Thursday, April 19, 2012

அக்கா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு!!!

Thursday, April, 19, 2012
நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என்று பெயர் சூட்டினார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகினர். அவர் மறுத்து விட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
.

ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்...எதையும் நானே பேஸ் பண்ணுவேன்!- தனுஷ்!!!

Thursday, April, 19, 2012
3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.

இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.

இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.

இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.

செக்ஸி இமேஜ் வேணாம்... நல்ல கிராமத்து ரோல் இருந்தா கொடுங்க! - ஸ்ரேயா!!!

Thursday, April, 19, 2012
செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்ற வார்த்தைகளைக் கேட்டு புளித்துவிட்டது. யாராவது நல்ல கிராமத்து வேடமா கொடுங்க, நடிச்சு அசத்தறேன், என்கிறார் நடிகை ஸ்ரேயா.

எனக்கு 20 உனக்கு 18, மழை படங்களின் தோல்வியால் தெலுங்குக்கே போன த்ரிஷாவுக்கு, தமிழில் பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படம் ரஜினியின் சிவாஜி - தி பாஸ்..

பாலிவுட்டிலும் அவர் பிரபலமானார் அந்தப் படத்துக்குப் பிறகு.

பல படங்களில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் அவர் தயங்கவில்லை. இன்று அவர் கைவசம் படங்கள் இல்லை.

ஆனால் எந்த வேடத்துக்கும் தயார், வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்துள்ளார்.

அவர் கூறுகையில், "செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்றுதான் என்னை குறிப்பிடுகிறார்கள். இதுவரா நான் செய்து வந்த வேடங்கள் அப்படி. ஆனால் இனி ஆக்ஷன், த்ரில்லர், விஞ்ஞானக் கதைகளில் நடிக்க ஆசை.

குறிப்பாக நல்ல கிராமத்து வேடம் செய்ய ஆசை. அஜீத், சூர்யா மாதிரி நான் இதுவரை ஜோடி சேராதவர்களுடன் நடிக்க ஆசை.

இப்போதைக்கு இரு படங்கள் உள்ளன. ஒன்று தெலுங்குப் படம். இன்னொன்று தீபா மேத்தாவின் ஆங்கிலப் படம்," என்றார்.

நீதானே என் பொன் வசந்தம் படத்திற்காக இளையராஜா ஒரே நாளில் டியூன் போட்ட இளையராஜா!!!

Thursday, April, 19, 2012
கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் நீதானே என் பொன் வசந்தம் படத்திற்காக இளையராஜா ஒரே நாளில் டியூன் போட்டுக் கொடுத்துள்ளார் என்று கூறி பெருமைப்படுகிறார் இயக்குனர்.

ஒவ்வொரு படம் தயாரிக்கும் போதும், இப்படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக போட வேண்டும் என்று யோசிப்பேன். ஆனால், அது அமைந்ததில்லை. இந்த முறை, தைரியமாக போய் கேட்டுவிட்டேன்.

அவரும் படத்தைப் பார்த்துவிட்டு ஒரே நாளில் டியூன்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார் கௌதம் மேனன்.

அதேப்போல படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். அனைத்தும் ஒரே ஷெட்யூலில் 16 நாட்களிலேயே ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. இவ்வளவு வேகமாகக் கூட பணியாற்ற முடியுமா என்று வியந்து போயுள்ளேன் என்கிறார் இயக்குநர்.

சிம்பு இடத்தில் தனுஷ்! சிம்பு ரியாக்‌ஷன்?!!!

Thursday, April, 19, 2012
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த படம் வட சென்னை. சிம்பு இந்த கதையை ஒத்துக்கொள்ளும் போது கதையை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினார். ஆனால் அதோடு அந்த படத்தையும், இயக்குனரையும் கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் வெற்றிமாறனிடம் இருந்து சிம்புவிற்கு வந்துள்ள செய்தியில் “தவிர்க்கமுடியாத சில காரணங்களால் சிம்பு நடிக்கவிருந்த வட சென்னை படம் தள்ளிவைக்கப்படுகிறது. அதே சமயம் கிளாவுட் நைன் தயாரிப்பில் தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பொல்லாதவன் படத்தில் நடித்த கிஷோர் இதில் நடிக்கிறார். வட சென்னை படத்தில் சிம்பு தான் நடிப்பார் அதில் எந்த மாற்றமும் இல்லை” என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தனுஷ் இந்தியில் நடிக்கும் ரஞ்சனா படபிடிப்பு ஆரம்பிக்க தாமதமாகும் என்ற காரணத்தினால் தான் கதை, படத்தின் பெயர், இசையமைப்பாளர் தேர்வு என அவசர அவசரமாக இத்தனை ஏற்பாடுகளாம். முக்கியமான சங்கதி என்னவென்றால் தனுஷ் பரத்பாலா இயக்கத்திலும் நடிக்கிறார். அந்த படத்திற்கு தான் மாரீயன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

வட சென்னை படம் தள்ளி வைக்கப்பட்டதற்கு ”தனுஷ் கொலவெறிப் பாடலை பாடி புகழ்பெற்றதால் தான் சிம்புவும் லவ்ஆன்தம் என லண்டன் சென்றார். அதனால் தான் கால்ஷீட் கோளாறு ஏற்பட்டது. சிம்புவிற்கும் தனுஷுக்கும்(தனுஷோடு மட்டும் தான். தனுஷின் குடும்பத்தோடு அல்ல) ஆரம்பம் முதலே மோதல்கள் இருந்ததால் தான் சிம்புவின் வாய்ப்பை தனுஷ் தட்டி பறித்துவிட்டார்” என
பல கதைகள் கோடம்பாக்கத்தில் உலா வருகின்றன.

இவர்கள் பேசிக்கொள்வது போல் பார்த்தாலும் இதிலும் சிம்பு தனுஷின் பின்னால் தான் இருக்கிறார். சிம்பு பாடிய லவ் ஆன்தம் பாடல் கொலவெறி பாடல் அளவிற்கு ரசிகர்களால் பார்க்கப்படவில்லை.

வடசென்னை தள்ளிவைக்கப்பட்டாலும் வேட்டை மன்னன் படத்தில் ஹன்ஸிகா, தீக்‌ஷா செத் ஆகியோருடன் நன்றாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.