Friday, January 20, 2012

இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திடீர் அறிவிப்பு!!!

சாதனையாளர்களுக்கு என் பெயரில் இனி விருதுகள் வழங்க வேண்டாம். நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. இனி என் குருநாதர் கே பாலச்சந்தர் பெயரில் அந்த விருதினை வழங்க வேண்டும்," என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.

லதா ரஜினியின் ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமியின் 21-வது ஆண்டுவிழா மற்றும் கலைத்துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று, கலைத்துறை சாதனையாளர்களுக்கு ரஜினி விருது, சிவாஜி விருது மற்றும் பீஷ்மா விருதுகளை வழங்கினார்.

மறைந்த நடிகர் ஷம்மி கபூர், பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக், இயக்குநர் கே பாலச்சந்தர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான 'ரஜினிகாந்த் விருது'களை வழங்கி கவுரவித்தார் ரஜினி.

பின்னர் அவர் பேசுகையில், "விழாவின் கடைசியில் நான் வந்தால் போதும் என்றார்கள். அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.

இங்கே விருது பெற்றவர்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஷா பரேக் அவர்கள் மும்பையிலிருந்து வந்திருக்கிறார். மறைந்த ஷம்மி கபூரின் மகன் ஆதித்யா இந்த விருதைப்பெற நேரில் வந்திருக்கிறார்.

ஷம்மி கபூர் மிக ஸ்டைலிஷான நடிகர். சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்தமானவர். என்னுடன் ஒருநாள் அவர் காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்ததை மறக்க முடியாது.

இங்கே வாழ்நாள் சாதனையாளர்களுக்கு எனது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. நான் ஒரு சாதனையாளனே அல்ல. என்னுடைய குருநாதர் கே பி சாருக்கு எனது பெயரில் விருது வழங்கியது சங்கடமாக உள்ளது. இதை நான் என் மனைவி லதாவிடமும் கூறிவிட்டேன். இனி வரும் ஆண்டுகளில் எனது பெயரில் இந்த விருதினை வழங்க வேண்டாம். கே பாலச்சந்தர் பெயரில் வழங்கப்பட வேண்டும்," என்றார்.

விலைமாது கேரக்டரில் நடிக்க ஆசை! ஸ்ரேயா!!!

விலைமாது கேரக்டரில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று நடிகை ஸ்ரேயா கூறியிருக்கிறார். தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விலைமாதுவாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா, "வேதம்" படத்தில் அதுபோன்ற கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர்.

இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் - டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது, என்று கூறியுள்ளார்.

விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டையா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. படத்தின் ஷூட்டிங் படுவேகமாக மும்பையில் நடந்து வருகிறது. இதில் இளைய தளபதி விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலுக்கு காரணம் இந்த காட்சியிலே அந்த நடிகர் நடித்திருந்தால் அப்படி நடிச்சிருப்பார் என்று முருகதாஸ் சொல்ல விஜய் கோபித்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டதாக கிசு..கிசுக்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு நாள் முழுக்க ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம் விஜய்! ஏற்கனவே விஜய்க்கும், முருகதாசுக்கும் சம்பள பிரச்சனையில் சண்டை வந்ததாக கூறப்பட்டது.

விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!!!

விஷாலின் நெடுநாள் கனவான த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை இப்போது சமரன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. திரு இயக்கும் இப்படத்தில் விஷால், த்ரிஷா ஆகியோருடன் சுனேனாவும் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக சமரன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி என்று த்ரிஷா கூறியிருக்கிறார். அதாவது, விஷாலும், நானும் நீண்டநாள் ‌நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சில வருடத்திற்கு முன்பே தீர்மானித்தோம். ஆனால் இருவரும் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

சமரன் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது என்னால் மறுக்கமுடியவில்லை. காரணம் சத்யம் படத்திலேயே என்னை நடிக்க விஷால் அழைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால் இந்தபடத்தை மறுக்க முடியவில்லை. மேலும் சமரன் படத்தின் கதையும் எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்

பில்லா 2! ரூ.5.30 கோடிக்கு வெளிநாட்டு உரிமை!!!

அஜித்தின் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.5 கோடியே 30 லட்சத்திற்கு ஒரு பிரபல நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது. டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக பில்லா 2 படத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பில்லா 2 படம் பற்றிய புதிய செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இப்படத்துக்கான உள் நாட்டு வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அஜித் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஸ்ருதி!!!

நடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.

ஆரம்பத்தில் அமைதி காத்த தனுஷ் மற்றும் ஸ்ருதி தரப்பு, விவகாரம் ஓயாமல் தொடர்ந்ததால், இப்போது மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த செய்திகளை முதலில் ஐஸ்வர்யா மறுத்திருந்தார். இப்போது ஸ்ருதி ஹாஸனும் மறுத்துள்ளார். அத்துடன் செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் பத்திரிகைக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னையும் தனுசையும் இணைத்து வெளியான கட்டுரை முற்றிலும் கற்பனையானது. ஆதாரம் இல்லாதது. இதற்காக குமுதத்துக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். குறிப்பிட்ட ஆஹ்கில நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பவிருக்கிறேன்.

சக நடிகர் என்ற முறையில் தனுஷ் படப்பிடிப்பில் தொழில் ரீதியாக எனக்கு உதவிகள் செய்தார். தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புகள் இருந்தது. இதை வைத்து தவறான வதந்திகளை பரப்புவது வருத்தம் அளிக்கிறது.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். இந்த வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது," என்றார்.