மீராவுடன் கிருஷ்ணா' புதுமுகமான கிருஷ்ணா, கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதுடன் இப்படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

துவார்கமயி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ.விஜய் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.கே.செந்தில்பிரசாத் என்ற புதுமுகம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரகனி, சாந்தகுமார், சசி, சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஜனநாதன், "தமிழ் சினிமா நூறு ஆண்டுகளை கடக்கப் போகிறது. இங்கு பல நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் கூட காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலை இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு மட்டுமே. ஒரு கேமரா யூனிட் வைத்திருப்பவர் உள்ளிட்ட சினிமா தொழில் செய்பவர்கள் எப்போதுமே செழிப்பாகத்தான் இருக்கிறார்கள். எப்போதும் கேமராக்கள் பிஸீயாகத்தான் இருக்கிறது. பிலிம் விற்பனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நட்சத்திரங்கள் மட்டும் அவ்வப்போது கஷ்ட்டப்படுகிறார்கள். இதற்காக நான் சினிமா தொழி செய்பவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கேமராவின் வாடாகை ரூ.10000 என்றால் அறிமுக இயக்குநருக்கு அதை ரூ.2000 மாக குறைக்க வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறையும். அப்படி பட்ஜெட் குறையும் பட்ஜெத்தில் பெரிய தயாரிப்பாளர்கள் கூட புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். புதியவர்கள் வந்தால் புதிய முயற்சிகள் வரும். இது சாத்தியமான விஷயம்தான். இந்த கோரிக்கையை இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாகவும் வலியுறுத்த இருக்கிறேன்." என்றார்.

Comments