Thursday, March 29, 2012

சீனு ராமசாமியின் 'நீர்பறவை'... ஹீரோயின் சுனேனா?.

Thursday, March, 29,2012
தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்றுப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் படம் நீர்பறவை.

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் பிந்து மாதவி. வெப்பம், கழுகு படங்களில் ஹீரோயினாக நடித்தவர். ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நீர்ப் பறவை படப்பிடிப்பும் தள்ளிப் போக, பிந்து மாதவியின் கால்ஷீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் விளைவு அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். இப்போது சுனேனாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தம்பி ராமைய்யா, சரண்யா, யோகி தேவராஜ், ப்ளாக் பாண்டி உள்பட பலரும் நடிக்கிறார்கள். தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு இசையமைத்த ரகுநந்தன் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். இவர் இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடும் ஒரு பாடல் சமீபத்தில் பதிவாக்கப்பட்டது.

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!!!

Thursday, March, 29,2012
பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.

முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.

ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.

11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!!!

Thursday, March, 29,2012
உலகக் காதலர்களின் காவியம் என்று போற்றப்படும் டைட்டானிக்கை இப்போது 3 டியில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையை உருவாக்கி டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்தது டைட்டானிக்.

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் செய்த வசூல் சாதனை உலக சினிமாவை அதிரவைத்தது. குறிப்பாக இந்தியாவில் வெளியான வேறெந்த ஒரிஜினல் படத்தையும் விட பெரும் வசூலைக் குவித்தது இந்தப் படம்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 2-டி மற்றும் 3-டி தொழில்நுட்பங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

வருகிற ஏப்ரல் 5-ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது 3 டி டைட்டானிக். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.

முன்பை விட வண்ணமயமாக, அனைத்தும் நம் கண்முன்னே நடப்பது போன்ற தத்ரூப தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் 3டியை ஒரு முறை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தைப் போலவே இதிலும் காட்சிகள் அப்படியே கைக்கெட்டும் தூரத்தில் நடப்பது போலத் தெரியுமாம்.

அந்த லியனார்டோ - வின்ஸ்லெட்டின் நீண்ட நேர ரொமான்ஸ் காட்சி... அதுவும் 3 டி எஃபெக்டில்...

இதை நினைத்துதான் நாயகி கேத் வின்ஸ்லெட்டும் பயப்படுகிறாராம். லண்டனில் நடந்த இந்த 3 டி சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த அவர், "அய்யோ அந்தக் காட்சி 3 டியிலா... எனக்கு ரொம்ப கூச்சமாகவும் பயமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த காட்சியை மட்டும் நான் பார்க்க மாட்டேன்.

ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அற்புதமான படைப்பை எனது இரு குழந்தைகளுடன் பார்ப்பது மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்," என்றார்.

மீண்டும் நடிக்க வருகிறார் மந்த்ரா: '30 வயசுதான்... குண்டாயிட்டேன்'!!!

Thursday, March, 29,2012
தமிழ் சினிமாவில் ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி, நிறைய படங்களில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்து, திருமணம் செய்து கொண்டு காணாமல் போன மந்த்ரா மீண்டும் நடிக்க வருகிறார்.

மந்த்ரா நடிக்க வந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 14-தானாம்! தமிழ்-தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

2004-ல் சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டது.

30 வயசுதான்... குண்டாயிட்டேன்

மீண்டும் வாய்ப்பு தேடும் அவர் தனது நடிப்பு ஆசை பற்றிக் கூறுகையில், "சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். திருமணம் ஆனாலும் எனக்கு வயசு 30தான். ஆனால் என் உடம்பு கொஞ்சம் குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்.

எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

இன்னொரு ரவுண்ட் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன்.

நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்,'' என்றார்.

சமரசம் பேசி நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயலவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!!!

Thursday,March,29,2012
நயன்தாராவும் பிரபு தேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஒரு வருடத்துக்கு முன் இருவரும் திருமணத்துக்கு தயாரானார்கள். பிரபு தேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்குப்போட்டார். கடைசியாக நடித்த 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' தெலுங்கு படப்பிடிப்பில் அவருக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா நடந்தது.

கண்ணீர் மல்க எல்லோரிடமும் விடை பெற்றார். பிரபுதேவாவும் முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். விரைவில் நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் என்று அறிக்கையும் வெளியிட்டார். இப்படி இருவரும் திருமணத் துக்கு தயாரான நிலையில் திடீரென காதலை முறித்துக் கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். மூன்று தெலுங்கு படங்களி லும் ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையில் நயன்தாராவைவும் பிரபுதேவாவையும் மீண்டும் சேர்த்து வைக்க நடிகை குஷ்பு முயற்சிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

பிரபுதேவாவும் நயன்தாராவும் எனக்கு நல்ல நண்பர்கள். பிரபுதேவாவை எனக்கு ரொம்ப நாட்களுக்கு முன்பே தெரியும். அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அறிவேன். பிரபு தேவா தனித்து முதன் முதலில் பாடலுக்கு நடனம் அமைத்தது எனது படத்தில்தான். நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்து நான் சமரசம் பேசவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்.

இருவரையும் மதிக்கிறேன். அவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கமாட்டேன். அவர்களுடன் நட்பை தொடர்வேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.