கோலிவுட் ஹீரோயின்கள் தாங்கள் நடித்த வேடங்களுக்கு தாங்களே டப்பிங் பேசுவதில் திடீர் ஆர்வம்!!!

Tuesday, March 13, 2012
கோலிவுட் ஹீரோயின்கள் தாங்கள் நடித்த வேடங்களுக்கு தாங்களே டப்பிங் பேசும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய கறுப்பு வெள்ளை படங்களில் நடித்த சாவித்ரி முதல் சரோஜாதேவி வரை தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு தாங்களே டப்பிங் பேசினர். பின்னர் தமிழ் தெரியாத நடிகைகளை கோலிவுட்டில் நடிக்க படையெடுத்து வந்தனர். இவர்கள் ஷூட்டிங்கில் வசனங்களையே பேச முடியாமல் தடுமாறினார்கள். ஆங்கிலத்திலும், இந்தியிலும் தமிழ் வசனங்களை எழுதி வைத்து ஒப்பித்தார்கள். இன்னும் பல நடிகைகள் அந்த பாணியில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க வேறு ஒருவர் தேவைப்பட்டது. இதற்காக உருவாகி உள்ள டப்பிங் கலைஞர்கள் அமைப்பிலிருப்பவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

சமீபகாலமாக தமிழில் தாங்கள் நடித்த பாத்திரங்களுக்கு தாங்களே சொந்த குரலில் டப்பிங் பேசுகின்றனர். நடிக்க வந்ததுமுதல் த்ரிஷாவுக்கு வேறுவொருவர் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். 2 வருடத்துக்கு முன்பு ‘மன்மதன் அம்புÕ படத்தில் அவரே டப்பிங் பேசினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அந்த முயற்சியை தொடர்கிறார். ‘7ஆம் அறிவு படத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தானே டப்பிங் பேசினார். தற்போது மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில நடிக்கும் சமந்தாவும் டப்பிங் பேசி நடிக்கிறார்.

Comments