Monday, May 28, 2012

பாய் பிரெண்டுடன் பட விழாவுக்கு வந்த ஸ்ரேயா!!!

Monday, ,May, 28, 2012
பல நடிகர்களுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்ட ஸ்ரேயா, யாருடனும் காதல் இல்லை என கூறி வந்தார். இந்நிலையில் அவரது நிஜ காதலருடன் பட விழாவுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்Õ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இதற்கிடையில் கன்னட படமொன்றில் நடிக்கிறார். சமீபத்தில் பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்கு தனது பாய்பிரெண்ட் ராகுல் அகர்வாலுடன் சென்றார். இது பற்றி ஸ்ரேயா கூறியதாவது:
கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்டேன். அற்புதமான அனுபவம். முழுமையான ஓய்வு எடுத்துக்கொண்டே பங்கேற்றேன்.

இங்கு திரையிடப்பட்ட ஏராளமான படங்களை ரசித்துப் பார்த்தேன். உலகம் முழுவதிலும் இருந்த பிரபல நடிகர், நடிகைகள் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. யார், யாரை சந்தித்தேன் என்பதை சொல்ல முடியாவிட்டாலும் இதுவொரு அருமையான சந்தர்ப்பமாக எனக்கு அமைந்தது. மறக்க முடியாது. எத்தனையோ படங்களை பார்த்தாலும் அனுராக் கஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆப் வசெப்பூர் என்னை கவர்ந்தது.

இந்திய படங்கள் வித்தியாசமான ஒரு பாதையில் பயணிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது. எனது நண்பர்கள் பலரை சந்தித்து அவர்களுடன் பொழுதை கழித்தேன். ஜில்லென குளிர் வீசும் சூழலுடன் கூடிய இந்த இடம் என் மனதை கவர்ந்துவிட்டது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார். ராகுல் அகர்வால் பற்றி கேட்டதற்கு பதில் எதுவும் கூற மறுத்துவிட்டார் ஸ்ரேயா. முதல்முறையாக காதலருடன் பொது இடத்துக்கு வந்ததால் ஸ்ரேயா காதலை பற்றித்தான் சினிமா வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.

பாலிவுட்டைக் கலக்க கர்நாடகத்திலிருந்து பாயும் இன்னொரு அழகு நதி - நிதி!!!

Monday, ,May, 28, 2012
ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு அழகிய நடிகை பாலிவுட்டுக்குப் படையெடுத்துள்ளார். ஐஸ்வர்யா, ஷில்பாவைப் போல இவரும் பாலிவுட்டை கலக்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாலிவுட்டை எந்த அளவுக்கு தங்கள் பக்கம் திருப்பினார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் இன்றளவும் கூட பாலிவுட்டில் அழுத்தமான முத்திரையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இன்னொரு அழகிய கர்நாடக நடிகை பாலிவுட்டுக்குக் கிளம்பியுள்ளார். அவரது பெயர் நிதி சுப்பையா. ஓ மை காட் என்ற படத்தில் நிதி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இவர் குறித்து அறிந்து பரவசப்பட்டுப் போன தூம் படப் புகழ் சஞ்சய் காத்வி தனது அடுத்த படத்திற்கு நிதியை புக் செய்து விட்டாராம்.

மும்பையில் முகாமிட்டு நடித்து வரும் நிதி, தனது பாலிவுட் வாழ்ககை படு ஜாலியாக இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து நான்காவது மாதமாக மும்பையில் தங்கியிருக்கிறேன். மும்பையின் அதி வேக வாழ்க்கை என்னைக் கவர்ந்துள்ளது. சரியான திசையில் நானும் போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

தற்போது ஆஜ் கஸாப் லவ் என்ற படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்து வரும் நிதி, அர்ஜூன் குறித்து புளகாங்கிதப்பட்டு பேசுகிறார். அவர் ரொம்ப ஹாட், அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டேன் என்கிறது என்கிறார்.

இந்தியில் நடித்தாலும் கன்னடத்தில் நடிப்பதையும் கைவிடவில்லையாம் நிதி. அங்கு அவர் நடித்த அன்னா பாண்ட் படம் ஹிட்டாகியுள்ளதாம்.

அதேசமயம், இந்தியில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருப்பதாக கூறும் நிதி, அதுவரை பிற மொழிப் படங்களில் நடிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்திருப்பதாகவும் கூறுகிறார்.

அப்படீன்னா, நிதி தமிழுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் போலிருக்கே...

மே 31ஆம் தேதி சகுனி ஆடியோ ரிலிஸ்!!!

Monday, ,May, 28, 2012
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, கோலிவுட்டின் வசூல ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கார்த்தியின் அடுத்தப் படமான 'சகுனி' அஜீத் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தியின் இப்படமும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சங்கர் தயாள், இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை இந்திய மொழிகளில், எந்த மொழியிகளிலும் எடுக்ககூடிய அளவுக்கு அமைந்திருக்கிறதாம். ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு இனியமையான பாடல்களாக வந்திருக்கிறதாம். அதை ரசிகர்கள் கேட்பதற்கு இன்னும் சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும். ஆம், சகுனியின் பாடல் வெளியீட்டு விழா வரும் மே 31ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது.

பிரகாஷ்ராஜ், சந்தானம், ராதிகா, ரோஜா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. ரஜினி, சூர்யா படங்களை அடுத்து மூன்றாவது இடத்தில் கார்த்தி, தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் விலை கொடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஸ்ரீ சாய் கணேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

பள்ளி மாணவியாக நடிக்கும் ஹன்சிகா!!!

Monday, ,May, 28, 2012
தற்போதைய தமிழ் சினிமாவின் கனவு கண்ணியான ஹன்சிகா, மெகா வாட்ஸ் பல்பு போல பளபளப்பாக இருந்தாலும், நாளுக்கு நாள் கூடிகொண்டேப் போகும் அவருடைய உடல் எடை அவரை ஆண்ட்டி ரேன்ஞ்சிக்கு கொண்டுபோனது. சற்று உசாரான ஹன்சிகா, சுதாரித்து கொண்டு தனது உடல் எடையை குறைக்க கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இந்த உடல் எடை விவகாரமாக அவர் சமீபத்தில் அமெரிக்க சென்று வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி தனது உடல் எடையை குறைப்பதில் ஹன்சிகா, தீவிரம் காட்டுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. 'சிங்கம் 2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா, அதில் பள்ளி மாணவியாக நடிக்கிறாராம்.

தற்போது உள்ள உடல் எடையுடன் நடித்தால் அவர், பள்ளி ஆசிரியர் போலதான் இருப்பார். அதனால் தான் இந்த எடை குறைப்பு போராட்டம். உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் ஹன்சிகா, தற்போது சற்று எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறாராம்.

பிரபுதேவா வியந்து பாராட்டிய 'அடுத்த பிரபுதேவா'!!!

Monday, ,May, 28, ,2012
பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இன்றைக்கு நடன இயக்குநர்களாக பிரபலமானவர்கள் அனைவருமே பிரபுதேவாவிடம் பணிபுரிந்தவர்கள்தான்.

பிரபுதேவாவை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மறுபடியும் தொடங்கியுள்ளது. பல்வேறு சுற்றுக்களைக் கடந்து முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியின் நாயகன் பிரபுதேவா பங்கேற்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நடனப்போட்டியில் வில்லாக வளைந்து நடனமாடியவர்களைக் கண்டு பிரபுதேவாவே ஒரு கணம் வியந்துதான் போனார். என்னால் கூட இந்த மாதிரி ஸ்டெப்ஸ் போட முடியாது என்று பிரபுதேவா கூறியது அவரது தன்னடக்கத்தை காட்டியது.

அப்பாவிடம் நடனம் கற்று நடன இயக்குநராக உயர்ந்து இன்றைக்கு மிகப்பெரிய இயக்குநராக பெயர் பெற்றிருந்தாலும் நடனம்தான் தன் வாழ்க்கையை உயர்த்தியது என்பதை இன்றைக்கும் பெருமையோடு ஒத்துக்கொள்கிறார் பிரபுதேவா.

ஞாயிறுக்கிழமை என்றாலே சினிமாதான் ஒளிபரப்பவேண்டும் என்ற ட்ரெண்டை மாற்றி நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களை கவரமுடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது விஜய் டிவி.

அது சரி. பிரபு தேவாவின் பெயரில் வரும் நிகழ்ச்சி என்பதற்காக நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரபுதேவாவை அடிக்கடி புகழ்வது கொஞ்சம் ஓவராக இல்லை?

விஷ்ணுவின் ப்ளான்! அஜீத்துக்கும் அதுவே விருப்பம்!!!

Monday, ,May, 28, 2012
அஜீத் நடித்துள்ள பில்லா-2 ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜூன் மாதம் 15-ம் தேதி பில்லா-2ரிலீஸாகிறது. இந்த வருடம் அஜீத் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் பில்லா-2 ஷூட்டிங் முடிந்த சில நாட்களிலேயே அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித்.

மே 30-ம் தேதி முதல் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். மேலும் சிறப்பு அம்சமாக தெலுங்கு நடிகர்களை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் இயக்குனர்.

கௌரவ வேடத்தில் நடிக்க தெலுங்கு திரைஉலகின் முன்னனி நடிகர்களான நாகார்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அஜீத்தின் மங்காத்தா படம் தெலுங்கிலும் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிட ப்ளான் இருக்கிறதாம். அதனால் தான் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க ஆசைப்படுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அஜீத்தும் அதையே தான் விரும்புகிறாராம்.அரவிந்த் சாமி, பிருத்திவிராஜ் ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்டதாகத் தெரிகிறது. அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடித்துக்
கொண்டிருப்பதால், அந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியுள்ளாராம்.

இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2 என தொடர்ந்து அஜீத் நடித்த படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

அசின் வருகை! மீண்டும் சர்ச்சை!!!

Monday, ,May, 28, ,2012
இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்திற்கு யார் ஹீரோ? என்ற கேள்விக்கு இருந்த பரபரப்பு விலகி, ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டுள்ள நடிகை நடிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு எழுந்துவிட்டது.

ஷங்கர் இயக்கத்தில் விகரம் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ’தேர்தல்’ என பெயர் சூட்டியுள்ளார்களாம். இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட். ஹீரோ காம்பினேஷன் திருப்தி அளித்ததும் ஹீரோயின் தேர்வுக்காக தேடிய ஷங்கருக்கு பாலிவுட்டில் நல்ல மார்கெட்டுடன் இருக்கும் அசின் தான் தெரிந்திருக்கிறார் போல.

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் தமிழ் படத்தில் அசினை நடிக்க வைக்கக் கூடாது என ஷங்கரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடப்பட்டுள்ளதாம்.

அசின் விஜய்யுடன் ’காவலன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்று அந்நாட்டு அதிபர்கள் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அசினின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ‘காவலன்’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

ஒருவழியாக எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து ‘காவலன்’ படம் ரிலீஸானது. இப்போது அசின் ஷங்கர் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியதும், ஷங்கருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஷங்கரின் இந்த படத்திற்கு தேர்தல் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் படத்தில் அரசியல் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

ஷங்கரின் முதல்வன் படம் அரசியலில் நடக்கும் தவறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

என் இடம் அப்படியேதான் இருக்கு - தமன்னா!!!

Monday, ,May, 28, 2012
பிரபல நடிகர் ஒருவரை காதலித்தார், அது அந்தக் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு காரணமாகதான் தமன்னாவுக்கு தமிழில் படங்களில்லை... இந்த காஸிப் உங்களுக்கு‌த் தெ‌ரிந்திருக்கும். இதனை அடியோடு மறுக்கிறார் தமன்னா. நான் இதுவரை காதலிக்கவேயில்லை என்று எழுபது எம்எம்மில் புன்னகைப்பவர் தனது படங்கள் குறித்து பகி‌ர்ந்து கொண்டவை...

தமிழ் மேல அப்படி என்னதான் கோபம்? ஆளையே பார்க்க முடியவில்லையே...?

என்னைப் பார்க்கிற எல்லோரும் இதையேதான் கேட்கிறாங்க. எனக்கு அங்கீகாரமும், புகழும் முதலில் கிடைத்தது தமிழில்தான். எப்படி மறக்க முடியும்? தெலுங்குப் படங்களில் பிஸியாகிட்டதால் தமிழில் கவனம் செலுத்த முடியலைங்கிறது உண்மைதான். அதுக்காக மறந்துட்டேன்னு சொல்றதெல்லாம் அதிகம்.

ச‌ரி, எப்போதான் தமிழுக்கு வரப் போறீங்க?

ரொம்ப சீக்கிரம். ஏன் என்றால் காதல் என்பேன் படத்தில் நடிச்சிட்டிருக்கேன். விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது. அப்புறம் நான்கு டைரக்டர்ஸ் கதை சொல்லியிருக்காங்க. எனக்குப் பிடிச்ச கதையில் நடிப்பேன். கால்ஷீட்டைப் பொறுத்து அது ஒன்றா இரண்டா என்பது தெ‌ரியும்.


FILEரட்சா படத்தில் நடிச்சது பற்றி சொல்லுங்க?

ராம் சரண் தேஜா ஹீரோ. படம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இந்த வருஷத்தை சநதோஷமாக்கிய படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படமும்கூட. தமிழில் ரகளைங்கிற பெய‌ரில் வெளியிட்டாங்க. எனக்கு நல்ல பெயரை தந்த படம்.

தமிழ் என்று வரும் போது கதை, கேரக்டர் என்று பிகு செய்யும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கமர்ஷியல் படங்களில் பேசாமல் ஆடிவிட்டு செல்வது ஏன்? ரட்சாவும் ஒ கமர்ஷியல் படம்தானே.

ஆந்திரா ரசிகர்கள் இப்போதும் கமர்ஷியல் படங்களை ரசிக்கிறாங்க. ஆனா தமிழில் அப்படியில்லை. அதனால்தான் மாஸ் ஹீரோக்களே அவ்வப்போது கமர்ஷியல் இல்லாத படங்களை ட்ரை பண்றாங்க. அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

எல்லாம் ச‌ரி, இப்போதும் தெலுங்குக்குதானே முன்னு‌ரிமை கொடுக்கிறீங்க?

தெலுங்கில் நான் இப்போது நான்கு படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இதில் லாரன்ஸ் இயக்குகிற ‌ரிபெல் படமும் ஒன்று. ஆனால் அடுத்த வருஷத்திலிருந்து தமிழிலும் அதிக படங்களில் நடிப்பேன்னு நினைக்கிறேன்.

தமிழில் தமன்னாவின் இடத்தை ஹன்சிகா பிடிச்சிட்டதா ஒரு பேச்சிருக்கே?

ஹன்சிகா என்னைவிட சீனியர். சின்ன வயசிலேயே நடிக்க வந்திட்டாங்க. எனக்கும் அவருக்கும் சண்டைன்னுகூட எழுதினாங்க. ஆனா நானும் அவரும் ஃப்ரெண்ட்ஸ். ஒரு கல் ஒரு கண்ணாடி போஸ்டர் பார்த்திட்டு நல்லாயிருக்குன்னு போன் செய்தேன். சினிமாவில் யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது. தமிழில் என்னுடைய இடம் அப்படியேதான் இருக்கு. இயக்குனர்கள் தமிழில் என்னை நடிக்க வைக்க காட்டுற ஆர்வத்திலிருந்தே இது தெ‌ரியுது.

மீண்டும் கலக்க வருகிறார் ,வடிவேலு,போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்!!!

Monday, ,May, 28, 2012
மீண்டும் கலக்க வருகிறார் ,வடிவேலு,போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்!

வாசுபாஸ்கர் இயக்கியுள்ள "மறுபடியும் ஒரு காதல்' படத்தின் மூலம் மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு. நீண்ட இடைவேளிக்குப் பிறகு இந்த படத்தில் போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வடிவேலுவின் முந்தைய படமான வின்னர் படத்தின் கைப்புள்ள கேரக்டரையே மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் காமெடியில் வடிவேலு கலக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கு ‌ரீமேக்கில் அ‌‌‌ஜீத்? அ‌‌‌ஜீத்துக்கே இந்த நியூஸ் தெ‌ரியுமா என்பது சந்தேகம்?!!!

Monday, ,May, 28, 2012
அ‌‌‌ஜீத்துக்கே இந்த நியூஸ் தெ‌ரியுமா என்பது சந்தேகம். ஆனாலும் மாஸ் ஹீரோக்கள் பற்றிய காஸிப்பையும் கரெக்டாக வாசகர்களிடம் சேர்க்க வேண்டியது நமது கடமை.

பில்லா 2-வை முடித்துள்ள அ‌‌‌ஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெய‌ரிடப்படவில்லை. இதையடுத்து சிறுத்தையை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். நாகி ரெட்டியின் விஜயா புரொடக்சன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

சிவா இயக்கத்தில் அ‌‌‌ஜீத் நடிக்கயிருப்பது ரவி தேஜா நடித்த தெலுங்குப் படமான Daruvu என்றொரு செய்தி கிளம்பியிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் படம் நேற்றுதான் திரைக்கு வந்தது. சிவா இயக்கிய சிறுத்தை ரவி தேஜா நடித்த விக்ரமார்க்குடு படத்தின் ‌ரீமேக். அதனால் அவ‌ரின் அடுத்தப் படமும் ரவி தேஜா நடித்தப் படத்தின் ‌ரீமேக்காக இருக்கும் என்ற யூகத்தில் கிளப்பிவிடப்பட்ட செய்தியாகவே இது என தெ‌ரிகிறது.

கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி!!!

Monday, ,May, 28, 2012
பொதுவாக ஒரு படம் நன்றாக இருந்தால் ர‌‌ஜினிக்கும், கமலுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் பாராட்டுகள் மறுநாள் பத்தி‌ரிகை செய்தியாகும். வசூலில் எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மட்டும் இருவரும் பார்க்கவில்லை. உதயநிதி நடித்தப் படத்தை பாராட்டி ஆள்கிறவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாக வேண்டுமா என்று இதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.

இந்த கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

ஓகே ஓகே படம் அமெ‌ரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் இயக்குனர் உள்பட அனைவரையும் பாராட்யிருக்கிறார். இந்த மனம் திறந்த பாராட்டில் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

ர‌‌ஜினியும் படம் பார்த்தால் கான்ட்ரவர்ஸி கிளப்பியவர்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ.

'பெருசா' எதிர்பார்க்கும் பிரணீதா!!!

Monday, ,May, 28, ,2012
நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா.

முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.

இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.

அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.

முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!