Sunday, March 11, 2012

த்ரிஷா அம்மா ஏன் தான் இப்படி செய்றாங்களோ..: லக்ஷ்மி ராய்!!!

Sunday, March 11, 2012
லக்ஷ்மி ராய் த்ரிஷாவின் அம்மா உமா மீது படுகோபமாக உள்ளார். உமா லக்ஷ்மி ராயைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதாக அவர் நம்புவதுதான் கோபத்திற்கு காரணம்.

மங்காத்தாவில் நடித்தபோதே லக்ஷ்மி ராய்க்கும், த்ரிஷாவுக்கும் முட்டிக் கொண்டது. அன்று முதலே இருவரும் உர்ரென்று இருக்கிறார்கள். திரிஷா ரோலுக்கு முதலில் என்னைத்தான் கேட்டார்கள் என்று லக்ஷ்மி ராய் கூற, திரிஷா தரப்புக்கு பற்றிக் கொண்டது.

இந்நிலையில் ஜீவா, கார்த்தி கூட எல்லாம் நடிக்க முடியாது என்று லக்ஷ்மி ராய் கூறியதாக பேச்சுக்கள் கிளம்பின. இதனால் லக்ஷ்மி ராய் காட்டமாகி விட்டார்.

இது குறித்து அவரிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

மங்காத்தாவின்போது எனக்கும், த்ரிஷாவுக்கும் இடையே பிரச்சனை இருந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு நான் அவருடன் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அவரின் அம்மா உமா தான் வீணாக பிரச்சனையை பெரிதாக்குகிறார். தேவையில்லாமல் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வருகிறார்.

நான் ஜீவா, கார்த்தி கூட நடிக்க மாட்டேன் என்று கூறவில்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் தான் அவர்களின் படங்களில் நடிக்க மறுத்தேன் என்றார்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி, நடிக்கும் 'இசை' என்ற படத்தில் தனக்கு ஜோடியாக லக்ஷ்மி ராயைத் தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

15 டேக் வாங்கிய நடிகை கோபமான இயக்குனர்!!!

Sunday, March 11, 2012
உலக ஹீரோவோட ரெண்டாவது வாரிசுக்கும் நடிக்க வாய்ப்புகள் குவியுதாம்... குவியுதாம்... எல்லாமே தெலுங்கு பட வாய்ப்பா இருக்காம். அதனால அம்மாகுலம் வேணாம்னு சொல்றாராம். பாலிவுட்லதான் நீ அறிமுகமாகணும்னு அம்மா அன்பு கட்டளை போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்... வாரிசும் வாய்ப்புக்காக காத்திருக்காராம்... காத்திருக்காராம்...

சைலன்ட் குரு படம் தந்த இயக்கம் படத்துல நடிக்க காட்டன் வீர ஹீரோகிட்ட பேசினாங்க. கால்ஷீட் கொடுக்கிறதுல பிரச்னை எழுந்துச்சு. இதனால கோ நடிகர்கிட்ட பேசினாங்களாம்... பேசினாங்களாம்... இதை தெரிஞ்சிக்கிட்ட பிரகாச ஹீரோ உர்ராயிட்டாராம்... உர்ராயிட்டாராம்... அந்த இயக்கத்துக்கு எப்படியாவது கால்ஷீட் கொடுன்னு காட்டன் வீர தம்பி நடிகர்கிட்ட சொல்லியிருக்காராம்... சொல்லியிருக்காராம்...

பெல் இயக்குனரு படத்தோட முதல் ஷெட்யூல் தொடங்கியிருக்கு. முதல் நாள் ஷூட்டிங்ல சமந்த நடிகை வசனமே இல்லாத ஒரு காட்சிக்கு 15 டேக் வாங்கினாராம்... வாங்கினாராம்... பெல் இயக்கம் கடுப்பாகி போயிட்டாராம்... போயிட்டாராம்... கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியாம டெக்னீஷியன்கள் மேல எரிஞ்சி விழுந்தாராம்... விழுந்தாராம்...

ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாது!!!

Sunday, March 11, 2012
ஓரெழுத்து படம் வந்த போது ஓவராகத் துள்ளினார்கள் படத்தின் நாயகியும் முன்னாள் நாயகியுமான அவரது அம்மாவும். கதை சொல்லப் போனவர்களை கதவை சாத்தி ஓடவிட்டார்கள். ர‌ஜினியே இறங்கிவந்து கால்ஷீட் கேட்பார் என்று மகளுக்கும், அம்மாவுக்கும் அப்படியொரு அகந்தை நினைப்பு.

ஆனால் மகளை யாரும் சீண்டவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின் இமயம் மகளுக்கு வாய்ப்பளித்தார். ஆனால் சம்பளம் ரொம்ப கம்மி. இதனால் தெலுங்கில் மாமி நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இனியாவது மகளும் மம்மியும் திருந்துவார்களா?

டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோயினாக லட்சுமிராயை தேர்வு செய்து ‌இருக்கிறார்!!!

Sunday, March 11, 2012
டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோயினாக லட்சுமிராயை தேர்வு செய்து ‌இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே இஞைர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். வாலி, குஷி, நியூ என்று தொடர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாக வலம் வந்தார். சமீபத்தில் ஷங்கரின் நண்பன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

விரைவில் இசை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இயக்கி நடிப்பதுடன் படத்தின் இசையமைப்பு பொறுப்பையும் முதன்முறையாக ஏற்று இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கு ஏற்ற கதாநாயகியை தேடிவந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றி திரிந்த அவருக்கு கடைசியாக பளிச்சிட்ட முகம் லட்சுமிராய் தான். உடனே அவரையே ஹீரோயின் ஆக்கிவிட்டார்.

சமீபத்தில் தமிழில், லட்சுமிராய் நடித்த காஞ்சனா மற்றும் மங்காத்தா படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட்டாகின. ஆனாலும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்போது எஸ்.ஜே.சூர்யா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக எஸ்.ஜே.சூர்யா பட ஹீரோயின்கள் அனைவரும் முன்னணி ஹீரோயின்களாக (சிம்ரன், ஜோதிகா) வலம் வந்தவர்கள். அந்த அதிர்ஷ்டம் லட்சுமிராய்க்கும் தொடருமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

ஜிஎன் குமரவேல் இயக்கத்தில் சினேகா நடிக்கும் ஹரிதாஸ்

Sunday, March 11, 2012
நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களுக்குப் பிறகு ஜிஎன் குமரவேல் இயக்கும் புதிய படம் ஹரிதாஸ். சினேகா - கிஷோர் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் தாஸ் என்ற சிறுவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் ஆண்டணி இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தப் படம் குறித்து செய்தயாளர்களிடம் கூறியதாவது-

ஹரிதாஸ் என்ற தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. அதனால் வைத்தோம். இந்தத் தலைப்பை வைத்து இது காதல் படம்தான் என முடிவு செய்துவிட வேண்டாம். காதல், பாசம், குடும்ப உறவுகள் என அனைத்தும் உண்டு. எட்டு கதாபாத்திரங்களின் அன்பைச் சொல்லும் கதை.

இந்தக் கதையை நானே உருவாக்கினேன். இதற்கு முன் நான் இயக்கிய இரு படங்களின் கதை என்னுபடையதல்ல. அந்த வகையில் இதுதான் எனது முதல் படம் எனலாம்.

இந்தக்கதைக்கு பொருத்தமானவர் என்பதால் சினேகாவை ஒப்பந்தம் செய்தோம். அவருக்கு திருமணம் என்பது தெரிந்துதான் ஒப்பந்தம் செய்தோம். மிகச் சிறந்த நடிகை அவர். இன்னும் பெரிய உயரத்துக்கு வருவார். என்னைப் பொறுத்தவரை,சினேகா திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மஞ்சுளா மற்றும் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர் வேல் முருகன் என் மீது பெரும்நம்பிக்கை வைத்து நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். சென்னையில் படப்பிடடிப்பு நடத்துவது எத்தனை பெரிய சிரமம் என்பது தெரியும். ஆனால் எனக்கு அந்த கஷ்டமேதெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஜூனில் இந்தப் படத்தை முடித்துவிடுவோம், என்றார்.

கல்யாணராமன், மீண்டும் கோகிலா போன்ற படங்களைத் தந்த பிரபல இயக்குநர் ஜிஎன் ரங்கராஜனின் மகன்தான் ஜிஎன்ஆர் குமரவேலன் என்பது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவில் வாழும் இந்திய பெண் நடிக்கும் படம்!!!

Sunday, March 11, 2012
புதிய தமிழ் படத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய பெண் ஹீரோயினாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆர்.என்.கே. இவர் ‘முழக்கம்Õ என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: இது அரசியல் கதை அல்ல. ஒன்றுகூடி உரக்க ஒலிக்கும் குரலை முழக்கம் என்பார்கள். காதலைபற்றி உரக்கச் சொல்லும் கதை என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. ஆக்ஷன், சென்டிமென்ட், லவ் உள்ளடக்கிய கதை. சமுதாயத்தில் நடக்கும் சில அநியாயங்களை பற்றியும் கடுமையாக சாடி வசனங்கள் இடம்பெறும். காதலிக்கு ஒரு குறை இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவளை ஏற்க சம்மதிக்கிறான் ஹீரோ. ஆனால் அதுவே அவர்களுக்குள் பிரச்னையாக உருவெடுக்கிறது. புதுமுகங்கள் ஜோடியாக நடிக்கும் இதில் அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பத்தை சேர்ந்த பெண் ஹீரோயினாக நடிக்கிறார். ஒப்பந்தம் பற்றி பேச்சு நடக்கிறது. சென்னை, மதுரை தவிர வெளிநாட்டிலும் ஷூட்டிங் நடக்கிறது. ஆர்.ஆர்.சரவணா ஒளிப்பதிவு. ‘இப்படம் ரவிகுமார் பாணியில் இருக்குமா?‘ என்கிறார்கள். அவரது பார்முலா வெற்றி பார்முலாதான். ‘சேரன் பாண்டியன்Õ முதல் ‘படையப்பாÕ வரை அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ‘ஊர்மரியாதைÕ படத்துக்கு கதை வசனம் எழுதி இருக்கிறேன்.

தன்னை பற்றி வதந்தி பரப்புவதால் சித்தார்த் மீது கோபமாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன்!!!

Sunday, March 11, 2012
தன்னை பற்றி வதந்தி பரப்புவதால் சித்தார்த் மீது கோபமாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். இவருடன் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி சந்தித்து கொண்டிருந்த இருவரும் திடீரென்று பிரிந்துவிட்டனர். அவருடன் ஜோடியாக நடிப்பதாக இருந்த தெலுங்கு படத்தில் இருந்தும் விலகிவிட்டார் ஸ்ருதி. இதுபற்றி அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறும்போது ,‘சித்தார்த், ஸ்ருதி பிரிவு என்பது சுமுகமாக நடக்கவில்லை. இருவரும் பிரிந்த பிறகு சித்தார்த்திடம் பேசுவதை தவிர்த்துவிடுகிறார் ஸ்ருதி. இந்நிலையில் ஸ்ருதி பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறதாம். இதற்கு சித்தார்த்தான் காரணம் என்று நினைக்கிறார் ஸ்ருதி. மேலும் பிரிவுக்கு பிறகு நடிப்பதில் அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்Õ என்றார். தன்னைப் பற்றி சித்தார்த்தான் வதந்தி பரப்புகிறார் என்று தகவல் பரவியதையடுத்து மனம் நொந்துபோனாராம் ஸ்ருதி. மன ஆறுதலுக்கு தற்போது லண்டன் சென்றிருக்கிறார் ஸ்ருதி.

எந்த ஜென்மத்திலும் அப்பாவுடன் பேசமாட்டேன்: பானு!!!

Sunday, March 11, 2012
நடிகை பானு தனது அப்பாவைவிட்டு பிரிந்துவிட்டாராம். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

தாமிரபரணி படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பானு. முதல் படத்தில் கும்முனு வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் காற்றிறங்கிய பலூனாகி விட்டார். குறிப்பாக ஆர்கேவுடன் இணைந்து நடித்தபோது படு மெல்லிசாக காணப்பட்டார். இப்போது முன்பை விட மேலும் உடல் மெலிந்து காணப்படுகிறார். கேட்டால் டயட்டிங் என்கிறார்.

என்ன பானு உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்று கேட்டால் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். அதனால் தான் வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல், நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளில் நடித்து வருகிறேன் என்றார்.

அம்மணி கேரளாவில் ஒரு பியூட்டி பார்லர் திறந்து அதை தனது அம்மாவின் பொறுப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் பானுவுக்கும் அவரது அப்பாவுக்கும் என்ன லடாயோ தெரியவில்லை தகப்பனை விட்டுப் பிரிந்துவிட்டார். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசவே மாட்டேன் என்கிறார். இனி எனக்கு எல்லாமே அம்மா தான் என்றும் கூறியுள்ளார்.

அப்பா மீது அப்படி என்ன கொலவெறியோ தெரியலையே...!

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday, March 11, 2012
* அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டிருக்கும் கார்த்தி, காதில் கடுக்கன்போட்டு நடிக்கிறார்.

* தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களுக்கு இசை அமைத்த தமன், தன்னை நம்பர் ஒன் இசை அமைப்பாளர் என்பதை ஏற்க மாட்டாராம்.

* தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமிமன்சூ ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவின் நெருங்கிய தோழி.

* அஜீத் பிறந்த தினத்தையொட்டி வெளிவருதாக இருந்த ‘பில்லா 2Õ படத்தின் பணிகள் முடிய தாமதமாவதால் மே மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிப்போகிறதாம்.

* மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பற்றிய கதையை இயக்கும் ராம் கோபால்வர்மாவுக்கு ரெட்டியின் நண்பர்கள் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்களாம்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு: நயன்!!!

Sunday, March 11, 2012
நடிகை நயன்தாராவுக்கு பிடித்த நிறம் கருப்பு. ஷூட்டிங் இல்லையென்றால் அம்மணி கருப்பு நிற உடைகளையே விரும்பி அணிகிறார்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிறார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான திருமணம் நின்று அவரைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. இத்தனை நாட்களாக சினிமாவைவிட்டு விலகியிருந்த அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அதனால் இனி நயன் படு பிஸி தான்.

அவருக்கு பிடித்த நிறம் கருப்பாம். படத்தில் அனைத்து காட்சிகளிலும் கருப்பு நிற உடைகளில் வரமுடியாதல்லவா அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு மிகவும் பிடித்த கருப்பு நிறத்தில் மட்டுமே உடையணிகிறார். இவ்வளவு ஏன் அவரது கார் கூட கருப்பு நிறம் தான். கருப்பு நிறம் மீது இவ்வளவு மோகம் ஏன் என்று கேட்டால், யார் கருப்பு நிறத்தில் உடையணிந்தாலும் அது அவர்களுக்கு அழகாக இருக்கும் என்கிறார்.

பில்லா படத்தில் கூட கருப்பு நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்து கருப்பு நிற கூலிங் கிளாசில் அசத்தலாக வந்ததை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது தான்.

தற்போது நயனதாராவை பில்லா 2 படத்திலும் கெஸ்ட் ரோலிலாவது நடிக்க வைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

கார்த்தி படத்திலிருந்து விலகிய லட்சுமிராய், தற்போது ஜீவா நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார்!!!

Sunday, March 11, 2012
கார்த்தி படத்திலிருந்து விலகிய லட்சுமிராய், தற்போது ஜீவா நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார். ‘தாம் தூம்Õ, ‘காஞ்சனாÕ, ‘மங்காத்தாÕ படங்களில் நடித்திருக்கும் லட்சுமி ராய் அடுத்து கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. தனது கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார். அடுத்து அஹமத் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் Ôஎன்றென்றும் புன்னகைÕ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க மறுத்திருக்கிறார். தமிழை பொறுத்தவரை புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத லட்சுமிராய் தெலுங்கு, மலையாளம். கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஏற்கனவே லட்சுமிராய் கூறி வந்தார். தற்போது அனுஷ்க் பட் இயக்கும் புதிய இந்தி படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இதில் சச்சின் ஜோஷி, மல்லிகா ஷெராவத் ஆகியோரும் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் அனுஷ்க் கூறும்போது,‘லட்சுமி ராய் என்னுடைய படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறேன். படத்தின் கதையை கூறியபோது ஆர்வமாக கேட்டார். பிறமொழியில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தனது கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தருவதாக கூறினார். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளதுÕ என்றார். இந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்தான் தமிழ் படங்களை லட்சுமிராய் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி லட்சுமிராயிடம் கேட்டபோது, Ôநோ கமென்ட்ஸ்Õ என்று மட்டும் பதில் வந்தது. அதே நேரம் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். Ôஎன்றென்றும் புன்னகைÕ படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அதனால் அப்படங்களில் அவர்களுக்கே முக்கியத்துவம் இருக்கும் என்பதால் லட்சுமிராய் விலகிவிட¢டதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்!!!

Sunday, March 11, 2012
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் அதிமுக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் நெல்லை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பானுசேகர், நிர்வாகிகள் குணசேகர பாண்டியன், சூர்யா கணேசன், சங்கரன்கோவில் குணா, வீரபுத்திரன், கண்ணதாசன், மேலநீலிதநல்லூர் ஆப்பிள் தங்கமணி, மாரிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக வேட்பாளரான முத்துசெல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்போவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முத்துசெல்விக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.