Saturday, February 4, 2012

பிரபல நீச்சல் வீரர் ஹீரோவாக நடிக்கும் 'சேவற்கொடி!!!

நீச்சலில் பல சாதனைகள் புரிந்தவர் அருண் பாலாஜி. கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 8 வயதில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 10.41 மணி நேரத்தில் 32 கி.மீ.நீந்தி 'உலக சாதனை' செய்தவர். இதில் ஏற்கனவே சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனின் நீச்சல் சாதனையை வென்றவர். இனி இவர் சேவற்கொடி அருண பாலாஜி ஆகிவிடுவார்!

கதாநாயகியாக பாமா நடிக்கிறார்.இயக்குனர் லோகிததாசின் அறிமுகமான இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.'மைனா' கன்னட ரீமேக்கான 'ஷைலு'படத்திலும் நடித்திருக்கிறார். வில்லனாக பவன் நடிக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் இரா.சுப்பிரமணியன். இயக்குனர்கள் சீமான், ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர். 'அபியும் நானும்' படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மற்றவர்களைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கும்.சிலரை ஒரு நிமிட சிரிப்பிலே பிடித்து விடும்.சிலரை இறுதி வரை பிடிக்காது.தனிப்பட்ட ஒருவரைப் பற்றி பலரும் ஒவ்வொரு விதமான புரிதலை வைத்திருப்பார்கள்.அப்படி தவறாக உணரப்படும் ஒரு மனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயான மோதல் தான் இந்த கதை. வெவ்வேறு சூழலில் வாழக்கூடிய இருவர் யதார்த்தமாக சந்தித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள் மோதல் வருகிறது.அது ஏன் எப்படி ? என்பது தான் கிளைமாக்ஸ்.

திருசெந்தூர் கடற்கரையோரமுள்ள கிராமங்களின் பின்னணியில் கதை உருவாகியுள்ளது. ஒரு சூரசம்ஹாரத்தின்போது நாயகன், நாயகி, வில்லன் மூவரும் சந்திக்க நேர்கிறது. அடுத்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முடிகிறது கதை.இடையில் என்ன நடக்கிறது? என்பதே பரபரப்பான திரைக்கதை.

திருசெந்தூரில் நடைப் பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கதாநாயகன் கதாநாயகியை தேடும் காட்சியை மக்களோடு மக்களாக இருந்து படம் பிடித்தோம். திருசெந்தூர், கன்னியாகுமரி சாலையில் நாயகன் அருண் பாலாஜியும் வில்லன் பவனும் மோதிக் கொள்ளும் சேசிங் காட்சி ஒன்றையும் சிரமப் பட்டு படமாக்கி இருக்கிறோம். படத்தின் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக அதேவேளையில் ஜனரஞ்சமாகவும் இருக்கும்" என்றார்.

பனேரி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் மகரந்த் கமலாகர்,ஆனந்த் ரெட்டி இருவரும் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

மனம் மாறிய இயக்குனர் : சமீரா ரெட்டி!!!

டாக்டரா இருந்து போலீஸ் வேஷத்துல நடிக்கற ராஜமான சேகர் ஹீரோவை புக் பண்ண டோலிவுட் தயாரிப்பாளர்கள் தயங்கறாங்களாம்.. தயங்கறாங்களாம்.. சிரஞ் ஹீரோவோட அவர் கடைப்பிடிக்கற மோதல் போக்குதான் இதுக்கு காரணமாம். இதனால் சொந்தபடம் எடுத்து நடிக்கறாராம். ஏற்கனவே ரெண்டு படம் எடுத்து பெண்டிங்ல இருக்கற நிலையில டபுள் ஹீரோவா நடிக்கற மற்றொரு படத்த தயாரிக்கிறாராம். இந்த படத்த பரபரப்பாக்கறதுக்கு என்ன வழின்னு பிரண்ட்ஸுங்க கிட்டயும், ஜீவிதமான துணைகிட்டேயும் ஐடியா கேட்டிருக்காராம்.. இருக்காராம்..

சூப்பர் ஸ்டார இயக்கற படம் தள்ளிப்போனதால ரவி இயக்கம் பாலிவுட் படத்த இயக்கப்போறாராம்.. போறாராம்.. முதல்ல வேறு இயக்குனர் இயக்கிய ‘காட்’ படத்தை ரீமேக் செய்ய பிளான் பண்ணாராம். இப்ப அந்த பிளானை மாத்திகிட்டாராம். தான் தயாரிக்கும் நேரடி ஸ்கிரிப்ட்டையே முதல் படமாக பாலிவுட்ல இயக்கப்போறாராம். அதுக்கான வேலைல மும்முரமா இருக்காராம்.. இயக்கம் இருக்காராம்..

உடும்ப நடிக்க வச்சி படம் இயக்கினவருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காம்.. இருக்காம். நடிக்க வெக்கறதுக்காக உடும்ப கொடுமைபடுத்தினதா ஒருத்தர் வழக்கு போட்டிருக்காராம்.. இதால படத்த ரிலீஸ் பண்றதுல பிரச்னை ஏற்பட்டிருக்காம். உடும்ப எந்தவிதத்துலயும் கொடுமைபடுத்தல கிராபிக்ஸ்லதான் நிறைய காட்சி எடுத்தேன்னு இயக்கம் சொல்றாராம்.. சொல்றாராம்..

ஸ்ருதியுடன் கிசு கிசு: தனுஷ் பரபரப்பு பேட்டி!!!

ஸ்ருதியுடன் இணைத்து வந்த வதந்தி என்னை பாதிக்கவில்லை. நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியும்Õ என்றார் தனுஷ். தனுஷ்&ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் படம் ‘3Õ. ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதில் நடித்தபோது தனுஷ், ஸ்ருதிக்கு இடையே காதல் ஏற்பட்டதாகவும் இதனால் ஐஸ்வர்யா மனம் உடைந்ததாகவும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஸ்ருதி ஹாசன் கண்டனம் தெரிவித்ததுடன், ‘தனுஷுடன் நட்பாக பழகியது தவறா?Õ என்று கேட்டிருந்தார். ஐஸ்வர்யாவும், ‘இதுபோன்ற வதந்திகளை நம்ப மாட்டேன்Õ என்று தெரிவித்திருந்தார். ஆனால் தனுஷ் இது பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. ஒரு பாடகராக புகழ்பெறுவேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. Ôகொல வெறிடிÕ பாடல் எனக்கு பாடகராக புகழ் பெற்று தந்தது. அது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்த முத்திரையை மாற்ற விரும்புகிறேன். உலகம் மிகச் சிறியது என்பதை சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன். இதில் ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியாக்க வேண்டும். என் மனைவி ஐஸ்வர்யா இயக்குனராகி இருக்கிறார். இதனால் எங்கள் உறவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திரையுலகை பற்றி அவருக்கு எடுத்து சொல்ல இதுவொரு வாய்ப்பாக அமைந்தது. இனிமேலும் சினிமா உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் ஒரு தம்பதியாகவே இருந்து ஆலோசிப்போம். என் வாழ்க்கை மிகவும் போரடித்துக்கொண்டிருந்தது. ஸ்ருதியுடன் என்னை இணைத்து கிசுகிசு எழுதுகிறார்கள். இந்த வதந்தியால் என் வாழ்க்கை பொழுதுபோக்கு நிறைந்ததாக மாறி இருக்கிறது. இப்படித்தான் அந்த வதந்தியை நான் பார்க்கிறேன். அதுபோன்ற வதந்திகள் என்னை ஒருபோதும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வேன். நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியும். என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நான் யார் என்பது தெரியும். இவ்வாறு தனுஷ் கூறினார்.

காதல் ஜோடி ஓடியதால் ஷூட்டிங் பாதிப்பு : டைரக்டர் கோபம்!

சினிமாவில் நடிக்க வந்து நிஜ காதல் ஜோடியானவர்கள் சொல்லாமல் ஓடியதால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்றார் இயக்குனர். இதுபற்றி ‘ஒரு மழை 4 சாரல்’ பட இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: எல்லோருக்கும் நண்பர்கள் இருந்தாலும் மனம்விட்டு பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தான். நல்ல நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதே கதை. மாநில கல்லுரியில் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகியாக நான் இருந்திருக்கிறேன். கல்லூரி வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகிறது. இதில் இடம்பெறும் காதல் 75 சதவீதம் நிஜம். 25 சதவீதம் கற்பனை. ரவி, சுதர்ஷன், கணா ஹீரோக்கள். இவர்களும் முன்னாள் மாணவர்கள்தான். கேரளாவை சேர்ந்த அனகா, ரம்யா ஹீரோயின். காதல் ஜோடிகளாக சுதர்ஷன், அனகா நடித்தனர். படம் முடிவதற்குள் இருவரும் நிஜ காதலர்களாகி விட்டனர். இது பட குழுவினருக்கு தெரிந்ததும் வெட்கம் காரணமாக இருவரும் 3 நாட்கள் ஷூட்டிங் வரவில்லை. இதனால் ஷூட்டிங் பாதித்தது. இவர்கள் நடிக்கும் பாடல் காட்சி படத்தின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டியது. ஆனால் ஷூட்டிங் கட் அடித்ததால் பாடல் காட்சியை படமாக்குவதில் மாற்றம் செய்யவேண்டி இருந்தது. படத்தின் ஓபனிங்கில் வரவேண்டிய பாடல் இதனால் படத்தின் பிற்பாதிக்கு மாற்றப்பட்டது. இருவரும் நிஜ காதலர்களானது சந்தோஷம். ஆனால் ஷூட்டிங் வராமல் இருந்ததில் இருவர் மீதும் எனக்கு கோபம் இருக்கிறது. மொத்தம் 27 நாட்களில் ஷூட்டிங் முடிந்தது. தயாரிப்பு க.பத்ரிநாராயணன். ஒளிப்பதிவு டி.மகிபாலன். இசை ஏ.டி.மேஹன். கேரளா, கொடைக்கானல், அம்பா சமுத்திரத்திரம், சென்னை புறநகர் பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு ஆனந்த் கூறினார்.

தமன்னா கால்ஷீட் குழப்பம் தயாரிப்பாளர் மீது தந்தை பாய்ச்சல்!!!

தமன்னா கால்ஷீட் குழப்பம் காரணமாக தயாரிப்பாளர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தயாரிப்பாளர்கள் மீது பாய்ந்திருக்கிறார் தமன்னாவின் தந்தை. தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு திடீரென்று சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு எதிர்பார்த்தபடி படங்கள் தேடி வந்தன. இந்நிலையில் கால்ஷீட் கொடுத்தபடி ஷூட்டிங் வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ‘ரச்சா’ உள்ளிட்ட 2 படங்களின் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. இதையடுத்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுக்கமாறு தமன்னாவிடம் தயாரிப்பாளர்கள் கூறினர். அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் திடீரென்று மகேஷ்பாபு படமொன்றில் நடிக்க தமன்னா ஒப்புக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறியதுடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தயாரிப்பாளர்களுக்கு தமன்னா தந்தை மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,‘‘மகேஷ்பாபு படத்தில் நடிக்க தமன்னா ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு தயாரிப்பாளர் கொடுத்த கால்ஷீட்டை விட கூடுதல் நாட்கள் கேட்கிறார். இதற்கு மற்றொரு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இது தயாரிப்பாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைதான். அவர்கள்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமன்னா புதிய படங்களில் நடிக்க எந்த பிரச்னையும் கிடையாது. இதுவரை அவர் ஒப்புக்கொண்டு நடித்த எந்த படத்திலும் ஒப்பந்தத்தை மீறியது கிடையாது’’ என்றார்.

கிளிப்பிங்ஸ்!!!

* விஷாலுடன் நடிக்கும் ‘சமரன்’ படத்துக்காக பேங்காக் சென்றிருந்த த்ரிஷா, ஷூட்டிங் முடிந்து திரும்பிய கையோடு பொள்ளாச்சியில் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

* தேசிய நெடுஞ்சாலையில் கார் பழுதானதால் லாரி, பஸ், ஆட்டோ என அடுத்தடுத்து சவாரி பிடித்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற அனுபவம் ப்ரியா ஆனந்த் வாழ்வில் மறக்க முடியாத விஷயமாம்.

* இந்தி படத்தில் நடிக்கும் தனுஷ், தனது கேரக்டருக்காக நேரடி அனுபவம் பெற சமீபத்தில் வாரணாசி சென்று சாதுக்களுடன் பேசி பயிற்சி பெற்றார்.

* 3டியில் உருவாகியுள்ள அம்புலிÕ படம் இம்மாதம் ரிலீசாக உள்ளது.

* புதிய படத்துக்கு லொகே ஷன் பார்க்க பட குழுவுடன் வெளிநாடு சென்று திரும்பிய இயக்குனர் செல்வராகவன் விரைவில் ஆர்யா, அனுஷ்காவுடன் ஷூட்டிங்குக்காக மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்

பூக்கடை அல்ல கடல்: மணிரத்னம் அறிவிப்பு!!!

மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.

இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.

"கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க...? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி!!!

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபுதேவா-நயன்தாரா பிரிவுக்கு காரணம் ஹன்சிகா தான் என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, நீண்ட நேரத்திற்கு பின் சூடாக பேசத் தொடங்கினார். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், நான் ரொம்ப ஸ்டைரட் பார்வர்ட். எதையும் தைரியமாக பேசிடுவேன். ஆனா, என்ன பத்தி பிரபுதேவா கூட பேசுறது ரொம்ப தப்பா படுது. அவர் எங்க வீட்டு பெரிய அண்ணன் மாதிரி. அவரை அண்ணா என்று தான் எப்போதும், எங்கிருந்தாலும் கூப்பிடுவேன். ஆனால் இப்போ இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது ரொம்பவே அசிங்கமா இருக்கு. எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங் பாரிஸ் நடந்த போது பிரபுதேவா கூட நயன்தாராவும் வந்திருந்தாங்க. அப்போது தான் அவரை பார்த்து சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு பிரபுதேவா, நயன்தாரா யார்கிட்டேயும் நான் பேசல, அவங்கள பார்க்கல. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதால, சூட்டிங்கில் பிஸியாகிவிட்டேன்.

நயன்தாரா-பிரபுதேவா இவர்களுக்குள் நடக்கிற கேட் வால் பிரச்னையில் என்னை ஏன் இழுக்குறாங்க...? என்று தெரியல. இப்படி செய்தியை கேட்கும்போதெல்லாம் ரொம்ப அசிங்கமா, கேவலமா, அருவெறுப்பா இருக்கு. என் இமேஜை கெடுக்க பாக்குறாங்க. இந்தமாதிரி வதந்தியை பரப்புறவுங்க வீட்டிலேயும் பெண்கள் இருப்பாங்க. கண்ணா பின்னான்னு எழுதி, யாருக்கோ நல்லது பண்றோம் என்கிற பேர்வழியில், எங்க வீட்டில் உள்ள ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்துட்டாங்க. இதைப்பற்றி என் அம்மா, என் அண்ணன் என எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க.

நான் லண்டனுல படிச்சவ என்றாலும், நம்ம நாட்டு கலாச்சாரத்தை நிறையவே பின்பற்றுபவள். எனக்குனு ஒரு லிமிட் இருக்கு. என் வேலை எனக்கு முக்கியம். நான் இன்னும் சினிமாவுல நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. இப்போ மும்பையில இருக்கேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முடிஞ்சு, சிம்புவோட வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற செய்திகள் என்னை மட்டும் அல்லாமல் என்னோட வேலையையும் பாதிக்குது.

சரி இதுபற்றி பிரபுதேவாவுடன் பேசினீங்களா என்று கேட்டதும், இதுவரைக்கும் இல்ல, பொறுமையா இருக்கேன். இது எல்லாதுக்கும் கடவுளும், காலமும் பதில் சொல்லும். என்ன பத்தி அவதூறான செய்திக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது என்று கொதித்து போய் பேசி முடித்தார் ஹன்சிகா.

தாலிகட்டிவிட்டு ஏமாற்றிவிட்டார் :பிரபுதேவாவின் தந்தை மீது பெண் புகார்!!!

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை. மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா ஐகோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,

டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம். பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டு போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக நாங்கள் கஷட்டப்படுகிறோம். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது!!!

நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் புகுந்தார் ஸ்ரேயா!!!

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சமீபகாலமாக தமிழில் ஸ்ரேயா புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தி, தெலுங்கில் மட்டும் நடித்து வருகிறார். புதுமுக நடிகைகளின் வரவும், படத்தின் வெற்றி தோல்வியின் அதிர்ஷ்ட சென்டிமென்டாலும் ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்களை நம்பாமல் புதுமுகங்களை நம்பி படம் எடுப்பவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா. ‘லைப் ஈஸ் பியூட்டிபுல்’ என்ற படத்தை இவர் இயக்குகிறார். வழக்கம்போல் இப்படத்திலும் புதுமுக ஜோடிகளை தேர்வு செய்தார். கடந்த நவம்பர் மாதமே படத்தை முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட புதுமுக ஹீரோயின் அமெரிக்காவில் வாழும் இந்தியர். கால்ஷீட் கொடுத்த நடிகை குறிப்பிட்ட தினத்தில் வரவில்லை. இதையடுத்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவரை நம்பி ஷூட்டிங்கை தள்ளி வைத்ததுதான் மிச்சம். ஆனால் அமெரிக்கா சென்றவர் திரும்பவில்லை. மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர் சேகர் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். ஸ்ரேயாவை அணுகி நிலைமையை விளக்கி கால்ஷீட் கேட்டார். உடனடியாக