Sunday, February 19, 2012

பரத்-சஞ்சனா புதிய காதல் ஜோடி : கோலிவுட்டில் பரபரப்பு!!!

Sunday, February 19, 2012
கோலிவுட்டில் புது காதல் ஜோடியாக வலம் வருகின்றனர் பரத், சஞ்சனா. பிரபுதேவா, நயன்தாரா காதல் விவகாரம் முற்றுப்பெறாத நிலையில் புதிதாக ஒரு காதல் ஜோடி விஷயம் வெளியாகி உள்ளது. ‘பாய்ஸ்’, ‘எம் மகன்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பரத், கன்னட நடிகை சஞ்சனா ஜோடி காதல் வலையில் விழுந்திருக்கிறது. சமீபத்தில் காதலர் தினத்தன்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பரத், சஞ்சனா ஜோடி ஜாலியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சஞ்சனாவிடம் கேட்டபோது,‘‘என்னுடைய சொந்த வாழ்க்கையை பகிரங்கபடுத்த விரும்பவில்லை. எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையில் நான் இழுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. விராத் கோஹ்லி, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதையடுத்து அவர்களுடனான நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். யாராவது ஒருவருடன் நான் காணப்பட்டால் உடனே அவருடன் நான் டேட்டிங் செய்வதாக கூறுவது சரியல்ல. பரத் எனது நெருங்கிய நண்பர். இந்த நட்பு பாதிக்காது என்று நம்புகிறேன். சினிமாவில் இவரைத் தவிர வேறு பாய்பிரண்ட் யாரும் எனக்கு கிடையாது’’ என்றார். இதுபற்றி பரத் கூறும்போது,‘‘சஞ்சனா எனக்கு நண்பர். அவருடன் காதலர் தினத்தன்று விருந்து சாப்பிட்டதாக கூறுவது தவறு. அன்றைய தினம் என் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். இப்படி இருக்கும்போது சஞ்சனாவுடன் நான் எப்படி பொழுதை கழித்திருக்க முடியும்’’ என்றார்.

எனது படத்தில் தீபிகாவை நடிக்க வைப்பேன் : பாலிவுட் தயாரிப்பாளர் சவால்!!!

Sunday, February 19, 2012
என்ன நடந்தாலும் தீபிகா 'ரேஸ் 2' படத்தில் நடித்தே தீர வேண்டும். அவரை நடிக்க வைப்பேன் என பாலிவுட் தயாரிப்பாளர் சவால் விட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் துரானி தயாரிக்கும் ‘ரேஸ் 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்க மறுத்து வெளியேறினார் தீபிகா படுகோன். தமிழில் ‘கோச்சடையான்' படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்காகவே 'ரேஸ் 2'விலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. இது பற்றி துரானி கூறும்போது,"அவரது 4 மாத கால்ஷீட்டை நான் வீணடித்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த நேரத்தில் 'தேசி பாய்ஸ்' மற்றும் 'காக்டெய்ல்' படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் எங்களை சந்தித்த தீபிகாவின் மேனேஜர், ‘தீபிகாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளது. எனவே ரேஸ் 2 படத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை' என்றார். பலமுறை நேரில் சந்தித்து பேச முற்பட்டபோது என்னை பார்க்காமல் தவிர்த்தார். இதுவரை எவ்வளவோ பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கிறேன். யாரிடமும் இப்படி பிரச்னை ஏற்பட்டதில்லை. தீபிகாவிடம் அவமானப்பட்டதுபோல் வேறு யாரிடமும் அவமானப்படவில்லை. இதையடுத்துதான் அவர் மீது புகார் கொடுத்தேன். என்ன விலை கொடுத்தாவது அவரை நடிக்க வைத்தே தீருவேன்" என்றார்.

இன்டர்நெட்டில் வெளியான அஜீத்தின் பில்லா-2 பட ஸ்டில்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி!!!

Sunday, February 19, 2012
அஜீத்தின் பில்லா- 2 படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது வருகிற மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்மிட்டுள்ளனர். இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஒமனகுட்டன் நடிக்கிறார். பிரபு, ரகுமான், புரூனா அப்துல்லா, வித்யுத் ஜம்வால், மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை மற்றும் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டன.

ஸ்டில்களை இதுவரை பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை. ஆனால் இப்படத்தின் ஸ்டில்கள் திடீரென இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளன. இருபது படங்கள் வந்துள்ளன. அஜீத் வில்லனை சுட்டுக் கொல்வது கவர்ச்சி நடிகையுடன் நடனம் ஆடுவது போன்ற பல படங்கள் வெளிவந்துள்ளன.

செல்போனில் படம் பிடித்து திருட்டுத்தனமாக யாரோ இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இப்படங்களை பார்த்து அஜீத் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். ஸ்டில்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.

தமிழ் படங்களில் நடிக்க தமன்னா ஆர்வம்: இந்திப்படங்களை உதறினார்!!!

Sunday, February 19, 2012
தமன்னா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே சூர்யாவுடன் அயன் விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக தனுசுடன் நடித்த வேங்கை படம் வந்தது.

அதன் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை. தற்போது தெலுங்கில் ராச்சா, எந்து கன்டே பிரேமந்தா, ரிபெல் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து விட்டு தமிழில் நடிக்க கதை கேட்கிறார். இந்த நிலையில் தமன்னாவுக்கு இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

அஜய் தேவ்கானுடனும் நடிக்க அழைத்தனர். ஆனால் இந்தியில் நடிக்க மறுத்து விட்டதாக
கூறப்படுகிறது. அத்துடன் படங்களில் நடிப்பதையும் தமன்னா குறைத்து வருகிறார்

நடிகை உதயதாராவுக்கு ஏப்ரல் மாதம் திருமணம்!!!

Sunday, February 19, 2012
கண்ணும் கண்ணும், தீ.நகர், பயமறியான், லீலை உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை உதயதாரா. இப்போது வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை உதயதாராவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர் ஜுபின் ஜோசப். துபாயை சேர்ந்த இவர் விமான பைலட்டாக உள்ளார். உதயதாராவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் கோட்டயத்தில் நடக்கிறது. ஏப்ரல் மாதம் கேரளாவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கையில் பச்சை குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க நயன்தாரா முடிவு: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய திட்டம்!!!

Sunday, February 19, 2012
நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபுதேவாவை மணக்க நயன்தாரா சினிமாவுக்கு முழுக்க போட்டு காத்து இருந்தார். இந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் பிரபுதேவா திருமணத்துக்கு தாமதம் செய்தார். அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை தன்னுடன் அழைத்து தங்க வைத்துக் கொண்டார்.

எங்கேயும் காதல் படத்தை இயக்கிய போது அதில் நாயகியாக நடித்த ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. படம் முடிந்த பிறகும் இருவரும் செல்போனில் பேசி தொடர்பை வலுப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

தற்போது நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்துடன் நடிக்கவும் பேசி வருகின்றனர். சிம்பு ஜோடியாக நடிக்கவும் பெரிய இயக்குனர் ஒருவர் நயன்தாராவை அணுகி பேசி வருகிறார்.

பிரபுதேவாவுடன் தீவிர காதலில் இருந்தபோது அவரது பெயரை நயன்தாரா கையில் பச்சைக் குத்தி இருந்தார். இப்போது அப்பெயருடன் படப்பிடிப்புக்கு செல்வது அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. எனவே பிரபுதேவா பெயரை அழித்து விட முடிவு செய்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கலாமா? என்று யோசிக்கிறார்.

ரஜினியுடன் ஜோடி சேருவேன்: கத்ரீனா நம்பிக்கை!!!

Sunday, February 19, 2012
ரஜினியுடன் 'கோச்சடையானில்' நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப். கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப்தான் முதலில் அறிவிக்கப்பட்டார். தனது கால்ஷீட்களை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் பின்னர் அவருக்குப் பதில் தீபிகா படுகோன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கத்ரீனா விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து கத்ரீனா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கோச்சடையானுக்கு 20 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் என்றார் சௌந்தர்யா. அதற்காக எனது மற்ற பட ஷூட்டிங்குகளை எந்த அளவு அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று பார்த்தேன். அடுத்து நான் ஷாருக்கான் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் காரணமாக அடுத்த 10 மாதங்கள் எங்கும் நகர முடியாத நிலை. உலகின் வேறு வேறு பகுதியில் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நடக்கும் நிலையில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 'கோச்சடையான்' உயர்ந்த தொழில்நுட்பம் நிறைந்த படம் வேறு. எனவேதான் நடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் படமொன்றில் நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிப்பேன்," என்றார். 20 நாள் ஒதுக்க முடியலையாக்கும்...?! சும்மா உடான்ஸ்தான...

சூர்யாவுடன் ரவிதேஜாவா?

Sunday, February 19, 2012
சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படவேலைகள் துவங்கி உள்ளன. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் டாப்ஸி, சோனம் கபூர் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சோனம் கபூரும், ரவிதேஜாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு லொக்கேஷன் தேர்வு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சீக்கிரம் ஆரம்பிங்கப்பா......

'துப்பாக்கி' கைவிடப்பட்டது?: விஜய் கடுப்பு!!!

Sunday, February 19, 2012
துப்பாக்கி' படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பது விஜய்யை கடுப்பேற்றியுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் 'துப்பாக்கி'. முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படத்தை ஒத்தி வைத்துவிட்டு, குறும்படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டார் முருகதாஸ். இதனால், படம் கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றார் கொஞ்சம் கடுப்புடன். இப்போது கிடைத்துள்ள இடைவெளியும் விஜய்க்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளதாம். பியூட்டி பார்லர் திறப்பு, செல்போன் கடை திறப்பு என நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் போக முடிவெடுத்துள்ளாராம். ம்ம்ம்.. கைக்கு காசுமாச்சு... பப்ளிசிட்டியும் ஆச்சு......

அமலா பால்... மூணும் அவுட்!!!

Sunday, February 19, 2012
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.

அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?

அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.

இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.

ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!

திரிஷாவின் காதலன் யார்?...விரைவில் சொல்லப் போறாராம்!!!

Sunday, February 19, 2012
தனது காதலன் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருந்த த்ரிஷா தற்போது படங்களைக் குறைத்துக் கொண்டிருக்கிறாராம். காரணம் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

அவர் தற்போது பொள்ளாச்சியில் தம்மு என்ற தொலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

நான் மிகவும் பாசமானவள். நான் சிலருடன் தான் நட்பாகப் பழகுவேன். நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது என்பதால் நான் யாருடன் பழகினாலும் அளவோடு தான் பழுகுவேன்.

என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வருகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். தெலுங்கு நடிகர் ராணா எனக்கு நல்ல நண்பர். எனது திருமணத்திற்கு அதிக நாட்கள் இல்லை. என்னுடைய காதலன் யார் என்பதை விரைவில் இந்த உலகிற்கு அறிவிப்பேன். நான் தற்போது 3 பெரிய ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனை நாட்கள் தான் மக்கள் பழைய ஜோடியையே பார்ப்பார்கள். அதனால் தான் புதுமுகங்களுக்கு வழிவிடுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

நாங்க நம்பிட்டோம்...!

விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!!!

Sunday, February 19, 2012
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் சுந்தர்.சி, திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். அதில் கொஞ்ச காலம் தாக்குபிடித்த அவர், இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார். தற்போது விமல், சிவா, அஞ்சலி ஆகியோரை வைத்து "மசாலா காபி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஷாலை வைத்து ஒரு முழுநீள கமர்ஷியல் படத்தை எடுக்க இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம். விஷால் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி ‌கூறுகையில், இந்தபடத்திற்கு ஒரு ஹீரோயின் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஆனால் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம், அதனால் இன்னொரு ஹீரோயினுக்காக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றார்.

இதனிடையே இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சுந்தர்.சி இயக்க திட்டமிட்டு இருப்பதாலும், ஸ்ருதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிரபலம் என்பதால் அவரை இந்தபடத்திற்கு தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.