Friday, February 17, 2012

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு டுவிட்டரில் நிர்வாண போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை!!!

Friday, February 17, 2012
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிம்பு நடிக்கிற படத்தில் நடிக்க வேண்டாம் : த்ரிஷா!!!

Friday, February 17, 2012
தேசிய விருது வென்ற இயக்குனர் 'வெற்றிமாறன்' அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படம் 'வடசென்னை'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார். 'வடசென்னை' படத்திலிருந்து ராணா விலகியதற்கு நடிகை த்ரிஷா தான் காரணம் என்று தற்போது கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ராணாவும், த்ரிஷாவும் நண்பர்கள். சிம்பு நடிக்கிற படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதா என்று த்‌ரிஷாதான் தனது நண்பர் ராணாவை கேட்டதாக கோலிவுட் பக்கம் கிசுகிசு எழுந்துள்ளது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் தான் வாய் திறக்க வேண்டும்.

ரஜினியுடன் நடிக்காதது ஏன்? - கத்ரீனா விளக்கம்!!!

Friday, February 17, 2012
ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப்.

கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப்தான் முதலில் அறிவிக்கப்பட்டார். தனது கால்ஷீட்களை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவருக்குப் பதிலி தீபிகா படுகோன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கத்ரீனா விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து கத்ரீனா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கோச்சடையானுக்கு 20 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் என்றார் சௌந்தர்யா. அதற்காக எனது மற்ற பட ஷூட்டிங்குகளை எந்த அளவு அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று பார்த்தேன். அடுத்து நான் ஷாரூக்கான் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் காரணமாக அடுத்த 10 மாதங்கள் எங்கும் நகர முடியாத நிலை. உலகின் வேறு வேறு பகுதியில் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நடக்கும் நிலையில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

கோச்சடையான் உயர்ந்த தொழில்நுட்பம் நிறைந்த படம் வேறு. எனவேதான் நடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் படமொன்றில் நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிப்பேன்," என்றார்.

இளம் நடிகர் மீது திவ்யா திடீர் பாசம்!

Friday, February 17, 2012
இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந்திருப்பதால் இருவர் பற்றியும் கிசுகிசு கிளம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாதவன்' உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. இவர் வெளிநாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டனர். இந்நிலையில் ‘லக்கி' என்ற படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ் என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில் ரீதியான நடிகர். சாந்தமானவர். எளிமையானவர். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரைப்போல் அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு நடிகரை இதுவரை பார்க்கவில்லை. சில சமயம் உணவைக்கூட பொருட்படுத்தாமல் நடிப்பில் கவனமாக இருப்பார். கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே ஒத்திகை பார்த்துக்கொள்வார். நாங்கள் பேச வேண்டிய வசனங்களை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார். மற்றவர்களின் தொடர்ச்சி வசனங்கள் பற்றியும் அவருக்கு ஞாபகம் இருக்கும். சுயநலமற்ற நடிகர். அவரைப் பற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. யாஷ் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்னுடைய பெரிய அரவணைப்பு" என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார் திவ்யா. இதற்கு பதில் அளித்துள்ள யாஷ், ‘திவ்யா திரையுலகில் அனுபவம் உள்ளவர். 2 மணி நேரம் செல் போனில் பேசிக்கொண்டிருந்தாலும் காட்சியை சொன்ன நிமிடத்தில் சரியாக நடித்து முடிக்கும் திறமை உள்ளவர்" என்று தன்பங்குக்கு ஐஸ் வைத்திருக்கிறார். இருவரும் ஒருவருக் கொருவர் ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு புகழ்ந்திருப்பதால் அவர்களை இணைத்து கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

கமலின் மருதநாயகத்தில் ரஜினி?

Friday, February 17, 2012
மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.

1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.

சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க... அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.

கமல் கூறுவதைப் பார்த்தால் அவர்தான் மருதநாயகமாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது.

இதை ரசிகர்கள் ஏற்பார்களா...?