Sunday, May 20, 2012

இயக்குனர் பேரை கேட்டாலே நடுங்கும் மதுஷாலினி!!!

Sunday, ,May, 20, 2012
ராம்கோபால் வர்மாவின் பேரை கேட்டாலே பயப்படுவேன் என்றார் மது ஷாலினி. பாலாவின் ‘அவன் இவன்Õ படத்தில் நடித்தவர் மதுஷாலினி. தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: பாலா படத்துக்கு பிறகு ராம்கோபால் வர்மாவின் ‘டிபார்ட்மென்ட்Õ படத்தில் நடித்தேன். அடுத்து மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறேன். ‘டிபார்ட்மென்ட்Õ படத்தில் எதைக்கண்டும் பயப்படாத பெண் வேடம். ஆனால் இயக்குனர் வர்மாவின் பேரை கேட்டால் பயந்துவிடுவேன். அவரை இதற்கு முன் பார்த்ததில்லை. துணிச்சலான அவரது பேட்டிகளை படித்திருக்கிறேன். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது கோபமான இயக்குனரிடம் எப்படி நடிக்கப்போகிறோமோ என்று பயந்தேன். இதற்காக வீட்டில் பயிற்சி எடுத்தேன். அது உதவியது. அப்போதுகூட ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பேசுவதற்கு பயமாக இருக்கும். ஆனால் ஒரு ஆசிரியரைப்போல் எனக்கு தைரியம்சொல்லி நடிக்க வைத்தார். இன்னும்கூட அவர் மீதான பயம் எனக்கு குறையவில்லை. யாரையும் எளிதில் பாராட்டி விடாதவர் வர்மா. எனது நடிப்பை பார்த்தவுடன் ‘இப்படித்தான் விரும்பினேன். இதையே பின்பற்றுÕ என்றார். இப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்தாலும் அவருடன் எனக்கு காட்சி கிடையாது. சஞ்சயத்துடன் நிறைய காட்சிகளில் நடித்துள்ளேன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.

கோடம்பாக்கம் கோடங்கி : ஓட்டம் எடுத்த ஹீரோயின்!!!

Sunday, ,May, 20, 2012
ஆத்திகம் பேசும் வேல்டு நாயகனின் டாட்டர் நடிச்ச படங்க ஹிட் ஆகாததால நடிகை கோயில் கோயிலா போனாராம்.. அதுக்கு நல்ல பலன் கெடச்சிருக்காம். டோலிவுட்ல அவர் நடிச்சு ரிலீஸ் ஆன படம் ஜிவ்வுனு தூக்கிடுச்சாம். படம் வசூல அள்ளி கொட்றதால வாரிசு நடிகையின் கால்ஷீட் ரேட்டும் டாப்புக்கு ஏறுதாம். டோலிவுட் ஹீரோயின்களுக்கு இப்ப டஃப் போட்டி கொடுக்கற லிஸ்ட்ல ஹாச ஹீரோயினும் சேந்துட்டாராம்..

பாய்ஸ்ல நடிச்ச தமனான நடிகர், இசை இயக்கம் ஆனதுலருந்து கை ஓங்கியிருந்துச்சாம்.. இருந்துச்சாம்.. கோலிவுட் படங்கள்ல சமீப ஹிட் கொடுத்தவருக்கு டோலிவுட்லயும் தயாரிப்புங்க வரிசை கட்னாங்களாம். இதுக்கிடைல தேவியான ஸ்ரீ இசைக்கு மறுபடியும் மவுசு கூடிப்போனதால, தமன இசைக்கு பின்னால் போன தயாரிப்புங்க எல்லாம் கபால்னு யூ டர்ன் அடிச்சி தேவி இசை கால்ஷீட்டுக்கு காத்துக் கிடக்காங்களாம்.. தமனத்துக்கு இதனால டல் அடிக்குதாம்..

இந்தில உருவான சில்க் கதைய கோலிவுட்ல ரீமேக் செய்ய முடிவு பண்ணி அனுஷ்க நடிகையிடம் கால்ஷீட் கேட்டப்ப மறுத்துட்டாராம்.. இப்ப அந்த கேரக்டர்ல நடிக்க நயன ஹீரோயின்கிட்ட கால்ஷீட் கேக்கறாங்களாம்.. இதுக்காக பெரிய அமவுன்ட் சம்பளம் தர்றதா தயாரிப்பு சொன்னாராம். ஆனாலும் கோலிவுட் உள்ளிட்ட சவுத் மொழியில இப்படம் தயாராகிற பட்சத்துல அதுல நடிக்கற ஐடியா இல்லைனு ஓட்டம் எடுத்தாராம்.. நயன்

தயாரிப்பாளர்கள் பற்றி ரஜினி கவலை : டைரக்டர் எழில் தகவல்!!!

Sunday, May, 20, 2012
தயாரிப்பாளர்கள் குறித்து ரஜினி கவலை தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கியவர் எழில். இவர் ‘மனம் கொத்திப் பறவை படத்தை தயாரித்து இயக்குகிறார். அவர் கூறியதாவது: காமெடி, லவ் கலந்த படம் மனம் கொத்திப் பறவை. இமேஜ் இல்லாத ஹீரோ தேவைப்பட்டதால் சிவ கார்த்திகேயனை தேர்வு செய்தேன். ஹீரோயின் ஆத்மியா. இப்படத்தை பொறுத்தவரை என் கட்டுப்பாட்டை மீறித்தான் எல்லோருமே நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியை கூறினால் அதில் கூடுதல் வசனங்களை சேர்த்து சூழ்நிலை மாறாமல் புதிதாக ஒரு சீனை உருவாக்கி நடிப்பார்கள். அதுதான் இப்போதைய டிரெண்ட். வில்லனாக நடித்த ரவிமரியா காமெடியாக நடிக்கிறார். இசை டி.இமான். ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி. அடுத்த மாதம் ரிலீஸ். சிங்கம் புலி, சூரி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கிறேன். எப்படி தயாரிப்பாளர் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. வாய்ப்பு கேட்பதற்கு தயாரிப்பாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது. முன்பு ஒரு தயாரிப்பாளர் பத்து, பதினைந்து படங்கள் தயாரிப்பார். இப்போது அந்த சூழல் இல்லை. புது இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் ஊரிலிருந்து தயாரிப்பாளரை அழைத்து வந்துதான் படம் உருவாக்க முடியும். ரஜினிகூட ஒருமுறை, தயாரிப்பாளர்களே இல்லையே, இப்போ வர்ற ஹீரோங்க யார்கிட்ட வாய்ப்பு கேக்குறாங்க என்று கேட்டார். இவ்வாறு எழில் கூறினார்.

முத்தமிட கட்டிப்பிடித்த டிவி நிருபரின் கன்னத்தில் 'பளார்' விட்டார் வில் ஸ்மித்!!!

Sunday, May, 20, 2012
மாஸ்கோ::கன்னத்தில் முத்தமிட முயற்சித்த டிவி நிருபரை பளார் என அறைந்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். ஜாக்கி சானுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள 'மென் இன் பிளாக்-3' படத்தின் சிறப்பு காட்சி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்து பத்திரிகை, டிவி கேமராமேன்கள், நிருபர்கள் குவிந்தனர். சிறப்பு காட்சியில் பங்கேற்க வில் ஸ்மித் வந்த போது, உக்ரைனை சேர்ந்த டிவி நிருபர் விடாலி செடிக் திடீரென அவரது கையை பிடித்து தோளை கட்டியணைத்து முத்தமிட முயன்றார். இதை எதிர்பார்க்காத ஸ்மித், நிருபரை தள்ளி விட்டு இடது கையால் அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 'அந்த நிருபர், ஸ்மித் கன்னத்தில் முத்தமிட முயன்றாரா அல்லது உதட்டில் முத்தமிட முயன்றாரா என்று தெரியவில்லை' என்றனர்.

மழையால் பாதித்த விக்ரமின் தாண்டவம்!!!

Sunday, May, 20, 2012
விக்ரமின் தாண்டவம் படத்தின் ஷூட்டிங் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விஜய் சீயான் விக்ரமை வைத்து எடுத்து வரும் படம் தாண்டவம். இதில் அனுஷ்கா மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஜகபதி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பெருமாபாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் விசா பிரச்சனையால் இங்கிலாந்தில் படமாக்குகிறார்கள்.

ஆனால் படக்குழுவினர் திட்டமிட்டது போல் ஷூட்டிங்கை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நல்ல மழை பெய்து வருவதால் ஷூட்டிங் பாதித்துள்ளது. இருப்பினும் எப்படியாவது திட்டமிட்ட நேரத்திற்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.

வழக்கமாக இந்நேரத்தில் இங்கிலாந்தில் மழை பெய்யாது. அந்த தைரியத்தில் தான் தாண்டவம் குழு இங்கிலாந்து சென்றது. ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாரா விதமாக மழை பெய்து வருகிறது.

இந்த படத்திற்கு ஜி.வி. பிராஷ் இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார்.

'கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'... கேப்டன் டிவியில் 'வடிவேலு'!!!

Sunday, ,May, 20, 2012
கடுப்பேத்துறான் யுவர் ஆனர்... 'உலகப் புகழ் பெற்ற' வடிவேலு பட வசனம் இது. இந்த தலைப்பில் இப்போது விஜயகாந்த்தின் கேப்டன் டிவியில் ஒரு நிகழ்ச்சி வருகிறது.

ஆர்.கே நடித்த எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீல் வண்டு முருகனாக வருவார் வடிவேலு. அதில் வரும் கோர்ட் சீனில், எதிர்த் தரப்பு வக்கீல் புள்ளிவிவரத்தோடு வாதாடுவதைப் பார்த்து கடுப்பாகி கத்துவார். பின்னர் கடுப்பேத்துறான் யுவர் ஆனர் என்று பேசுவார். இந்த வசம் ரொம்ப பாப்புலர்.

இப்போது இந்த வசனத்தையே தலைப்பாக்கி கேப்டன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர் என்பது இந்த நிகழ்ச்சியின் பெயராம்.

ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மக்களோடு கலந்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள் -காமெடி கலந்து.

நிகழ்ச்சி எப்படி இருக்கோ இல்லையோ, விஜயகாந்த் டிவியில், வடிவேலு பட வசனத் தலைப்பு என்பதே ஒரு நியூஸ்தான்!

'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!!!

Sunday, May, 20, 2012
இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை... ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்.

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார்.

இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக அறிவித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார்.

இப்போது அந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக வருவதுதான் சைனீஸ் ஜோடியாக். டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

தனது ஓய்வு குறித்து அறிவித்த ஜாக்கி சான் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்ஷன் நாயகனாக நடிப்பது... சண்டை போட்டு போட்டு களைத்துவிட்டது. அதிரடி சண்டைக்கு என் வயசு இடம்கொடுக்கவில்லை.

இப்போது உலகம் ரொம்ப வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சியைக் கூட நகைச்சுவையாக்கிவிட்டேன்.

கராத்தே கிட் நடிக்கும்போதே, போதும் ஆக்ஷன் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்.

சைனீஸ் ஜோடியாக் படத்துக்குப் பின் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை விழா - எஸ்பி முத்துராமன், சுஹாசினி பங்கேற்பு!!!

Sunday, ,May, 20, 2012
அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், தமிழகத்தின் நலனுக்காகநடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது மாநாடு ஹூஸ்டன் நகரில் வரும் மே 25-ம் தேதி தொடங்குகிறது. தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த அறக்கட்டளையின் சார்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடத்தி கிடைக்கப்பெறும் நிதி ஆதாரத்தைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

சென்ற ஆண்டு, கூடுதலாக ஊரகப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம், மதுரவாயல் தாலுகா, வேதாரண்யம் உள்ளிட்ட ஊரகப்பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், கழிவறை உள்ளிட்ட சுகாதாரவசதிகள், மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள், அமெரிக்காவில் உள்ளது போல் வீட்டிலிருந்து பள்ளி வரை இலவச போக்குவரத்து, அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பயிற்சி வகுப்புகள், கணிணிக்கல்வி, வசதியற்ற பெற்றோர்களுக்கு திட்டத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு என பன்முகத்திட்டமாக இது செயல்பட்டுவருகிறது. தமிழகத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘களஞ்சியம்’ அமைப்புடன் கைகோர்த்து இதை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்களும் ஆர்வத்தோடு செருப்பு அணிவது முதல், சுகாதாரமுறையில் கழிப்பறை உபயோகப்படுத்துவது, நாள் தவறாமல் பள்ளிக்கு வருகை, படிப்பில் ஆர்வம், அறிவுத்திறனை அதிகப்படுத்திக் கொள்ளுதல் என தங்களை மேன்மைபடுத்திக் கொள்கிறார்கள். திட்டம் அமலாக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் வருகை 36 சதவீத்த்திலிருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விடும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப் பட்டுள்ளது.

37 வது தேசிய மாநாடு

மே 25ந்தேதி முதல் நான்கு நாட்கள் தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய மாநாடு ஹூஸ்டனில் நடைபெறுகிறது. தேசிய மாநாடு குறித்தும், அறக்கட்டளையின் பொது சேவைகள் குறித்தும் மாநாட்டு செய்தி மற்றும் விளம்பர பொறுப்பாளர் பாலா பாலச்சந்திரன் அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ், சான் அன்டோனியோ, ஆஸ்டின் மற்றும் ஹூஸ்டன் நகர தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் மாநாட்டு பணிகளிலும் இணைந்து செயல்படுகிறார்கள்.

பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பல தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இயல் இசை நாடகம் என பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், பட்டிமன்றம், கவியரங்கம், மருத்துவத்துறையின் தொடர்படிப்பிற்க்கான கருத்தரங்கம், அமெரிக்க தமிழ்க் குடும்பங்களுக்கு திருமண தொடர்புக்கான அறிமுக உரையாடல் நிகழ்ச்சிகள், அமெரிக்க தமிழ் இளைஞர்களுக்கான கருத்தரங்கம், தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், தொழில் கண்காட்சி மற்றும் எக்ஸ்போ என பல்வேறு அம்சங்களுடன் நடைபெறுகிறது.

'நந்தா’, ‘மௌனம் பேசியதே’ திரைப்பட தயாரிப்பாளருமான ராஜன் ராதாகிருஷ்ணன் கலை நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ளார். எஸ்.பி முத்துராமன், சுகாசினி, ஞானசம்மந்தம், பர்வீன் சுல்தானா, உமையாள் முத்து, நெல்லை கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஹரிசரண், ராகுல் நம்பியார், சைந்தவி பங்கேற்கும் இசை நிகழ்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கூடுதலாக புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் வரலாற்றில் முதன் முறையாக டி.என்.எஃப் ஐடல் என்ற நட்சத்திரப்போட்டி நடைபெற்றது. பிரபல பின்ணணி பாடகி ‘ரோஷிணி’ சிறப்பு நடுவராக பங்கேற்றார்.

மாநாட்டில் அனைவரும் பங்கேற்பதற்கு வசதியாக தனித்தனி பிரிவுகளில் நான்கு நாட்கள் பாஸ், ஒரு நாள் பாஸ், இசை நிகழ்ச்சி மட்டும் என தனித்தனி நுழைவுக் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக்கொண்டு ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் மெரின் ராஜதுரை கலந்து கொண்டு மாநாட்டு வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார். மற்றும் மேரிலாண்ட் மாகாண வெளியுறவுத் துறை துணைச்செயலாளர் ராஜன் நடராஜனும் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிடுகிறார். மதுரை தியாராயர் பொறியியல் கல்லூரி தலைவரும், மற்றும் தொழிலதிபருமான கருமுத்து கண்ணனுக்கு சிறந்த சேவையாளருக்கான பரிசு அளிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் பாராட்டு

மாநாட்டு குழுத் தலைவர்கள் சாம் கண்ணப்பன் மற்றும் டாக்டர் பத்மினி ஆகியோர் சென்னையில், அமெரிக்கன் கன்சல் ஜெனரல் ஜெனிஃபர் மெக்கின்டயரை சந்தித்து தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக திட்டப்பணிகள் குறித்து விளக்கமாக கூறினர். நடைபெறவிருக்கும் மாநாடு மற்றும் அமெரிக்க தமிழர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதித்தனர். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த கன்சல் ஜெனரல் ஜெனிஃபர் மெக்கின்டயர் மிகவும் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், கன்சலேட் மூலம் அனைத்து வித உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்
.

சேட்டை படப்பிடிப்புக்கு சூர்யா திடீர் வருகை!!!

Sunday, ,May, 20, 2012
டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி நடிக்கின்றனர்.

கடந்த வாரம் சென்னை பின்னி மில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்புக்கு திடீர் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் சூர்யா. வந்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் நட்சத்திரங்கள் ஆர்யா, சந்தானம் உள்ளிட்டோருடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தார். படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடக்கும் விதம் பற்றியெல்லாம் கேட்டறிந்தவர், அப்படியே பக்கத்தில் நடக்கும் மாற்றான் படப்பிடிப்புத் தளத்துக்கு சேட்டை குழுவினரை அழைத்துச் சென்று தனது குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சூர்யாவின் திடீர் வருகையும், அவர் தங்களிடம் நடந்து கொண்ட விதமும் உற்சாகமளிப்பதாகவும், புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருந்தது என இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.

சூர்யா எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவர். அவர் வந்து என்னை வாழ்த்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது என்றார் ஹீரோ ஆர்யா.

படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "சூர்யா எங்களுடன் வெகுநேரம் அமர்ந்து சேட்டை படம் வளரும் விதம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய நடிகர், எங்கள் மீது அக்கறையாக வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.

நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கில் விஜய், அஜித் இணைந்து நடிக்க முடிவு?!!!

Sunday, May, 20, 2012
ரஜினி, கமல் இணைந்து நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப் பிரதா நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம், சிவ சம்போ சிவ சம்போ, நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

அந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கை செல்வா இயக்க உள்ளதாகவும் செய்தி பரவியது. செல்வா ஏற்கனவே அமராவதி படம் மூலம் அஜித்தை அறிமுகம் செய்தவர். ஜெமினி கணேசனின் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் அஜித்தையும் விஜய்யையும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

ஆனால் செல்வாவிடம் இதுகுறித்து கேட்டபோது மறுத்தார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் விஜய், அஜித்தை நடிக்க வைக்க நான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்தி வதந்திதான். அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார்.

விளம்பர படத்தில் நடிக்க வித்யா பாலனுக்கு ரூ.30 லட்சம் சம்பளம்!!!

Sunday, May, 20, 2012
இந்தியில் 'டர்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. முன்னணி ஹீரோக்களும் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையடுத்து சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளார். கத்ரினா கயூப், தீபிகா படுகோனே இருவரும் ரூ.2 1/2 கோடி வாங்குகிறார்கள். அவர்களை வித்யாபாலன் நெருங்கியுள்ளார்.

இதுபோல் விளம்பர படங்களில் நடிக்கவும் வித்யா பாலன் பெரும் தொகை வாங்குகிறார். சமீபத்தில் கேரளாவில் இருந்து விளம்பர படமொன்றில் நடிக்க வித்யாபாலனை அனுகினர். அதில் நடிக்க ரூ.30 லட்சம் கேட்டார். அந்த நிறுவனம் சம்மதித்தது. இதன் படப்பிடிப்புக்காக கொச்சி செல்ல இருக்கிறார்.

விளம்பர படத்துக்கான படப்பிடிப்பு 2 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளன. ஒரு நாளைக்கு தலா ரூ.15 லட்சம் என நிர்ணயம் செய்துள்ளார்.

நடிகர் ராம் சரண் திருமணம்: திருப்பதி கோவிலில் அழைப்பிதழ் வைத்து சிரஞ்சீவி மனைவி வழிபாடு!!!

Sunday, May, 20, 2012
காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். ராம் சரனுக்கும் அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி பேத்தி உபாஷனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ந்தேதி இவர்களது திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. திருமண அழைப்பிதழுடன் சிரஞ்சீவி மனைவி சுரேகா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அர்ச்சகர் மூலம் ஏழுமலையான் பாதத்தில் அழைப்பிதழ் வைத்து வழிபட்டார். பின்னர் பத்திரிகையை உண்டியலில் போட்டார்.

இதேபோல் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்றும் அவர் வழிபட்டார். தாயாருக்கு பட்டு புடவை சாத்தினார். முன்னதாக விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கா கோவிலுக்கும் சுரேகா சென்று திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டார்.

இது பற்றி சுரேகா கூறும்போது, ஏழுமலையான் சன்னதியில் திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டேன். முதலில் தெய்வத்தின் ஆசி பெற்ற பிறகு மற்றவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

சுரேகாவுடன் அவரது தங்கை வசுந்தரா சென்று இருந்தார்.