Wednesday, April 4, 2012

கன்னட படத்தில் நடிக்க சமீராவுக்கு அதிக சம்பளம்!!!

Wednesday,April,04,2012
கன்னட படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் பெரும் சம்பளத்தை வாங்கியிருக்கிறார் சமீரா ரெட்டி. வேட்டை படத்துக்கு பின் சமீரா ரெட்டிக்கு சொல்லும்படி வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வரதநாயகா கன்னட படத்தில் சுதீப் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இதில் நடிக்க அதிக சம்பளம் கேட¢டதால் சமீராவுக்கு வாய்ப்பு பறிபோகலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பாளர் சங்கர் கவுடா ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் நடிக்க சமீராவுக்கு ரூ.38 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட பட உலகில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெறும் ஒரே நடிகை திவ்யா மட்டும்தான்.

உபேந்திராவுடன் சூப்பர் படத்தில் நடிக்க ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றார் நயன்தாரா. அவரது சம்பளத்தை யாராலும் நெருங்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வரும் திவ்யாவின் சம்பளத்தை சமீரா நெருங்கியிருப்பதால் மற்ற நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். இது பற்றி சமீரா ரெட்டி கூறும்போது, தென்னிந்திய சினிமாவில் எனக்கென இருக்கும் மார்க்கெட் வேல்யூவை பார்த்துதான் தயாரிப்பாளர்கள் சம்பளம் தருகிறார்கள். கன்னட படத¢தில் யாரும் வாங்காத சம்பளத்தை நான் வாங்கிவிடவில்லை. எனது திறமைக்கேற்ற பணம் எனக்கு கிடைக்கிறது. ஆனால் அது எவ்வளவு என்பதை கூற முடியாது என்றார்.

அனைத்து சினிமா வேலைகளும் நிறுத்தம்: 7-ந் தேதி முதல் முழுமையான ஸ்ட்ரைக்- பெப்சி!!!

Wednesday,April,04,2012
பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாலும், போட்டி தொழிலாளர் சங்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் உள்ளதாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் நிறுத்தப்படும் என்று சினிமா தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், ஊதியக்குழு தலைவர் அமீர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்கள்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக 'பெப்சி'க்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே நடைபெற்று வரும் ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால், தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் நல ஆணையத்திடம் முறையிட்டு, எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். 'பெப்சி'யும், தொழிலாளர் நல ஆணையத்தின் அழைப்பை ஏற்று, கலந்துகொள்ள ஒத்துழைப்பு அளித்தது.

பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கமும், 'பெப்சி'யும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியது. கூடுதல் ஆணையர், தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஊதியத்தையும், தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையும் சமமாகவே பெற்றுத்தந்தார்.

இருந்தபோதிலும், பெரும் எதிர்பார்ப்புடன் தொழிலாளர் நல ஆணையத்திடம் வந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு சற்று ஏமாற்றம் அளித்த காரணத்தால், சரிவர ஒத்துழைப்பு தர மறுத்தது. இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தைக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினர் யாரும் வரவில்லை. இனிமேல் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டோம் என்றும் கடிதம் கொடுத்துள்ளனர்.

7-ந் தேதி முதல் முழுமையான 'ஸ்டிரைக்'

மேலும், புதிய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தே தீருவோம் என்று சபதம் ஏற்று, அதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையை கண்டித்தும், 23 சங்கங்களில் உள்ள 23 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டும், `பெப்சி' முதல் முறையாக வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங், டப்பிங் வேலைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவை பொதுக்குழுவின் ஒப்புதலுடன் அறிவிக்கிறது.

வெளிïர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இன்றைய தினத்தில் இருந்து 3 நாட்களுக்குள் படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

23 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து, உண்ணாவிரதம் மற்றும் ஊர்வலம், அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என்றும் உறுதி அளிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே, சென்னை உரிமையியல் கோர்ட்டில் 'ஜி மாஸ் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.முருகன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், கவுரவ செயலாளர்கள் தேனப்பன், முரளி, பொருளாளர் தாணு, துணைத்தலைவர்கள் தியாகராஜன், சிவா ஆகியோரை பிரதிவாதியாக வழக்கில் அவர் சேர்த்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவின் அனுமதி பெறாமல், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (பெப்சி) சம்பள திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதிவாதிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இடைக்கால தடை

இந்த வழக்கை சென்னை 11-வது உரிமையியல் கோர்ட்டு உதவி நீதிபதி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், பேச்சுவார்த்தை நடக்கும்போது சம்பளம் தொடர்பான கோரிக்கைகளை தன்னிச்சையாக பிரதிவாதிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அதனால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சந்தேகம் இருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பெப்சியுடனான தொடர் பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவின் அனுமதி பெறாமல் பிரதிவாதிகள் பங்கேற்பதற்கு 13-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஹீரோவுக்கு சமமான வேடம் கிடைத்தால்தான் கால்ஷீட் : கார்த்திகா முடிவு!!!

Wednesday,April,04,2012
ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால்தான் எந்த ஒரு படத்திலும் நடிப்பேன் என்றார் கார்த்திகா. இது பற்றி கார்த்திகா கூறியது: ராஜேஷ் பிள்ளை இயக்கும் மலையாள படத்தில் விளையாட்டு வீராங்கனை வேடம். ஹீரோயினை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது. இந்த வேடத்தை விரும்பி ஏற்றிருக்கிறேன். இப்படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டாலும் இன்னும் ஒப்பந்தம்கையெழுத்தாகவில்லை. ஏனென்றால் இன்னும் பட குழுவினர் ஷூட்டிங் ஷெட்யூலை முடிவு செய்யவில்லை.

தமிழில் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்கிறேன். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. கோ பட வெற்றிக்கு பிறகு தமிழ், மலையாளத்தில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏதாவது ஒரு படத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கிடைக்கும் படத்தில் நடிப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக இதுவரை தமிழ், தெலுங்கில் நான் நடித்த படங்கள் எல்லாமே வலுவான வேடங்களாக இருந்தன. பேருக்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. எந்த படமாக இருந்தாலும் ஹீரோவுக்கு சமமான வேடமாக இருந்தால் மட்டுமே கால்ஷீட் தர ஒப்புக்கொள்கிறேன்.

துபாயில் நடந்த 'செம சிங்கர்' 2012: பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்பு!

Wednesday,April,04,2012
துபாய்::துபாயில் ரேடியோ ஹலோ 89.5 எப்எம்முடன் இணைந்து ஸ்மைல் இவென்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியை 30.03.2012 அன்று மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து.

மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌டைபெற்ற‌ செம‌ சிங்க‌ர் 2012 நிக‌ழ்வின் துவ‌க்க‌ச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட 15 பேரில் கார்த்திக் குமார், ஸ்ருதி ஸ்ரீநிவாஸ் ச‌க்ர‌வ‌ர்த்தி, ஸ்ருதி சுத‌ர்ச‌ன் ச‌க்ர‌வ‌ர்த்தி, பொன் ச‌விதா, த‌க்ஷின‌ இள‌ங்கோ ஆகிய 5 பேர் சிறந்த பாடகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தேர்வு செய்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து மாணிக்க‌ விநாய‌க‌ம் த‌ன‌து பாட‌ல்க‌ள் மூல‌ம் ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்வித்தார். பாவை நியாஸ் ந‌கைச்சுவை துணுக்குக‌ளை வ‌ழ‌ங்கினார்.

சிற‌ப்பிட‌ம் பெற்ற‌ பாட‌க‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ்க‌ளை ரேடியோ ஹ‌லோ 89.5 எப்.எம்மின் ச‌திஷ் ம‌ற்றும் அசோக‌ன் வ‌ழ‌ங்கின‌ர்.

சுரேஷ் த‌லைமையிலான‌ குழுவின‌ர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த‌ன‌ர்.

ஏழுமலையானை தரிசித்தார் அஜித்!!!

Wednesday,April,04,2012
நடிகர் அஜித் நேற்று இரவு திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசித்தார். மாலை பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் பெருமாள் சந்நிதிக்கு சாமி தரிசனம் செய்ய கிளம்பினார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். தேவஸ்தான பாதுகாவலர்கள் நடிகர் அஜித்தை ரசிகர்களிடம் இருந்து மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். அஜித் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அஜித்தின் 'பில்லா 2' படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த படத்தைத் தொடங்கும் முன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் அவர். நடிகை ஜெயசுதா, மத்திய அமைச்சர் பனபகாலட்சுமி ஆகியோரும் திருப்பதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு வாரம் ஓடினாலே போதும்.. '3' சூப்பர் ஹிட்: கஸ்தூரி ராஜா!!!

Wednesday,April,04,2012
கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள '3' படத்துக்கு. முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240. படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. நேற்று திங்கள்கிழமையில்கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்! மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், "மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்," என்றார். ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, "கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்... '3' சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்," என்றார். படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், "விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?," என்றார். சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள '3' படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்," என்றார்.