Wednesday, February 15, 2012

பேரதிர்ச்சியில் ரிச்சா!!!

Wednesday, February 15, 2012
நடிகை ரிச்சா நடிக்கவிருந்த தெலுங்கு படமான 'ஷேடோ'வில் அம்மணிக்கு டாட்டா காட்டிவிட்டு டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனராம். தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷின் புதிய படம் 'ஷேடோ'. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரிச்சாவிடம் கேட்டுள்ளனர். அவரும் கதை கேட்டு, சம்பளம் பேசி, டேட் கொடுத்து நான் ரெடி எப்ப ஷூட்டிங் போகலாம் என்றிருந்தார். பெரிய ஹீரோவுடன் நடிக்க சான்ஸ் கிடைத்ததில் ரிச்சா ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். கதைப்படி அவர் மாடர்னாக வர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அமெரிக்காவில் வளர்ந்த அவருக்கா மாடர்னாக இருக்க சொல்லித் தர வேண்டும். அதனால் அசத்திவிடலாம் என்றிருந்தார். இந்த நிலையில், திடீர் என்று வந்து ரிச்சா நீங்கள் வேண்டாம் உங்களை விட நடிகை டாப்ஸி ரொம்ப 'ரிச்சா', நல்ல மாடர்னாகத் தெரிகிறார். அதனால் நாங்கள் அவரையை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்ட ரிச்சாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாம். டாப்ஸி தமிழில் மட்டும்தான் போர்த்திக் கொண்டு வருகிறார். தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துக் கொண்டிருக்கிறார். டாப்ஸி மட்டுமல்ல பல நடிகைகள் தமிழில் அடக்க ஒடுக்கமாக வந்துவிட்டு, தெலுங்கில் ஃப்ரீயாக நடிக்கின்றனர். ஹையோடா! டோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு டேஸ்ட்?

ஆசிய திரைப்பட விருதுகள்! ஹாங்காங்கில் கோலாகலம்!!

Wednesday, February 15, 2012
6வது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவுக்காக ஹாங்காங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆசிய திரைப்படங்களை உலக அளவில் பிரதிபலிக்கும் வகையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, 6வது ஆசிய திரைப்பட விருது விழா ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் ஆசியாவில் இருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த படம், இயக்குநர் உள்ளிட்ட 14 பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறப்பு விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 3 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான ஓட்டு பதிவு பிப்ரவரி 13ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 5ம் தேதி வரை நடக்கிறது. ஓட்டுகளை ஆசிய திரைப்பட விழாவுக்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் மார்ச் 19ம் தேதி விருது வழங்கப்பட இருக்கிறது.

ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ்!

Wednesday, February 15, 2012
ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

விடுங்க பாஸ்... இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்!

காதலர் தினம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகள்!!!

Wednesday, February 15, 2012
ரஜினி - லதா

பேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான்.

அஜித் - ஷாலினி

அஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கணக்கை எடுத்தால் அதற்கு பத்து விரல்கள் பத்தாது. உடனே மனதை 'பறிகொடுக்கிற' சுபாவம் அவருடையது. அவருடன் இணைத்து கூறப்பட்ட நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால் அஜித் மனம் விரும்பி கல்யாணம் செய்து கொள்ள விரும்பியது ஷாலினிதான். இன்றைக்கு வரைக்கும் டார்லிங் என அழைத்து காதலை உறுதி செய்து கொண்டே இருப்பார் அஜித். அவரின் மோசமான தோல்விகளிலும் பாசத்துடன் உடன் இருந்து பேலன்ஸ் செய்தவர் ஷாலினி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தது குட்டி தேவதை - அவரது மகள் அனோஷ்கா.

விஜய் - சங்கீதா

தமிழ் சினிமாவில் பரபரவென முன்னேறி வந்த விஜய்க்கு காதல் வாய்ப்புகளும் களை கட்டிவந்தன. ஒட்டியும் ஒட்டாமலும் பழகும் விஜய்க்கு காதல் வந்தது லண்டனில் வாழ்ந்த சங்கீதாவிடம். விடுமுறைக்காக சென்ற விஜய் கண்ணில் பட்டதும் வந்தது காதல். சத்தம் போடாமலும், வெளியே தெரியாமலும் காதலை வைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழரான சங்கீதா மணமொத்து விஜய்யோடு வாழ்ந்து வருகிறார். தன் ஆண், பெண் குழந்தையோடு நீலாங்கரையில் வசிக்கும் விஜய் சங்கீதாவை காதல் செய்த வருடங்கள் நான்கு. இன்னும் அவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்கும் அன்பு, பிரியம் ஆச்சரியமானது.

சூர்யா - ஜோதிகா

சூர்யா-ஜோ திருமணம் நடந்தது சூர்யா போராடிப்பெற்ற விஷயம். அப்பாவின் சம்மதத்திற்காக வருடக் கணக்கில் காத்திருந்தார். ஒருவருக்கொருவர் அக்கரை செலுத்தி, பின்பு காதலாக உருவெடுத்த வரலாறு சூர்யாவுடையது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள். இருந்து மணம் முடித்த இப்போது சூர்யா வாழ்வது பூர்ணவாழ்வு. தன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஜோவின் பங்களிப்பைக் காண்கிறார் சூர்யா. சூர்யாவின் திருப்பம் எடுத்த 'காக்க காக்க'கூட ஜோவின் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் வந்த வாய்ப்புத்தான். இதை அவரே நேர்பட பேட்டியில் சொல்லியிருக்கிறா. காதல் கனிந்து இவ்வளவு நாட்களாகியும், அன்று பார்த்த அதே அன்னியோன்யத்தை நான் பார்ப்பது இவர்களிடமே. மாதத்திற்கு ஒருமுறை வெளியே குழந்தைகளோடு புறப்பட்டுப்போய் வருவது, இரண்டாவது சனிக்கிழமை வீட்டுக்குள்ளேயே குழந்தைகளோடு கொண்டாட்டம், வருஷத்திற்கு 20 நாட்களாவது பாரின் ட்ரிப் என கண்டிப்பாக பேமிலியோடு செலவழிக்கிற காதல் மனிதர் சூர்யா. இன்றுவரைக்கும் காதல் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியாக நெருக்கம் காட்டி நடிக்கக்கூட சங்கடப்படுவார் சூர்யா. ஜோவிற்கு சங்கடம் அளிக்கும் எதிலும் ஆர்வம் காட்டாத மனது அவருடையது. முழுமையான சமர்ப்பணம், முழுமையான தன்னிறைவு கொண்ட காதல் குடும்பம் இது.

கிரிஷ் - சங்கீதா

இன்றைக்கு வரைக்கும் கிரிஷ்ஷின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் இவர்களுடையது. Made for each other ஜோடி. பார்க்கவே நன்றாக இருக்கும். நவீனமான ஜோடியாக இவர்களைச் சொல்லலாம். ரொம்பவும் ஜோவியல், நாட்டி, பொருத்தமான ஜோடி என்றுகூட சொல்லலாம்.

ஜெயம் ரவி -ஆர்த்தி

ரொம்ப நாட்களாக காதல் 'சீக்ரெட்' காத்தவர் ஜெயம் ரவி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் காதலுக்கு கிரின் சிக்னல் கிடைத்தது இவர்களுக்கு. அவ்விதமே என்றாலும் குழந்தையோடு இன்றைக்கு சந்தோஷமாக வலம் வருவது இந்த தம்பதியினரின் வழக்கம். நண்பர்களின் திருமணம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். காதலை உணர்ந்து, பிடிவாதமாக வீட்டில் அனைவருக்கும் உணர்த்தி வெற்றிபெற்று காதல் ஜோதியை இன்னமும் தொடர்ந்த் அணையாமல் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் ஜோடி!

ஸ்ரீகாந்த் - வந்தனா

இவர்கள் மாதிரி காதலித்ததும் கிடையாது. திட்டிக்கொண்டதும் கிடையாது. அநாகரீகத்தின் உச்சிக்கு சென்ற சண்டை, அமைதியாக முடிந்து, இப்போது மிக அழகான வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள். மனம் இருந்தால், வழியும் இருந்தால் எப்பவும் மனது ஒன்றிப்போகலாம் என்பதற்கு ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடியை விட்டால் உதாரணம் சொல்ல ஆளில்லை. அன்றைய உறவுச் சிக்கல் மட்டும்தான், இப்போது எல்லோருக்கும் உதாரணமாக காட்டுகிற ஜோடி ஸ்ரீ-வந்தனா.

உதயநிதி - கிருத்திகா

கல்லூரியிலிருந்து, மணமேடை வரைக்கும் வந்த அருமையான காதல் உதயநிதியுடையது. மகனின் வேண்டுகோளில் இருந்த அன்பையும், ஈரத்தையும், காதலையும் பார்த்த ஸ்டாலின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, உதயநிதி வெற்றிக்கொடி கட்டினார். இன்றுவரைக்கும் காதலில் கண்ணியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருத்திகாவிற்கு காதலோடு முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி. சொந்தமான பத்திரிகை ஆரம்பித்தது முதல், குறும்படம் டைரக்ட் செய்தது வரை கிருத்திகா செயல்பட பார்த்துக் கொண்டு இருப்பது உதயநிதியின் இயல்பு. இதுபோல் என்றென்றும் வாழ வாழ்த்துகிறோம்!

சில்க் படங்கள் ரீமேக் ஆகிறது : வாய்ப்பை பிடிக்க நடிகைகள் போட்டி!

Wednesday, February 15, 2012
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியில் ஹிட்டானதை தொடர்ந்து அவர் நடித்த பழைய படங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகைகள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வியால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படம் உருவாகி வெற்றி பெற்றது.

அந்த மோகம் தற்போது மலையாள படவுலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா நடித்த பழைய மலையாள படங்களை தூசி தட்டத் தொடங்கி உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்த 'இணையை தேடி' என்ற படம் ரீமேக் ஆகிறது. மேலும் கவர்ச்சி அலையில் ஹிட்டான 'சாட்டைக்காரி', 'நித்ரா' ஆகிய படங்களும் ரீமேக் ஆகிறது.

இந்த படங்கள் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளன. சில்க¢ கதையில் நடித்து அந்த ஒரே படத்தால் வித்யா பாலனின் மவுசு கூடியது. அதனால் ரீமேக் ஆகும் சில்க் படங்களில் நடிக்க நமீதா, லட்சுமி ராய், நிகிதா உள்பட பிரபல நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவியுள்ளது.

இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் -அமலா பால்!

Wednesday, February 15, 2012
இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: 'மைனா'வில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த நீங்கள் 'வேட்டை' படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்கிறார்கள். எனது வேடத்தை தேர்வு செய்தபிறகு அதற்கு ஏற்றவகையில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓவர் கிளாமராக நடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. என்னுடைய மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை. வேடம்தான் தீர்மானிக்கிறது. கமர்ஷியல் வெற்றியும் முக்கியம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி உள்ளது. 'ஆர்யாவுடன் லவ்வா?' என்றார்கள். இப்போது இயக்குனர் விஜய்யுடன் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திரையுலகில் எனது நெருங்கிய நண்பர் விஜய். தனுஷுடன் '3' படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வரும்போது நிச்சயம் ஏற்று நடிப்பேன்.

விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் சேர்ந்து இருக்கிறார்!

Wednesday, February 15, 2012
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் சேர்ந்து இருக்கிறார். நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதிய படம் "துப்பாக்கி". இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. சினிமா தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக தற்காலிகமாக துப்பாக்கி படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு முக்கிய ‌ரோலில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஜெயராம் கூறுகையில், இந்தபடத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி டைரக்டர் விளக்கி கூறியதும், ரொம்பவே பிடித்து போய்விட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். சூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஆவலில் இருக்கிறேன். படத்தில் என்னுடைய ரோல் என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் படத்தில் என்னுடைய கேரக்டர் ரொம்பவே வெயிட்டானது என்றார். மேலும் தான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், மலையாளம் சினிமா போலவே, நிறைய தமிழ் படங்களும் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆகையால் தொடர்ந்து தமிழ் படங்களில் நல்ல ‌நல்ல கேரக்டரில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே துப்பாக்கியில், ஜெயராம் வில்லன் கேரக்டர் ஏற்க கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே ஜெயராம், "சரோஜா", "தாம் தூம்" போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்ட நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!!!

Wednesday, February 15, 2012
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள்.

தமிழில் ஜீவா - சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதல் ட்ரெயிலர் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியில் இன்னும் வரவில்லை.

தமிழில் நீதானே என் பொன்வசந்தம் பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசு கிறங்கிப் போகிரது. தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசையைப் போட்டிருக்கிறார்கள்.

காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!

வாழ்க்கையில் ஒரு பெரிய வட்டமடித்து, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டார் நயன்தாரா!!

Wednesday, February 15, 2012
நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!

கிளிப்பிங்ஸ்!!! கிளிப்பிங்ஸ்!!! கிளிப்பிங்ஸ்!!!

Wednesday, February 15, 2012
* பாலிவுட் பட ஷூட்டிங்குக்காக ராஜஸ் தான் சென்ற அசின், அங்குள்ள உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டார்.

* சென்னை புறநகர் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கும் ‘அட்டை கத்திÕ படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் ரஞ்சித் இயக்கி உள்ளார்.

* கிரிக்கெட் வீரர் ஆக விரும்பும் விஜய் மகன் சஞ்சய், நட்சத்திரங்கள் ஆடிய கிரிக்கெட் போட்டிக்கு தந்தையுடன் சென்று உற்சாகமாக ரசித்தான்.

* ‘சுட்டி குழந்தைÕ படத்தில் நடித்த நாகார்ஜுனா இளையமகன் அகில், வெளிநாட்டில் எம்பிஏ படிக்கிறார். படிப்பு முடிந்ததும் நடிக்க வருவாராம்.

* ஸ்டிரைக்கர் படத்தை தொடர்ந்து மற்றொரு மலையாள படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, மோகன்லால் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

பிரியதர்ஷன் இயக்கும் மலையாள படத்தில் மட்டுமல்ல, அவர் எந்த மொழியில் படம் இயக்கி நடிக்க கூப்பிட்டாலும் கால்ஷீட் கொடுப்பாராம் பாலிவுட் ஹீரோ சுனில் ஷெட்டி.

நர்த்தகி படத்தில் நடித்த திருநங்கை கல்கி, மலையாளத்தில் கிளாமர் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

‘கோச்சடையான்' படத்தில் நடிக்கும் ஷோபனா, ருக்மணி இருவரும் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்' படத்துக்கு சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழில் காணாமல் போயிருந்த நிலா, இப்போது இந்தி படங்களில் நடிக்கிறார்.