Thursday, February 9, 2012

நிஜமாகவே கர்ப்பம்தானா? படத்தில் இருந்து கரீனா திடீர் விலகல்!

பாலிவுட் ஹீரோ சைப் அலிகான், கரீனா கபூர் நீண்ட கால காதலர்கள். ‘ஏஜென்ட் வினோத்’ என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். சைப் தயாரிக்கிறார். இதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கரீனா கபூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போட்டோ இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த கரீனாவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. துப்பட்டாவில் வயிற்றை மூடியபடி அவர் நடந்து சென்றார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.

இதை அவரது மேனேஜர் மறுத்தார். ‘கரீனா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இம்மாத கடைசியில் இருந்து 30 நாள் தொடர்ந்து ஷூட்டிங் இருக்கிறது’ என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் ஜெனிலியா திருமண விழாவில் சைப் அலியுடன் கரீனா கலந்துகொண்டார். சேலை அணிந்து வந்த அவர், முந்தானையால் வயிற்றை மறைத்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற படத்தை தயாரித்த ஏக்தா கபூர் அடுத்து ‘எ டைம் இன் மும்பை’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இதில் ஹீரோயினாக கரீனா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அப்படத்தில் இருந்து திடீரென வெளியேறியிருக்கிறார் கரீனா. இதையடுத்து, கரீனா நிஜமாகவே கர்ப்பம்தானா என்ற சந்தேகம் பாலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. சைப் அலிகானுக்கும், கரீனாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இவர்களது திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி விரக்தியால் தமிழ் சினிமாவுக்கு முழுக்கா?

காதல் முறிவு ஏற்பட்டதால்தான் தமிழ் படங்களில் தமன்னா நடிக்க மறுக்கிறார் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் விளக்கம் அளித்தார். நடிகர் ஒருவரை தமன்னா காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்த தாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், ‘இனி தமிழில் நடிப்பதில்லை’ என்று அதற்கு பிறகுதான் தமன்னா முடிவு எடுத்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஹமத் இயக்க ஜீவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நடிக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல் பரவியது. இதை தமன்னா மறுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: என்னை பற்றி பல வதந்திகள் வருவது தெரியும். தமிழில் நடிக்காததற்கும் ஒரு வதந்தி பரப்புகிறார்கள். தமிழில் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. மற்றபடி, வேறு எந்த காரணமும் இல்லை. கடைசியாக ‘வேங்கை’ படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு வாய்ப்பு வரவில்லை. தமிழில் நான் ஒரு படம் ஒப்புக்கொண்டிருப்பதாக வரும் தகவலும் வதந்திதான். வாய்ப்பு வந்தாலும் மார்ச், ஏப்ரலுக்கு பிறகுதான் கால்ஷீட் தர முடியும். தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இந்தியிலும் நிறைய வாய்ப்பு வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? அரவிந்தசாமி கோபம்!

அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் தரப்பு இதனை மறுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் அரவிந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன். இப்போது நான் தொழிலதிபராக இருக்கிறேன். எனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை, என்று கூறியிருக்கிறார்.

தனுஷின் சச்சின் கீதம் வெளியீடு!!!

சச்சின் டெண்டுல்கருக்காக, தனுஷ் உருவாக்கியுள்ள, 'சச்சின் ஆன்தம்' என்ற ஆல்பம் யூடியூப்பில் நேற்று வெளியிடப்பட்டது. ஸ்ருதிஹாசனுடன் நடிக்கும் '3' படத்துக்காக, தனுஷ் எழுதி பாடிய, 'ஒய் திஸ் கொலவெறிடி' உலகம் முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து, இப்போது சச்சினுக்காக தனுஷ் ஒரு ஆல்பம் உருவாக்கியுள்ளார். 'பூஸ்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்துக்கு 'சச்சின் ஆன்தம்' என்று பெயிரிடப்பட்டுள்ளது. பாடலில், அனுஷ்கா, இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் ஆடியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனில் ஆடிப்பாடுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது நேற்று மாலை, யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே, பல்லாயிரக்கணக்கானோர் இதை பார்த்து ரசித்துள்ளனர். இதுபற்றி தனுஷ் கூறும்போது, "சச்சினுக்காக, சாதாரண ரசிகனின் எளிய முயற்சி இது. கண்டிப்பாக இதுவும் பேசப்படும்" என்றார்.

பிரதமர் அளித்த விருந்தில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்பு!!!

தனுஷை தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹாசனும் பிரதமர் அளித்த விருந்தில் பங்கேற்றார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷ் பாடியிருக்கும் 'ஒய் திஸ் கொல வெறிடி' பாடல் உலகம் முழுக்க பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடல் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அளித்த விருந்தில் பங்கேற்க தனுஷுக்கு அழைப்பு வந்தது. அவர் பங்கேற்றார். இதையடுத்து, '3' பட ஹீரோயின் ஸ்ருதி ஹாசனுக்கும் பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. பிரதமர் அளித்த விருந்தில் அவரும் கலந்துகொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுஸில் மொரீஷியஸ் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். அதில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. பங்கேற்றேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இதில் பங்கேற்றதை பரவசமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். விருந்தின்போது, பிரதமரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் ஹீரோ இம்ரான் கானும் கலந்துகொண்டார். இருவரும் ‘லக்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறோம். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

தானே புயல் பாதிப்பு : நயன்தாரா ரூ.5லட்சம் நிதியுதவி! முதல்வரிடம் நேரில் வழங்கல்!!!!

தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5லட்சம் நிதியதவி வழங்கியுள்ளார் நடி‌கை நயன்தாரா. தமிழகத்தை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்ட தானே புயலால் ஏராளமான பேர் வீடுகளை இழந்து பிழைக்க கூட வழியின்றி பலர் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இதனை முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வழங்கினார். ஏற்கனவே நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.

கவர்ச்சியாக இருப்பது ஈசியல்ல-நம்பீசன்!

தமிழில்,'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'குள்ளநரிக்கூட்டம்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'முறியடி' படம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கிறது. மலையாளத்தில், 'பேச்சலர் பார்ட்டி', 'ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா' படங்களில் நடித்து வருகிறேன். 'சாப்பா குரிசு' என்ற மலையாள படத்தில் நான் நடித்துள்ள முத்தக் காட்சி பற்றி கேட்கிறார்கள். இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலரிடமிருந்து எதிர்ப்பும் வந்தது.

இதையடுத்து செக்ஸியான நடிகை என்று சொல்கிறார்கள். இப்படி சொல்வதை ஏற்பதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஏனென்றால் கவர்ச்சியாக இருப்பது ஒன்றும் ஈசியில்லை. இதை எனக்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு வரும் கதைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தே நடிக்கிறேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கான கதைகள் வரவேண்டும். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும்,அரசியல் தெரியாது: அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது அஜித் அதிரடி பேட்டி!

எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல ஏற்கனவே நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்க. இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது. நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன். அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது என்று கூறியுள்ளார்.

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்!!!

விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுத்தால் தான், ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடித்த நண்பன் படம், சமீபத்தில் வெளியாகி சூப்பராக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் நேரடியாக ரசிகர்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

கடந்த வாரம் கோவை சென்ற விஜய் நேற்று மதுரைக்கு வந்தார். மதுரையில் நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் முன்பு தோன்றி படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். பின்னர் ரசிகர்களிடம் பேசிய விஜய், என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பனாகத்தான் பார்க்கிறேன். இந்தபடத்தை வெற்றி பெற செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாரா விதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நண்பன் இல்லாமல் இருக்க முடியாது. அந்த கருத்து இந்தபடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். எனது ரசி்கர்களுக்கும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்யுங்கள். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். என்னை டாக்டர் ஆக்க என் அப்பா விரும்பினார். ஆனால் எனக்கோ சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால், வீட்டில் சண்டைபோட்டு இந்த துறைக்கு வந்தேன். இப்போது அதில் வெற்றியும் பெற்றும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் மனைவி போனி வர்மா இயக்குனர் ஆகிறார்!

பிரகாஷ்ராஜ் மனைவி போனி வர்மா இயக்குனர் ஆகிறார். வில்லன், குணசித்ரம் என மாறுபட்டவேடங்களில் நடித்து வந்த பிரகாஷ்ராஜ் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் ஆகி இருக்கிறார். ‘தோனி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதையடுத்து பிரகாஷ்ராஜ் மனைவியும், பாலிவுட் நடன இயக்குனருமான போனிவர்மா இயக்குனர் ஆக முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,‘‘சினிமாவில் ஏதாவது ஒரு புதிய முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணுவேன். நிறைய நடன இயக்குனர்கள் சிறந்த இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். அதுபோல் நானும் படம் இயக்க முடிவு செய்துள்ளேன்.

அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இது முழுக்க கமர்ஷியல் அம்சங்களை மையமாக வைத்து உருவாகிறது. எனக்கு நிறைய ஹீரோக்கள் நண்பர்களாக உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் ஹீரோவாக நடிப்பார். பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’ பட ஷூட்டிங்கின்போது முழுநேரமும் அவர் அருகிலேயே இருந்தேன். சினிமா துறையில் பல வருடங்களாக இருக்கிறேன். இதன் மூலம் படம் இயக்குவதுபற்றிய நுணுக்கத்தை அறிந்து வைத்திருக்கிறேன்’’ என்றார்.