Wednesday, February 22, 2012

ரோம்ப நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம்:‘மசாலா கபே’!!!

Wednesday,February 22,2012
சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிக்கும் படம் ‘மசாலா கபே’. ரோம்ப நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் இது. சமீபகாலமாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்குனர் பணியில் களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ‘மசாலா கபே’ படத்தின் டைட்டிலை மாற்ற முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

சல்மான்கானுக்கு 8 மணி நேரத்தில் ரூ.8 கோடி!!!

Wednesday,February 22,2012
மும்பை::சல்மான் கான் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக 8 மணி நேரத்துக்கு ரூ.8 கோடி தர ஒரு விளம்பர நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம், முதலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவருவதால், அந்த வாய்ப்பை சல்மான் கான் தட்டிச் சென்றார். சல்மானின் புகழை உண ர்ந்த அந்த நிறுவனம், அவர் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டது.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 துணை நடிகைகள் சிக்கினர்!!!

Wednesday,February 22,2012
சென்னை::பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 துணை நடிகைகள் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் துணை நடிகைகள் ஈடுபடுவதாக, உதவி கமிஷனர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலியல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர், பெண் ஒருவரிடம் போனில் பேசினார். அந்த பெண் தன்னிடம் 2 துணை நடிகைகள் இருப்பதாகவும், 25 ஆயிரம் கட்டணம் என்றும் கூறியுள்ளார். கிண்டி ரயில் நிலையம் அருகே வரும் படியும் அழைத்துள்ளார்.

அதன்படி போலீஸ்காரர் மப்டியில் அங்கு சென்றார். அப்போது அந்த பெண், 2 துணை நடிகைகளை காட்டி பணம் கேட்டார். உடனே மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் பிடித்தனர். விசாரணையில், துணை நடிகையின் பெயர் சோபனா(46), தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பழைய வில்லன் நடிகர் ராம்தாசின் உறவினர் என்பது தெரிந்துள்ளது. மேலும் 2 துணை நடிகைகளையும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த தொழில் செய்துள்ளார். இதையடுத்து சோபனாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சூளைமேட்டில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயராஜ், மோசஸ், சாந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 4 இளம்பெண்கள் மீட்டகப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாந்தியும் துணை நடிகை ஆவார்.

சேவை வரியை ரத்து செய்யக் கோரி நாளை சினிமா ஸ்டிரைக்!!!

Wednesday,February 22,2012
சென்னை::மத்திய அரசு கொண்டு வரவுள்ள சினிமா சேவை வரியை ரத்து செய்யக் கோரி, நாளை அகில இந்திய அளவில் சினிமா ஸ்டிரைக் நடக்கிறது. இதை தமிழ் திரையுலகினர் இணைந்து அறிவித்துள்ளனர். இது தொடர்பான அவசர கூட்டம், சென்னை பிலிம் சேம்பரில் நேற்று மாலை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்திய திரைப்பட சம்மேளன துணை தலைவர் எல்.சுரேஷ், பெப்சி செயலாளர் ஜி.சிவா, இயக்குனர் சங்க செயலாளர் அமீர், தியேட்டர் உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது:

இன்றைய நிலையில், லாபம் ஈட்ட முடியாத தொழிலாக சினிமா மாறியிருக்கிறது. மேலும் ஒரு சுமையாக, மத்திய அரசு சேவை வரியை கொண்டு வர உள்ளது. ஏற்கனவே 10.3 சதவீதமாக இருக்கும் வரி, புதிதாக கொண்டு வர உள்ள சட்டத்தால், 30 சதவீதமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகம் பாதுகாப்பாற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே, சேவை வரியை ரத்து செய்ய கோரி, 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்.

இந்திய அளவில் சினிமா ஸ்டிரைக் நடக்க உள்ளதால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த சினிமா அமைப்பினர் அவரவர் இடத்தில் வேலை நிறுத்தம் செய்வார்கள். சென்னை பிலிம் சேம்பரில் 23ம் தேதி காலை முதல் மாலை வரை பொதுக்கூட்டம் நடக்கிறது. நாளை ஒருநாள் இந்திய அளவில் சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்புகள் உட்பட எதுவும் நடைபெறாது.