Thursday, January 12, 2012

ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்!!

Thursday, January 12, 2012
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.

பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.

காரணம்... இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்களோ என்ற தயக்கம்தான். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பெரும் வெற்றியைக் குவித்தது. வசூலும் பிரமிக்க வைத்தது.

ஆனால் தமிழில் இந்த மாதிரி கதைகள் எப்படி வரவேற்கப்படும் என கணிக்க முடியாத நிலை. அதனால் அமைதி காத்தனர். இதற்கிடையில், 3 இடியட்ஸுக்கு அடுத்து பெரும் வசூல் குவித்த படம் என இந்தியில் கொண்டாடப்பட்ட தபாங் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியாகி குப்புற கவிழ்ந்துபோனது.

எனவே படம் குறித்து எதுவும் சொல்லாமல், மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம் என அமைதியாகிவிட்டது ஷங்கர் அண்ட் கோ.

இந்த நிலையில் படம் இன்று காலை வெளியாகிவிட்டது. உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை சன் டிவிக்கு தரப்பட்டிருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சன் டிவியை எதிர்த்துதான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் நேற்றே நண்பன் சிறப்புக் காட்சிகள் தொடங்கிவிட்டதால், படம் குறித்து கருத்துகளை பரப்பி வருகின்றனர் பார்த்தவர்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் இந்தப் படம் குறித்து பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வெளியாகியுள்ளதால், நண்பன் குழு பெரும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது.

படம் சுமார் என்றும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய படம் என்றும் கலவையாக கருத்து தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள். கதை வழக்கமானது, பாட்டு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை என்பது இன்னும் சிலரது கருத்து.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என விஜய், ஷங்கர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இன்று மாலைக்குப் பிறகு படத்தின் நிலைமை தெரிந்துவிடும். நாளை காலை தட்ஸ்தமிழில் படத்தின் சிறப்பு விமர்சனத்தை எதிர்பாருங்கள்!

மேள தாளம் முழங்க பாலாபிஷேகம், பீர் அபிஷேகத்துடன் நண்பன் ரிலீஸ்...!

விஜய்யின் நண்பன் படம் உலகம் முழுக்க இன்று(12.01.12) ரிலீசானது. மேள தாளம் முழங்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் விஜய்யின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷகம், பீர் அபிஷேகம் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இந்தியில் வெளியாகி சக்க போடு போட்ட 3-இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்று பெயரில் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா, டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் இன்று உலகம் முழுக்க ரிலீசானதால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இப்படம் ரிலீசான தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட்-கவுட்களுக்கு, அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து கொண்டாடினர். நண்பன் படம் வெற்றி பெற வேண்டி கோயில்களில் அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதனிடையே சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடிகர் விஜய், ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் படக் குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து நண்பன் படத்தை பார்த்து ரசித்தனர்.

உண்ணாவிரதம் இருக்கும் உதவி இயக்குநர்!

Thursday, January 12, 2012
பல்‌வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இயக்குநர் சங்கம் உறுப்பினர் கட்டண உயர்வு, புதிய உறுப்பினர் சேர்க்கை கட்டண உயர்வு, உதவி இயக்குநர்களை வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கும் இயக்குநர் சங்க சட்ட திட்டங்கள் நிரம்பிய புத்தகம் போன்றவற்றிற்கு எதிராக சென்னை - வடபழனி குமரன் காலனி பகுதியில் உள்ள இயக்குனர் சங்க வளாகத்தில், தமிழ் சினிமாவின் இயக்குநர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக இன்று (12/01/12) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார் இயக்குனர் சங்க உறுப்பினரும் துணை, இணை இயக்குனருமான எஸ்.முரளி. இவருக்கு ஆதரவாக எண்ணற்ற துணை, இணை இயக்குநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் சங்கம் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி

கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ரகசியம்! எஸ்.பி.முத்துராமன் பதில்!!

Thursday, January 12, 2012
நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..." பாடல் காட்சியை படம் பண்ணும்போது ஒரு ஷாட் எடுத்து விட்டு அடுத்த ஷாட்டிற்கு தேடினால் ஆள் இருக்கமாட்டான். சினிமா மீது அவருக்கு அப்பொழு‌தே ஆர்வம் அதிகம். அதனால் ஏ.வி.எம். ஸ்டுயோவிற்குள் இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் ஏதாவது ஒரு படத்தை பார்க்க பறந்திருப்பான். உள்ளே படவேலைகள் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது ஒரு படமோ, வி.ஐ.பி.களுக்காக திரையிடப்படும் ஒரு படத்தையோ பார்க்க குறிப்பிட்ட நபர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இருக்காது. அதனால் சிறுவன் கமல், ஆப்ரேட்டர் ரூமிற்குள் போய் அங்கு இருக்கும் துவாரங்களின் வழியாக படக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பான். அந்த கமலை அவரது சித்தப்பா சந்திரஹாசன்(சாருஹாசனின் தம்பி) தேடிக் கண்டுபிடித்து சூட்டிங் ஸ்பாட்டுகளில் கமலை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார். சந்திரஹாசன் இருந்ததால், ஏ.வி.எம்., நிறுவனத்தில் பணிபுரிந்த எங்களுக்கு அந்த சிறுவனிடம் வேலை வாங்குபவது சுலபமாக இருந்தது.

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!!

Thursday, January 12, 2012
நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார்.

ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டின் 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.

பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்களுடன்...

தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.

ஜீவா ரசிகர்களுடம் கொண்டாட்டம்

இந்தப் பட வெளியீட்டை, படத்தின் இன்னொரு நாயகனான ஜீவாவின் ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

'வெண்ணிற ஆடை' மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசலை ஊற்றிய பங்க் ஊழியர்-செம சண்டை!

Thursday, January 12, 2012
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பெட்ரோல் போடுவதற்காக பங்குக்குக் காருடன் போனபோது பெரும் சோதனையை சந்திக்க நேரிட்டு விட்டது. அதாவது பெட்ரோலுக்குப் பதில் பங்க் ஊழியர் டீசலை போட்டு நிரப்பி விட்டார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்குக் காரை விட்ட அவர் பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார்.

பங்க் ஊழியரும் வெண்ணிற ஆடை மூர்த்தியை வெகு அருகே பார்த்த குஷியில் டேங்க்கை படு வேகமாக நிரப்பினார். ஆனால் போட்டு முடிந்த பிறகுதான் தெரிந்தது அது பெட்ரோல் அல்ல டீசல் என்று.

காரும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் மூர்த்தி கடும் டென்ஷனாகி விட்டார். என்னய்யா, இப்படிப் பண்ணிட்டீங்க என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சண்டைக்குப் போய் விட்டார். இதையடுத்து அவரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

அதன் பின்னர் டேங்க்கிலிருந்த டீசலை முழுமையாக வெளியே எடுத்தனர். பிறு டேங்க்கையும் சுத்தப்படுத்தி மறுபடியும் பெட்ரோல் போட்டு நிரப்பி அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல் போட வந்தால் இப்படி டென்ஷனாக்கி அனுப்பி வைத்ததால் அப்செட்டாகித் திரும்பிப் போனார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

அடுத்த வார டிவி காமெடி நிகழ்ச்சியில் இந்த 'பீஸையும்' மூர்த்தி ஒரு 'சீனாக' வைப்பார் என்று எதிர்பார்ப்போம்...!

அடுத்த தடவையாவது பார்த்து ஊத்துங்க தம்ப்ரீ...!