Saturday, March 24, 2012

நடிகைக்கு திடீர் சுளுக்கு ஹீரோ டென்ஷன்!!!

Saturday, March 24, 2012
பெல் ஹீரோயினுக்கு திடீர்னு இடுப்புல சுளுக்கு ஏற்பட வலியால் துடிச்சி போனாராம்... போனாராம்... சுளுக்கு வந்தது எப்படின்னு நிறையபேர் கேட்டாங்களாம். பட ஷூட்டிங்ல பெண்டு நிமித்துற சில நடன அசைவுகளை ஏடாகூடமாக செஞ்சப்போ இப்படி ஆயிடுச்சின்னு சொன்னாராம். இதுக்கிடையில மூணுஷா ஹீரோயினுக்கு வாந்தியாம். கடும் காய்ச்சலால வந்த வாந்தி இது. ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காராம்... சொல்லியிருக்காராம்...

அலைபாயுற இயக்கம் படத்துல நடிக்க¤ற சமந்த ஹீரோயின் புதுசா பட வாய்ப்பு வந்தா கால்ஷீட் இல்லைன்னு கையை விரிக்க¤றாராம்.. விரிக்க¤றாராம்... பெரிய படத்துல நடிக்க¤றதால சின்ன படங்களை ஒத்துக்காதேன்னு பிரெண்ட்ஸ் குரூப் கொடுத்த ஐடியாதான் இதுக்கு காரணமாம்... காரணமாம்... பட ரிலீஸ் நெருங்க நெருங்க உன்னோட பேமென்ட்டும் உயரும். அதனால இப்போதைக்கு புதுபடம் கமிட் பண்ணிக்காதேன்னும் அதே குரூப் அட்வைஸ் கொடுத்திருக்காம்... கொடுத்திருக்காம்...

பாய்ஸ் ஹீரோவோட சொதப்பல் படம் பேசப்பட்டதால, அவரோட தெலுங்கு படங்களை தமிழ்ல டப் பண்ண ஒரு குரூப் ரெடியா இருக்காம்... இருக்காம்... ஆனா இது நடிகருக்கு பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... தமிழ்ல எனக்குன்னு ஒரு மார்க்கெட் பிடிக்க விரும்புறேன். ஓடாத படங்களையெல்லாம் டப் பண்ணி அதை கெடுத்துடுவாங்க போலிருக்கேÕன்னு நடிகரு டென்ஷன் ஆகுறாராம்... ஆகுறாராம்...

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, March 24, 2012
ஒய் திஸ் கொலை வெறிடி பாடலுக்கு இசை அமைத்த அனிருத், ஹாலிவுட் பாடகர் பிட் புல்லுடன் இணைந்து பணியாற்ற ஆசை தெரிவித்துள்ளார்.

*‘வனயுத்தம்’ படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் நடிக்கும் விஜயலட்சுமி ஷூட்டிங் இடைவேளையில் வீரப்பனுடன் பழகியவர்களை சந்தித்து காட்டில் நடந்த சம்பவங்களை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டாராம்.

*பூபதி பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

*தனக்கென தனிபாணியில் நடிப்பதால் போட்டி ஹீரோயின்கள் பற்றி ‘யுவன் யுவதி’ நாயகி ரிமா கல்லிங்காலுக்கு கவலை இல்லையாம்.

* இந்தி படத்தில் தனது ஜோடியாக நடிக்கும் சோனம் கபூரின் நடிப்பு திறமையை பற்றி அவருடன் சில நாள் நடித்தபிறகுதான் சொல்வாராம் தனுஷ்.

வில்லன், பாடல், காதல் இல்லாமல் 90 நிமிடம் ஓடும் படம்!!!

Saturday, March 24, 2012
வில்லன், பாடல், காதல் எதுவுமில்லாமல் 90 நிமிடம் ஓடும் படம் உருவாகி உள்ளது.‘போர்க்களம் என்ற படத்தை இயக்கியவர் பண்டி சரோஜ்குமார். இவர் இயக்கும் புதிய படம் அஸ்தமனம். இது பற்றி அவர் கூறியதாவது: ஹாலிவுட் படங்கள் 90 நிமிடங்களில் பரபரப்பாக உருவாக்கப்படுகிறது. அதுபோல் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்படத்தில் நிறைவேறி இருக்கிறது. அஸ்தமனம் படம் 90 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடும். இதில் பாடல் கிடையாது. காதல் கிடையாது. வில்லன் கிடையாது. காட்டுக்குள் ஜாலி பயணமாக டிரக்கிங் செல்லும் 6 பேர் வழிதவறி விடுகின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா என்பதுதான் கதை.

இப்படத்தின் ஷூட்டிங் நடத்திவிட்டு பட குழுவினர் திரும்பும்போது இருட்டிவிட்டது. இதில் 1 கி.மீட்டர் தூரம் பாதை மாறி சென்றுவிட்டோம். அதன்பிறகுதான் வழிதவறி செல்கிறோம் என்பது தெரிந்தது. ஒரு வழியாக சரியான பாதையை கண்டுபிடித்து காட்டிலிருந்து வெளியில் வந்தோம். ராஜேஷ், சரண், கனகசபை, விக்டோரியா, வித்யா நடிக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா வனப்பகுதிகளில் 50 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ராஜ்குமார் ஒளிப்பதிவு. சித்தார்த் இசை. எஸ்.சிவராஜசேகர் தயாரிப்பு.90 நிமிடம் ஓடும் படம்

கர்ணன் வெற்றியால் கோலிவுட் குஷி ஓடாத படங்களும் மறு ரிலீஸ் ஆகிறது!!!

Saturday, March 24, 2012
சிவாஜி நடித்த ‘கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து, சமீபத்தில் வந்த தமிழ் படங்களை கூட ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கடந்த 40 வருடத்துக்கு முன்பு வெளி யான படம் ‘கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி, என்.டி.ராமராவ், அசோகன், சாவித்ரி, தேவிகா நடித்திருந்தனர். இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ரசிகர் களிடையே வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் வெளியாகி வரவேற்பை பெறாமல் போனபடங்களை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ‘வெங்காயம் என்ற படத்தை இயக்குனர் சேரன் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார். ‘இப்படத்தில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் ரிலீஸ் சரியான விதத்தில் செய்யப்படவில்லை. எனவே போதுமான பப்ளிசிட்டிக்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளேன்‘ என்றார் சேரன். அதேபோல் எஸ்.பி.சரண் தயாரித்த ‘ஆரண்ய காண்டம் படமும் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் வென்றது. சமீபத்தில் இப்பட இயக்குனருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது வெற்றி பெறவில்லை. ‘கர்ணன் பட வெற்றி எதிரொலியாக இப்படமும் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வா நடித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படம் முக்கிய காட்சிகள் சில தணிக்கையில் கட் செய்யப்பட்டு யு சான்றிதழுடன் ரிலீஸ் ஆனது. அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்து ஏ சான்றிதழுடன் மறுபடியும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஜெனிலியா முடிவு!!!

Saturday, March 24, 2012
குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட நேரம் இருக்கிறது. இப்போது நடிப்பில்தான் கவனம் என்றார் ஜெனிலியா.பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது:தமிழில் வெளியான ‘சந்தோஷ் சுப்ரமணியம்Õ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு ‘பொம்மரிலு. இதில் ஹாசினி என்ற பாத்திரத்தில் நடித்தேன். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. இப்படத்துக்கு பிறகு ஆந்திராவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு ஹாசினி என்று பெயர் வைத்தனர். அதேபோல் ‘கதா என்ற படத்தில் சித்ரா என்ற வேடமும் பேசப்பட்டது. ஒரே சாயல் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை அதிகளவில் குறைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. முன்பு வருடம் முழுவதும் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன்.

ரிதேஷை சிறுவயதிலிருந்து தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் உள்ள குணங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போதைக்கு நான் முழுமூச்சாக குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமும், வயதும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துள்ளேன். இந்தியில் நடித்துள்ள ‘சந்தோஷ¢ சுப்ரமணியம் ரீமேக் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எனக்கேற்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன்.

இப்போதைக்கு திருமணத்துக்கு பை... சினிமாவுக்கு ஹாய்! - அனன்யா பல்டி!!!

Saturday, March 24, 2012
திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்று பல்டியடித்துவிட்டார் அனன்யா.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை அனன்யா, ஒரு பெரிய நடிகையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்ட்டார். குறிப்பாக அவரது கடைசி படமான எங்கேயும் எப்போதும் நன்றாக ஓடியதால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வந்தன.

இந்த நேரத்தில்தான் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு திடீரென திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமண தேதியை சீக்கிரம் முடிவு செய்து அறிவிப்போம் என்றும் அனன்யா கூறினார்.

முன்னணி நடிகையாக வளரும்போது அனன்யா திருமணத்துக்கு சம்மதித்தது தமிழ், மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருப்பதாக தெரிவித்தார். அனன்யாவும், இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும், ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என்றும் உறுதியாக அறிவித்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தன.

ஆனால் தற்போது அனன்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.

மீண்டும் முழு நேரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.

திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ''திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் அவசரப்பட முடியாது.

சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய சாதித்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்,'' என்றார்.

ஆஞ்சநேயனுடன் அனன்யா திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

டாப்ஸி, காஜல் அகர்வால் வரவால் கடுப்பா? - அசின் பதில்!!!

Saturday, March 24, 2012 டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் அசின்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை.

யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்," என்று கூறியுள்ளார்.

'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை," என்றார்.

தமிழில் யாரும் அணுகவில்லையா என்ற கேள்விக்கு, "அதற்கென்ன, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் பாலிவுட்டில் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. அங்கு செட்டிலான பிறகு தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.

இயக்குநர் சிகரம் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா?.

Saturday, March 24, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் - பெப்சி தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது விஸ்வரூபமடைந்து வருகிறது.
"அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். பெப்சி அமைப்பை உடைக்கும் நோக்கில் புதிய முடிவுகளை எடுக்க நினைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால் அம்முயற்சியை தற்காலிகமாக தள்ளிவைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் இயக்குநர் கே.பாலசந்தர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிட்டு இருப்பது:

1. ஏப்ரல் 30-ம் தேதி வரை புதிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் துவக்கப்படக்கூடாது.

2. தற்போது படப்பிடிப்பில் உள்ள தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிவரை தற்போது நடைபெற்றுவரும் முறையில் தொடர்ந்து நடைபெறலாம். ஆனால் மே மாதம் 2-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்கவுள்ள தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பைச் சார்ந்த தொழிலாளர்களோடு மட்டுமே நடைபெற வேண்டும்.

3. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவுகளை எல்லாத் தயாரிப்பாளர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேற்கண்ட முடிவுகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க விதி எண் 14-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்து அதை இன்று அறிவிக்கலாம் என்று இருந்தோம்.

ஆனால் மூத்த தயாரிப்பாளர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்கள் மேற்கண்ட முடிவுகளின் செயல்பாட்டை தற்காலிமாக தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், இப்பிரச்சினைகளைத் தற்காலிகமாக தள்ளிவைத்து அவருடன் கலந்து ஆலோசித்து பின்பு அறிவிக்கின்றோம்" என்று அவ்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள். பாலசந்தரின் சமரச முயற்சிகள் எடுபடுமா என்பது போகப் போகத்தான் தெரியும். இவ்வறிக்கையின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொள்ளவில்லை. துணைத்தலைவர் தியாகராஜன், தேனப்பன், சிவா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஓட்ட படகை ஒட்ட வைக்க நினைக்கிறீங்க.... ஒடையாம இருந்தா சரி!

சகுனி’படத்திற்கு பின் கார்த்தி-யின் மூன்றாவது நாயகி!!!

Saturday, March 24, 2012
சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத்தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டாவது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவதாக நிகிதா நடிக்கின்றனர்.

நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப்படத்தையே தான் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்த்தி பற்றி கேட்டதற்கு, “கார்த்தி எனக்கு பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது” என்று புளங்காகிதம் அடைகிறார்.

ஸ்ரீராமராஜ்ஜியம்' படத்துக்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!!!

Saturday, March 24, 2012
ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.

இதில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. நயன்தாராவுக்கு விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் கவர்னர் ரோசய்யா வழங்கினார்.

பழம்பெரும் பாடகி பி.வசந்தா, நடனக்கலைஞர் அனிதா குகா உள்பட 4 பேருக்கு மகிளா ரத்னா விருதும், இயக்குனர் பாபு, ஒளிப்பதிவாளர் பி.ஆர்.கே.ராஜு, குழந்தை நட்சத்திரம் பேபி யானி, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உள்பட 21 கலைஞர்களுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

'ஓகே ஓகே'விற்கு 450 பிரிண்ட்களா?.!!!

Saturday, March 24, 2012
இயக்குநர் ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. டிரெய்லரில் உதயநிதி - சந்தானம் கூட்டணியின் காமெடி காக்டெய்லால் இளைஞர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரிய நாயகர்களின் படத்தினை போலவே 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கும் சுமார் 450 பிரிண்ட்கள் போடப்படுகிறது. "அனைத்துக்கும் காரணம் இயக்குநர் ராஜேஷ் தான். ரொமான்டிக் காமெடி படங்களில் அவர் மன்னன். சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு, சமீபகாலங்களில் இது போன்ற காமெடி படத்தினை பார்த்தது இல்லை என்று பாராட்டி, 'யு' சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்க விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. நனைஞ்சா... துவட்டியும் விடுவீங்களா பாஸ்?

ஆந்திர அரசு சார்பில் சரோஜாதேவி, ஜெயசுதா, ஜெனிலியாவுக்கு விருது!!!

Saturday, March 24, 2012
ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.

விழாவில் ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ''அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது'' என்றார்.

பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, ''என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது. நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர்.

சித்தார்த்திற்கு டப்பிங் பேசவுள்ளார் சிம்பு...?.!!!

Saturday, March 24, 2012
சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா நடித்து தெலுங்கில் ஹிட்டான “ஓ மை பிரண்ட்” படத்தை தமிழில் “ஸ்ரீதர்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இதன் உரிமையை சதீஷ் என்பவர் வாங்கியுள்ளார்.

இந்த படத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என்று விரும்ம்பினார் உரிமையாளர் சதீஷ். இதையடுத்து சித்தார்த்திடம் கேட்டபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார். இது பற்றி சித்தார்த் தனது ட்விட்டரில், “நான் நடித்த படத்தை மற்ற மொழியில் டப்பிங் செய்யும்போது, அதில் ஒருபோதும் நான் பேசமாட்டேன். இப்போதில்லை, எப்போதும் பேசப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த படத்தில் சித்தார்த்தும் ஸ்ருதியும் ஒரு பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் தெலுங்கில் மிகப் பெரிய ஹிட்டானது. இப்போது தமிழில் அந்த பாடலை பாட, நடிகர் சிம்புவிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

எம்ஜிஆர், ரஜினி, கமல் பற்றி மலரும் நினைவுகளில் மூழ்கிய ராஜேஷ் கன்னா!!!

Saturday, March 24, 2012
சமீபத்தில் பாலிவுட்டின் சாதனை நடிகர் ராஜேஷ் கன்னாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா.

பிரபுதேவா இந்தியில் இயக்கியுள்ள படம் ‘ரவுடி ரத்தோர்’ விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர ஒரு இந்திப் படம், ஐபிஎல் துவக்கவிழா என படுபிஸியாக உள்ள பிரபு தேவாவுக்கு, பாலிவுட்டின் எவர்கிரீன் ரொமான்டிக் ஹீரோ ராஜேஷ் கன்னாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்பது நெடு நாள் ஆசை.

அந்த ஆசை அவரது நண்பர் மூலம் நிறைவேறியுள்ளது சமீபத்தில்.

ராஜேஷ்கன்னாவைச் சந்தித்தது பற்றி பிரபுதேவா கூறுகையில், "ராஜேஷ் கன்னாவைச் சந்தித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. அவரது எல்லா படங்களையும் நான் பார்த்துள்ளேன். எனது தந்தையும் அவருக்கு தீவிர ரசிகர். என்னை வீட்டுக்கு அழைத்து தேநீர் கொடுத்தார். தென்னிந்திய திரையுலகில் தனக்குள்ள தொடர்புகள் குறித்து நிறைய பேசிக்கொண்டு இருந்தார்.

ராஜேஷ் கன்னா நம்பர் ஒன் நடிகராக இருந்த காலத்தில் பெரும்பாலான இந்திப் படங்கள் சென்னையில்தான் நடந்துள்ளன. அப்போது சோழா ஓட்டலில் அவருக்கு நிரந்தரமாக அறை ஒன்று இருக்குமாம். அங்கே தங்கி இருந்தது, காலை வேளைகளில் நியூ உட்லண்டஸ் ஓட்டலில் ஆவி பறக்கும் இட்லியும் மணக்க மணக்க காபியும் குடித்த நாட்களை அவ்வளவு ஆசையாக சொன்னார்.

குறிப்பாக அமரர் எம்.ஜி.ஆர். படங்களை ஹாத்தி மேரா சாத்தி, அப்னா தேஷ் என இந்தியில் ரீமேக் செய்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான நட்பு, கமலின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை இந்தியில் ‘ரெட் ரோஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தது என பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"அப்போதெல்லாம் தென்னிந்திய சினிமா எத்தனை கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக்கதாக இருந்தது தெரியுமா.. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்," என்றாராம் ராஜேஷ் கன்னா.

இணைந்து நடிப்பார்களா ரஜினிகாந்த் – தனுஷ்...?.

Saturday, March 24, 2012
ரஜினிகாந்த் – தனுஷ் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க, பிரபல இயக்குனர் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சர்வசாதாரணமாகி விட்டது. அத்தகைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது. எனவே கேரளா மற்றும் மும்பையில் மூன்று அல்லது நான்கு நடிகர்கள் நடிப்பது அதிகமாகிவருகிறது.

சமீப காலமாக தமிழ் சினிமா ஹீரோக்களும் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர் ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களையும், அவருடைய மருமகன் ’கொலைவெறி’ தனுஷையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். அவரின் முயற்சி இந்த ஆண்டிற்குள் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாரிசு ஹீரோயின் பரிகார ஹீரோக்கள்!!!

Saturday, March 24, 2012
லட்சுமிகர ஹீரோயின், பாலிவுட் படங்கள்ல ஷைன் ஆகறதுல குறியா இருக்காராம்... இருக்காராம்... கூடவே தன்னோட சிஸ்டருக்கும் சான்ஸ் பிடிக்கறதுல மும்முரமாயிட்டாராம். சமீபத்துல தன்னோட தோழி கல்யாணத்துக்கு போனவரு கையோட சிஸ்டரையும் அழைச்சிட்டு போனாராம். அங்க வந்த பாலிவுட் தயாரிப்பு, ஆக்டருனு எல்லாத்துக்கும் சிஸ்டரை அறிமுகம் பண்ணியவர் படங்களுக்கு சிபாரிசு செய்ய கேட்டாராம். லக் இருந்தா பாலிவுட் இல்லாட்டி கோலிவுட்னு லட்சுமி நடிகை தோழியின் காத கடிச்சாராம்... கடிச்சாராம்...

பிரகாச பிரதர்ஸ் நடிகருங்களுக்கு நேரம் சரியில்லன்னு ஜோசியருங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... அதாலதான் காட்டன் வீர ஹீரோ படத்துக்கு எதிர்பார்க்காத தடையெல்லாம் வருதாம். இதுக்கு பரிகாரம் பண்ணனும்னு நெருக்கமானவங்க சொல்றாங்களாம். இத கேள்விப்பட்ட சங்கத்துகாரங்க சிலரு பரிகாரத்த வீட்ல பண்றதவிட சங்கத்தோட பேசி சரிபண்ணிகிட்டா எல்லா நேரமும் சரியாயிடும்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

சினிமா துறை ஸ்டிரைக் நீடிக்கிறதால முன்னணி நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தை வீணடிக்காம விளம்பரங்கள்ல நடிச்சி காசுபார்க்க முடிவுபண்ணிட்டாங்களாம். இதால யார் விளம்பரத்தை யார் பறிக்கறதுன்ற புதுபோட்டி உருவாயிடுச்சாம். இதுக்காக அவங்க தூதருங்க கமர்ஷியல் கம்பெனிகளா ஏறி இறங்கி ஏற்கனவே ஹீரோ, ஹீரோயின் வாங்கறதவிட குறைஞ்ச சம்பளத்துல
எங்க நட்சத்திரங்க நடிக்க தயாருன்னு சொல்லி சான்ஸ்
பிடிக்கிறாங்களாம்...
பிடிக்கிறாங்களாம்...

ஷாமின் 'ஏசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'!!!

Saturday, March 24, 2012
ஏ.கே என்டர்டெயிண்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பிரபல தெலுங்கு சினிமா நிறுவனம் முதன் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் 'ஏசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'. இப்படத்தில் ஷாம், அல்லரி நரேஷ் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் வைபவ், ராஜு சுந்தரம், சினேகா உல்லல், நீலம் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அனில் சுங்கரா தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் இப்படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் நியூயார்க் பிலிம் இன்ஸ்டியூட்டில் திரைப்பட இயக்கம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளமைத் துள்ளலுடன் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த பொழுது போக்குப்படமாக உருவாகும் இப்படம் இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான முப்பரிமாண (3D) திரைப்படமாகவும் உருவாகிறது. அமெரிக்காவில் இருந்து ஸ்டீரியோஸ்கோபிக் உபகரணங்களும் அதனை இயக்கும் தொழில் நுட்பக்கலைஞர்களான ஸ்டீரியோகிபாரர்ஸூம் வரவிருக்கிறார்கள். பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. ஆடப்போவது ரம்மியா? மங்காத்தாவா?

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைட்டானிக்! இம்முறை 3-டியில்!!!!!

Saturday, March 24, 2012
உலகெங்கும் வசூலை வாரிக்குவித்த டைட்டானிக் படம், 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது, 3டி தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம் டைட்டானிக்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையையும் சேர்த்து டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினம். இந்த சோகத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றித் தந்து இருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் டைட்டானிக் 3டி வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீசாக இருக்கிறது.

இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா!!!

Saturday, March 24, 2012
சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது என்று கூறியிருந்தது.

மேலும், சில இந்தி நடிகைகளை வைத்து பல கிரிக்கெட் வீரர்களை செக்ஸ் ஆசை காட்டி வலையில் வீழ்த்தி வருவதாகவும் அந்த இதழ் கூறியிருந்தது. இந்த செய்தியில், நடிகை நூபுர் மேத்தாவின் முகத்தை மட்டும் லைட்டாக மறைத்து விட்டு அவர் மல்லாந்து கிடப்பது போன்ற அரை நிர்வாணப் படத்தையும் சண்டே டைம்ஸ் போட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியுடன் தனது படத்தை இணைத்துப் போட்டதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் நூபுர். எனக்கு கிரிக்கெட்டே தெரியாது. நான் எந்த கிரிக்கெட் வீரரையும் சந்தித்தில்லை, போட்டியைக் கூட பார்த்ததில்லை. எனது படத்தை எனது அனுமதி பெறாமல் போட்ட பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போகிறேன் என்று ஆவேசமாக குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது தடாலடியாக ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான் என்றும், லண்டனில் கிரிக்கெட் வீரர்கள் சிலரை சந்தித்ததாகவும், இலங்கை வீரர் தில்ஷனுடன் தான் டேட்டிங் செய்ததாகவும் நூபுர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது காசினோ ஒன்றில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலரைச் சந்தித்தேன். ஆனால் எனக்கும் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

அப்போது தில்ஷனுடன் நான் டேட்டிங் செய்து வந்தேன். அவருடன் சேர்ந்துதான் கேசினோவுக்குப் போனேன். ஆனால் அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக கூற முடியாது.

தில்ஷனுடன் நான் போனது எனது தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட உறவு தொடர்புடையது. அதை கிரிக்கெட் சூதாட்டத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. நான் தனிமையில் வசிக்கும் பெண், அழகான பெண். உலகின் எந்த மூலைக்கும் சுதந்திரமாக போய் வரக் கூடிய சுதந்திரம் எனக்கு உள்ளது. யாருடனும் நான் பழக முடியும். பேச முடியும். எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார் நூபுர்.

நூபுர் டேட்டிங் போனதாக கூறப்படும் தில்ஷன் மீது ஏற்கனவே சூதாட்டப் புகார் இருப்பது நினைவிருக்கலாம்.

தமிழ் சினிமாவே ஸ்தம்பித்து நிற்கும்போது விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது? - கேயார்!!!

Saturday, March 24, 2012
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பட்டு நிற்கிறதோ என கேள்வி எழுப்பும் அளவுக்கு சங்க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைகள் விடுவதும் பேட்டிகள் தருவதுமாக உள்ளனர்.

பெப்சி - தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையால் படப்பிடிப்புகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இது குறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கேயார் கூறுகையில், "தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

இயக்குனர் பாலசந்தர் இப்பிரச்னையில் தலையிட இருப்பதால் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெப்சி பதவியில் இருந்து பாலசந்தர், பாரதிராஜா இருவருமே கடந்த 19ம் தேதி விலகிவிட்டனர்.

பதவியில் இல்லாத போது எப்படி அவர் இந்த பிரச்னையில் தலையிட முடியும். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறேன்.

36 நாட்களாக மற்ற படப்பிடிப்புகள் நடைபெறாத போது, விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எப்படி நடைபெற்றது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதே இதை காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

அதேநேரம் தமிழ் சினிமாவுக்கென்று தனியாக தொழிலாளர் அமைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சஸ்பென்ஸ் நாவல் படமாகிறது 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்!

Saturday, March 24, 2012
சஸ்பென்ஸ் நாவல் படமாகிறது. இதில் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.‘அகராதி’ பட இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியதாவது:
கமர்ஷியல் படங்கள் மினிமம் கேரன்டி படங்களாக அமைவதுபோல் சஸ்பென்ஸ் கதைகளும் மினிமம் கேரன்டி படங்களாக அமைகிறது. அந்தபாணியில்தான் இப்படம் உருவாகிறது. த்ரில்லான கதைகளை எழுதுபவர் ராஜேஷ்குமார். அவரது நாவல் ஒன்றை தழுவிதான் இப்படம் உருவாகிறது. இதற்காக அவருடன் பலநாள் ஆலோசனை நடத்தி திரைக்கதை அமைத்தேன். நாவலில் எவ்வளவு சஸ்பென்ஸ் காக்கப்பட்டதோ அதே அளவுக்கு படத்திலும் சஸ்பென்ஸ் இருக்கும். பணத்தாசை ஒருவருக்கு பிடித்துவிட்டால் நல்ல உறவுகளையும் கெடுக்க துணிந்துவிடுகிறார்கள். பணத்துக்காக அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதுதான் கதைக்கரு.

பிரதீப், பவன், மோனிகா, ஓவியா, கீர்த்தி சாவ்லா, அர்ச்சனா, சத்யன் என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சுந்தர்.சி.பாபு இசை. எம்.சிவகுமார் ஒளிப்பதிவு. இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது பெரும்பாலும் அமைதியாகவே ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும். சஸ்பென்ஸான சில காட்சிகளில் நிஜத்திலேயே ஓவியா மிரண்டிருக்கிறார். ஒரு காட்சியில் நடித்தபோது பதற்றத்தில் அவரது கைகளில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதிகமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் குழப்பம் இல்லாமல் ஷூட்டிங் நடந்தது.

‘வயதாகி விட்டது’ இதுதான் த்ரிஷாவை ஆட்டிப் படைக்கும் ஒரே விஷயம் : இளமைக்காக த்ரிஷா ஊசி!!!

Saturday, March 24, 2012
வயதாகி விட்டது’ இதுதான் த்ரிஷாவை ஆட்டிப் படைக்கும் ஒரே விஷயம் : இளமைக்காக த்ரிஷா ஊசி!!!

வயதாகி விட்டது’ இதுதான் த்ரிஷாவை ஆட்டிப் படைக்கும் ஒரே விஷயம். இதை மறைப்பதற்காக உரித்த கோழியாக மாற முடிவு செய்துவிட்டார். அப்படியும் தொங்கும் சதைகள் காட்டிக் கொடுத்து விடுமே..? இதை தவிர்க்க, மாதம் ஒருமுறை ஸ்பெஷல் இன்ஜெக்ஷன் போட்டு கொள்கிறாராம். இதற்காகவே வெளிநாட்டிலிருந்து ஊசி இறக்குமதியாகிறதாம். நிஜமாவா?

சுருட்டிய அனுஷ்கா சுருண்ட த்ரிஷா!!!

Saturday, March 24, 2012
நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார், த்ரிஷா. காரணம், ரொம்ப சிம்பிள். தெலுங்குப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். விக்ரமுடன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக்ஸ் பாண்டியன்’, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இதை கூட த்ரிஷா பொறுத்துக் கொள்வார். ஆனால், தான் நடித்து வந்த விளம்பரப் படங்களை அடுத்தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதைதான் த்ரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்று தமிழகத்தில் த்ரிஷா, ஜீரோ. இப்போது முதல் வரியை மீண்டும் படியுங்கள்.

மீண்டும் யுவனுடன் கூட்டணி சேரும் ராஜேஷ்!!!

Saturday, March 24, 2012
'ஆல் இன் ஆல் அழகுராஜா' இது தான் கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர். இயகக்குனர் யார் தெரியுமா... எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், அடுத்த கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை பிடித்துப் போனதால் ராஜேஷூக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்-வுடன் கூட்டணி வைத்தார். தற்போது 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார் ராஜேஷ். வழக்கம் போல், தனது படத்திற்கு வித்தியசமான தலைப்பை தேர்வு செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம சந்தானம் தான்...

நம்பர் ஒன் ஆக இருப்பது முக்கியம் பிரியங்கா சோப்ரா பேட்டி!!!

Saturday, March 24, 2012
நம்பர் ஒன் இடத்திலிருப்பது மிக முக்கியம்’ என்றார் பிரியங்கா சோப்ரா.இதுகுறித்து அவர் கூறியதாவது:
சினிமாவோ, வேறு எந்த தொழிலோ நம்பர் ஒன் இடத்தில் இருப்பது மிக முக்கியம். பள்ளி பருவத்திலிருந்தே இந்த போட்டி தொடங்கி விடுகிறது. இது மக்கள் மத்தியில் முத்திரை பதித்துவிடாது என்பது வேறு விஷயம். ஆனாலும் நம்பர் ஒன் என்பது அவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் ஒன்று உறுதி நெம்பர் ஒன் அல்லது நம்பர் 2 யார் என்பதை நிர்ணயிப்பது கடினம். யாராலும் நம்பர் ஒன் யார் என்பதை முடிவு செய்ய முடியாது.ஒரு ஹீரோயின் வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள்தான் நடிக்க முடிகிறது. எல்லா படமும் ஹிட்டாகி விடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் தயாராகின்றன. ஹீரோயின் என்றால் போட்டோவுக்கு ஏற்ற முகவெட்டு இருப்பது அவசியம். இந்தியில் ரேகா, கேத்ரினா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோர் போட்டோவுக்கு ஏற்ற அழகான முகவெட்டு கொண்டவர்கள்.இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.