Saturday, March 17, 2012

தெலுங்கில் படுகவர்ச்சி காட்டும் தமன்னா!!!

Saturday, March 17, 2012
தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளாராம் நடிகை தமன்னா.

ஏற்கெனவே தமிழில் பையா படத்துக்கு புடவையில் மழையில் நனைந்தபடி அடடா அடடா என ஒரு பாடல் பாடியிருந்தார்.

இப்போது தெலுங்கில் ராம்சரணுடன் அவர் நடிக்கும் படம் ரச்சா. இதிலும் ஒரு மழைப் பாடல் காட்சி உண்டாம். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், இடுப்பில் ஒரு மெல்லிய துணி அணிந்து இந்தப் பாட்டுக்கு தமன்னா ஆட்டம் போட்டுள்ளாராம்.

தமன்னாவின் இந்த கவர்ச்சியாட்டம், பல இயக்குநர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ராகவா லாரன்ஸ் தான் அடுத்து இயக்கும் தெலுங்குப் படமான ரிபெலில் தமன்னாவை நாயகியாக்கியுள்ளார். முடிந்தவரை அவரது கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு காட்சிகளை வைக்கப் போகிறாராம் இந்தப் படத்தில்.

என்னதான் தெலுங்கில் கவர்ச்சி காட்டினாலும், இன்னும் தமன்னாவால் தமிழ்ப் பட உலகம் பக்கம் வரமுடியவில்லை. இந்த ஆண்டும் இதுவரை படம் எதுவும் தமிழில் கமிட் ஆகவில்லையாம் அம்மணிக்கு!

மீண்டும் சுஹாசினி - சினேகாவின் திருமண விருப்பம்!!!

Saturday, March 17, 2012
16 வயதில் நடிக்க வந்தவர் சினேகா. கமல் உள்ளிட்ட முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். விருதுகளும் கிடைத்திருக்கின்றன. புகழுக்கும் குறைவில்லை.

மே மாதம் இவருக்கும் பிரசன்னாவுக்கும் திருமணம். சினேகா போன்ற ஒரு செலிபி‌‌ரிட்டியின் திருமண ஆசை என்னவாக இருக்கும்? சந்தேகமில்லாமல் சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்புறம் நடிக்க வருவார்கள் என்றாலும் திருமணத்தின் முதல் ஆசை குடும்பத் தலைவி.

சினேகாவும் ஒரு முழுமையான குடும்பத் தலைவியாக இருக்க ‌பி‌‌ரியப்படுகிறார். இதனால் தனிக்குடித்தனம் சென்று கணவருக்கு தேவையான அனைத்தையும் தானே செய்துத்தர ஆசைப்படுகிறாராம். சுருக்கமாக சினிமாவுக்கு வரும்முன் சாதாரண சுஹாசினியாக எப்படி இருந்தாரோ இப்படி இருக்க விரும்புகிறார்.

ஆசை அறுபது நாள்... இருந்துட்டுதான் போகட்டுமே.

மதுக்கோப்பையுடன் போஸ் தரும் படத்தை வெளியிட்டதால் சமீரா ரெட்டி வழக்கு!!!

Saturday, March 17, 2012
மதுக்கோப்பையுடன் போஸ் தருவது போன்ற படத்தை வெளியிட்ட கேரள பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை சமீரா ரெட்டி.

விஜய் மல்லையா தொடர்பான கட்டுரை அது. எண்ட் ஆப் குட் டைம்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், கையில் மதுக்கோப்பையுடன் சமீரா போஸ் தருவது போல படம் வெளியாகியுள்ளது.

இதனால் கொதிப்படைந்த சமீரா, அந்தப் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் தனக்கு உள்ள நல்ல இமேஜை கெடுக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம் சமீரா.

"எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கட்டுரையில் தேவையின்றி என் படத்தை வெளியிட்டுள்ளது தவறு. வருத்தமளிக்கிறது," என்றார் சமீரா.

பாண்டிரா‌ஜின் டபுள் டமாக்கா!!!

Saturday, March 17, 2012
மெ‌ரினாவின் காற்று அத்தனை சுகமில்லை என்றாலும் சுறுசுறுப்பாக அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார் பாண்டிரா‌ஜ். இந்தமுறை ஒன்றுக்கு இரண்டு ஹீரோக்கள். டபுள் டமாக்கா.

முதல் படம் பசங்க படத்திலிருந்த மே‌ஜிக் பாண்டிரா‌ஜின் வம்சம், மெ‌ரினாவில் இல்லை. ஏனென்று அவருக்கும் தெ‌ரியாது என்று நம்புவோம். ஆனால் பசங்க படத்தின் நல்ல அம்சங்கள் அனைவருக்கும் தெ‌ரியும். காமெடி, ரொமான்ஸ். இந்த இரண்டையும் முதலாக வைத்து அடுத்தப் படத்தை தொடங்குகிறார்.

படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்பது மட்டும் முடிவாகியிருக்கிறது. பசங்க படத்தின் அறிமுக ஹீரோ விமல் மற்றும் மெ‌ரினாவின் அறிமுக ஹீரோ சிவ கார்த்திகேயன். இவர்களுக்கான ஜோடிகளை தீவிரமாக‌த் தேடி வருகிறார் பாண்டிரா‌ஜ்.

மீண்டும் சீனுக்கு வந்தார் சோனா!!!

Saturday, March 17, 2012
சோனா என்றால் எளிதாக ஹேண்டில் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்களா?

முதலில் சரண் விவகாரம். சாணியை எடுத்து ஏன் முகம் துடைக்க வேண்டும் என்று அந்த விவகாரத்திலிருந்து சோனா ஒதுங்கி இருந்தார். பிறகு வெங்கட்பிரபுக்கு அட்வான்ஸ் கொடுத்தப் பிரச்சனை. அதுவும் முடிந்தால் விமான நிலையத்தில் அவர் எடுத்து வந்த உடைகளுக்கு வ‌ரி கட்ட கஸ்டம்ஸ் அதிகா‌ரிகளின் நிர்ப்பந்தம். இதோ மேலும் ஒரு பிரச்சனையில் சோனா.

அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா கனிமொழி என்ற படத்தை தயா‌ரிக்கத் தொடங்கி பைனான்ஸ் பற்றாக்குறையால் சோனாவுக்கு கைமாற்றிவிட்டது தெ‌ரிந்திருக்கும். மொத்தம் மூன்று ஷோ ஓடிய அந்தப் படத்தால் சோனாவுக்கு கடும் நஷ்டம். அ‌ந்த‌ப் படத்தை சிவா சைலண்டாக தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலையில் இறங்கியிருக்கிறார். இது தெ‌ரிந்ததும் கொதித்துவிட்டார் சோனா. விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் இன்னொருவனா?

விவகாரத்தை இப்போது கோர்ட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார் சோனா. இந்த விஷயத்திலாவது சோனாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

சீக்ரெட் ஹீரோயின்.. ஓ.கே. சொன்ன ஹீரோ!

Saturday, March 17, 2012
ஐ காட் ஹீரோ சமீபத்திய ஹண்ட் பட ஹிட்டால தன்னோட பேமென்ட்ட சர்ருன்னு 6 சிக்கு உசத்திட்டாராம்... உசத்திட்டாராம்... ஏற்கனவே இவர வச்சி படம் தயாரிச்ச கம்பெனி தங்களோட புதுபடத்துக்கு கால்ஷீட் கேட்டப்ப பேமென்ட்ட சொல்லி திணறடிச்சாராம். யோசிச்சி சொல்றோம்னு போனவங்க இதுவர பதில் சொல்லாம இருக்காங்களாம். இதப்பத்தி ஹீரோகிட்ட கேட்டா யாரோ இப்படி கத கட்டிவிட்டிருக்காங்க. புதுபடத்துல நடிக்கற மேட்டர் மட்டுந்தான் பேசப்பட்டது. சம்பளத்த பத்தி இதுவர பேசவே இல்லைன்னு மறுக்கறாராம்... ஹீரோ மறுக்கறாராம்...

அனுஷம், காஜல் ஹீரோயின்கள் டோலிவுட்லயிருந்து கவனத்த திருப்பினத டாப் ஹீரோயின் தனக்கு சாதகமாக்கி சந்துல சிந்துபாடுறாராம்... பாடுறாராம்... சமீபத்துல அவர் நடிச்சி ரிலீஸ் ஆன படம் ஊத்திகிட்டாலும் புதுபடத்தோட வாய்ப்ப தேடி வரவெக்கற சீக்ரெட்ட கத்துக்கிட்டாராம். ஏற்கனவே லீடிங் ஹீரோக்களோட ஜோடிபோட்டு நடிக்கறவர் இப்ப மற்றொரு பிக் ஹீரோவுக்கு ஜோடி போடுறாராம். இதபாத்து கவனத்த திருப்பின நடிகைங்க அதிர்ச்சில இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

சார்ம ஹீரோயின் சவுத்ல மார்க்கெட் காலியான கையோட பாலிவுட்ட தேடிப் போனாராம்... போனாராம்... ஆனா அங்க யாரும் கைகொடுக்கலயாம். விசனப்பட்டு புலம்பிக்கிட்டிருந்தவருக்கு மல்லுவுட் கைகொடுத்திருக்காம். மூட்டி நடிகரோட படத்துக்கு ஹீரோயின் தேடினப்ப வகையா இவர் பேர ஒருத்தர் எடுத்துக்கொடுத்தாராம். மூட்டி நடிகரும், ‘போடுங்க போடுங்க தெலுங்குக்கும் யூஸ் ஆகும்’னு ஓ.கே. சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்..

சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் நடிக்க மறுத்தேன் என்றார் அர்ஜுன்!!!

Saturday, March 17, 2012
சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் நடிக்க மறுத்தேன் என்றார் அர்ஜுன்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதையாக உருவாகிறது ‘வன யுத்தம்’. ஏஎம்ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுன் நடிக்கிறார். அவர் கூறியதாவது:
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்று பலமுறை என்னிடம் கேட்டார் இயக்குனர் ரமேஷ். எல்லோருக்கும் தெரிந்த சம்பவத்தில் நடிப்பதில் என்ன இன்டிரஸ்ட் இருக்கிறது என்று நடிக்க மறுத்தேன். ‘கதை கேளுங்கள். பிடித்தால் நடியுங்கள் இல்லாவிட்டால் நடிக்க வேண்டாம்’ என்றார். கதை கேட்டேன். அப்போதுதான் இக்கதைக்காக அவர் எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. போலீஸ் அதிகாரி விஜயகுமார் என்றால் எனக்கு பிடிக்கும். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டேன். வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். படத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் காட்சிகள் குறைவு. கிளைமாக்ஸில் மட்டும் சந்திப்போம். இதன் ஷூட்டிங், சம்பவம் நடந்த காட்டு பகுதியிலேயே நடந்துள்ளது. எல்லா காட்சிகளும் உண்மை சம்பவங்கள் அடிப்படையாக கொண்டது. இதில் நடிக்க நான் முழுஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குனரும் மற்றவர்களும் கூறுகிறார்கள். அது பொய். இப்படத்துக்கு நான் நிறைய கால்ஷீட் பிரச்னை செய்திருக்கிறேன். இப்போது எல்லா காட்சிகளும் முடிந்துவிட்டது.

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி!!!

Saturday, March 17, 2012
கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.

படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்
.

இயக்குநர் அமீருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை!!!

Saturday, March 17, 2012
இயக்குநர் அமீருக்கு எதிராக எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சங்கத்துக்கு எதிராக செயல்படுவதால் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம் போன்றவை அவருக்கு ஒத்துழைப்பு தராது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்துக்குப் பிறகு, இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், சில கசப்பான நிகழ்வுகளை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது, தயாரிப்பாளர்களை மிகுந்த அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அமீர் பிரச்சினை

டைரக்டர் அமீருக்கும், ஸ்டூடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையில் 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'பருத்தி வீரன்' திரைப்படம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. அமீர் தனது சொந்த பிரச்சினைக்கு பெப்சி அமைப்பையும், சம்மேளனத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒரு சிலரையும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிக்க, கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற புதிய படப்பிடிப்பு பல்லாவரம் அருகே நடைபெற்றபோது, திரைப்பட தொழிலாளர்கள் காலதாமதமாக சென்று தயாரிப்பாளருக்கு பெரும் பொருள் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர்.

ஆந்திராவில்...

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தொடர்ந்த இடைïறுகள் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஞானவேல்ராஜா, பக்கத்து மாநிலமான ஆந்திராவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சரியாக உணவு வழங்கவில்லை என்ற 'உப்புக்கு சப்பில்லாத' காரணத்தைக் கூறி, 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ராதாகிருஷ்ணன் தயாரிக்க, விதார்த் நடிக்கும் `காட்டுமல்லி' படப்பிடிப்பையும் நிறுத்தியுள்ளனர்.

தீர்மானங்கள்

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் இந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் அமீர் மீது சங்க விதிமுறைகளின்படி, நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் எந்த ஒத்துழைப்பும் தராது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்புகள் ரத்து

* தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போக்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) எல்லா தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைவரும் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

* தங்கள் செய்கைக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை, ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்துகொள்ளாது.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'கோச்சடையான்' படப்பிடிப்பு - லண்டன் புறப்பட்டார் ரஜினி!!!

Saturday, March 17, 2012
கோச்சடையான்' படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை லண்டன் பயணமானார். அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். இப்போது அந்த படம் தள்ளிப்போடப்பட்டு, அதற்கு பதில், `கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

கோச்சடையான்' படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார்.

லண்டன் புறப்பட்டார்

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

அவருடன் மகள் சௌந்தர்யா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் கொண்ட குழுவும் செல்கிறது.

கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களும் லண்டன் செல்கிறார்கள்.

லண்டனில் உள்ள அதிநவீன ஸ்டுடியோவில் சில தினங்களும், பின்னர் இங்கிலாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. மார்ச் 21-ம் தேதி தொடங்கும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு ஏப்ரல் 6-ந் தேதி வரை நடகிறது.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஏப்ரல் 7-ந் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடையை நீக்க முடியாது: நீதிமன்றம்!!!

Saturday, March 17, 2012
சினிமாப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதித்து மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது எனக் கூறி, இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என கேட்டு, டெல்லி உயர்நீதி மன்றத்தில் பிரபல இந்திப் பட அதிபர் மகேஷ் பட் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ராஜீவ் சக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு மகேஷ் பட் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதே நேரத்தில், இந்த வழக்கு குறித்து பதில் மனுதாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதிகள் ஜுலை மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கோச்சடையானை முந்தும் மாற்றான்!!!

Saturday, March 17, 2012
கோச்சடையான் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. மாற்றான் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதுக்குள்ள எப்படிப்பா...? நீங்கள் ஆச்ச‌ரியப்படுவது தெ‌ரிகிறது. இது வசூல் ரேஸ் அல்ல. டெக்னால‌ஜி விஷயம்.

கோச்சடையான் மோஷன் கேப்சர் டெக்னால‌ஜியில் உருவாக்கப்படுகிறது என்பது விரல் சூப்புகிற குழந்தைக்குக்கூட இந்நேரம் தெ‌ரிந்திருக்கும். இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று மார்தட்ட முடியாதபடி மாற்றான் மறிக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இப்படத்தின் சில காட்சிகளுக்கு மோஷன் கேப்சர் டெக்னால‌ஜியை பயன்படுத்துகிறார்களாம். ஸ்ரீனிவாஸ் மோகன் இந்த பணிகளை மேற்கொள்கிறார். கோச்சடையான் இதுவரை தொடங்காததால் மாற்றான் முதலில் திரைக்கு வந்து இந்தியாவிலேயே முதல்முறை பெருமையை தட்டிச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!!!

Saturday, March 17, 2012
நடிகை ஜெனிலியா விளம்பர தூதராக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம், தனக்கு வீடு கட்டி தரக்கோரி ரூ.54 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி வீடு கட்டித்தரவில்லை என்றும் கூறி திருப்பாதையா என்பவர் ஐதராபாத்தில் உள்ள பெருநகர தலைமை முதல் வகுப்பு நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நடிகை ஜெனிலியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறும், வருகிற 27-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நேற்று சைபாபாத் போலீசுக்கு உத்தரவிட்டு இருப்பதாக திருபாதையாவின் வக்கீல் பாலாஜி வதேரா தெரிவித்தார்.

பெப்ஸி தொழிலாளர்களை கண்டித்து படப்பிடிப்பு ரத்து!!!

Saturday, March 17, 2012
தயாரிப்பாளர்கள் வருகிற 19ந் தேதி ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்து உள்ளனர்.இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் அமீர் மீது சங்க விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் எந்த ஒத்துழைப்பும் தராது என்று, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் அராஜகப்போக்கால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவரும் 19.03.2012 திங்களன்று எல்லா அ தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ரத்து செய்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றுமையை நிலை நாட்டுவது மேலும் அன்று காலை 11- மணிக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.தங்கள் செய்கைக்கு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைகளின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்து கொள்ளாது. மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குஷ்புவுக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!!!

Saturday, March 17, 2012
நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்க முன்னர், நடிகை குஷ்பு வீட்டிற்கு போன் வந்திருக்கிறது. போனை எடுத்த குஷ்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நான் கமல்ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூபம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வர முடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலின் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா...?

இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார். எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜாவையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத்தான் எனது நண்பர்(கமல்) எனக்கு போன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழைத்தார். சூட்டிங் ஸ்பாட்டில் பிர்ஜூ மகாராஜை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர்ஜூவை சந்திக்கும் வாய்ப்‌பை ஏற்படுத்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார்.