Thursday, February 16, 2012

ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!!!

Thursday, February 16, 2012
மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் விரலை ரசிகை ஒருவர் கடித்துவிட்டார். பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை ஒன்றை நேற்று திறந்து வைக்க வந்தார். அவர் வருவது அறிந்த ரசிகர்கள் கடை முன்பு கூடிவிட்டனர். ஜான் கடையைத் திறந்து வைத்துவிட்டு அந்த வளாகத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க முந்தியடித்தனர். அப்போது ஒவ்வொரு ரசிகரும் ஜானுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று ஒரு ரசிகை அவரது விரலைப் பிடித்து கடித்துவிட்டார். உடனே அவர் வலி தாங்காமல் கத்திவிட்டு அந்த ரசிகையை தள்ளிவிட்டார். இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அங்கிருந்து சென்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அநத ரசிகை ஹைய்யா, நான் ஜான் ஆபிரகாமை தொட்டுவிட்டேனே என்று குஷியாக கத்திவிட்டு ஓடினார். கடிச்சதோட விட்டாரே.......

மூன்று வேடங்களில் விஷால்!!!

Thursday, February 16, 2012
விமல், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கபே' படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. இதையடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில், மூன்று வேடங்களில் விஷால் நடிக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி கூறியதாவது: 'மசாலா கபே' இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. பிறகு விஷால் படம் இயக்குகிறேன். கதை விவாதம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏப்ரலில் ஷூட்டிங். தற்போது எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

உன்னோடு ஒருநாள்!!!

Thursday, February 16, 2012
துரை கார்த்திகேயன் எழுதி, இயக்கும் படம், 'உன்னோடு ஒருநாள்'. ஜார்சி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான், அர்ஜுன், நீலம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய்ராஜ். இசை, சிவப்பிரகாசம். படம் பற்றி துரை கார்த்திகேயன் கூறுகையில், 'காதலுக்கும், நட்புக்கும் இடையே வாழும் சிலருடைய மனநிலை குறித்து படம் சொல்கிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் முக்கிய காட்சிகள் படமானது' என்றார்.

கோச்சடையானுக்காக சென்னை வந்தார் தீபிகா!!!

Thursday, February 16, 2012
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது.

"படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முறையாக ‘பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது.

புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

Thursday, February 16, 2012
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன்.

பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம்.

பெற்ற தாய்க்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே வரம் அளித்த பெருமைக்குரிய தர்மவான் கர்ணன். தர்மதேவனையும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட வைத்த கர்ணன் என்ற மகாபாரதப் பாத்திரம் உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அந்தப் படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.

இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய பி ஆர் பந்துலுவுக்கு இந்த நூறாவது ஆண்டு வருடம் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில், படத்தை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர், இதனை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

தொழில்நுட்ப ரீதியில் இன்றைக்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை 5.1 ஒலியமைப்புடனும், மேம்படத்தப்பட்ட தரத்துடனும் வெளியிடுகிறார்கள். அதே நேரம் ஒரிஜினல்தன்மை மாறாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர். பின்னர் ஒரு புதிய படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவார்களோ அதே மாதிரி கர்ணனையும் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஹலோ பிபாஷா, அது என்னுடைய கவுன்!

Thursday, February 16, 2012
ரமோனாவின் இபெல்லா கவுன்கள், பாலிவுட் கதாநாயகிகள் மத்தியில் அத்தனை பிரபலம். பிபாஷா பாசுவுக்கும் அவர்தான் டிரஸ் மேக்கராக இருக்கிறார். இந்த நிலையில் ரமோனாவை அணுகி ஜோடி பிரேக்கர்ஸ் விளம்பர நிகழ்ச்சிகளில் அணிய சில கவுன்கள் தருமாறு கேட்டுள்ளார் பிபாஷா.

வழக்கமாக ரமோனா இதுபோன்ற பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஆடைகள் கொடுப்பதில்லை. ஆனால் பிபாஷாவை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால் 8 லேட்டஸ்ட் டிசைன் கவுனகள் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்தக் கவுன்கள் பல நாட்கள் கழி்த்து தான் அவரது கைக்கு திரும்பி வந்தது. அதை கொடுக்க வந்த வந்தவர், பிபாஷா அதை அணியவேயில்லை என்று தெரிவித்துச் சென்றுள்ளார். இதனால் குழப்பமாகி விட்டது ரமோனாவுக்கு.

இந்நிலையில் தற்செயலாக ஒரு நாளிதழைப் பார்த்த ரமோனா, அதில், ஜோடி பிரேக்கர்ஸ் பட போஸ்டரில் பிபாஷாவுக்குத் தான் டிஸைன் செய்து கொடுத்த ரோஸ் நிற கவுன் அணிந்தபடி போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் கொடுத்த பச்சை நிற கவுன் ஒன்றை அணிந்து ஜீ டிவியின் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியிலும் பிபாஷா வந்ததையும் பார்த்தார்.

உடனே தான் பிபாஷாவுக்காக கொடுத்த உடைகளைத் திரும்பக் கொடுத்த வந்த நபரைப் போனில் பிடித்து பிபாஷா, தான் கொடுத்த கவுன்களைத்தான் அணிந்துள்ளார், எனவே அதற்கான பணத்தை அவர் கொடுக்க வேண்டும் என்று ரமோனா கேட்டுள்ளார். அதற்கு அந்த ஸ்டைலிஸ்ட் அநத் பச்சை கவுன் பிபாஷாவுடையது என்று தெரிவி்த்துள்ளார். இதுதொடர்பாக பிபாஷாவுக்கு போன் செய்தால் அவர் எடுக்கவே இல்லையாம்.

சரி, பச்சை தான் பிபாஷாவுடையது, அப்படியானால் மீதமுள்ள 7 கவுன்களுக்கு யார் பணம் கொடுப்பாங்க என்று தெரியவில்லை.

பொம்பளைங்க சண்டை அவங்களே எப்படியாச்சும் தீர்த்துப்பாங்க, நமக்கெதுக்கு வம்பு...!

2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் டிக்கெட்!!!

Thursday, February 16, 2012
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து அதர்வா, அமலாபால் நடித்து நாளை வெளிவரவிருக்கும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. இவற்றில் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஐ.டி.நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன.

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் ஒரு புதுமுக இயக்குனரின் படத்துக்கு இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி - ஜாக்கி ஷராப்!

Thursday, February 16, 2012
ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார்.

ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். பல வெற்றிப் படங்களின் நாயகன். இப்போதும் பிஸியான நடிகர்.

தமிழில் முதல்முறையாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். அடுத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "கோச்சடையானில் நடிக்குமாறு சௌந்தர்யா கேட்டுக் கொண்டார்.

சினிமாவில் ரஜினி ஒரு உன்னதமான அடையாளம். என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன், அவர் மீது மதிப்பு கொண்டுள்ளேன். அவர் கேட்டால் நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். ரஜினிக்காக எதையும் செய்வேன்.

கோச்சடையான் ஸ்கிரிப்ட் மிக அருமையாக இருந்தது. எனது கேரக்டரும் வலுவானது. எல்லோருமே ஏ கிரேடு தொழில்நுட்பக் கலைஞர்கள். சௌந்தர்யா பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறார். எனக்கு இந்தப் படம் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என நம்பிக்கை உள்ளது.

அவரது எளிமை பிடிக்கும். அவரது உச்ச நட்சத்திர அந்தஸ்து ரொம்பப் பிடிக்கும். இந்தியாவின் நட்சத்திரமான அவர், ஹாலிவுட்டின் எந்தப் பெரிய நடிகரையும் விட உயர்வானவர். என்னைத் தவிர, என் மனைவி விரும்பும் ஒரே நடிகர் ரஜினிதான். அவர் மீது அந்த அளவு அன்பு!," என்றார் ஜாக்கி.