Thursday, March 8, 2012

அசினின் தோற்றம் இன்னும் சைஸ் ‌ஜீரோவுக்கு வரவில்லை!!!

Thursday, March 08, 2012
சென்னை::தமிழில் நல்ல சைஸாக இருந்தால்தான் ரசிப்பார்கள். இதுவே இந்தி என்றால் சைஸ் ‌ஜீரோதான் அழகு. அசினின் தோற்றம் இன்னும் சைஸ் ‌ஜீரோவுக்கு வரவில்லை. வாய்ப்புகள் வழுக்கிப் போக இதுதான் காரணமோ என்று அவருக்கு ஐயம். விளைவு?

முன்பைவிட இளைத்து ஏழுநாள் படுக்கையில் கிடந்தவரைப் போல் காட்சியளிக்கிறார். இந்த‌ப் புதிய தோற்றம் அவருக்கு உற்சாகத்தை தந்தாலும் அவரது ரசிகர்கள் அழகு எடை குறைஞ்சுப் போச்சே என்று கவலைப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒல்லிப்பிச்சானாகிவிட்டார். சமீபத்தில் நடந்த ஜெனிலியாவின் திருமணத்தில் பலருக்கு அசினை அடையாளம் தெ‌ரியவில்லை.

இந்தத் தோற்றத்தை கொண்டு வர டயட் எல்லாம் இருக்கவில்லை, கொழுப்பு நீக்கும் சிகி‌ச்சைதான் எடுத்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறது பாலிவுட். கொழுப்பு குறைவது நல்லதுதானே.

கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது!!!

Thursday, March 08, 2012
சென்னை::கோச்சடையானுக்காக விரைவில் ர‌ஜினி லண்டன் செல்கிறார் என்று தெ‌ரிவித்திருந்தோம். இப்போது இன்னொரு தகவல், கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் பிமாண்டப் படம். ர‌ஜினியுடன் ஆதி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராஃப்பும் முக்கிய வேடத்தில் இடம்பெறுகிறார். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ப்‌‌ரீ புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கோச்சடையான் பட வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மார்ச் 15 முதல் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாகவும் பிஆர்ஓ ‌ரியாஸ் கோச்சடையான் தயா‌ரிப்பாளர் சார்பில் தெ‌ரிவித்துள்ளார்.

தேசிய விருதுகள் - வருத்தத்தில் முருகதாஸ்!!!

Thursday, March 08, 2012
தேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தியிருக்கும் முருகதாஸ் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து தயா‌ரித்த எங்கேயும் எப்போதும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம். ஆனால் இந்தப் படத்துக்கு தேசிய விருது எதுவும் கிடைக்கவில்லை. இது தனக்கு வருத்தமளிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார் முருகதாஸ்.

துப்பாக்கிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைக்க ட்ரை பண்ணுங்க பாஸ்.

மலேசியா பாண்டியனா... யாருன்னே தெரியாதே! - ஸ்ரேயா!!!

Thursday, March 08, 2012
சென்னை::யாருன்னே தெரியாத மலேசியா பாண்டியன் என்பவர் என்வர் என் மீது வழக்கு தொடர்வதாக மிரட்டுவதா என ஆவேசப்பட்டுள்ளார் ஸ்ரேயா.

மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா நடித்த 'போக்கிரி ராஜா' என்ற மலையாள படம் தமிழில் 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடுபவர் மலேசியா பாண்டியன்.

இந்த நிலையில், அதன் மலையாள தயாரிப்பாளரான தாமஸ் ஆன்டணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "'போக்கிரி ராஜா படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோதே அந்த படத்தை வேறு மொழிகளில் 'டப்' செய்யக்கூடாது'' என்று ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆன்டணி மீறிவிட்டார். எனவே அந்த படத்தை தமிழ் உள்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த புகாரில் ஸ்ரேயா கூறியிருந்தார்.

இதற்கு தாமஸ் ஆன்டணி பதிலளிக்கவில்லை. ஆனால் மலேசியா பாண்டியன் என்பவர் பதில் கூறியிருந்தார்.

"என் படத்தை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்'' என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) யில் மலேசியா பாண்டியன் புகார் செய்தார்.

இதுபற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "போக்கிரி ராஜா (மலையாள) படம் தொடர்பாக எனக்கும், தாமஸ் ஆன்டணிக்கும் இடையேதான் ஒப்பந்தம் இருக்கிறது. மலேசியா பாண்டியன் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.

அப்படி தெரியாத நிலையில், என் மீது அவர் வழக்கு தொடருவதாக மிரட்டுவதா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்,'' என்றார்.

இது நேர்மைக்கு கிடைத்த விருது - 'வாகை சூட வா' சற்குணம்!!!

Thursday, March 08, 2012
சென்னை;;வாகை சூட வா படத்துக்குக் கிடைத்துள்ள விருது நேர்மையான சினிமாவுக்கு கிடைத்த கவுரவம் என்றார் இயக்குநர் சற்குணம்.

தமிழில் சிறந்த படமாக வாகை சூட வா படத்தைத் தேர்ந்தெடுத்து தேசிய விருது அறிவித்திருக்குறது மத்திய அரசு.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் சற்குணம் கூறுகையில், "நேர்மையாகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்த படம் இது. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மக்களுக்கு இன்னும் நல்ல கருத்துக்களை கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது எனக்கு கொடுத்து இருக்கிறது.

தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சின்னச்சின்ன விஷயங்களை கூட அந்த படத்தில் மிகநுட்பமாக செய்து இருந்தேன். ஒரு நகரம் உருவாவதற்கு செங்கற்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த செங்கல் உருவாவதற்கு இயற்கை அழிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

விழிப்புணர்வு கருத்துகள்

வாகை சூடவா படத்தில் குழந்தை தொழிலாளர் உள்பட சில விழிப்புணர்வான கருத்துக்களையும், காதலையும் 'சென்டிமென்ட்'' கலந்து கொடுத்திருந்தேன். இந்த படத்துக்கு விருது கிடைத்து இருப்பதை மிக மிகப் பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

ஆரண்ய காண்டம்

அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பெறும் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன், சமுதாயத்தில் இருண்ட பகுதியை சித்தரிக்கும் இதுபோன்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக தெரிவித்தார்.

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்!!!

Thursday, March 08, 2012
சென்னை;;நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.

தேசிய விருதால் பெருமைப்படுகிறேன்: நடிகை வித்யாபாலன் பேட்டி!!!

Thursday, March 08, 2012
சென்னை;;வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
“த டர்ட்டி பிக்சர்” என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்துள்ளது. இப்படம் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். தேசிய விருது கிடைத்தது பற்றி வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:-

மகளிர் தினத்தையொட்டி எனக்கு தேசிய விருது கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். என்னால் இதை நம்ப முடியவில்லை. கனவு நிஜமான மாதிரி உள்ளது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் மிலன் லுத்ரியாவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். நமது நாட்டின் உயரிய விருது இது. இவ்விருதை பெற்றமைக்காக கர்வப்படுகிறேன்.

டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது. அவரை ஒரு செக்ஸ் நடிகையாகவே பலரும் பார்த்தனர். எனவே சில்க் வேடத்தில் நடிக்க வேண்டாம் என பலர் என்னிடம் வற்புறுத்தினர். அதை, பொருட்படுத்தாமல் நடித்தேன். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒன்றி போய் நடித்தேன்.

உணர்வு பூர்வமாகவும் கேரக்டரோடு கவர்ந்தேன். இந்த படத்தின் வெற்றி நடிகைகளை ஊக்குவிப்பதாக அமைந்தது. அந்த படத்தில் உள்ளது போன்ற கேரக்டரில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முன் இது மாதிரி வேடங்களில் நடிக்க அவர்கள் விரும்பியது இல்லை. ஆர்ட் படங்களுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் எண்ணத்தை டர்ட்டி பிக்சர் படம் மாற்றியுள்ளது.

கமர்ஷியல் படங்களும் விருது பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ரிலீசான போது பிரச்சினைகள் ஏற்பட்டன. படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கண்டனம் எழுந்தது. போலீசுக்கும் போனார்கள். ஆனால் படம் வெளியானதும் நிலைமை மாறியது.

நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. இப்போது தேசிய விருதும் கிடைத்துள்ளது. எனக்கு கிரீடம் கிடைத்தது போல் சந்தோஷப்படுகிறேன். இந்திய சினிமா வரலாற்றில் எனது பெயரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிறைந்த மனதோடு இருக்கிறேன்.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

விவிவி பெண்கள் கல்லூரி விழாவில் பாரதிராஜா பங்கேற்ப்பு!!!

Thursday, March 08, 2012
விருதுநகர்;;விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரி மாணவிகளை பார்த்துதான் தமிழ் கலாச்சாரம் இன்னும் வாழ்கிறது என தெரிந்துகொண்டேன் என கல்லூரி பொன்விழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு., விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு 50ம் ஆண்டு கல்லூரி விழா மற்றும் கல்லூரி நிறுவனர் விழா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் டி.டி.மதன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் பிசிகே.முரளிதரன், உபதலைவர் ஜெயப்பிரியா, கூட்டுச்செயலாளர் எம்.இனிமை முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.செல்வமீனாட்சி ஆண்டறிக்கையை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சினிமா டைரக்டர் பாரதிராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்

தமிழ்கலாச்சாரம் இன்னும் வாழ்கிறது என இந்த விவிவி பெண்கள் கல்லூரி மாணவிகளை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். உங்களிடம் தமிழ்கலாச்சாரம் வாழ்கிறது. இந்த கல்லூரியின் செயலாளர் மிக சிறப்பாக செயல்படுகிறார். மிக சிறப்பாக பேசுகிறார். காரணம் அவர் பேசுகையில் நீங்கள் கொடுத்த ஆதரவிலேயே தெரிகிறது. என்னை இங்கு வந்து பேச அழைத்ததற்கு காரணமாக இருந்த ஆசிரியை அமுதாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியை அமுதா மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கும். நீங்கள் முதலில் உங்கள் அப்பா, அம்மாவை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். முதலில் உங்கள் அப்பா, அம்மா, உங்கள் மண், பின்னர் குருவை நேசியுங்கள். வாழ்க்கையை படிக்கும்போதே தெரிந்துகொள்ளுங்கள். படிக்கும் போதே வாழ்க்கையை பற்றி முடிவெடுங்கள். நீங்கள் என்ன ஆக போகிறோம் என்பதை படிக்கும்போதே முடிவெடுங்கள். 2 லட்சம் தமிழர்கள் கொள்ளப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுவிட்டோம். இனியும் ஒரு தமிழர் கூட வீழ்வதை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. தமிழ் உணர்வு நமக்கு வேண்டும் என பேசினார்.

கோடம்பாக்கம் கோடங்கி நண்பர்களுடன் பிசினஸ் தொடங்கும் நடிகை!!!

Thursday, March 08, 2012
சென்னை::தன்னோட மாஜி காதலனுடன் சேர்ந்து சென்னையில் எலக்ட்ரானிக் பொருள்களுக்கான பிசினஸை தொடங்கினார் நமீ நடிகை. காதலனுடன் முட்டிக்கிட்டதால அந்த பிசினஸை கிடப்பில் போட்டாரு... போட்டாரு... சொந்த ஊர்ல வேற பிசினஸை தொடங்கினதால அதுலேயே நடிகை கவனமா இருந்தாரு. இப்போ திரும்ப எலக்ட்ரானிக் பிசினஸை ஆரம்பிக்க நடிகை பிளான் பண்றாராம்... பண்றாராம்... இதுக்காக சொந்த ஊர்ல இருக்கிற சில நண்பர்களை சென்னைக்கு அழைச்சிட்டு வந்திருக்காராம்... வந்திருக்காராம்...

மூணு நடிகரு தன்னோட சொந்த படத்துல நடிக்கிறதுக்காக விரல் நடிகரு பெயர் கொண்ட இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுக்காம இழுத்தடிச்சாரு... இழுத்தடிச்சாரு... இப்போ சொந்த படத்தை முடிச்ச பிறகு, இந்தியில நடிக்கப்போற படத்துக்கு முக்கியத்துவம் தர்றாராம்... தர்றாராம்... அதிக நாள் கால்ஷீட்டும் கொடுத்திருக்காராம். இதனால விரல் நடிகரு பெயர் கொண்ட இயக்கம் சோகத்துல இருக்காராம்... இருக்காராம்...

சின்னதம்பி நடிகரோட வாரிசு நடிக்க வந்துட்டாரு. அவரை வச்சி படம் தயாரிக்கலாமேன்னு இண்டஸ்ட்ரில நிறைய பேரு அப்பா நடிகருக்கு அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... சில உதவி இயக்குனருங்க வாரிசுக்காக கதை ரெடி பண்ணி, அப்பா நடிகரை மீட் பண்ண காத்திருக்காங்களாம். ஆனா அப்பா நடிகரோ படம் தயாரிக்கிற ஐடியால இல்லையாம்... இல்லையாம்...

அப்புக்குட்டி... அன்றே சொன்னார் இளையராஜா!!!

Thursday, March 08, 2012
சென்னை::அழகர்சாமியின் குதிரை பேசப்படும், அதை விட அதன் நாயகன் அப்புக்குட்டி வெகுவாக பேசப்படுவார் என்று அன்றே சொல்லியிருந்தார் இசைஞானி இளையராஜா. இன்று ஊரெல்லாம் பேசும் முகமாக மாறியுள்ளார் அப்புக்குட்டி.

அழகர்சாமியின் குதிரை படம் வந்தபோதே அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டவர் அப்புக்குட்டி. காரணம், அப்படத்தில் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பு. அத்தனை பேரையும் அப்புக்குட்டியும், அந்த குட்டிக் குதிரையும் மனதை கவ்விக் கொண்டு போய் விட்டார்கள்.

இன்று அப்புக்குட்டி இந்திய அளவில் சிறந்த து்ணை நடிகராக உயர்ந்துள்ளார். இது நிச்சயம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதில் சந்தேகமில்லை. அப்புக்குட்டி இப்படி பார்க்கப்படுவார், கவனிக்கப்படுவார், அங்கீகரிக்கபப்டுவார் என்பதை அழகர்சாமியின் குதிரை பட ஆடியோ விழாவிலேயே இசைஞானி இளையராஜா முன்னுரைத்திருந்தார்.

அந்த விழாவில் இளையராஜா பேசுகையில், இங்கு அப்புக்குட்டி வந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கிடைப்பதைப் போன்ற வரவேற்பு கிடைத்ததைப் பார்த்தேன். அதற்காக அப்புக்குட்டி ரஜினியாகி விட முடியாது. ரஜினி செய்வதை நிச்சயம் அப்புக்குட்டியால் செய்ய முடியாது. அதேபோல இந்தப் படத்தில் அப்புக்குட்டி செய்திருப்பதை ரஜினியால் செய்ய முடியாது.

அழகர்சாமியின் குதிரை படம் வந்த பிறகு அப்படமும், அப்புக்குட்டியும் பெரிதாக பேசப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

அவர் கணித்தபடியே இன்று பேசப்பட்டு வருகிறார் அப்புக்குட்டி. திரையுலகில் நிச்சயம் அப்புக்குட்டி போன்ற வளரும் கலைஞர்களுக்கு இதுபோன்ற விருதுகள் மிகப் பெரிய டானிக் என்பதில் சந்தேகமில்லை.

அப்புக்குட்டி சீக்கிரம் 'பெரிய குட்டியாக' மாறி இதை விடப் பெரிய அங்கீகாரத்தைப் பெறுங்கள்...!

மறுஜென்மத்தில் ஈ-யாக பிறக்கும் ஹீரோவை பற்றிய கதையில் சமந்தா!!!

Thursday, March 08, 2012
சென்னை;;மறுஜென்மத்தில் ஈ-யாக பிறக்கும் ஹீரோவை பற்றிய கதை படமாகிறது. இது பற்றி ‘நான் ஈÕ பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியதாவது: வழக்கமான மசாலா பாணியில் இல்லாமல் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதை. வில்லனால் கொல்லப்படும் நாயகன் மறுஜென்மத்தில் ஈ ஆக பிறக்கிறான். தனது முற்பிறவியில் நடந்தவை அவனுக்கு நினைவில் உள்ளது. இந்நிலையில் வில்லனை சித்ரவதை செய்து எப்படி பழி தீர்க்கிறான் என்பது மீதிக்கதை. இது கற்பனை கதையாக மட்டுமல்லாமல் நகைச்சுவை அம்சம் கொண்ட படமாகும். நானி, சுதீப், சமந்தா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் ÔமகதீராÕ, Ôஎமதொங்காÕ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கில் ‘ஈகாÕ என பெயரிடப்பட்டுள்ளது. செந்தில்குமார்
ஒளிப்பதிவு. இப்படத்துக்காக தென்னிந்தியாவில் முதல்முறையாக ஸ்கார்பியோ கிரேன் இப்படத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, போலந்தில் ஸ்பெஷல் எபெக்ட் செய்யப்படுகிறது. மொத்த பட்ஜெட் ரூ.40 கோடியில் 50 சதவீதம் விஷுவல் எபெக்ட்ஸுக்காக

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்!!!

Thursday, March 08, 2012
சென்னை::இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.

கோலிவுட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி பட்டம்!!!

Thursday, March 08, 2012
கோலிவுட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு, இப்போது கனவுக்கன்னி என்ற பட்டமும் கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் இந்தபட்டத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது.

கோலிவுட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். எடுத்த எடுப்பிலேயே தனுஷூடன் மாப்பிள்ளை படத்தில் நடித்த ஹன்சிகா, அடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் எப்போதும், விஜய்யுடன் வேலாயுதம் என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஹன்சிகாவின் அழகான சிரிப்பும், அம்சமான உடல் அமைப்பும், அவரது துறுதுறு நடிப்பும் தமிழ் நாட்டு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

தற்போது உதயநிதியுடன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிம்புவின் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர விஷாலை வைத்து, சுந்தர்.சி இயக்கும் படத்திலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் ஒன்று நடிகை ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி என்ற பட்டத்தை வழங்கி இருக்கிறது. இதற்காக சிங்கப்பூரில் முகாமிட்டு இருக்கிறார் ஹன்சிகா. இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று என்னை அழைப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதை பெற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இந்த பட்டம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து அதை தக்க வைத்து கொள்ள முயலுவேன் என்று கூறியிருக்கிறார்.

மாற்றுத்திறனாளி அபிநயாவை ஹீரோயினாக்க தடை போட்டனர்!!!

Thursday, March 08, 2012
மாற்றுத்திறனாளி அபிநயாவை ஹீரோயினாக்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார் அவரது தந்தை ஆனந்த். Ôநாடோடிகள்Õ படத்தில் அறிமுகமானவர் அபிநயா. இவர் காது கேளாத, வாய் பேச முடியாதவர். அவரை பற்றி அவரது தந்தை ஆனந்த் கூறியது: அபிநயா பிறந்த 30 நாட்களுக்குள் அவருக்கு காது கேட்காது என்பதை உணர்ந்தோம். 3 வயது வரை அவரால் நடக்க முடியவில்லை. பின்னர் டாக்டர்கள் அளித்த பயிற்சியை அடுத்து நடக்க தொடங்கினார். உடல் ரீதியான குறைபாடுகள் சில சமயம் அவரை காயப்படுத்தினாலும் எதையும் எதிர்கொள்ளும் எண்ணம் வளர்த்துக்கொண்டார். பாஸிடிவ் எண்ணங்களால் தனது குறைபாடுகளை வென்றார். பின்னர் மாற்றுதிறனாளி பள்ளியில் சேர்ந்து உதட்டசைவு மூலம் பேசும் பயிற்சி பெற்றார். Ôநாடோடிகள்Õ படத்தில் அவரை ஹீரோயினாக்க இயக்குனர் சமுத்திரக்கனி எண்ணியபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நடிக்க வைத்தால் காட்சிக்கு ஏற்ப நடிக்கத் தெரியாது. முகபாவனைகள் செய்ய தெரியாது, வேலை வாங்குவது பெரிய கஷ்டம் என்று பலர் கூறினார்கள். அவரை வைத்து படம் எடுப்பது ரிஸ்க் என்றனர். ஆனால் சமுத்திரக்கனி யாருடைய பேச்சையும் ஏற்கவில்லை. அபிநயாவை நடிக்க வைக்க முடியும் என்று தனக்கு முழுநம்பிக்கை இருப்பதாக கூறியதுடன் அதை செயலிலும் காட்டினார். தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அபிநயா அந்த வேடத்தை நிறைவாக செய்து முடித்தார். எந்த வேடத்தையும் அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர் மற்றவர்களுக்கு வரவழைத்திருக்கிறார். தன்னுடைய எல்லையை அவர் உணர்ந்திருக்கிறார். அதற்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துவார்.

நடனத்தில் சொதப்பியதால் கரீஷ்மாவுக்கு கல்தா கொடுத்த பிரபுதேவா!!!

Thursday, March 08, 2012
நடனத்தில் சொதப்பியதால் தனது படத்திலிருந்து கரீஷ்மா கபூரை நீக்கவிட்டார் பிரபு தேவா.பிரபுதேவா இயக்கும் இந்தி படம் ‘ரவுடி ரத்தோட்Õ. இப்படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட கரீனா கபூரின் அக்காவும் நடிகையுமான கரீஷ்மா கபூரை தேர்வு செய்தார் பிரபு தேவா. நடனம் ஆட ஒப்புக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வந்தார் கரீஷ்மா. அவரிடம் போஜ்புரி பாணியிலான காஸ்டியூம் கொடுத்து அணியச் சொன்னபோது, மறுத்துவிட்டார். இதனால் அந்த பாடல் படமாக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பட தயாரிப்பாளர் மீண்டும் கரீஷ்மாவை தொடர்புகொண்டு சமாதானம் செய்தார். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார். பாடலின் ஒத்திகைக்காக அவரை பிரபுதேவா வரவழைத்தார். ஆனால் உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சானாகி இருந்த கரீஷ்மாவை கண்டதும் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார். இப்பாடலுக்கு கொஞ்சம் உடல் எடை கூடிய நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறினார். இருந்தாலும் 2 நாள் ஒத்திகை நடத்தினார். அவரது நடன அசைவுகளில் திருப்தி இல்லாததால் கரீஷ்மாவை நீக்கினார். பின்னர் இப்பாடல் காட்சியில் 3 நட்சத்திரங்களை நடிக்க வைத்து படமாக்கினார். ‘ஏஜென்ட் வினோத்Õ படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை மரியம் ஜாதிரா, முமைத்கான் மற்றும் ஷக்தி மோகன் என்ற இளம் நடிகர் ஆகியோரை வைத்து இப்பாடலை படமாக்கினார்.

சினேகா - கல்யாணமும், கமிட்மெண்‌ட்டும்!!!

Thursday, March 08, 2012
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்று தெ‌ரிவித்திருந்தார் ஜூனில் பிரசன்னாவை திருமணம் செய்யப் போகும் சினேகா. சினேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று பிரசன்னாவும் கூறியிருக்கிறார். ஆக, திருமணம் என்ற புதிய பந்தம் நடிகை சினேகாவை நம்மிடமிருந்து பி‌ரிக்கப் போவதில்லை.

விஷயம் இதுவல்ல. கல்யாண பிஸி காரணமாக சினேகா புதிய படங்களில் நடிக்க யோசிக்கிறார் என்றொரு பேச்சு. அதற்கேற்ப கோச்சடையானில் சினேகாவுக்குப் பதில் கல்யாணியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் இதனை தனது மௌனம் மூலமாகவே மறுத்திருக்கிறார் சினேகா. மேலும் புதிய படமொன்றையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கும் ஹ‌ரிதாஸ் படத்தில் சினேகா நடிக்கிறார். உடன் நடிப்பவர் கிஷோர். ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சினேகா தனது திருமண பரபரப்புக்கு நடுவில் இந்தப் படத்துக்கு கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்தை இயக்க 3 இயக்குனர்கள் போட்டி!!!

Thursday, March 08, 2012
ரேஸ் இந்தி பட ரீமேக்கில் அஜீத்தை இயக்க 3 இயக்குனர்களிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தியில் சைப் அலிகான் நடித்து ஹிட்டான த்ரில்லர் படம் Ôரேஸ்Õ. இதை தமிழில் அஜீத்தை வைத்து தயாரிக்க மும்பை பட நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அஜீத் இப்போது Ôசிறுத்தைÕ சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் Ôரேஸ்Õ ரீமேக்கை இயக்கும் பொறுப்பை விஷ்ணுவர்தனிடம் தரலாமா என அவர் ஆலோசித்து வருகிறார். அதே நேரம், Ôமங்காத்தாÕ மூலம் தனக்கு பெரிய ஹிட் தந்த வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு தரலாமா என்றும் அவர் யோசிக்கிறாராம். சமீபத்தில் டுவிட்டரில், Ôமீண்டும் அஜீத்துடன் பணியாற்ற விரும்புகிறேன்Õ என நாசுக்காக அவருக்கு தூது விட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜீத்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வாங்கச் சொல்லி வற்புறுத்தப் போகிறார் ஜெயம் ரவி!!!

Thursday, March 08, 2012
ஆதிபகவான் இழுத்துக் கொண்டே போகும் சோகத்தை தாடிக்குள் மறைத்தபடி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் ஜெயம் ரவி. ஆதிபகவான் முடிந்தால்தான் தாடியை எடுத்து தடாலடியாக நாலு படங்களில் நடிக்க முடியும்.

ஆதிபகவான் தவிர்த்து பூலோகம் என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோ.

தற்போது தமிழ் விளம்பர உலகை சகோதர நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் குத்தகை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக பொருட்களை வாங்கச் சொல்லி ஜெயம் ரவியும் வற்புறுத்தப் போகிறார். ஆமாம், இவரும் விளம்பரப் படங்களில் நடிக்கயிருக்கிறார்.

அப்படியே ஒரு கேம் ஷோவிலும் தலைகாட்டுங்க பாஸ்... அதையும் ஏன் விட்டு வைக்கணும்.

தமன்னா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்!!!

Thursday, March 08, 2012
பிரபல இளம் நடிகரை காதலித்தார், அதனால்தான் நடிக‌ரின் திருமணத்தை முன்னிட்டு தமன்னா ஆந்திராவுக்கு பார்சல் பண்ணப்பட்டார் என இன்டஸ்ட்‌ரியில் நெருப்போடு புகையை கிளப்பிய தமன்னா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இது டபுள் டமாக்கா.

ஏன் என்றால்... காதல் என்பேன். இதுதான் தமன்னா நடிக்கப் போகும் படத்தின் பெய‌ர். தெலுங்கு நடிகர் ராம் ஹீரோ. கருணாகரன் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.

இந்தப் படம் தனக்கு தமிழில் பழைய இடத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறார் தமன்னா. ரிச்சாவும், அமலா பாலும், நயன்தாராவும் அதற்கு அனுமதிப்பார்களா?

போராட்டத்தை புறக்கணிக்கும் கமல், அ‌‌‌ஜீத் படங்கள்!!!

Thursday, March 08, 2012
சென்ற முறை பெப்சி, படைப்பாளி பிரச்சனை வெடித்த போது பெப்சி தொழிலாளர்கள் அணியில் உறுதியாக இருந்தார் கமல்ஹாசன். பாலுமகேந்திரா போன்றவர்கள் எதிரணியில் இருந்த போதும் கமலின் நிலைப்பாடு பெப்சி ஆதரவாகவே இருந்தது. ஆனால் இன்று...?

ஒருவகையில் இப்போது நடக்கும் வேலை நிறுத்தம் தேவையில்லாதது. நூறு முதல் நூற்றைம்பது மடங்கு சம்பள உயர்வு கேட்டால் எப்படி‌த் தர முடியும்? இதனால் பெப்சிக்கு படைப்பாளிகள் மத்தியில் ஆதரவு குறைவுதான். கமலும் இந்தமுறை கண்டு கொள்ளவில்லை.

பாதிக்கு மேற்பட்ட சங்கங்கள் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டதால் விஸ்வரூபம், பில்லா 2கும்கி போன்ற படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்படைந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தப் படங்களின் படப்படிப்புகள் நடக்கின்றன. அதே நேரம் சிறு முதலீட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன.

பெ‌ரிய நடிகர்களின் கால்ஷீட்டை வீணடிப்பது மிகப்பெ‌ரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் போராட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.