Tuesday, April 3, 2012

ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் நடிகர்கள் மனைவியுடன் பிரியங்காவுக்கு பிரச்னை!!!

Tuesday, April, 03, 2012
ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் பிரியங்கா சோப்ராவுக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷனின் மனைவிகள் அவர் மீது கோபமாக உள்ளதாக தகவல் பரவியுள்ளது. சினிமா உலகில் ஹீரோக்களுடன் பார்ட்டி பட விழாக்களுக்கு சேர்ந்து போகும் நடிகைகள் உள்ளனர். பெரும்பாலும் திருமணம் ஆகாத ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஜோடியாக வலம் வருவார்கள். ஆனால் பிரியங்கா சோப்ரா சற்று வித்தியாசமானவர். ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷன் அக்ஷய் குமார் என திருமணமான நடிகர்களுடன் பட விழா பார்ட்டிகளுக்கு செல்வார். இது பற்றி பிரியங்கா கூறுகையில் ஷூட்டிங் முடிந்ததும் சில பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.

அப்போது அதே பார்ட்டியில் பங்கேற்க என்னுடன் ஷூட்டிங்கில் இருந்த ஹீரோவுக்கும் அழைப்பு வந்திருக்கும். அந்த நேரத்தில் இருவரும் சேர்ந்து போவது தவிர்க்க முடியாதது என்கிறார். ஆனால் இது ஷாருக்கான் மனைவி கவுரி ஹிருத்திக் மனைவி சூசனிடம் புகைச்சலை கிளப்பியுள்ளது. பிரியங்காவுடன் நட்பாக இருந்த இவர்கள் சமீபகாலமாக அவருடன் பேசுவதில்லை. சமீபத்தில் விழா ஒன்றில் கவுரியும் சூசனும் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு பிரியங்கா வந்தபோது அவரை கண்டுகொள்ளவே இல்லையாம். முகம் வாடிய நிலையில் அங்கிருந்து வெளியேறியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவை சந்திப்பதையும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறாராம் ஷாருக்கான். மனைவி கவுரிக்கு பிடிக்காததால்தான் ஷாருக் இப்படி நடந்து கொள்கிறார் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.

மயங்கி விழுந்த நடிகை!!!

Tuesday, April, 03, 2012
ஜாக்கி ஹீரோவோடு வேல்டு ஹீரோவும் பாலிவுட் சல்லு ஹீரோவும் சேர்ந்து நடிக்கப்போறதா பேச்சு பரவுதாம்... பரவுதாம்... ஆனா அந்த ஐடியா ஒர்க்அவுட் ஆகலையாம். இப்போ நடிக்க¤ற ரூப படத்தை முடிச்சப்பிறகு மறுபடியும் ஒரு சோலோ ஹீரோ ஸ்டோரிலதான் வேல்டு ஹீரோ நடிக்கப்போறாராம். அந்த படத்தை இயக்குற வாய்ப்பு தனக்கு தரும்படி காட்டன் வீர இயக்கம் பிடிவாதமா கேக்குறாராம்... கேக்குறாராம்...

ஒற்றை எழுத்து பட வில்லன் நடிகர் ஜோடியா சச்சஸ் செல்வன் படத்துல ராதிகாவான ஆப்தே ஹீரோயின் நடிக்க¤றாரு. ஊட்டி ஜங்ஷன்ல ஷூட்டிங் நடந்தப்போ அம்மணி மயக்கமடிச்சி விழுந்துட்டாராம்... விழுந்துட்டாராம்... பயந்துபோன பட குழு அவரை அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிபோய் சிகிச்சை கொடுத்தாங்களாம்... கொடுத்தாங்களாம்... இதே ஷூட்டிங்ல போன வாரம் ஹீரோவுக்கு அடிபட்டுச்சாம். எங்க யூனிட¢டுக்கே ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு இயக்கம் புலம்புறாராம்... புலம்புறாராம்...

டாப் ஹீரோயின் ரொம்ப எதிர்பார்த்தும¢ கோலிவுட்ல வாய்ப்பு கொட்டலயாம்... கொட்டலயாம்... இதனால மனசு நொந்துபோயிருக்காராம். இந்தியில வாய்ப்பு கிடைச்சது. அதோட ஷூட்டிங்கும் தொடங்காம இருக்காம்... இருக்காம்... அதனால அடிக்கடி சொந்த ஊருக்கு கிளம்பி போயிடுறாராம்... போயிடுறாராம்...

யுவன் தயாரிப்பில் அஜித்..?!!!

Tuesday, April, 03, 2012
இளைஞர்கள் மத்தியில் யுவனின் இசையமைப்பில் வரும் பாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கும். இசையமைப்பாளராக மட்டுமல்லாது தற்போது தயாரிப்பாளராகவும் பரிணமிக்க இருக்கிறார் யுவன் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்கள் முன்னர், செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் மூவரும் இணைந்து 'White Elpehants' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கினார்கள். பின்னர் பல்வேறு காரணங்களால் படம் எதுவும் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. சமீபத்தில் 'மங்காத்தா' கூட்டணியான அஜித் - வெங்கட்பிரபு மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். இத்தகவலை வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வெங்கட்பிரபு படம் என்றாலே அப்படத்திற்கு இசை யுவன் தான். அஜித் - வெங்கட்பிரபு இணையும் புதுப்படத்தை யுவன் தயாரிக்க இருக்கிறாராம். அஜித் - வெங்கட்பிரபு இருவருமே தங்களது தற்போதைய படப் பணிகளை முடித்த பின் அந்த புதுப்படத்தில் இணைய இருக்கிறார்கள்.

அவருடன் ஹன்சிகாவா.....?!!!

Tuesday, April, 03, 2012
நவ்தீப் நவ்தீப் என்றொரு நடிகர் தமிழில் நடித்து வந்தாரே, நினைவிருக்கிறதா? 'ஹே வாட் இஸ் திஸ்' என்று அடிக்கடி மீடியாக்காரர்களிடம் கோபப்படும் இந்த சின்னப் பையனை நைசாக ஓரம் கட்டி விட்டார்கள் தமிழ்ப்பட ரசிகர்கள். (இதில் பிரஸ்சுக்கு சிறு பங்கு கூட இல்லை என்று ஆவின் பால் பாக்கெட் மேல் சத்தியமடித்து சொல்லலாம்) அப்படியே திருட்டு ரயில் பிடித்து ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆன நவ்தீப்புக்கு அங்கும் பெரிசாக சம்பளம் இல்லை. இருந்தாலும் பிழைப்பு ஓடணுமே என்பதற்காக செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்போது மீண்டும் அவரை சந்திக்கும் அபாக்கியம் வந்து தொலைத்திருக்கிறது ரசிக மகாசனங்களுக்கு. இவரும் சித்தார்த்தும் நடித்த 'ஓ மை பிரண்ட்' என்ற தெலுங்கு படத்தை தமிழில் 'ஸ்ரீதர்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்கள். மனசை தேற்றிக் கொள்ளுங்கள் ரசிகர்களே. இப்படத்தில் நவ்தீப்புக்கு ஜோடியாக நடிப்பது நம்ம 'வெளிச்சக்கடை' அல்வாவான ஹன்சிகாவேதான். (ஆனால் கதைப்படி வேறொரு திருப்பம் இருக்குமாம்) 'ஓ.கே ஓ.கே' ரிலீஸ் ஆகிற நேரத்தில் இதென்ன சின்ன பையன்ங்க கூடவெல்லாம்? என்று சண்டை போட தோன்றினாலும், ஹன்சிகாவுக்கும் இந்த ரிலீசுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதால் அமைதியோ அமைதி. ஓ மை பிரண்ட்.... வாட் இஸ் திஸ்?

நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் 'வாலு' - ஹீரோ சிம்பு!!!

Tuesday, April, 03, 2012
நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு வாலு என்று பெயர் சூட்டியுள்ளனர் ('தலைப்பு தானா அமையுதா.. இல்ல வேணும்னே வச்சிக்கிறீங்களா சிம்பு?')

ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.ய அதற்கு முன் சிம்பு நடித்த காளை படத்தை தயாரித்ததும் நிக் ஆர்ட்ஸ்தான்.

வாலு படத்தை புதிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். சிந்தனை செய் இயக்குநரிடம் உதவி இயக்குநரான பணியாற்றியவர்தான விஜய் (மன்மதன் பட இயக்குநர் நிலைமை வராமலிருக்க கடவது!).

தமன் இசையமைக்கிறார்.

சிம்புவிற்கு பொருித்தமான ஜோடியை வலைவீசித் தேடி வருகிறார்கள். விரைவில் ரிசல்ட் தெரிந்துவிடுமாம்.

வேட்டை மன்னன் முடிந்ததும் இந்தப் புதிய படம் ஆரம்பிக்குமாம். ஏற்கெனவே போடா போடி, வட சென்னை படங்களிலும் சிம்பு நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் போடா போடி தொடங்கி இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது!

சென்னையில் அமிதாப்பைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ரஜினி!!!

Tuesday, April, 03, 2012
சென்னை வந்துள்ள பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 வது ஐபிஎல் போட்டி தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னைக்கு இரு தினங்களுக்கு முன் வந்தார் அமிதாப் பச்சன்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவரை, அந்த ஹோட்டலுக்கே சென்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

சமீபத்தில்தான் வயிற்று வலிக்காக அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரை நலம் விசாரித்து, மரியாதை செய்யும் விதமாக ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார்.

இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டரில், "ரஜினி இன்று என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவர் உடல்நலம் பெற்றுவிட்டது தெரிந்தது. கடவுளுக்கு நன்றி. அவருடன் நேரத்தைச் செலவிடுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் ("Rajini pays me a visit in my room! Looks recovered from his recent illness. Thank God! Always a delight to spend time with him!")," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, அவர் மீது மிகுந்த அக்கறை காட்டிய அமிதாப், அவரை சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரைத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது நினைவிருக்கலாம்.

கேஎஸ் ரவிக்குமார் மகளுக்கு திருமணம்.. ரஜினி - கமல் பங்கேற்கின்றனர்!!!

Tuesday, April, 03, 2012
பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மகள் ஜனனிக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஆர் சதீஷ்குமாருக்கும் வரும் அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

காலை 10 மணிக்கு திருமணமும் அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்கள் லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த கேஎஸ் ரவிக்குமார் இப்போது சென்னை திரும்பிவிட்டார். முக்கிய பிரமுகர்களுக்கு குடும்பத்தினருடன் போய் அழைப்பிதழ்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் திரளாக வரவிருக்கிறார்கள்

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, April, 03, 2012
வால்பாறை பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட எந்த இடத்திலும் சினிமா ஷூட்டிங் நடத்தக்கூடாது. தனியார் இடங்களில் நடத்த வேண்டுமானால் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘7ம் அறிவு’ படத்தின் முக்கிய காட்சிகள் சென்னை ஐஐடி வளாகத்தில் படமாக்கப்பட்டது. அடுத்து சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’ படத்தின் முக்கிய காட்சிகளும் அதே வளாகத்தில் படமாக்கப்பட்டது.

இந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி’ படத்தை தமிழில் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார். இதில் நடிக்க ஆர்யா, சந்தானம், பிரேம்ஜியிடம் பேச்சு நடக்கிறது.

கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் பள்ளி மாணவிபோல் யுனிபார்ம் அணிந்து சமந்தா நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

கிளாமராக நடிப்பதற்கும் மாடர்னாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது -

Tuesday, April, 03, 2012
கிளாமராக நடிப்பதற்கும் மாடர்னாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று மித்ரா குரியன் கூறினார்.

தமிழில், ‘காவலன்’ படத்தில் அசின் பிரண்டாக நடித்தவர் மலையாள நடிகை மித்ரா.

அவர் கூறியதாவது:

இப்போது ‘நந்தனம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறேன். இதில் சிவாஜி தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது ரொமான்டிக் கதையாக இருந்தாலும் என்னைச் சுற்றிதான் படம் நகரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் நடித்துள்ள இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ், மலையாளத்தில் பிசியாக இருப்பதால் தெலுங்கு பட வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. எத்தனை படத்தில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. நல்ல கேரக்டரில் நடிக்க நினைக்கிறேன். கிளாமராக நடிப்பீர்களா என்கிறார்கள். மாடர்ன் கேரக்டருக்கும் கிளாமருக்கும் வித்தியாசம் இருக்கிறது. மாடர்ன் கேரக்டரில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், எனது உடல்வாகுக்கு கிளாமர் சரியாக வருமா என்று தெரியாது.

குதிரை பந்தயம் பார்க்க குழந்தையுடன் ஐஸ்வர்யா துபாய்க்கு பயணம்!!!

Tuesday, April, 03, 2012
உலகக் கோப்பை குதிரை பந்தயத்தை பார்க்க முதன் முதலாக மகளுடன் ஐஸ்வர்யா துபாய் புறப்பட்டு சென்றார். நடிகர் அபிஷேக் - நடிகை ஐஸ்வர்யா தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தற்காலிகமாக பேட்டி-பி என குழந்தையை அழைத்தனர். இப்போது குழந்தைக்கு ஆரத்யா என பெயர் சூட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், குழந்தையுடன் ஐஸ்வர்யா துபாய் சென்றார். அங்கு உலக கோப்பைக்கான குதிரை பந்தய போட்டி நடக்கிறது. அதை பார்க்க ஐஸ்வர்யா ஏற்பாடுகள் செய்திருந்தார்.

மேலும், ஒரு மாதத்துக்கு முன்பே ஆரத்யாவுக்கு பாஸ்போர்ட்டும் வாங்கப்பட்டது. துபாய்க்கு ஐஸ்வர்யாவுடன் அவரது தாய் விருந்தா, மேலாளரும் உடன் சென்றுள்ளனர். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அபிஷேக் செல்லவில்லை. துபாயில் ஆடம்பர ஓட்டலில் அவர்களுக்கான அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்யாவுக்கு இது முதல் விமான பயணம் அல்ல. முதல் வெளிநாட்டு பயணம்தான். துபாயில் இருந்து 8ம் தேதி அனைவரும் மும்பை திரும்புகின்றனர்.

பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!!!

Tuesday, April, 03, 2012
பழம்பெரும் நடிகையும், நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மனைவியுமான சரோஜா சென்னையில் இன்று காலமானார்.

1950 முதல் 1970 வரை திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் 'டணால்' தங்கவேலு என்கிற கே.ஏ.தங்கவேலு.

இவரும் எம்.சரோஜாவும் இணைந்து நடித்து 1959-ல் வெளிவந்த கல்யாணப்பரிசு படம், இவர்களின் நகைச்சுவையால் மிகவும் பிரபலமானது.

கணவன் மனைவி யான இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 300 படங்கள் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 28, 1994- ல் தங்கவேலு மரணமடைந்தார்.

இதனையடுத்து, தனது பிள்ளைகளுடன் சென்னை திநகரில் வசித்து வந்த சரோஜா, இன்று மாரடைப்பால் காலமானார்.

ஐபிஎல் 5: கேத்தி பெர்ரியின் தேன் குரலும், பிரபுதேவாவின் மின்னல் நடனமும்..!!!

Tuesday, April, 03, 2012
இதைவிட பெரிதாக எந்த 'விருந்தும்' இருக்கப் போவதில்லை என்று சொல்லலாம். காரணம், உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான கேத்தி பெர்ரியின் வசீகரிக்கும் குரலுடன், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் மின்னல் நடனமும் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் பிய்த்துப் போடப் போகிறது நாளை...

ஐந்தாவது ஐபிஎல் தொடர் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னையில் படு பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. வழக்கம் போல சினிமாக்காரர்கள் கூட்டம்தான் அதிகமாக தென்படுகிறது. நடிகர், நடிகையரின் ஹல்லா புல்லா அசத்தல் நடனங்களும், பாடல்களும் பட்டையைக் கிளப்பத் தயாராகி வருகினறன.

இதில் ஹைலைட் என்னென்னா, ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான கேத்தி பெர்ரி பாடப் போகிறார் என்பதுதான். அவருடன் நம்ம ஊர் பிரபுதேவாவும் சில்லுன்னு ஒரு டான்ஸ் போடப் போகிறார் என்பது கூடுதல் குதூகலம். தனியாகவும் 2 பாடல்களுக்கு சோலோ டான்ஸ் ஆடுவார் பிரபுதேவா என்பது எக்ஸ்டிரா போனஸ்.

ஐபிஎல் தொடக்க விழாவுக்காகவே விசேஷமாக கலிபோர்னியாவிலிருந்து பறந்து வருகிறார் கேத்தி பெர்ரி. சர்வதேச பாடகி ஒருவர் சென்னையில் பாட்டுப் பாடப் போவது இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதனால் கேத்தியைத் தரிசிக்கவும், அவரது குரலை ரசிக்கவும் ரசிகர்கள் நிச்சயம் முண்டியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், கேத்தி பெர்ரியின் பங்கேற்பை காண ஆவலுடன் காத்துள்ளோம். அவரைப் போன்ற ஒரு திறமையான பாடகி மற்றும் நடிகை ஐபிஎல் தொடக்க விழாவுக்கு வருவது என்பது பெரிய விஷயம். சிறப்பானது. வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே குஷியாக உள்ளனர் என்றார்.. சுக்லாவே இப்படி குதூகலமாக சொல்கிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை...

தொடக்க விழா ஏற்பாடுகளைச் செய்துள்ள நிறுவனத்தின் வெங்கட் வர்தன் கூறுகையில், கேத்திக்கு இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்கள். தற்போது டுவென்டி 20 ரசிகர்களும் இதில் இணையப் போகிறார்கள். அவரது நரம்பு புடைக்க வைக்கும் பாடல்களையும், நடனத்தையும் காண ரசிகர்களோடு நானும் கூட ஆவலாகவே உள்ளேன் என்றார்.

கேத்தியுடன் நம்ம ஊர் பிரபுதேவா ஒரு டான்ஸுக்கு ஆடுகிறாராம். அதாவது கேத்தி பாட, பிரபுதேவா ஆட... நினைக்கவே ஜில்லுன்னு இருக்குதுல்ல..

இதுதவிர பிரபுதேவா தனியாகவும் 2 பாடல்களுக்கு ஆடப் போகிறாராம். மொத்தத்தில் நாளைய விழாவில் தென்னிந்தியா, வட இந்தியா மற்றும் சர்வதேச வாசனையுடன் மணமணக்கக் காத்திருக்கிறது ஐபிஎல் 5ன் தொடக்கம்.

3 சூப்பர் ஓபனிங்... மூன்றே நாட்களில் ரூ 1,16,87240!!!

Tuesday, April, 03, 2012
கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள '3'.

முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240.

படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. இன்று திங்கள்கிழமையும் கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்!

மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், "மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்,' என்றார்.

ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, "கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்... 3 சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், "விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?," என்றார்.

சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்," என்றார்.

வித்யாவை வாட்டும் 'மனசெல்லாம்'!!!

Tuesday, April, 03, 2012
நடிகை வித்யா பாலன் தமிழில் 'மனசெல்லாம்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் இன்னும் அவரை வேதனைப்படுத்தி வருகிறதாம். வித்யா பாலன் என்றால் பாலிவுட் நடிகை என்று தானே நாம் நினைக்கிறோம். ஆனால் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே இரண்டு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் 'ரன்' படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துவிட்டு பின்னர் வேண்டாம் என்று கூறி மீரா ஜாஸ்மினை நடிக்க வைத்தனர். அடுத்து ஸ்ரீகாந்த் ஜோடியாக 'மனசெல்லாம்' படத்தில் நடிக்க வித்யா பாலனை ஒப்பந்தம் செய்தனர். 'மனசெல்லாம்' படத்தில் அவரும் சந்தோஷமாக நடிக்க வந்தார். ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களில் அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று கூறி அனுப்பிவிட்டு த்ரிஷாவை எடுத்தனர். இந்த இரண்டு படங்களுமே தமிழில் சூப்பர் ஹிட் ஆனவையாகும். இருப்பினும் நடிக்க வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்ட வித்யா பாலன் இந்தியில் மார்க்கெட்டைப் பிடித்தார். 'பா', 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' மூலம் தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். 'டர்ட்டி பிக்சர்ஸ்' அவருக்கு நடிப்புக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. இத்தனை சாதனைகளை படைத்தாலும் 'மனசெல்லாம்' படத்தில் இருந்து அவரை வெளியேற்றியதை நினைத்தால் இன்னும் வேதனையாக இருப்பதாக அண்மையில் அவர் தெரிவித்துள்ளார். அவரது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தைப் பார்த்துவிட்டு அவரை கோலிவுட்டில் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் இப்போது முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் 'ரெண்டு' படத்தோடு அனுஷ்காவை ஏறக்கட்டியது கோலிவுட். அவரும் மனம் உடையாமல் தெலுங்குக்குப் போய் வெற்றிக்கொடி நாட்டினார். அதன் பின்னர் அவரை நாடி ஓடினார்கள் தமிழ்ப்படவுலகினர். இவங்க எப்பவுமே இப்படித்தான்.

தீனி போட்டவங்கள மறக்கமாட்டேன்: பிரகாஷ்ராஜ்!!!

Tuesday, April, 03, 2012
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் பிரகாஷ்ராஜுக்கு ஐதராபாத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. சாரன் இன் கார்ப்பரேஷன் அமைப்பு இந்த விழாவை நடத்தியது. பிரபல இயக்குநர் தாசரி நாராயணராவ், சிரஞ்சீவி சகோதரர் நாகாபாபு ஆகியோர் தலைமை வகித்தனர். பிரகாஷ்ராஜுக்கு நடிகர்கள் சித்தார்த், சுனில் ஆகியோர் இணைந்து நினைவு பரிசு வழங்கினர். விழாவில் தாசரி நாராயணராவ் பேசும்போது, "பிரகாஷ்ராஜின் 'டூயட்' படத்தில் இருந்து அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். இயக்குநர் பாலச்சந்தர் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை திரையுலகுக்கு அளித்து உள்ளார். எந்த வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பவர் பிரகாஷ்ராஜ்" என்று பாராட்டினார். விழாவில் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:- இங்கு என் நடிப்பை பற்றி எல்லோரும் பேசினார்கள். என் மீது பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளனர். நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் கல்லூரி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்தேன். என் நடிப்பை பார்த்து எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த கைத்தட்டல்தான் இன்று என்னை நடிகனாக்கி விட்டது. இன்றும் நான் கைத்தட்டல் பெறவே நடித்து வருகிறேன். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலச்சந்தருக்கு நன்றிக்கடன் செலுத்த எனது வாழ்நாள் போதாது. அதேபோல தெலுங்கில் 5 இயக்குநர்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன். கிருஷ்ணவம்சி, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம், குணசேகர், விநாயக் ஆகியோர் பசியுடன் வந்த எனக்கு தீனி போட்டார்கள். அவர்களுக்கும் வாழ்நாள் முழுக்க கடன்பட்டுள்ளேன். என்று பேசினார். விழாவில் தென் இந்திய நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

விருந்து வைத்து பாராட்டும் விஜய்!!!

Tuesday, April, 03, 2012
யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய். விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம். விஜய்யே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம். இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது. சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே.

மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!!!

Tuesday, April, 03, 2012
மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூடு அவுட்டான நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த ஷூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நீண்டநாள் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த 17-ம் தேதி ரஜினி, சவுந்தர்யா, சரத்குமார் உள்ளிட்ட 'கோச்சடையான்' படக்குழுவினர் லண்டன் புறப்பட்டு சென்றனர். அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வந்தது. நேற்று கூட ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட 'கோச்சடையான்' படக்குழுவினர் இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து பேட்டியளித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக இன்று காலை சென்னை திரும்பியுள்ளார். இதுபற்றி விசாரித்த போது ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே தங்களது படங்களான '3' மற்றும் 'கோச்சடையான்' படங்களை புரோமட் செய்வதில் பிரச்சினை உருவாகி இருப்பதாகவும், இதனால் அப்செட்டான ரஜினி ஷூட்டிங்கை ரத்து செய்து சென்னை திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.