Sunday, February 26, 2012

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யலே-வடிவேலு!!!

Sunday, February 26, 2012
மதுரை::எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிச்சு சிகிச்சை பண்ணிடிருக்கோம். அதனால்தான் என்னால சங்கரன்கோவில்ல பிரசாரம் பண்ண முடியவில்லை. மத்தபடி, நான் யாருக்கும் பயந்து ஒளிந்து ஓடவில்லை, ஓடவும் மாட்டேன். காலமும், நேரமும் வருகிறபோது மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு.

விஜயகாந்த்துடன் கடும் மோதலில் இருந்து வந்த வடிவேலு, கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவில் இணைந்து விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது நேரமோ, என்னவோ, தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது, அதிமுகவுடன் சேர்ந்த தயவால், எதிர்க்கட்சியாக உயர்ந்தது தேமுதிக, விஜயகாந்த்தோ எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.

இதனால் வடிவேலு நிலைமை சிக்கலாகிப் போனது. அவரை வைத்துப் படம் பண்ண யாரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் ரசிக்கும் வாய்ப்பை திரையுலகம் மறுத்து வருகிறது. வடிவேலு இல்லாத தமிழ் சினிமா, புளியே இல்லாத புளிச்சாதம் போல இருக்கிறது.

இந்த நிலையில், வடிவேலு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.

என் தாய் சரோஜினி, உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை.

தேர்தலில் போட் டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும் போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன்.

தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்றார் வடிவேலு.

உயர்த்துவதாக கூறி சீரழித்தனர்’ சில்க்கை போல் என் வாழ்க்கை கிடையாது : வித்யாபாலன் பேட்டி!!!

Sunday, February 26, 2012
சில்க் ஸ்மிதாவை உயரத்துக்கு கொண்டு செல்வதாக கூறி அவரது வாழ்க்கையை சீரழித்தனர். ஆனால் என் நிஜ வாழ்க்கை அப்படி இல்லை’ என்றார் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் வேடத்தில் நடித்தவர் வித்யாபாலன். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. சில்க் கேரக்டரில் நடிக்க நான் தயங்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!!!

Sunday, February 26, 2012
அஜீத்தையும், வாஸ்து படுத்த ஆரம்பித்து விட்டதாம். தனது அலுவலகத்தை வாஸ்து பார்த்து மாற்றி வருகிறாராம்.

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, அதை மாற்றியமைப்பது திரையுலக நட்சத்திரங்களின் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு 'தல' அஜீத் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவரது அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது. அதை தற்போது வாஸ்து பார்த்து அதன்படி மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

தனது அலுவலகத்தை ஹைடெக் அலுவலகமாக மாற்றத் தான் தல இப்படி செய்வதாகவும் கூறப்படுகின்றது. மங்காத்தாவின் வெற்றிக்குப் பிறகு அஜீத் ரொம்பவே பிஸியாகிவிட்டார். தற்போது பில்லா 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையப் போவதாகவும் கூறப்படுகின்றது. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மகள் அனௌஷ்காவுடன் விளையாடி மகிழ்கிறார். அவரது மனைவி ஷாலினி மகளை பல கோணத்தில் புகைப்படங்கள் எடுத்து அதைப் பார்த்து பூரித்துப் போகிறார்.

ஸ்ருதி ஹாசனுக்கு மூக்கு ஆபரேஷன்!!!

Sunday, February 26, 2012
மூக்கு ஆபரேஷன் செய்தபின் நிம்மதியாக இருப்பதாக கூறினார் ஸ்ருதி ஹாசன். நடிகைகள் பலர் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் மூக்கு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது வாடிக்கை. ஆனால் அதை மறுத்து விடுவதுண்டு. ஆனால் ஸ்ருதி ஹாசன் தான் செய்துகொண்ட மூக்கு ஆபரேஷன் பற்றி வெளிப்படையாக கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இதனால் இரவில் தூங்கும்போது அவஸ்தைபடுவேன். இதுபற்றி ஆலோசித்தபோது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மூக்கில் ஆபரேஷன் செய்தால் குரல் மாறிவிடும் என்று சிலர் பயமுறுத்தினார்கள். இதனால் முதலில் யோசித்தேன். அப்படி எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிந்தபின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். இந்தியில் ‘லக்கி’ என்ற படத்தில் நடிப்பதற்கு முன்பே அமெரிக்கா சென்று மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். இரவிலும் நிம்மதியாக தூங்குகிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

கொலை வெறி பாட்டால் பிரபலம்: தனுஷ் படத்தில் ரஜினி?

Sunday, February 26, 2012
தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்த “3” படம் விரைவில் ரிலீசாகிறது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப தனுஷ், ஸ்ருதி தவிர 3-வது நபராக ரஜினி நடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட போது 3-வது நபர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ் என்றார். ஆனாலும் படத்துக்கு டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

இதனால் படத்தை ரூ.50 கோடி , ரூ.60 கோடி என பலர் விலை பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கஸ்தூரி ராஜா மேலும் கூறும் போது இன்னும் வியாபாரம் முடியவில்லை. கொலை வெறி பாடல் படத்தை அதிக விலைக்கு கேட்டு எங்களை பலர் அணுகி இருப்பது உண்மைதான். இப்போதுதான் பிசினஸ் பேச துவங்கியுள்ளோம் என்றார்.

3 படம் மார்ச் 30-ந்தேதி ரிலீசாகும் என்றும் கூறினார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 3 படம் ரிலீசாகிறது. தமிழில் 300 முதல் 400 பிரிண்ட்கள் போடப்படுகின்றன. ஐஸ்வர்யா மிகுந்த ஈடுபாட்டோடு கடுமையாக உழைத்து படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என்றும் கஸ்தூரி ராஜா தெரிவித்தார். இப்படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியுள்ளார்.

ஏதாவது காமெடி வேஷமிருந்தா கொடுங்களேன்! - ஸ்ரேயா!!!

Sunday, February 26, 2012
ஏதாவது ஒரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் நடிகை ஸ்ரேயா.

ரஜினியுடன் சிவாஜி படத்துக்குப் ஒரு பெரிய ரவுண்ட் வந்து, இப்போது டல்லடித்து நிற்கும் ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் படங்கள் எதுவும் இல்லை. நேற்று அவர் ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.

ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பது கூட இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன்.

பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது சரியில்லை," என்றார்.

சிக்ஸ் பேக் ஆசையெல்லாம் இல்லை! - மாதவன்!!!

Sunday, February 26, 2012
எனக்கு சிக்ஸ் பேக் ஆசையெல்லாம் இல்லை; அதனால் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதில்லை என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். அலைபாயுதே, மின்னலே, போன்ற படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகவும், ரன், தம்பி போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும், ரெண்டு, குரு என் ஆளு போன்ற படங்களில் காமெடி ஹீரோவாகவும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் மாதவன். வேட்டை படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்த்திருக்கும் மாதவன், தனக்கு மூட்டுவலி பிரச்னை இருப்பதாக கூறியிருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் இருப்பதால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனை நான் கடைபிடிக்கிறேன். ஆனால் என்னால் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்க முடியாது. அந்த ஆசையெல்லாம் இல்லை. எனக்கு மூட்டு விலி பிரச்னை உள்ளது. எனவே கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டேன். ஆனால் என் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பயிற்சிகளை சரியாக செய்வேன், என்று கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர்களுடன் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உடன்பாடு: படப்பிடிப்புகள் துவங்கின!!!

Sunday, February 26, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் ஏற்பட்டது. சம்பளத்தை உயத்தி தரவேண்டும் என்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் நடத்தினர்.

ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் சிறு படங்களுக்கும் தனித்தனி விகிதங்களில் சம்பள உயர்வு நிர்ணயித்தனர். பெப்சி தொழிலாளர்கள் இதனை ஏற்கவில்லை. இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமரசபேச்சு நடத்தியது.

பல தடலை பேச்சுவார்த்தைகள் நடந்தும் இழுபறி நீடித்தது. இருசங்கத்தினரும் பொதுக்குழுக்களை கூட்டி ஆலோசித்தும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று மாலை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இன்று காலை நடந்த சம்பள பேச்சுவார்த்தையில் நடன கலைஞர்கள் சங்கத் துக்கும் ஸ்டன்ட் யூனியன் சங்கத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இன்று மாலை மேலும் 6 சங்கங்களுடன் உடன்பாடு ஏற்பட உள்ளது. மீதி சங்கங்களுக்கு நாளை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கிறது. பெப்சி யூனியனில் மொத்தம் 21 சங்கள் உள்ளன. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்புகள் துவங்கின.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday, February 26, 2012
* ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெக்பெத்’ என்ற ஆங்கில நாடகம் தமிழில் மாற்றம் செய்யப்பட்டு வரும் மே 1ம் தேதி முதல் 5ம் தேதிவரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. தமிழ்நடிகர்கள் போஸ் வெங்கட், திருச்செல்வம், பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
*சுவையான கேக் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் ப்ரியா ஆனந்த்.
* வடிவேலு பிறவிக் கலை ஞன். அவரை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசிய வைரமுத்துக்கு வடிவேலு நன்றி தெரிவித்தார்.
* சிவாஜி நடித்த பழம்பெரும் ‘கர்ணன்’ படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேடை யில் சிவாஜி பெயரிட்டு ஒரு இருக்கை போடப்பட்டது. விழா முடியும்வரை அந்த இருக்கை காலியாகவே விடப்பட்டிருந்தது.

பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு!திருப்பதியில் பரபரப்பு பேட்டி!!!

Sunday, February 26, 2012
ஐதராபாத்::பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விரைவில் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. பழம் பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் மகன். 52 வயதாகும் நாகார்ஜுனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை அமலாவின் கணவர். இவருடைய 2 மகன்களில் ஒருவரான நாக சைதன்யா, தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு மகன் அகிலும், விரைவில் திரையுலகத்துக்கு வர உள்ளார். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய கட்சியை சேர்ந்த 18 பேர் எம்எல்ஏக்கள் ஆகினர். அவர்களுடன் காங்கிரசில் சேர்ந்து விட்டார் சிரஞ்சீவி. மற்றொரு பிரபல நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து 2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், திருப்பதியில் நேற்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அரசியலுக்கு வருவது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலை நான் ஆர்வமாக கவனிப்பவன். அதில் ஈடுபட வேண்டும் என்று நீண்ட காலமாக நினைக்கிறேன். ஆனால், அது எனக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி அமல்படுத்திய பல திட்டங்கள் எனக்கு பிடிக்கும் என்றார். ராஜசேகர ரெட்டியை பற்றி நாகார்ஜுனா புகழ்ந்து பேசியதால் அவர் காங்கிரசில்தான் சேருவார் என்றும், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேருவார் என்றும் ஆந்திராவில் மக்கள் இப்போதே விவாதிக்க தொடங்கி விட்டனர்.