Monday, March 19, 2012

தீவிர அரசியல்... நடிகை முடிவு!!!

Monday, March 19, 2012
சூப்பர் ஹிட் கொடுத்த பாசி இயக்கம் சமீபமா ஹிட் கொடுக்காததால யாருமே அவரை கண்டுங்காணாம
புறக்கணிக்கிறாங்களாம்... புறக்கணிக்கிறாங்களம். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப அவரால கதைகளை அமைக்க முடியாததே இந்த தோல்விக்கு காரணமாம். அவர்கிட்ட உதவி இயக்கமா இருந்தவங்க டாப் இயக்கமா இருக்காங்களாம். இதனால தன்னோட அடுத்த படத் தோட கதையை உதவி இயக்கமா இருந்தவங்க எழுதி தர கேட்டிருக்கா ராம்... கேட்டிருக்காராம்...

அரசியல் கட்சியில சேர்ந்தாலும் சினிமாவுல நடிக்க¤றதை குறைச்சிக்க மாட்டேன்னு திவ்ய ஹீரோயின் சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா, கட்சியில சேர்ந்த ப¤றகு நடிப்பை விட அரசியலுக்கு முக்கியத்துவம் தர்றாராம்... தர்றாராம்... கர்நாடக இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக கடுமையா உழைச்சாராம்... உழைச்சாராம்... அடிக்கடி ஷூட்டிங்கிற்கு கட் அடிச்சிட்டு, பிரசாரமே கதின்னு கிடந்தாராம். தீவிர அரசியல்ல குதிக்கவும் முடிவு எடுத்திருக்காராம்... இருக்காராம்...

ஒத்த எழுத்து படத்துக்கு பிறகு கைநிறைய படம் கொட்டப்போகுதுன்னு பியாவான நடிகை கனவுல இருந்தாராம்... இருந்தாராம்... ஆனா எதிர்பாத்த மாதிரி படங்கள் வரலையாம். மனம் நொந்துபோயிருந்த நடிகை பாலிவுட்ல வாய்ப்பு தேட ஆரம்பிச்சாராம். இப்போ இளைய திலகத்தோட வாரிசு நடிக்கற படத்துல நடிக்க பியாவான நடிகைக்கு அழைப்பு அனுப்பி இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி!!!

Monday, March 19, 2012
பிரபுதேவாவுடன் காதல் முறிந்த நிலையில், கையில் பச்சை குத்திய அவரது பெயரை அழித்துவிட முடிவு செய்துள்ளார் நயன்தாரா. இதற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்.
இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதனால் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். ஜீவனாம்சமாக பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வழங்கினார். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இதற்கிடையே சமீபத்தில் திடீரென பிரபுதேவா, நயன்தாரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர். பண விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் பிரிந்ததாகவும் தனது குழந்தைகளை கவனிப்பதில் பிரபுதேவா அதிக நேரம் ஒதுக்குவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை அதனால் காதல் முறிந்ததாகவும் பலவிதமாக பேசப்பட்டது. இது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தனது கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டால் முற்றிலும் அழித்துவிடலாம், கையும் அதே அழகுடன் இருக்கும் என அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தயாராகி வருகிறார். அஜீத்தின் புதிய படம், நாகார்ஜுனா, ராணா ஆகியோருடன் நடிக்கும் தெலுங்கு படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் பச்சை குத்தியதை அழிக்க அவர் முடிவு எடுத்துள்ளார்.

கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?:சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை!

Monday, March 19, 2012
சினேகா நடிப்பில் உருவாகும் ஹரிதாஸ் , தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்றார் இயக்குனர் குமாரவேலன்.
பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், பரத் நடித்த யுவன் யுவதி படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அடுத்து ஹரிதாஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:தியாகராஜ பாகவதர் நடித்து 3 தீபாவளிகளை கண்டு, தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிய படம் ஹரிதாஸ். இப்பட தலைப்பை என் படத்துக்கு வைக்க விரும்பினேன். இதற்காக டைட்டில் அனுமதி வாங்க 2 மாதம் சுற்றினோம். தயாரிப்பாளர் சங்கம், இன்டர்நெட் மூலமாக தேடி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அனுமதி வாங்கினோம். இது அப்பட ரீமேக் இல்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட படம். தந்தையை ஹீரோவாக நினைக்கும் மகன் அவரைப்போலவே உழைத்து வாழ்வில் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதையின் கரு. தந்தை தாஸ் என்ற வேடத்தில் கிஷோர். மகன் ஹரி வேடத்தில் பிருத்விராஜ். இவர்களின் இரண்டு கேரக்டர் பெயர்களை சேர்த்துத்தான் ஹரிதாஸ் என்று படத்துக்கு தலைப்பிடப்பட்டது. அமுதவள்ளி என்ற முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். பரோட்டா சூரியுடன் பலர் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. தயாரிப்பு ராமதாஸ், எஸ்.மஞ்சுளா, வேல்முருகன். ஒளிப்பதிவு ரத்னவேல். இசை விஜய் ஆண்டனி.இவ்வாறு இயக்குனர் குமாரவேலன் கூறினார்.

சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை!

சினேகா நடிப்பில் உருவாகும் ஹரிதாஸ் , தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்றார் இயக்குனர் குமாரவேலன்.
பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், பரத் நடித்த யுவன் யுவதி படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அடுத்து ஹரிதாஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:தியாகராஜ பாகவதர் நடித்து 3 தீபாவளிகளை கண்டு, தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிய படம் ஹரிதாஸ். இப்பட தலைப்பை என் படத்துக்கு வைக்க விரும்பினேன். இதற்காக டைட்டில் அனுமதி வாங்க 2 மாதம் சுற்றினோம். தயாரிப்பாளர் சங்கம், இன்டர்நெட் மூலமாக தேடி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அனுமதி வாங்கினோம். இது அப்பட ரீமேக் இல்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட படம். தந்தையை ஹீரோவாக நினைக்கும் மகன் அவரைப்போலவே உழைத்து வாழ்வில் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதையின் கரு. தந்தை தாஸ் என்ற வேடத்தில் கிஷோர். மகன் ஹரி வேடத்தில் பிருத்விராஜ். இவர்களின் இரண்டு கேரக்டர் பெயர்களை சேர்த்துத்தான் ஹரிதாஸ் என்று படத்துக்கு தலைப்பிடப்பட்டது. அமுதவள்ளி என்ற முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். பரோட்டா சூரியுடன் பலர் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. தயாரிப்பு ராமதாஸ், எஸ்.மஞ்சுளா, வேல்முருகன். ஒளிப்பதிவு ரத்னவேல். இசை விஜய் ஆண்டனி.இவ்வாறு இயக்குனர் குமாரவேலன் கூறினார்.

ஒருதலை காதலால் ஏமாந்தது போதும் சிம்பு பரபரப்பு பேட்டி!!!

Monday, March 19, 2012
ஒருதலையாக காதலித்து ஏமாந்தது போதும். அடுத்த வருடம் எனது திருமணம் நடக்கும். அதற்காக வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றார் சிம்பு.
இது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு பொருத்தமான பெண்ணை சீக்கிரம் தேர்வு செய்வேன். அடுத்த வருடம் எனது திருமணம் நடக்கும். ‘நீ எந்த பெண்ணையாவது தேர்வு செய்திருக்கிறாயா? இல்லாவிட்டால் நானே பெண் பார்க்கட்டுமா? என்று அம்மா கேட்கிறார். இதுவரை யாரையும் நான் தேர்வு செய்யவில்லை. அப்படி தேர்வு செய்யும் பெண் மிக அழகாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு அழகான குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. எனவே வீட்டில் அழகான பெண்ணை தேடுகிறார்கள்.

நடிகை யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. கடந்த 6 வருடத்துக்கு முன் ஒருவருடன் உறவு இருந்தது உண்மை. 2009ம் ஆண்டில் காதலில் விழுந்தேன். அது ஒருதலை காதலாக முடிந்துவிட் டது. இதனால் ஏமாற்றம் அடைந்தேன். உலகம் முழுவதும் சுற்றி எல்லாவற்றையும் அனுப வித்துவிட்டேன். நான் எதையும் இழக்கவில்லை ஆனால்
திருமணம் என்றதும் பயமாக இருக்கிறது. எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். மனைவி, குழந்தைகள், குடும்பம் என வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வேன்.

2 வருடமாக கதை எழுதி, 50 நாட்களில் முடித்த படம் `வழக்கு எண் 18/9' - பாலாஜி சக்திவேல்!

Monday, March 19, 2012
வழக்கு எண் 18/9 படத்துக்காக, 2 வருடங்களாக கதை எழுதினேன். ஆனால், 50 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டேன்" என்று இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறினார்.

சாமுராய், காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், `வழக்கு எண் 18/9' என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது.

தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படம், அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு வர இருக்கிறது. படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

அப்போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கல்லூரி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றதும், அடுத்த படத்தை மிக கவனமாக எடுக்க வேண்டும் என்ற பயம் எனக்கு வந்தது. அந்த சமயத்தில், அடுத்த படம் இயக்குவதற்காக டைரக்டர் லிங்குசாமி எனக்கு `அட்வான்ஸ்' கொடுத்தார்.

எந்த கதையை எடுப்பது, எதை எடுத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும்? என்று குழப்பமாக இருந்தது. நாள் ஆகிக்கொண்டே போனது. கதை ஒன்றும் அமையவில்லை. அதனால், கொடுத்த `அட்வான்ஸ்' தொகையை திருப்பிக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்போதுதான் `வழக்கு எண் 18/9' படத்தை பற்றிய கரு உருவானது. அதை முழுமையான திரைக்கதையாக உருவாக்குவதற்கு 2 வருடங்கள் ஆனது. ஆனால், படப்பிடிப்பை 50 நாட்களில் முடித்து விட்டேன்.

பொருளாதார ரீதியாக எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. என் மனைவி ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருக்கிறார். `டியூஷன்' எடுத்தாவது எனக்கு கஞ்சி ஊற்றி விடுவார்.வழக்கு எண் 18/9, ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும். காதல் உள்பட எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கிறது."

இவ்வாறு பாலாஜி சக்திவேல் கூறினார்

வீரப்பனுக்காக வீட்டை விற்ற இயக்குநர்!!!

Monday, March 19, 2012
உயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன். இந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது. வீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக வைத்து 'குப்பி' என்ற அருமையான படத்தைத் தந்த ஏ.எம்.ஆர். ரமேஷ். கிஷோர் வீரப்பனாகவும், அர்ஜுன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும் நடித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க வீரப்பன் வாழ்ந்த, அதிரடி சாகஸங்கள் செய்த, தாக்குதல் நடத்திய, சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களிலேயே நேரில் போய் இந்தப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் என தேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சியாக வருவது டாக்டர் ராஜ்குமார் கடத்தல்தான். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அர்ஜுன் பங்கேற்றுப் பேசுகையில், "ஒரு ரியல் ஹீரோவை பற்றிய படத்தில், ரீல் ஹீரோவான நான் நடிக்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடம். உயிருடன் இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது, சவாலான விஷயம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் பயந்தேன். 'வனயுத்தம்' படத்தில் நடிக்கும்படி ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்னிடம் வந்து கேட்டபோது, நான் தயங்கினேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியுமே...இவர் எப்படி எடுக்கப்போகிறார்? என்று சந்தேகப்பட்டேன். ஆனால், படத்தின் 'ஸ்கிரிப்ட்'டை படித்துப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. யார் மீது தப்பு? என்று 'ஸ்கிரிப்ட்'டில் சொல்லவில்லை. ரமேஷ் இந்த 'ஸ்கிரிப்ட்'டுக்காக 12 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும். இந்தப்படத்துக்காக சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக்குப் போய் பாடல்களை எடுக்கவில்லை. எல்லாமே அடந்த காட்டில்தான். என்னை பொறுத்தவரை இது, எனக்கு ஒரு 'ஸ்பெஷல்' ஆன படம். நான் நேசிக்கும், எனக்கு பிடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

படத்தின் உண்மையான ஹீரோவான வீரப்பன் கிஷோர் அடக்கமாகப் பேசினார். நடிப்பும் படமும் பேசட்டும் என்றார். நல்ல பாலிசி! இயக்குநர் ரமேஷ் பேசுகையில், "இந்தப் படத்தை எடுக்க என் வீட்டை விற்றேன். இந்த வீட்டுக்கு வாஸ்து சரியில்ல. நாம வேற வீடு வாங்கிக்கலாம் என்று கூறித்தான் விற்றேன். அந்தப் பணத்தில்தான் இந்தப் படம் எடுக்கிறேன். இதற்கெல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டு அனுமதித்த என் மனைவிக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்தேன். 250 பேரை இப்படி சந்தித்தேன். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரிடமும் நிறைய தகவல்களைப் பெற்றேன். இரு தரப்பிலும் நடந்த உண்மை சம்பவங்களைதான் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை. எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை," என்றார். கன்னடத்தில் இந்தப் படத்துக்கு தலைப்பு அட்டஹாஸா! வீரப்பனுடன் சேர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரை கடத்தியவர்களில் ஒருவரான முகில் என்பவரையும், ராஜ்குமாருடன் சேர்ந்து கடத்தப்பட்ட நாகப்பாவையும் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இருவரும் படப்பிடிப்பில் சந்தித்தபோது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார்களாம்! அட... ஏன் சார் ஒங்களுக்கு இம்புட்டு கொலவெறி..?!

வேட்டை மன்னன் உரிமையை வாங்கிய ஜி தமிழ்!!!

Monday, March 19, 2012
போடா போடி, வேட்டை மன்னன் இரண்டில் எந்தப் படப்பிடிப்பில் சிம்பு இருக்கிறார், இருப்பார் என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தெரியுமா என்பதே சந்தேகம். இந்த வார அதிர்ஷ்டம் வேட்டை மன்னனுக்கு. இதன் படப்பிடிப்பில்தான் சிம்பு கலந்து கொள்கிறார்.

சனிக்கிழமை வேட்டை மன்னன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டன. ஜெய், கணேஷ் ஆஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். வரும் 21 ஆம் தேதிவரை சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். முக்கியமாக இன்று ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதாக இருந்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்றைய படப்பிடிப்பு நடப்பதற்கான வாய்ப்பில்லை. சிம்புவின் மனம் மாறாமலிருந்தால் நாளை படப்பிடிப்பு நடக்க வாய்ப்பிருக்கிறது.

சிம்பு மீது யார் சேறு வாரி அடித்தாலும் அவரின் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. வேட்டை மன்னனின் படப்பிடிப்பே முடியாத நிலையில் அதன் ஒளிபரப்பு உரிமையை லம்பாக ஒரு தொகைக்கு ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.

ஆஸ்கர் பிலிம்ஸில் அமலா பால்!!!

Monday, March 19, 2012
யாரையும் மதிக்கிறதில்லை, படத்தின் புரமோஷனுக்கு வருவதில்லை, சம்பளத்தை கண்டபடி உயர்த்திவிட்டார், கால்ஷீட் சொதப்புகிறார் என்று அமலா பால் மீது அடுக்கடுக்காக புகார்கள். இருந்தாலும் இவரைத்தான் விரும்பி படத்தில் உப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பார்கள். வடி கொடுத்து அடி வாங்க அப்படியென்ன ஆர்வமோ.

தமிழக டிவி சேனல்களையும், பத்திரிகைகளையும் மட்டமாக நடத்திய இவரைதான் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் பூலோகம் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனரின் இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.

அமலா பாலினால் பூலோகத்தில் பூகம்பம் வெடிக்காமல் இருந்தால் சரிதான்
.

பாங்காக்கில் துப்பாக்கி: உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம்!!

Monday, March 19, 2012
உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம்.

துப்பாக்கி மும்பையில் நடக்கும் கதை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். தமிழகத்தில் சில காட்சிகள் இருப்பதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திரையுலகினரின் போராட்டம் காரணமாக மும்பையிலேயே தங்கிப் போனவர்கள் தற்போது பாடல் காட்சியை எடுக்க பாங்காக் சென்றுள்ளனர். விஜய், முருகதாஸுடன் ஹீரோயின் காஜலும் சென்றிருக்கிறார்.

போராட்டம் ஒரு முடிவுக்கு வந்த பிறகே கேமராவை தமிழகத்தில் வைப்பது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

தயாரிப்பாளர்கள்- பெப்சி இடையே மோதல்: படப்பிடிப்புகள் இன்று ரத்து!!!

Monday, March 19, 2012
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் ஊதிய உயர்வு சம்பந்தமாக மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீனம்பாக்கம் அருகே நடந்த கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் படப்பிடிப்பில் ரகளை ஏற்பட்டது.

தொழிலாளர்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக சென்று நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், படப்பிடிப்பை தொழிலாளர்கள் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல் விதார்த் நடிக்கும் காட்டுமல்லி படப்பிடிப்பும் சர்ச்சையால் நிறுத்தப்பட்டது. பெப்சி போக்கை கண்டித்து தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை இன்று ரத்து செய்தனர்.

உள்ளூர், வெளியூர் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. நடிகர், நடிகைகள் ஓட்டல்களில் முடங்கினர். சென்னையில் உள்ள ஸ்டூடியோக்கள் வெறிச்சோடின. திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் இன்று காலை நடந்தது.

இக்கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. பெப்சி உறவை துண்டித்து தன்னிச்சையாக படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் பெப்சி நிர்வாகிகளும் இன்று அவசரமாக கூடி பேசினார்கள்.

ரூ.9 கோடி மோசடி புகார்: கடனுக்காக வீட்டை விற்கவில்லை- விஷால் மறுப்பு!

Monday, March 19, 2012
விஷால் நடித்த சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விஷால் கடனில் சிரமப்படுவதாக செய்திகள் வெளியாயின.

விஷால் மீது நடிகை ராதிகா நடிகர் சங்கத்தில் மோசடி புகார் அளித்தார். தனக்கு ரூ.9 கோடி தர வேண்டும் என்றும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஷால் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை விற்று கடனை தீர்த்ததாக கூறப்பட்டது. இது குறித்து விஷாலிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-

என் பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை தீர்த்ததாக வெளியான செய்தி வதந்திதான். சென்னையிலோ ஐதராபாத்திலோ எனது பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லை. நான் எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது சகஜம்தான். கடன் பிரச்சினையோடு அதை சம்பந்தப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது என்பது அவருக்கும் எனது அண்ணனுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகும். அதில் தேவை இல்லாமல் என்னை இழுத்து விட்டனர். அந்த பிரச்சினை தற்போது முடிந்து விட்டது.

இவ்வாறு விஷால் கூறினார்.

ஆதிபகவானுக்கு சிக்கல்!!!

Monday, March 19, 2012
அமீரின் நடவடிக்கைதான் அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு எதிராக பெப்சி தொழிலாளர்களை திருப்பிவிட்டது என தயாரிப்பாளர்கள் தரப்பு நம்புகிறது. இதனால் அவரின் ஆதிபகவான் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஜெயம் ரவி, நீது சந்திராவை வைத்து ஆதிபகவான் என்ற படத்தை அமீர் பல வருடங்களாக இழுத்துக் கொண்டு... ஸாரி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போதுதான் சூடுபிடித்து முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. அமீரின் போக்கு காரணமாக கடுப்பான தயாரிப்பாளர்கள் அமீரின் எந்தப் படத்துக்கும் நாங்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

அதாவது படத்தை முடித்தாலும் நாங்க அதனை திரையிட மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அமீர் என்ன செய்யப் போகிறார்?

2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!!!

Monday, March 19, 2012
நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.

சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.

இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை!!!

Monday, March 19, 2012
அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.

பெண் இயக்குனருடன் ஆண்ட்ரியா மோதல்?.

Monday, March 19, 2012
தனது ஸ்டில்களை வெளியிட்டதற்காக ஆண்ட்ரியா சண்டை போட்டாரா என்றதற்கு பெண் இயக்குனர் பதில் அளித்தார்.
தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம் படத்தை இயக்கிய சாரதா ராமநாதன், அடுத்து ‘புதிய திருப்பங்கள் என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:
ஆண் இயக்குனர்களுக்கு நிகராக கமர்ஷியல் படங்களை பெண்களால் இயக்க முடியாது என்கிறார்கள். அதை ஏற்க முடியாது. ‘புதிய திருப்பங்கள் படம் இளம்பெண்கள் கடத்தல் பற்றிய கதை. நந்தா ஹீரோ. ஆண்ட்ரியா ஹீரோயின். தாரணி என்ற சிறுமியும் நடித்திருக்கிறார். இசை வித்யாசாகர். ஒளிப்பதிவு மது அம்பாட். ஆண்ட்ரி யாவிடம் அனுமதி பெறாமல் அவரது ஸ்டில்கள் வெளியிட்டதால் என்னுடன் அவர் சண்டை போட்டாரா? என கேட்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஷூட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு பாடலும் பாடி இருக்கிறார். சில காட்சிகளில் யோசனைகள் சொல்லி வேலையை எளிதாக்கினார்.

இப்படத்திற்காக இளம்பெண்கள் கடத்தல் பற்றி ஆய்வு நடத்தினேன் கடத்தல் குற்றவாளிகளை ஜெயிலில் பேட்டி எடுத்தேன். இச்சம்பவத்துக்கு பின்னால் குண்டர்கள் மட்டுமல்ல பெரும் புள்ளிகள் இருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடத்தப்பட்ட பெண் ஒருவரிடமும் கருத்து கேட்டேன். பாலியல் பலாத்காரத்துக்காக பெண்கள் கடத்தப்படுவதுதான் அதிகம்.இவ்வாறு சாரதா ராமநாதன் கூறினார்.

கோடம்பாக்கம் கோடங்கி!!!

Monday, March 19, 2012
பட்டண படம் எடுத்த விஜயமான இயக்கம், ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டு துணை நடிகர்கள் செலக்ஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்... கூட இருக்கிற உதவியாளருங்க பார்டிலேயும், பங்ஷன்லேயும் ஆளுங்கள பிடிச்சி, இந்த நாள்ல இந்த ஓட்டல¢ ரூமுக்கு போனா இயக்குனர் இன்டர்வியூ நடத்துவாரு. செலக்ஷன் ஆயிட்டா நீங்க நடிக்க வந்துடலாம்னு ஆளுங்கள அனுப்பி வைக்க¤றாங்களாம்... வைக்கறாங்களாம்... ஸ்டோரி டிஸ்கர்ஷனோடு சேர்த்து நடிகர்களை தேர்வு பண்ணினா, செலவு மிச்சமாகும்னுதான் இந்த ஐடியாவாம்... ஐடியாவாம்...

லவ் இயக்கம் தான் இயக்குற வழக்கு படத்தோட விழால பேசறப்போ 2 ஹீரோயின்ல ஒரு ஹீரோயின் பேரை மட்டும் மாத்தி சொல்லிட்டாராம். தன்னோட பேரை மாத்தி சொல்லிட்டாரேன்னு ஊர்மியான புதுமுகம், தவியா தவிச்சாராம்... தவிச்சாராம்... எப்படியும் தன்னோட பேரை மறுபடியும் சொல்வாருன்னு எதிர்பாத்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். இதை பார்த்த ‘ஹன்ட்Õ பட இயக்கம் மைக் முன்னால வந்து விட்டுப்போன நடிகையோட பேரை சொல்லியும் அவரை பாராட்டியும் குளிர வச்சாராம்... குளிர வச்சாராம்...

4 ஜோடி புதுமுகங்களை வெச்சி நா பேர்ல தொடங்குற கல்லூரி கதையை படமாக்கின தயாரிப்பு, படத்தை முடிக்க¤றதுக்காக வீட்டை வித்தாராம்... வித்தாராம்... படாத பாடுபட்டு படத்தை ரிலீஸ் பண்ணப்ப படம் நல்லாயிருக்குன்னு டாக் மட்டும் வந்துச்சாம். டப்பு வரலையாம்... வரலையாம்... இப்போ போட்ட முதல் போச்சேன்னு பங்க்காகி கிடக்க¤றாராம்... கிடக்க¤றாராம்...

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுவது உறுதி!!!

Monday, March 19, 2012
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார். கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை இசைப்புயல் விரும்பி கேட்டாராம், 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்க போகும் பரத் பாலா இந்த ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஒப்புக் கொண்டாராம். முதலில் உலக நாயகன் கமலஹாசனை பாட வைக்க திட்டமிட்டு இருந்த ரகுமான், கமல் 'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம் ரகுமான். 'இசைப்புயலின் தீவிர ரசிகனாகிய எனக்கு அவருடைய இசையில் அதுவும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் பாட இருப்பது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்' என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.