Monday, April 9, 2012

அஸ்க லஸ்க விஜய் தனுஷ்...?!!!

Monday, April, 09, 2012
சென்னை::கௌதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற படத்திற்கு போட்டோ ஷூட் எல்லாம் எடுத்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு அதை பற்றிய எவ்வித தகவலும் வெளியிடாமல் இருப்பதால் அந்த படம் மறுபடியும் துவங்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெகா வசூல் சாதனை படைத்ததாகக் கூறப்படும் 3 படத்தில் நடித்த நடிகர் தனுஷை வைத்து கௌதம் மேனன் படம் இயக்கவிருப்பதாக தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தனுஷ் இந்தியில் நடிக்கும் ரஞ்சனா படத்தின் படப்பிடிப்பு இனி தான் ஆரம்பிக்கப் போகிறது.

கௌதம் மேனன் படத்தில் நடிக்காமல் முருகதாஸ் படத்தில் நடிக்கச் சென்ற நடிகர் விஜய்யின் படம் ஆரம்பிக்கப்படுமா? இல்லை ’3’ படத்தில் கௌதம் மேனன் படத்திற்கு பொருத்தமாக நடித்த தனுஷ் படம் ஆரம்பிக்கப்படுமா? என்பது ரசிகர்கள் மனதில் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

அஜித்தின் பாராட்டை பெற்ற விக்ரம் பிரபு...!!!

Monday, April, 09, 2012
சென்னை::நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு “கும்கி” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படம் லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. ”மைனா” படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், ”கும்கி” படத்திற்காக விக்ரம் பிரபு பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளார். அக்காட்சிகளில் நடிப்பதற்காக நிறைய கஷ்டங்களை பட்டிருக்க்கிறார். இந்த விஷயம் ”தல” அஜித் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதையடுத்து, விக்ரம் பிரபுவுக்கு போன் போட்டு பாராட்டி தள்ளியிருக்கிறார் அஜித். இந்த பாராட்டால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு.

மனம் திறந்த மலபார்!!!

Monday, April, 09, 2012
சென்னை::ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது சட்டைக் கழற்றும் கான் நடிகருடன் எனக்கிருப்பது வெறும் சினிமா நட்புதான் என்றார் மலபார். இப்படி இஷ்டத்துக்கு சுத்துறீங்களே என்ற கேள்விக்கும் பதில், இது சினிமா நட்புதான். இப்போது கானின் பட லிஸ்டில் மலபா‌ரின் பெயர் இல்லை.

மீண்டும் தனது முன்னாள் காதலியுடன் கான் நெருக்கமாகிவிட்டார். இடம் பறிபோகிறதே என்ற பதற்றத்தில், கானுடன் உள்ளது சினிமாவையும் தாண்டிய உறவு என உண்மைப் பேச ஆரம்பித்திருக்கிறார் மலபார். இப்படியே கொஞ்ச நாள் கழிந்தால் இன்னும் பல விஷயங்களை மலபா‌ரின் திருவாயிலிருந்து கேட்கலாம்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday, April, 09, 2012
சென்னை::*பிரசன்னாவிடம் மிகவும் பிடித்தது அவர் பேசும் தமிழ்தானம். அதுதான் அவர் மீது சினேகாவுக்கு காதல் வர காரணமாம்.

*ஜோஷி இயக்கும் மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்க தமிழ் பட ஹீரோயினை தேடுகிறார்கள்.

*ஹாலிவுட் படங்களை தொடர்ந்து கோலிவுட்டில் ‘மை டியர் குட்டிச் சாத்தான்Õ, ‘அம்புலிÕ, ‘அதிசய உலகம்Õ என 3டி படங்கள் உருவாகிறது. ஆனால் பாலிவுட்டில் 3டி படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

*கடந்த வருடம் நல்ல ஆண்டாக அமையட்டும் என்று நடிகர், நடிகைகள் வாழ்த்து அனுப்பியும் சரியாக அமையாததால் இந்த ஆண்டு தனது 50வது பிறந்தநாளுக்கு நட்சத்திரங்கள் அனுப்பிய வாழ்த்தை ஏற்க மறுத்துள்ளார் ராம் கோபால் வர்மா.

*‘கடல்' படத்தில் நடிக்கும் அர்ஜுன், அரவிந்த்சாமி நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்களாம்.

நட்பான நடிகைக்கு வாய்ப்பு.. இயக்குனர் பிடிவாதம்..!!!

Monday, April, 09, 2012
சென்னை::மில்க் நடிகையோடு ரொம்ப நெருக்கமா பழகுறாரு மதராசபட்டின இயக்குனரு. பஞ்ச¢ நடிகரை வச்சு அடுத்த படம் இயக்குறாரு இயக்குனரு. அந்த படத்துல மில்க் நடிகையைத்தான் ஒப்பந்தம் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறாராம்... நிக்குறாராம்... ஆனா, நடிகர் தரப்புலேருந்து இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கலையாம். நடிகர் யாரை சொல்றாரோ அவர்தான் ஹீரோயின்னு தயாரிப்பு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

நமீயான நடிகைக்கு படங்களே இல்லை. ஆனா, சொந்த ஊர்ல நடத்துற பிசினஸ்ல நல்லா காசு பாக்குறாராம்... பாக்குறாராம்... அந்த பணத்தை கொண்டு, நிக்குற உங்க படங்களை வெளியிட முயற்சி பண்ணுங்கன்னு கூட இருக்கிறவங்க உசுப்பி விடுறாங்களாம்... விடுறாங்களாம்... அந்த படங்கள்ல நடிச்சதோடு என் வேலை முடிஞ்சுது. எனக்கும் அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு நடிகை உஷாரா எஸ்கேப¢ ஆகுறாராம்... ஆகுறாராம்...

சமீபத்துல பர்த்டே பார்ட்டி கொண்டாடினாரு தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு. அப்போ மாஸ்டரோடு நெருக்கமா போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, பர்த்டே வாழ்த்து சொன்னாரு மூணுஷா நடிகை. வழக்கமா மாஸ்டர் பிறந்த நாளுக்கு போன்ல கூட மூணுஷா வாழ்த¢து சொல்ல மாட்டாராம்... மாட்டாராம்... ஆனா நயனம் பிரிஞ்சதும் நேரா சந்திச்சு வாழ்த்து சொன்னதோடு, மாஸ்டரு இந்தியில இயக்கப்போற அடுத்த படத்துல நடிக்க நடிகை சான்ஸ் கேட்டாராம்... கேட்டாராம்...

புரோட்டா கடைக்கு சகாக்களோடு விசிட் அடித்த எஸ்.ஜே.சூர்யா!!!

Monday, April, 09, 2012
தென்காசி::தென்காசியில் உள்ள பிரபலமான புரோட்டா கடைக்கு திடீரென தனது நண்பர்கள் சகிதம் புரோட்டா சாப்பிட வந்தார் இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இதனால் ரசிகர்கள் குஷியாகி அவரை சுற்றி வளைத்துப் பேசத் தொடங்கினர்.

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா நெல்லை மாவட்டத்தை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார். அப்படத்திற்கான இடம் தேர்வு, லொகேஷனுக்காக குற்றாலத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பிரபலமான பார்டர் புரோட்டா கடைக்கு 9.30 மணி அளவில் தனது சகாக்களோடு சாப்பிட சென்றார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவரை மொய்க்கத் தொடங்கினர்.

உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்ப அதிரிச்சி கொடுத்தார். சினிமாக்காரர்கள் என்றாலே மக்களிடம் இருந்து தூரம்போல் தான் நிற்பது வழக்கம். ஆனால் தற்போது சரத்குமார் வரிசையில் எஸ்ஜே சூர்யாவும் இணைந்து மக்களோடு நட்பையும், நலன்னையும் விசாரிப்பது புதிய முயற்சி என்று ரசிகர்கள் பாராட்டினர்.

அடுத்த படம் எப்படி இருக்கும் சூர்யா..'அ...ஆ' மாதிரி இருக்குமா, அல்லது அதை விட பெட்டரா இருக்குமா...?

தோனிக்காக ஸ்பெஷல் விமானத்தில் சென்னை வந்த லட்சுமி ராய்!!!

Monday, April, 09, 2012
சென்னை::ஐபிஎல் துவக்கவிழாவுக்கு வேறு யார் வந்ததை விடவும், லட்சுமிராயின் வருகைதான் ரொம்ப விசேஷமாக பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த லட்சுமிராய், மாலையில் நடந்த துவக்க விழா நிகழ்வுகளில் அனைவரது கவனைத்தையும் ஈர்க்கும் அளவு அசத்தல் உடையில் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் வேறு யாருக்கும் கிடைக்காத தனி மரியாதை லட்சுமி ராய்க்கு. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியது தாஞ் கோரமண்டல் ஹோட்டலில். இங்குதான் தோனி உள்ளிட்ட வீரர்கள் தங்கியிருந்தனர். லட்சுமிராய்க்கு 'பிரசிடென்சியல் சூட்' ஒதுக்கியிருந்தனர். பொதுவாக நடிகைகள் இந்த அளவு ஆடம்பர சூட்டில் தங்குவதில்லை.

இதன் பின்னணி என்னவென்பது ஊரறிந்த ரகசியம் என்பதால், இதுகுறித்த வதந்திகள் எதற்கும் பதில் சொல்லும் மூடில் கூட இல்லையாம் லட்சுமிராய்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், "நான் ரொம்ப சிம்பிளான பெண். இதுதான் என் லைப்ஸ்டல். எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன். சில விஷயங்கள் ரொம்ப பர்சனலானவை. அதுகுறித்து வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை," என்றார் மையமாக!

அவரவருக்குப் பிடித்த அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாம்!

நயன்தாரா அளித்த ஈஸ்டர் விருந்து!!!

Monday, April, 09, 2012
சென்னை::கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் / வதந்திகளில் அதிகம் அடிபட்டவர் இந்தியாவிலேயே நயன்தாரா ஒருவராகத்தான் இருக்க முடியும்.

அவரைப்பற்றிய செய்திகளில் இன்னும் ஒன்றாக இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நயன்தாரா பிறப்பால் கிறிஸ்தவர். இடையில் தன் மனம் கவர்ந்த பிரபு தேவாவுக்காக அய்யர் வைத்து மந்திரம் முழங்க இந்து மதத்துக்கு மாறிவிட்டார்.

இப்போது பிரபு தேவாவைப் பிரிந்த நயன், மீண்டும் ஈஸ்டர் கொணிடாட ஆரம்பித்துள்ளார்.

நேற்று ஈஸ்டருக்காக ஹைதராபாதில் தனக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் நண்பர்களை மட்டும் வரவழைத்து பெரிய பார்ட்டி ஒன்றைக் கொடுத்தாராம்.

நயன்தாரா கூறுகையில், "வழக்கமாக ஈஸ்டர் தினத்தில் அம்மாவின் சமையலை ஒரு பிடிபிடிப்பேன். ஆனால் இந்த முறை ஷூட்டிங்கில் இருந்தேன். ஹோட்டல் சாப்பாடுதான். ஆனால் ஈஸ்டருக்கு ஸ்பெஷலாக இருந்தது

நேற்று மாலை நண்பர்களுடன் சந்தோஷமாக ஈஸ்டர் மகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.

'3' படத்தை தாய் சரிகா பாராட்டினார்: ஸ்ருதி ஹாசன் பேட்டி!!!

Monday, April, 09, 2012
சென்னை::நடிகர் கமலஹாசனின் மகளும், சமீபத்தில் வெளியான '3' படத்தின் நாயகியுமான ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:-

தமிழ் தவிர பிற மொழிகளிலும் நடித்து வருகிறேன். எனினும், அதிகமாக பேசப்படும் படம் '3' ஆகும். எனது கேரக்டரும், நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. நான் நடிக்கும் படம் வெளியாகும்போது எனது நெருங்கிய நண்பர்கள் இருவரிடமும், எனது பெற்றோரிடமும் அந்த படத்தை பற்றிய அவர்களது கருத்தை கேட்பேன்.

எனது தந்தை ஒரு நடிகர் என்ற முறையில், அவரின் கருத்தையும் கேட்பேன். ரொம்ப பிடித்திருப்பதாக அவர் சொல்வார். நான் சந்தோஷப்படுவேன். உண்மையிலேயே அவருடைய மகள் என்பதற்காக என்னை அவர் பாராட்டமாட்டார். விமர்சிப்பதில் அவர் பாரபட்சம் காட்டமாட்டார். அவர் விமர்சனம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும்.

அவரது விமர்சனம் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அவர் ஒருபோதும் அறிவுரை கூறுவது கிடையாது. ஆலோசனைகளை மட்டுமே வழங்குவார். சினிமாவில் நடிக்கும்போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். பிற பாத்திரங்களுடன் (ரோல்) ஒப்பிட்டு பார்க்க கூடாது என்பார். அவரது இந்த பாடமே, சினிமாவில் நான் வெற்றி பெற வழிகாட்டியாக இருக்கிறது.

'3' படத்தின் இந்தி மொழி பதிப்பை பார்த்து விட்ட எனது தாயார் சரிகா, என் நடிப்பை பாராட்டினார். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், அந்த பாத்திரமாகவே நான் மாறி விடுவேன். '3' படத்தில் வரும் அழுகை காட்சி கூட, சினிமாவுக்காக ஒப்புக்காக அழவில்லை. அந்த பாத்திரத்தின் வலியை உணர்ந்து அழுதேன்.

'3' படத்துக்கு பிறகு, நான் நடித்து வரும் படம் 'கபால் சிங்', 'தபாங்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். கதாநாயகள் பவன் கல்யாண். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. எனக்கு சந்தோஷமான அனுபவத்தை இந்த படம் தந்தது. நான் எந்த மொழியில் நடித்தாலும், அந்த கேரக்டருக்கு தகுந்தவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.

கிராமப் பெண் வேடம் எனக்கு சவாலாக அமைந்திருந்தது. அதையும் சிறப்பாக செய்தேன். நான் சிறு வயது முதலே கவிதைகள் எழுதி வருகிறேன். விரைவில் இவற்றுக்கு இசை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். எனக்கு இசையும் ரொம்ப பிடிக்கும். முறைப்படி இசை கற்றிருக்கிறேன். சமயம் வரும் போது இசை அமைப்பேன். எனது பாடலையும் சினிமாவில் பயன்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாமதமாகும் அஜீத்தின் ‘பில்லா 2’ படவெளியீடு!!!

Monday, April, 09, 2012
சென்னை::ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் ‘பில்லா 2’ படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ரீ ரெக்கார்டிங், டப்பிங் என இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் மே 25-ல் ரிலீசாகும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஜுன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். ஆனால் பாடல் வெளியீட்டை மட்டும் இம்மாதம் இறுதியில் வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிங்குசாமி படத்தில் நடிக்க அசின் மறுப்பு!!!

Monday, April, 09, 2012
சென்னை::லிங்குசாமி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அசின். தமிழில் மாதவன், ஆர்யா நடிக்க லிங்குசாமி இயக்கி தயாரித்த படம் ‘வேட்டைÕ. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க முடிவு செய்தார் லிங்குசாமி. இதற்கான ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறார். இரட்டை ஹீரோக்களில் ஒருவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக மாதவனை (தமிழில் நடித்த அதே வேடம்) நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார். தமிழில் அக்கா, தங்கை வேடங்களில் சமீரா ரெட்டி, அமலா பால் நடித்தனர். அந்த கதாபாத்திரங்களுக்கும் ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர். இருநாயகிகளில் ஒருவராக நடிக்க அசினிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்தியில் கான் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் அசின், ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஷாஹித் கபூர் போன்ற நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார். மேலும் ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால் மட்டுமே படங்களை ஒப்புக்கொள்கிறார். அத்துடன் இப்படத்தில் அக்கா, தங்கை என இருபாத்திரங்கள் இருப்பதால் நடிக்க தயக்கம் காட்டினார். சோலோ ஹீரோயினாக நடிக்கவே விரும்பும் அசின் இதில் மற்ற ஹீரோயினுக்கு அக்காவாகவோ, தங்கையாகவோ நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டபோது, அவரும் நடிக்க மறுத்துவிட்டாராம். நடிகர், நடிகைகள் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்தி ‘வேட்டைÕ ஷூட்டிங் தொடங்குவதும் தாமதம் ஆகி வருகிறது.

பேராண்மையை தொடர்ந்து அரவான் படமும் பெயர் வாங்கி கொடுத்ததில் தன்ஷிகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்!!!

Monday, April, 09, 2012
சென்னை::பேராண்மையை தொடர்ந்து அரவான் படமும் பெயர் வாங்கி கொடுத்ததில் தன்ஷிகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் நடிகைகளில் தற்போது இவர்தான் முன்னணியில் இருக்கிறார். தமிழிலேயே பேசி நடிப்பதும், தன் உயரமும் தான் எனக்கு பிளஸ் பாயிண்ட் என்கிறார் தன்ஷிகா.

அவர் மேலும் கூறியதாவது:- எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் என் கேரக்டரையும், நடிப்பையும் பார்த்து தான் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும்.

மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன். அரவான் படத்திற்காக நிறைய ஹோம்-ஒர்க் செய்தேன். சென்னையில் வளர்ந்ததால் கிராமத்து பெண் பாடிலேங்கு வேஜ் கொண்டு வர நிறைய சிரமப்பட்டேன். அதோடு, மதுரை பாசையும் சரியாக வராமல் கஷ்டப்பட்டடேன். என்றாலும் டப்பிங் வரும் போது சரி செய்து விட்டேன்.

போட்டின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிச்ச மூணு படங்களிலேயே வெரைட்டியான ரோல் பண்ற நடிகைன்னு பெயர் கிடைச்சிருக்கு. பேராண்மையில் தைரியமான பொண்ணு. மாஞ்சாவேலுவில் ரொமான்ஸ். அரவானில் கிராமத்துப் பெண். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதனால் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.