Wednesday, May 2, 2012

'கோ' படத்திற்கு நாகி ரெட்டி விருது :ரூ.150000 பரிசு!!!

Wednesday,May,02,2012
நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக சிறந்த திரைப்படத்திற்கான விருது 'கோ' படத்திற்கு வழங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை தயாரித்தவரும், ஆசியாவில் மிகப்பெரிய ஸ்டுடியோ என்ற பெயரை பெற்ற விஜயா வாஹினி ஸ்டுடியோவை நிறுவியவர் பி.என்.நாகி ரெட்டி. தமிழக அரசு விருது, பால்கே விருது போன்றவைகளைப் பெற்ற நாகி ரெட்டி, இரண்டு முறை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். சினிமா துறை மட்டும் இன்றி, பத்திரிகை துறையில் மருத்துவ துறையில் வெற்றி பெற்ற நாகி ரெட்டியின், நூற்றாண்டு விழா 'நாகி ரெட்டி கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை' சார்பில் கொண்டாடப்பட்டது.

மே 1ஆம் தேதியன்று சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், சென்ற ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக பின்னணி பாடகர் உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரான படங்களின் பாடல்களை உன்னி மேனன் இசைக் குழுவினர் பாடினார்கள். பிறகு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஏ.வி.எம்.சரவணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகை நதியா ஆகியோர் நாகி ரெட்டியைப் பற்றி பேசினார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கு நாகி ரெட்டி பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை சவுக்கார் ஜானகி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சிறந்த படங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதில் 'கோ' படம் சிறந்த ஜனரஞ்சக படமாக தேர்வு செய்யப்பட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, நடித்த இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டது. இவ்விருதுடன் ரூ.150000 பணமும், நினைவு பரிசும் இப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டிருக்கும் நாகி ரெட்டி விருது இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஜி காதலியை கடுப்பேத்தும் டான்சர்!!!

Wednesday,May,02,2012
இயக்குன படங்கள் கை கொடுக்காததால களஞ்சிய இயக்கம் நடிக்க வந்தாரு. நடிப்பும் கைகொடுக்காததால அப்செட் ஆனவரு, அடுத்து என்ன செய்யறதுன்னு முடிவெடுக்க முடியாம தடுமாற்றத்துல இருக்காராம¢... இயக்குற ஐடியா என்னாச்சின்னு கேட்டா, இப்போதைக்கு அமைதி காக்குறதுதான் நல்லது. புதுசா இயக்க வந்தவங்கெல்லாம் திடீர்னு தயாரிப்பாளர் ஆயிடுறாங்க. அந்த டெக்னிக்கை கண்டுபிடிச்சி நானும் சீக்கிரமே தயாரிப்பாளராயிடுவேன்னு கூட இருக்கிறவங்ககிட்ட சொல்றாராம்...

பாலிவுட் படத்தை இயக்கப்போனதுலேயிருந்து நடனபுயல் நடிகரு அந்த ஊரு கல்சருக்கு மாறிட்டாராம்... மிட்நைட் பார்ட்டி, குயிக் பார்ட்டின்னு கலக்குறாராம். பார்ட்டிக்கு வர்ற ஹீரோயின்களும் அவர் மேல கண்ணு வெக்கறதோட, பட சான்ஸ் பிடிக்க நெருக்கமா பழகுறாங்களாம்... பழகுறாங்களாம்... அவங்களோட ஜோடிபோட்டு போஸ் கொடுத்து, அதை நெட்ல நடனமே உலா விடுறாராம்... மாஜி காதலியை கடுப்பேத்தவே இந்த மாதிரி நடனம் பண்றாராம்...

பசங்கள வச்சி படம் இயக்குன பாண்டு இயக்கம் மேல புகார் வந்திருக்காம்... வந்திருக்காம்... படம் தயாரிக்கறேன்னு ஒருத்தர்கிட்ட லட்ச கணக்குல பணம் வாங்கியவரு தானே தயாரிப்புன்னு அறிவிச்சதால பிரச்னையாயிடுச்சாம். விஷயம் கோர்ட்டு, போலீஸ் ஸ்டேஷன் வர போனதுல இயக்கம் சிக்கல்ல இருக்காராம்...எந்த தப்பும் செய்யல. கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க தயாரா இருக்கேன்Õனு இயக்கம் சமரசத்துக்கு தயாராயிட்டாராம்...

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,May,02,2012
*விளம்பர படம், விழாக்களுக்கு வெளியில் செல்லும் ஐஸ்வர்யா ராய் சில மணி நேரத்திலேயே வீடு திரும்பி குழந்தையை கவனித்துக் கொள்ள தவறுவதில்லையாம். கடந்த வாரம் 5வது ஆண்டு திருமண நாளையொட்டி பிரன்ட்ஸுகளுக்கு பார்ட்டி கொடுத்த ஐஸ்அபிஷேக் ஜோடி இரண்டு மணிநேரத்திற்குள் வீடு திரும்பி விட்டார்களாம்.

*எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஸ்கிரிப்ட் ‘ஒசிமுரி’ பெயரில் மலையாள படத்தில் பாவனா ஹீரோயினாக நடிக்கிறார்.

*‘ஆயுள்ரேகை நீயடி’ என்ற படத்தில் அறிமுகமாகிறார் அவந்திகா.

*பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘வழக்கு எண் 18/9’ படத்தின் முதல் பாதி 35 எம்.எம். சைசிலும் மறுபாதி சினிமாஸ்கோபிலும் படமாகி உள்ளது.

*விஷால் நடிக்கும் ‘சமரன்’ பட டைட்டில் ‘சமர்’ என மாற்றப்பட்டுள்ளது.

கொலை வெறி டி பாடலுக்கு இசை அமைத்த அனிரூத் தமிழ், இந்தி, தெலுங்கு 3 மொழிகளில் விக்ரம் நடிக்கும் டேவிட் படத்துக்கு இசை அமைக்க உள்ளார்.

சிக்கு புக்கு படத்தில் நடித்த பிரீத்திகா, ஜர்னலிசம் பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

கோ பட வில்லன் அஜ்மல் மலையாளத்தில் பேங்கல்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

நட்சத்திர ஓட்டலில் சாப்பிட செல்லும்போது வித்தியாசமான உணவு வகைகளை டேஸ்ட் செய்தால் அதன் செய்முறைபற்றி உடனே செப்பிடம் கேட்டறிந்து வீட்டுக்கு வந்தவுடன் செய்து பார்க்கிறார் அஜீத்.

கலகலப்பு படத்துக்கு இசை அமைக்கும் விஜய் எபினேசர் ஏற்கனவே கண்டேன் படத்துக்கு இசை அமைத்தவர்.

விஷால் படத்தை எதிர்த்து வழக்கு: இயக்குனர் சக்திமோகன்!!!

Wednesday,May,02,2012
விஷால்- திரிஷா ஜோடியாக நடிக்க சமரன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகி வருகிறது. திரு இயக்குகிறார். இப்படத்தின் பெயரை திடீரென சமர் என்று மாற்றி உள்ளனர். இதற்கான விளம்பரங்களும் வெளியாகியுள்ளது.

சமர் பெயரை பயன்படுத்த கூடாது என்று சக்திமோகன் என்ற இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தென் இந்திய திரைப்படம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் சமர் டைட்டிலை பதிவு செய்து நாங்கள் படம் எடுத்து வருகிறோம். எனவே அந்த பெயரை விஷால் படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் கில்டில் அவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் சக்திமோகன், தயாரிப்பாளர் விஜய் ஆகியோர் கூறியதாவது:-

அக்வாஷ்ரே மூவிஸ் பட நிறுவனம் சார்பில் சமர் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறோம். புதுமுகங்கள் நடிக்கின்றனர். சமர் பெயரை கடந்த வருடம் மார்ச் மாதம் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தோம். அந்த பெயரை புதுப்பித்து நாங்களே வைத்துள்ளோம்.

ஏற்கனவே கவிஞர் பா.விஜய் சமர் பெயரில் புதுப்படம் நடிக்க தயாரானார். நாங்கள் எதிர்த்ததும் பெயரை பயன்படுத்தவில்லை. இப்போது விஷால் திரிஷா நடிக்கும் படத்துக்கு சமர் பெயரை சூட்டியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. சமர் பெயர் எங்களுக்கு சொந்தமானது அந்த பெயரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். சமர் பெயரை விட்டுத்தர மாட்டோம். தயாரிப்பாளர், கில்டில் புகார் செய்துள்ளோம். அடுத்த கட்டமாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெலுங்கு படங்களை ஏற்க அனுஷ்கா மறுப்பது ஏன்?!!!

Wednesday,May,02,2012
கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் ‘தாண்டவம்Õ, கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ, ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்Õ, சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் தமாருகம்,

பிரபாஸுடன் ‘வாரதிÕ என ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. அவரது சினிமா கேரியரை பார்க்கும்போது தமிழைவிட தெலுங்கில் பெரிய வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஆனாலும் தற்போது அவர் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. 30 வயதை கடந்துவிட்ட அனுஷ்கா தற்போதுள்ள இளம் நடிகைகளின் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுத்திருப்பார் என்று டோலிவுட் திரையுலகினர் கருதுகின்றனர். அதேநேரம், கோலிவுட்டில் மார்க்கெட்டை நம்பி இந்த முடிவு எடுத்திருக்கலாம் அல்லது தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

ஜெயம் ரவியுடன் நெருக்கமாக நடிக்க மறுத்ததால் நயன்தாரா நீக்கம்: திரிஷா ஜோடியானார்!!!

Wednesday,May,02,2012
ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார். கல்யாண் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவர் படத்தில் நடிக்க பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் நெருக்கமாக காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆடை குறைத்து கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம். அத்துடன் சம்பளமும் அதிகமாக கேட்டுள்ளார். இதனால் படத்தை தயாரிக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் அதிர்ச்சியானது.

கதைப்படி கதாநாயகி கவர்ச்சியாகவும் நாயகனுடன் நெருக்கமாகவும் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. நயன்தாரா மறுத்ததால் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

நயன்தாராவுக்கு பதில் ஜெயம் ரவி ஜோடியாக திரிஷாவை தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இரண்டாவது தடவையாக மீண்டும் சேர்ந்துள்ளனர்.

பூலோகம் படத்தில் இருந்து நீக்கியதால் நயன்தாரா அதிர்ச்சியாகி உள்ளார். நீக்கத்துக்கு காரணம் திரிஷாதான் என அவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இருவருக்கும் குருவி படத்தில் இருந்தே பனிப்போர் நீடித்து வருகிறது. அப்படத்தில் நயன்தாராவை தான் கதாநாயகியாக முதலில் தேர்வு செய்தனர். ஆனால் திடீரென அவரை மாற்றி விட்டு திரிஷாவை ஜோடியாக்கினர்.

சதி செய்து தனது வாய்ப்பை தட்டி பறித்து விட்டதாக நயன்தாரா பொருமினார். பதிலடியாக திரிஷா நடிப்பதாக இருந்த தெலுங்கு பட மொன்றை நயன்தாரா பறித்தார். இப்போது மீண்டும் பூலோகம் படம் மூலம் தகராறு தீவிரமாகி உள்ளது.

'சகுனி'யின் விலை ரூ. 22 கோடி?!!!

Wednesday,May,02,2012
கார்த்தி நடித்த சகுனி படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்று விட்டார்களாம்.இதுதான் கோலிவுட் முழுக்க ஒரு பேச்சாக கிடக்கிறது.

கார்த்தி, பிரனீதா நடித்துள்ள படம் சகுனி. இப்படத்தை மே மாதம் 11ம் தேதிக்கு திரைக்குக் கொண்டு வரத்த திட்டமிட்டுள்ளனராம். இந்த நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்றுள்ளதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

கார்த்தி நடித்த எந்தப் படமும் இப்படி ஒரு பெரிய விலைக்கு இதுவரை போனதாக வரலாறே இல்லை. இந்த நிலையில் சகுனியை மட்டும் இவ்வளவு பெரிய விலைக்கு எப்படி விற்றார்கள் என்பதே பெரிய பேச்சாக உள்ளது.

இப்படத்தை தயாரித்தது டிரீம் வேரியர்ஸ் நிறுவனம். படத்தை வாங்கியிருப்பது வேந்திரன் பிலிம்ஸ் மதன். சங்கர்தயாள் சர்மாவின் அறிமுக இயக்கத்தில் சகுனி உருவாகியிருப்பது நினைவிருக்கலாம். ஜிவிபிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தானம் காமெடி பண்ணியுள்ளார்.

இவ்ளோ பெரிய ரேட்டுக்கு 'ஒர்த்'தானதுதானா சகுனி... படம் வரட்டும் பார்க்கலாம்...!

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி அமைத்த மோர் பந்தல்!!!

Wednesday,May,02,2012
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடையில் மக்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு பணியாட்கள் நியமித்து நேரடி மேற்பார்வையில் இந்த மோர் பந்தலை அமைத்து வருகிறார்.

2008 ஆம் ஆண்டில் இருந்து இதை அவர் செய்து வருகிறார். ஐந்தாவது வருடமாக இந்த தடவையும் மோர் பந்தல் அமைத்துள்ளார். இந்த மோர் பந்தல் இன்று முதல் செயல்பட துவங்கியது. ராகவேந்திரா மண்டபத்தில் விசேஷ பந்தல் அமைத்து பெரிய பாத்திரத்தில் மோர் ஊற்றி வைக்கப்பட்டது.

அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு ஜில்லென்று குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கும் மேல் தயிர் இதற்காக செலவிடப்படுகிறது. மோருக்காக வெண்ணை எடுக்காத பால் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

மோர் பந்தலுக்குள் ரஜினியின் பெயரோ படமோ இல்லை. அவர்தான் மோர் பந்தலை அமைத்துள்ளார் என்ற விவரம் எதுவும் இடம் பெறவில்லை. காலை 9 மணி முதல் மாலை 3மணி வரை மோர் பந்தல் செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை மோர் அருந்தி செல்கின்றனர். கால் மணி நேரத்துக்கு ஒருமுறை கல்யாண மண்டபத்துக்குள் இருந்து பெரிய பாத்திரத்தில் மோர் கொண்டு வரப்பட்டு, பந்தலில் உள்ள எவர்சில்வர் அண்டாவில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு

அசினை அடுத்து மும்பையில் குடியேறுகிறார் இலியானா!!!

Wednesday,May,02,2012
அசினை அடுத்து இலியானாவும் மும்பையில் குடியேறுகிறார். ‘கஜினி' இந்தி ரீமேக்கில் நடிக்க மும்பை சென்றார் அசின். அங்கு மார்க்கெட் சூடு பிடிக்கவே சொந்தமாக பங்களா வாங்கி மும்பையில் குடியேறிவிட்டார். அவரைப்போல் இந்தியில் ‘பர்பிÕ படத்தில் நடிக்க மும்பை சென்றிருக்கிறார் இலியானா. நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார். இது அவருக்கு வசதியாக அமையவில்லை. இதையடுத்து மும்பையில் சொந்தமாக பங்களா வாங்க முடிவு செய்தார்.

Ôபர்பிÕ ஷூட்டிங் முடித்துவிட்டு கோடைகால விடுமுறைக்காக கோவா செல்கிறார் இலியானா. ஜூன் மாதம் மீண்டும் மும்பை திரும்புகிறார். இதற்கிடையில் ஒரு வார பயணமாக துபாய் செல்கிறார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்துக்கு அருகிலேயே வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த பங்களா ஸ்டுடியோக்களுக்கு சென்றுவர ஏதுவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு வீடு புரோக்கரிடம் கூறி இருக்கிறார்.

‘'பாலிவுட் படங்களில் நடிப்பதால் எனக்கு மும்பை முகவரி தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் டோலிவுட், பாலிவுட் இரு மொழி படங்களிலும் பேலன்ஸ் செய்து நடிக்க முடியும். இதனால் அங்கு வீடு தேடுகிறேன். விரைவில் நல்ல வீடு கிடைத்துவிடும்ÕÕ என்றார் இலியானா.

'8 வருடங்களில் 40 வாட்டி...' - கோவையில் நமீதாவின் கொஞ்சல்!!!

Wednesday,May,02,2012
பட வாய்ப்புகள் இருக்கிறதோ இல்லையோ நடிகைகள் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். கடை திறப்புகள், விளம்பர அழைப்புகள், நடன மேடைகள் என அவர்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.

அப்படி ஒரு நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை நமீதா வந்திருந்தார். இடம் கோவை, கணபதி.

நமீதாவைப் பார்த்ததும் உற்சாகமான ரசிகர்கள் பறக்கம் முத்தங்களை வீச, அவரும் அதை பக்குவமாகக் கையாண்டு, ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதில் அவர் கில்லாடியாச்சே!

பின்னர் தன்னைப் பார்க்க ரசிகர்களுக்கு இணையாக முண்டியடித்த செய்தியாளர்களிடம் கொஞ்ச நேரம் பேசினார். அவர் கூறுகையில், "கோயமுத்தூர் எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வரத் தயங்கியதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் 40 தடவை வந்து போயிருக்கிறேன் இந்த ஊருக்கு.

எனக்கு இந்த ஊரில் ரொம்ப பிடித்த இடம் கோவை ரேஸ்கோர்ஸ். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் உற்சாகமாக இருக்கும். எதிர்காலத்திலும் நான் தொடர்ந்து வர விரும்பும் இடம் இந்த கோவைதான்.

சினிமாவில் ஒரு இடத்தைப் பெற வேண்டிய நிலையில் நான் இல்லை. பாப்புலாரிட்டியைத் தாண்டி, நல்ல சினிமாவில், நல்ல வேடங்களில் நடித்தால் போதும் என்ற நிலை. அதனால்தான் திறமையை காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.

இதுவரை நான் நடிச்சதில் பச்ச குதிரை என்னை ஒரு நல்ல திறமையான நடிகையாக காட்டியது. இன்னொரு படம் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடித்த ஏய். காமெடி, ரொமான்ஸ் என எனக்கு நல்ல பேர்.

அஜீத்துடன் நடித்த பில்லா எனக்கு பெரிய திருப்பு முனை தந்தது. தற்போது கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறேன். நடிப்பு

என்னுடன் நடித்த நடிகர்களில் யாரை பிடிக்கும் என்று தனித்து சொல்ல முடியாது. அனைத்து நடிகர்களுமே எனக்கு பிடிக்கும். வலது கண் பிடிக்குமா? இடது கண் பிடிக்குமோ? என்று கேட்டால் என்ன சொல்வது. அது போல் தான் என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். யாரிடமும் எனக்கு கெட்ட பெயர் கிடையாது," என்றார்.

'அவிழ்ப்பு ராணி' பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கலைந்தது!!!

Wednesday,May,02,2012
தனது ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால், ஓவர் நைட்டில் உச்சாணிக்குப் போன பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கிட்டத்தட்ட வெடித்துச் சிதறி விட்டதாம். அமீத் சக்சேனாவின் இயக்கத்தில் பூனம் பாண்டே நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரது வாயாலேயே இந்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு விட்டாராம் பூனம் பாண்டே.

நம்ம வீரர்கள் மட்டும் கோப்பையை வெல்லட்டும், நிர்வாணமாக ஓடுகிறேன் என்று ட்விட்டர் மூலம் பெட் கட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அந்த ஸ்டேட்மென்ட்டுக்கு முன்பு வரை பூனம் எப்படி இருப்பார் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த அறிவிப்புக்குப் பின்னர் பூனம் இப்படியெல்லாமா இருப்பார் என்று அத்தனை பேரும் பேசும் அளவுக்கு தன்னையும், தனது உடலையும் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வருகிறார் பூனம்.

இந்த நிலையில் 21 வயதான பூனம், இந்தியில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதையும் கூட இவரேதான் தொடர்ந்து பரப்பி வந்தார். ஜிஸ்ம் படத்தை இயக்கியவரான அமீத் சக்சேனாவின் புதிய படத்தில் பூனம் நடிக்கப் போவதாகவும், படு கவர்ச்சியாக அதில் அவர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கூறின.

ஆனால் அது பொய்யான தகவல் என்று அமீத்தே தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் பூனம் இதுபோல பொய்யான கதைகளை சொல்வதை நிறுத்த வேண்டும்.

இது மோசமானது. நான் இதுவரை எதையுமே முடிவு செய்யவில்லை. எனவே பூனம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது என்றார்.

மொத்தத்தில் பூனத்தின் பாலிவுட் அறிமுகம் அவரது வாயாலேயே கெட்டுப் போய் விட்டது என்று கூறுகிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு தேனி கொடுத்த கொடை 'கிழக்கு பாத்த வீடு' - வைரமுத்து பேச்சு!!!

Wednesday,May,02,2012
தேனி சின்னமாயன் பிலிம்ஸ் சார்பில் தேனி என்.சின்னமாயன் மற்றும் என்.சி.ஜெகன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கிழக்கு பாத்த வீடு' எஸ்.பி.பாலகுருசாமி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, 32 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் பரதன், தமலி நடித்திருக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற தம்பிராமையா, அப்புக்குட்டி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மரியா மனோகர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 1ஆம் தேதியன்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு, இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "கிழக்கு பாத்த வீடு என்றாலே அது ராசியான வீடுதான். இப்படத்திற்கு பாடல்கள் எழுதும் போது எனக்கு கிழக்கு சீமையிலே படத்தின் ஞாபகம் தான் வந்தது. இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர், இயக்குநர், நான் உட்பட அனைவருமே தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான். தேனிக்காரர்கள் சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். தேனி தமிழ் சினிகாவுக்கு கொடுத்த கொடை 'கிழக்கு பாத்த வீடு' என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தின் கதை உண்மைச் சம்பவம். இயக்குநர் பாலகுருசாமி தான் பார்த்த உண்மை சம்பவத்தை எதார்த்தமான முறையில் காட்சிப் படுத்திருக்கிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. அப்படி நீங்கள் அழவில்லை என்றால், உங்களுடைய இதயத்தை நீங்கள் வீட்டில் வைத்து விட்டு வந்திருக்கீறீர்கள் என்று அர்த்தம்." என்றார்.

பாரதிராஜா பேசுகையில், "ஒரு காலத்தில் தேனியில் இருந்து சினிமாவை தேடி சென்னைக்கு நாங்கள் வந்தோம். இன்று தமிழ் சினிமா தேனிக்கு போகிறது. சின்னமாயன் போன்றவர்களெல்லாம் படம் தயாரிப்பார்கள் என்று நினைத்திருக்கிறோமா. அந்த அளவுக்கு தேனி மண் சிறந்த மண்ணாகும். நான் பிறந்த மண் என்பதால் நான் சொல்லவில்லை. பொதுவாகவே அந்த மண்ணுக்கும், கலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது." என்றார்.

தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியெடுத்த வழக்கு எண் 18/9!!!!

Wednesday,May,02,2012
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டனர் பாலாஜி சக்திவேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்.

படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, "இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?" என்றார்.

படத்தின் விமர்சனத்துக்கு.... வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருங்க!

'அடடா... இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்!'!!!

Wednesday,May,02,2012
அறிமுகமானது ஹீரோவாக இல்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் அசத்தலாக நடித்து வாகை சூடியவர் அந்த இளம் நடிகர்.

சமீப காலமாக இவரைப் பற்றித்தான் ஒரே கசமுச செய்தியாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.

அப்போது மேடையில் இளம் நடிகர் பேச வேண்டிய முறை. ஆனால் அவரோ பேசாமல் பம்மிக் கொண்டு, ஸ்டேஜுக்குப் பின்னால் போக, வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர், அவர் நிலைமை புரியாமல்.

வந்தவர், ஒரு பக்கமாக சிரித்தபடி, வணக்கம், நன்றி என்று கூறிவிட்டு ஓட, அப்போதுதான் மனிதர் உற்சாக பானத்தில் இருந்தது தெரியவந்தது.

மாலை 6 மணி கூட ஆகலியே, பகலிலே இந்த நிலவரமா என்று கலவரத்துடன் பேசிக் கொண்டனர் நடிகரின் நலம் விரும்பிகள். 'அடடா, இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்... எல்லாம் புதுசா கட்டுண கல்யாணந்தானப்பா காரணம்... குடும்ப சிக்கல் இந்த புதுமாப்பிள்ளையை குடிமகனாக்கிவிட்டுடுச்சி போல', என்று பேசிக் கொள்ள அது அப்படியே மீடியாவிலும் ஒரு சுற்று வர ஆரம்பித்துள்ளது!

ஆர்யா - சந்தானம் - பிரேம்ஜி: வை ராஜா வை அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கம்?.!!!

Wednesday,May,02,2012
இந்தியில் தாங்கள் தயாரித்த சூப்பர் ஹிட் படமான டெல்லி பெல்லியை தமிழுக்கு ஏற்ப ரீமேக் செய்கிறது யுடிவி நிறுவனம்.

இந்தப் படத்தில் ஆர்யா - சந்தானம் - பிரேம்ஜி அமரன் என அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

டெல்லி பெல்லியில் வரும் விமான பணிப்பெண் மற்றும் பத்திரிகையாளர் வேடங்களில் ஹன்சிகா மற்றும் அஞ்சலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி சிரிப்பு, கிளுகிளுக்க வைக்கும் கவர்ச்சிதான் இந்தப் படத்தின் பார்முலா.

இப்படத்தில் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், ஜான் மகேந்திரனிடம் அந்தப் பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர் விஜய் நடித்த 'சச்சின்', ஈழப் போர் குறித்த மறக்கமுடியாத படமான ஆணி வேர் போன்ற படங்களைத் தந்தவர் ஜான்.

இந்தப் படத்துக்கு இரண்டு தலைப்புகள் பரிசீலனையில் உள்ளன. ஒன்று வை ராஜா வை. அடுத்து.. வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

மே 7-ம் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ்!!

இந்தி 'ஹவுஸ்புல்-2' ரீமேக்கில் நடிக்க ஜீவா, விஷால், ஆர்யா விருப்பம்!!!

Wednesday, May 02, 2012
இந்தியில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதில் அக்ஷயகுமார், ஜான்ஆபிரகாம், ரிதேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக அசின் நடித்துள்ளார்.

தமிழில் 2003-ல் ரிலீசான 'பந்தா பரமசிவம்' படத்தின் இந்தி ரீமேக்கே 'ஹவுஸ்புல்-2'. தமிழில் பிரபு நடித்து இருந்தார். டி.பி.கஜேந்திரன் இயக்கினார். பி.டி.செல்வகுமார் தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இப்படம் இந்தியில் தயாராகி வசூலை கொட்டுகிறது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஹவுஸ்புல்-2' படத்தை மீண்டும் தமிழில் மெகா பட்ஜெட்டில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் நடிக்க ஜீவா, ஆர்யா, விஷால் ஆகியோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஜீவா கூறும்போது 'ஹவுஸ்புல்-2' படத்தை பார்த்ததும் அதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தமிழ் ரசிகர்கள் காமெடி படங்களை ரசிக்கிறார்கள் என்றார்.

கமலின் விஸ்வரூபம் - அசத்தும் முதல் பார்வை!!!

Wednesday, May 02, 2012
உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30 வினாடிகள் கொண்ட ட்ரைலர் இன்று வெளியானது.

கமல் ஹாஸன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கமல் நேற்று இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ஸ்டில்லை வெளியிட்டார். விஸ்வரூபம் என்ற தலைப்பு, உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா.

இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.

இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.

படத்தை கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.

கமல் சார்... அடுத்த டீஸர் எப்போ.. ஆர்வம் தாங்கல!