Tuesday, February 21, 2012

ஹாலிவுட் பாணியில் கோலிவுட்டிலும் 2-ம் பாகம் அஜீத், சூர்யா, விஷால் மும்முரம்!!!

Tuesday, February 21, 2012
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் ‘பில்லா 2’. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து ‘பில்லா 2’ உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் முடிகிறது. அதன்பிறகு ‘சிங்கம்-2’வில் நடிக்கிறார் சூர்யா. அதே போல் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ 2-ம் பாகம் தொடங்க உள்ளது. தற்போது திரு இயக்கத்தில் ‘சமரன்’, சுந்தர்.சி. இயக்கும் புதுபடம் என 2 படங்களில் விஷால் நடிக்கிறார். அப்படங்கள் முடிந்த பிறகு ‘சண்டக்கோழி 2’ தொடங்க உள்ளது. இதே பாணியில் மேலும் பல படங்களின் 2-ம் பாகம் உருவாக்குவது பற்றி ஆலோசனை நடக்கிறது.

திருமணத்தை ரத்து செய்தார் நடிகர் கோபிசந்த் அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை!!!

Tuesday, February 21, 2012
ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த், தனக்கு நிச்ச யிக்கப்பட்ட பெண்ணுடன¢ திருமணத்தை திடீரென்று ரத்து செய்ததார். இந்த அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்: ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு படவுலகில் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ராம்பாபுவின் 2வது மகள் ஹரிதாவுக்கும்(21) கடந்த ஜனவரி 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் திரையுலக¤னர், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது. தனது மருமகன் சினிமா ஹீரோ என ராம்பாபு பெருமையாக பலரிடம் கூறி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தாராம். இந்நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் நடிகர் கோபிசந்த்-ஹரிதா திருமணம் நின்று போனது. இதனால் ராம்பாபு அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத அவர், நேற்று முன்தினம் ஐதராபாத் தில்சுக் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பலமணி நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரைதள்ளியபடி ராம்பாபு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவார்ட் வாங்கணும்... அழகுல அசத்தணும்! - சஞ்சனா சிங்!

Tuesday, February 21, 2012
அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை.

இந்த முயல்கள் இருப்பது இங்கல்ல... மும்பையில். தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், இந்த முயல்களுக்காகவே அவர் வாரம் ஒருமுறை மும்பை பறந்துவிடுகிறார். இவற்றுக்காக தனி படுக்கையறை, மெத்தை என மும்பை வீட்டில் ராஜ உபசாரமாம்.

ஏங்க இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றால்..., "அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேன். இப்போ நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கு. அதனால அவற்றைப் பார்த்துக் கொள்வதில் தனி சந்தோஷம் எனக்கு," என்கிறார் இந்தி கொஞ்சும் தமிழில்.

முயலுக்கே நேரத்தை ஒதுக்கினால், பட வாய்ப்புகள் என்னாவது?

"அது முக்கியம்தான். என் முதல் படம் ரேணிகுண்டா. அப்படியொரு அழுத்தமான வேடம். அந்த மாதிரி வேடம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒரு ஹீரோனுக்குக் கூட கிடைக்காத பேர் எனக்கு கிடைச்சது. நண்பர்கள் கேட்டதற்காக கோ, மறுபடியும் ஒரு காதஸ், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ஜஸ்ட் ஐட்டம் நம்பர்ஸ். ஆனா அதிலும் நான் தனியா தெரிஞ்சேன். கோ முதல் பாட்டை உங்களால மறக்க முடியுமா...சினிமாவில் நண்பர்கள் ரொம்ப முக்கியம்.

இப்போ யாருக்குத் தெரியும் படத்தில் செம ரோல், அதுவும் ஹீரோயின் வேடம் கிடைச்சிருக்கு. பார்க்கிறவங்கள அதிர வைக்கிற மாதிரி ஒரு கேரக்டர் அது. அடுத்த வருகிற எல்லாமே எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்து தரக்கூடிய படங்கள்தான். முத்திரை பதித்த இயக்குநர்களின் படைப்புகள். கேஎஸ் அதியமானின் தப்புத் தாளங்கள், தமிழ்ப் படம் சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் என என் நம்பிக்கையை உயர்த்தும் படங்கள். சந்தோஷமா இருக்கு.

இது ஒரு ஆரம்பம்தான். இனி எல்லாமே நல்லா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. எனக்கும் அவார்டு படம் பண்ண ஆசைதான். என்னைப் பொறுத்தவரை பணம் முக்கியமில்லை. நண்பர்கள் முக்கியம். நாலுபேருக்கு உதவியா இருக்கணும், தேவைக்கேத்த அளவு பணம் இருக்கணும்... அவ்வளவுதான்!," என்கிறார் சஞ்சனா.

இன்றைய தேதிக்கு சஞ்சனா சிங்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் கிளாமர் கேர்ள். கவர்ச்சியில் நமீதாவின் வாரிசு என்றால், நடிப்பில் தானே ரோல் மாடலா இருக்கணும் என்று ஆசைப்படும் அளவு ஆர்வமான நடிகை.

'ஹோம்லியா கிளாமரா? எது உங்க சாய்ஸ்' என்றால், "இதை நிறையபேர் கேக்குறாங்க... இரண்டுமே ஒரு நடிகையின் இரு பக்கங்கள். எனக்கு ரெண்டு ரோலுமே ஓகேதான். இரண்டையுமே அதன் எல்லை வரை போய் சவாலா எடுத்து நடிக்கணும். ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கவர்ச்சில கலக்கணும்... அதான் சஞ்சனா!," என்றார்.

பார்த்தாலே தெரியுதுங்கோ சஞ்சனா!

சில்மிஷ ரூமர் இயக்கம் டிராப்!!!

Tuesday, February 21, 2012
சவுத் ஹீரோயின்களுக்கு டஃப் போட்டி கொடுத்த தமனான ஹீரோயின் அடுத்து பாலிவுட்டுக்கு குறிவச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... பிசின், மழை ஹீரோயின்னு சவுத்லயிருந்து போன ஹீரோயின்களோடதான் இவரோட போட்டி இருக்குமாம். அதுக்காக தன்னோட கால்ஷீட்ட புதுசா யாருக்கும் கொடுக்காம முடக்கிவச்சிருந்தாராம். சரியான படம் கெடச்சதாலே பாலிவுட் படத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிட்டாராம்... காட்டிட்டாராம்...

சிரஞ் வாரிசு நடிகருக்கு ஐஸ் நடிகைய ஜோடி சேக்க டோலிவுட் புரியான இயக்கம் முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... அவரோ இன்னும் குழந்தை பாசத்துலயிருந்து மீண்டு வரலையாம். எப்ப வருவார், எப்படி கால்ஷீட் கொடுப்பார்னு முடிவு தெரியாததால அந்த ஐடியாவ டிராப் பண்ணிட்டாராம். அடுத்து காஜாலான நடிகை பக்கம் இயக்கத்தோட பார்வை திரும்பி இருக்காம். எப்ப கேட்டாலும் ஓ.கே. சொல்றதுக்கு ஹீரோயினும் ரெடியா இருக்காராம்... இருக்காராம்...

காலேஜ் பங்ஷன்ல கலந்துக்க போன ஹன்சி ஹீரோயின சமீபத்துல ரசிகருங்கு ரவுண்டு கட்டிட்டாங்களாம்... கட்டிட்டாங்களாம்... அதுக்குள்ள போலீஸ் வந்து நிலமைய சமாளிச்சிடுச்சாம். ஆனா யாரோ சிலர் ஹன்சு நடிகைய ரசிகருங்கு சீண்டி சிலுமிஷம் பண்ணிட்டாங்கனு புரளி கௌப்பறாங்களாம். இத கேள்விப்பட்ட நடிகை எந்த ரசிகரும் எங்கிட்ட சில்மிஷம் பண்ணல. என்னய பாக்கற ஆசைல சூழ்ந்துகிட்டாங்க மத்தபடி அசம்பாவிதம் எதுவும் நடக்கல. யாரோ இப்படி கௌப்பிவிட்டு குழப்ப பாக்கறாங்கன்னு நடிகை பீல் பண்றாராம்... பண்றாராம்...

நடிகைகளுக்கான சிசிஎல் வச்சா நான் அவங்க டீம்ல சேர்ந்திடுவேன் - விஷால் 'கலகல'!!!

Tuesday, February 21, 2012
செம உற்சாகத்திலிருக்கிறார்கள் சென்னை ரைனோஸ் அணியின் நட்சத்தி கிரிக்கெட் வீரர்கள். காரணம் சமீபத்தில் நடந்த சிசிஎல் இறுதிப்போட்டியில், ஒரு கிரிக்கெட் வீரரால் உருவாக்கப்பட்ட பெங்களூர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருப்பதுதான்.

சென்னை அணி முழுக்க முழுக்க நடிகர்களால் நிறைந்திருந்தது. இவர்களில் சிலர் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காதவர்கள்தான். என்றாலும் அந்தக் குறையை கிரிக்கெட் மூலம் தீர்த்துக் கொண்டனர்.

ஆனால் கர்நாடக அணியை உருவாக்கியவர் குண்டப்பா விஸ்வநாத். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர். இந்த அணியில் பாதிப்பேர்தான் நடிகர்கள். மீதிப் பேர் பெயருக்கு நடிகர்கள். முழுமையாக கிரிக்கெட்டுக்காக தயார் செய்யப்பட்டவர்கள்.

ஆனால் இறுதிப் போட்டியில் சென்னை அணி கலக்கிவிட்டது. இந்த வெற்றியில் சில சர்ச்சைகள் இருந்தாலும், சென்னை வீரர்கள் விளையாடிய விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

சென்னை அணிக்கு நடிகர் விஷால் கேப்டனாகவும், விக்ராந்த் துணை கேப்டனாகவும் இருந்தனர். நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஆர்யா, விஷ்ணு, ரமணா, சாந்தனு, சிவா, பிருத்வி ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். குறிப்பாக விக்ராந்த், சாந்தனு, ஜீவா, ஆர்யா, ரமணா, கேப்டன் விஷால் ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் போலவே மாறிவிட்டனர்.

வெற்றி பெற்ற சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு நடிகர்களான ஆர்யா, ஜீவா தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர் (விஜய் கொடுத்த பார்ட்டியில் கொஞ்சம் ஓவராயிடுச்சாம்!).

இறுதிப்போட்டியின் போது கையில் அடிபட்டு காயமடைந்த விஷ்ணுவும் வந்திருந்தார். அவரிடம் காயம் குறித்து கேட்டதற்கு; ''இடது முழங்கையில் எலும்பு முறிந்து போனதால், ஆபரேஷன் செய்திருக்கிறேன். தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்'' என்றார்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விக்ராந்த் பேசுகையில்; ''சிசிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியின் போது காயமடைந்த விஷ்ணு நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,'' என்றார்.

சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான நடிகர் விஷால் கூறுகையில், "நாங்க எல்லோரும் நடிகர்களா இல்லாம சிசிஎல் கிரிக்கெட் வீரர்களா உங்களை இங்க சந்திக்கிறோம். சிசிஎல் கோப்பையை ரெண்டாவது முறையா ஜெயிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இதுக்கு என்னோட டீம் பிளேயர்ஸ்தான் காரணம். அவங்களுக்கு எனது நன்றிகள்.

எல்லோரும் ஸ்கூல்ல, காலேஜ்ல கிரிகெட் விளையாடி இருப்போம். ஆனா புரபெஷனலா விளையாட ஆரம்பிச்ச பிறகு நாங்க நடிகர்களா இருப்பதை மறந்து வீரர்களா மாறிட்டோம். இந்தியாவில் உள்ள அத்தனை சினிமா உலகத்தினரையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வந்தது சிசிஎல்தான்.

விஷ்ணுவுக்கு அடிபட்டதை பார்த்துவிட்டு நிறைய பேர் எங்ககிட்ட வந்து 'இதெல்லாம் உங்களுக்கு தேவையா?'ன்னு கேட்டாங்க. ஆனா ரசிகர்களின் மத்தியில் விளையாடிய எங்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெருமையான விஷயம்னு... நடிப்பைத் தவிர எங்களிடம் கிரிக்கெட் திறமையும் இருக்குன்னு காட்ட வச்சதே இந்த சிசிஎல்தான்.

கிரிக்கெட் விளையாடிய ஒருமாதம் முழுக்க நாங்கள் நடிகர்கள் என்பதை மறந்து வீரர்களாகவே மாறி விட்டோம்.

எங்களுக்கும் கர்நாடக வீரர்களுக்கும் பிரச்சினை எதுவுமில்லை. கிரிக்கெட்டில் இது சகஜம்தான். கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். அதை அவர்களால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சிசிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றதற்கு காரணமே கர்நாடக அணி கேப்டன் சுதீப்தான்.

இறுதிப் போட்டி 45 நிமிடங்கள் லேட்டானதற்கு நாங்கள் காரணமில்லை. இரண்டு விமானங்களை தவறவிட்டிருந்தாலும் மூன்றாவது விமானம் பிடித்து சென்று விட்டோம். ஆனால் மைதானத்தில் 'டெக்னிக்கல் பால்ட்' ஏற்பட்டதால் அவர்கள் 45 நிமிடம் தாமதம் செய்தனார்.

இந்தப் போட்டியில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மறக்கமுடியாது. போட்டிகள் முடிந்து மூன்று நாள் கழித்து ஜீவா எனக்கு போன் செய்தார். 'மச்சி நான் நம்ம பாய்ஸை மிஸ் பண்றேண்டா. என்னால என் பேமிலில கூட சேர முடியல. ஒரு மாசம் விளையாடினது அப்படியே மனசுல இருக்குடா' என்றார். அடுத்த சில நாட்களில் நாங்களனைவரும் சந்தித்துக் கொண்டோம். இந்த அனுபவம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் வராது.

இந்த கிரிக்கெட்டிலும் பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருந்துச்சி. நாங்க ஒரு பக்கம் விளையாடி ஜெயிச்சிட்டோம்.

கோபப்பட்ட விஷ்ணு மனைவி..

எங்கள் அணியின் முக்கிய பிளேயர் விஷ்ணுவுக்கு அடிபட்டபோது, நான் மனிதத் தன்மையை மறந்து விட்டேன். அணியின் கேப்டன் என்ற முறையில் விஷ்ணுவிடம் சென்று 'எப்படி இருக்க? உன்னால பந்து போட முடியுமா? இடது கைலதான அடி பட்டிருக்கு? வலது கையாலதானே பந்து போட போற... முயற்சி பண்ணி பாரேன்' என்றேன். விஷ்ணுவின் மனைவி இதைக் கேட்டு கோபத்தின் எல்லைக்கே போனார்.

நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஏன்னா டீமுக்கு விஷ்ணு ஒரு முக்கியமான பிளேயர். விஷ்ணு 'என்னால முடியல'ன்னு சொல்லிகிட்டே மயக்கமாயிட்டான். அவனுக்கு பட்ட அடியை மனதில் வைத்துக் கொண்டு வெறியோடு விளையாடினோம். ஜெயிச்சோம்.

கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம்

அணியில் நிறைய மிஸ்பீல்ட். கேட்ச் மிஸ்ஸிங் இருந்துச்சி. அப்படி மிஸ் ஆகும் போதெல்லாம் அடிபட்ட விஷ்ணுவைக்காட்டி அவனை மாதிரி விளையாடணும். வெறியோடு விளையாடுங்கன்னு திட்டினேன். இனி சென்னை அணியோட 'டேக் லைன்' கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம்ங்கறதுதான்.

நடிகைகளுக்கான 'சிசிஎல்' வருமா?

நடிகைகளுக்கு சிசிஎல் வருமா தெரியல. ஒருவேளை 'விமென் சிசிஎல்' ஆரம்பிச்சா என் டீம் ஆட்களை கழட்டி விட்டுட்டு அவங்களோட சேர்ந்திடுவேன். அப்படி நடந்தலும் நடக்கலாம்," என்றார் விஷால்.

லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா திடீர் விலகல்!!!

Tuesday, February 21, 2012
லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா திடீரென்று விலகிவிட்டார். லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்தில் மாதவனு டன் இணைந்து நடித்தார் ஆர்யா. அடுத்து லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் ஆனதை தொடர்ந்து சரவணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆர்யாவிடம் புதுபட ஸ்கிரிப்டை சொன்னார். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண் டார். ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்திலிருந்து ஆர்யா விலகி விட்டார். இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, ‘‘இப்படத்தின் கதை எனக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் விலகி விட்டேன்’’ என்றார். அவர் விலகியதையடுத்து தெலுங்கு நடிகர் ராம் அந்த வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் இப்படம் உருவாக உள்ளது.

பாமக தலைவர் மகன் படத்திலிருந்து த்ரிஷா நீக்கப்பட்டாரா? - இயக்குநர் அகமது விளக்கம்!!!

Tuesday, February 21, 2012
புதிய படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கவிருந்த த்ரிஷா விலக்கப்பட்டதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் அகமது.

பாமக தலைவர் ஜி.கே. மணி மகன் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். இப்படத்திலிருந்து திரிஷாவை திடீரென்று நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

த்ரிஷாவின் முகம், தோற்றம் ஜீவாவை விட முதிர்ச்சியாக இருப்பதால், அவர் நீக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது த்ரிஷாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

அவர் இயக்கநரையும் தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு இந்த செய்தி பற்றிக் கூறி வருந்தினாராம்.

இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் அகமது அளித்துள்ள விளக்கம்:

ஜீவா ஜோடியாக நடிக்க திரிஷாவை அணுகி கதை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவர் தெலுங்கில் தாமு படத்தில் பிசியாக இருக்கிறார்.

எனவே மே மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளோம். திரிஷாவை படத்திலிருந்து நீக்கவில்லை. அவரை நீக்கியதாக வெளியான செய்தி வதந்திதான். என் படத்தில் திரிஷா தான் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். அவர் தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அந்த பார்மாலிட்டி முடிந்ததும் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

பிரபல நடிகர்களின் படங்கள் உள்பட 50 படங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது:சூர்யா படத்துக்கு பர்மிஷன் புதுமுகம் படத்துக்கு தடையா?

Tuesday, February 21, 2012
சூர்யா நடிக்கும் மாற்றான் ஷூட்டிங் நடக்கிறது. புதுமுகம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என்று ‘கோழி கூவுது’ பட குழுவினர் புகார் கூறினர். பெப்சி, தயாரிப்பாளர்கள் இடையேயான சம்பள பிரச்னையால் தமிழ் திரையுலகில் சுமார் 1 மாதமாக ஷூட்டிங் பணிகள் முடங்கி இருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்கள் உள்பட 50 படங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘மாற்றான்’ பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இது பல இயக்குனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது, ‘‘ஐதராபாத் பிலிம்சிட்டியில் ஷூட்டிங் நடத்தும்போது அங்குள்ள செட் மற்றும் கருவிகளை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது.

அதன்படிதான் இந்த ஷூட்டிங் நடக்கிறது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள எந்த டெக்னிஷியனையும் இந்த ஷூட்டிங்கில் நாங்கள் பயன்படுத்தவில்லை என்றனர். கடந்தவாரம் அஜீத்குமார் நடிக்கும் ‘பில்லா 2’ ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தபோது தொழிலாளர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசோக், ஸ்ரீஜா, ஜோதிலட்சுமி, ரோகிணி ஆகியோர் நடிக்கும் ‘கோழி கூவுது’ என்ற படத்தின் ஷூட்டிங்கை காரைக்குடியில் நடத்த இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் நாகராஜன் திட்டமிட்டனர். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் நேற்று முன்தினம் காரைக்குடி புறப்பட்டு சென்றனர்.

திடீரென்று ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி பட குழு கூறும்போது,‘‘ திரையுலகில் ஸ்டிரைக் நடப்பதால் ஷூட்டிங் தொடங்கக்கூடாது, அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்து அறிவிப்பு வந்தபிறகு ஷூட்டிங் நடத்துங்கள் என்று சங்க நிர்வாகிகள் சிலர் கூறினர்.இதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டோம்’’ என்றனர். தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் பெப்சி, தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடக்கிறது.

எந்த துறையாக இருந்தாலும் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் : காஜல் அகர்வால்...!!!

Tuesday, February 21, 2012
எந்த துறையாக இருந்தாலும் அதில் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுவாக எனக்கு போராட்ட குணம் ரொம்ப அதிகம். பள்ளி படிக்கும் போதே படிப்பாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் அதில் நான் தான் முதலில் வரவேண்டும் என்று நினைப்பேன். ஒருவேளை நான் தோற்றாலும், அடுத்த முறை அதில் வெற்றி பெறும் வரை தூங்க மாட்டேன், சினிமாவிலும் அப்படித்தான். இதுவே என்னுடைய வெற்றியின் ரகசியம். எந்த துறையாக இருந்தாலும் அதை இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் வருகிறது. அதில் எனக்கேற்ற கேரக்டரை தேர்வு செய்து நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

Tuesday, February 21, 2012
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அம்மா வேடங்களில் நடித்திருப்பவர் எஸ்.என். லட்சுமி. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற் றார். இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலைவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு விருதுநகர் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கார் மூலம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு தன்னை அடக்கம் செய்வதற்காகவே தனி இடம் வாங்கி வைத்திருக்கிறாராம். அந்த இடத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. 12 வயதில் நடிக்க வந்தவர் லட்சுமி. என்.எஸ்.கிருஷ்ணன். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.பாலசந்தர் நாடகங்களில் நடித்ததுடன் சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். 5 ஆயிரம் நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘சந்திரலேகா படத்தில் சிறுவேடத்தில் நடிக்க தொடங்கியவர், மாட்டுக்கார வேலன், சர்வர் சுந்தரம், சின்ன வாத்தியார், தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன் உள்பட 1,500 படங்களில் நடித்திருக்கிறார். பாக்தாத் திருடன் படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் இவர் டூப் இல்லாமல் நடித்ததாக அப்போது பரபரப்பு ஏற்பட் டது. சமீபகாலமாக டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலர்
அஞ்சலி செலுத்தினர்...

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.

பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.

தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1500. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது.

சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நாளை உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

நாடகங்களிலேயே அசத்தியவர்

ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார்.

நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.

எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது.

பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.

அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பூஜா!!!

Tuesday, February 21, 2012
சின்னதிரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நட்சத்திரங்களின் பட்டியல் ஏராளாம். சந்தானம், சஞ்சீவ், கல்யாணி, சிம்ரன், ஸ்னிக்தா, லேகா வாஷிங்டன் போன்றவர்கள் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் பூஜா. எஸ்.எஸ்., மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பூஜாவுக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இதுகுறித்து பூஜா நம்மிடம் பேசுகையில், நான் பல வருஷமா எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்து வருகிறேன். என்னைப்பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முன் வந்தனர். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். சினிமா என்றாலே ‌எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பல பெரிய இயக்குநர்கள் எல்லாம் கேட்டு மறுத்துவிட்டேன். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன். ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தின் பிற்பாதி முழுக்க என் கதை தான் வரும். மேலும் நான் சின்ன ரோல், பெரிய ரோல் என்று சொல்ல வரல, என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்துட்டு அங்க, இங்க கொஞ்சம் தப்பு இருக்கு என்று தோணுச்சு, அதனால் என் நடிப்பை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடிக்கணும்னு நானே உணர்ந்தேன். மேலும் இந்த படத்துல எல்லாருமே யூத், அதனால் படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுறாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன் என்றார்.

அப்படின்னா இனி நிறைய தமிழ் படங்களில் பூஜாவை பார்க்கலாம், ரசிக்கலாம்.

கிளிப்பிங்ஸ்!!! கிளிப்பிங்ஸ்!!! கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, February 21, 2012
3’ படத்துக்காக தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறிடி பாடல் ஹிட்டானது. இதையடுத்து இயக்குனர் ஐஸ்வர்யா ‘ஒய் திஸ் கொலவெறிடி’, ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற 2 தலைப்புகளை பதிவு செய்துள்ளார்.

* பாடலாசிரியர் தபுசங்கர் ‘வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்’ என்ற படம் மூலம் இயக்குனராகிறார்.

* சுவேதா மேனன் நடிக்க மோகன கிருஷ்ணன் இயக்குவதாக இருந்த கவர்ச்சி படம் பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டிருக்கிறது.

* காதலர் தினத்தன்று ஸ்ரேயா தங்கி இருந்த அறைக்கு வெளியே ரோஜாவை வைத்துவிட்டு அதில் ஒரு சீட்டு எழுதி வைத்திருந்தார் காஜல். காதலில் நம்பிக்கை இல்லாத உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என அதில் குறிப்பிட்டிருந்தது. இதைப்பார்த்துவிட்டு காஜல் அகர்வாலுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் ஸ்ரேயா.

* முனி, பில்லாவை தொடர்ந்து விஷாலின் சண்டக்கோழி இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் மே மாதம் ஷூட்டிங்.

கார்த்திகா ரகசிய திருமணம்?

Tuesday, February 21, 2012
தூத்துக்குடி' படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு 'பிறப்பு', 'ராமன் தேடிய சீதை', 'மதுரை சம்பவம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'அலையோடு விளையாடு' உள்பட இன்னும் சில படங்கள் வெளிவர வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து விடவே புதுக்கோட்டை அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அவரது அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் கோயிலில் ரகசியமாக திருமணம் நடந்ததாகவும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டதாகவும், தற்போது அவர் கணவர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது 'நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது. திருமணம் நடக்கவில்லை' என்றனர். கார்த்திகாவின் உறவினர்கள், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதையோ, அவர் சென்னைக்கு திரும்புவதையோ விரும்பவில்லை என்றும் அதனால்தான் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

கார்த்தி நடித்துள்ள சகுனி படம், ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் ரிலீஸ்

Tuesday, February 21, 2012
கார்த்தி நடித்துள்ள சகுனி படம், ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆக இருக்கிறது. புதுமுகம் சங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. கடந்த வாரமே இப்படம் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் இடையில் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவால், அதாவது பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் மட்டும் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சகுனி படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான்' உரிமை யாருக்கு?

Tuesday, February 21, 2012
ரஜினி நடிப்பில் ஒரு படம் பூஜை போடப்பட்டாலே அப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். 'கோச்சடையான்' படமும் அதில் இருந்து தப்பவில்லை. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். இப்படம் முழுவதுமே இந்தியாவில் முதன் முறையாக ஆழுவுஐழுþ ஊயீவுருசுநு வுநுஊர்þழுடுழுபுலு மூலம் தயாராக இருக்கிறது. படத்தில் நடிப்பவர்களின் கை, இடுப்பு, கால் உள்ளிட்டவைகளின் அசைவுகள் ஆழுவுஐழுþ ஊயீவுருசுநு செய்யப்படும். 'கோச்சடையான்' படத்திற்காக ரஜினியை தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவருக்கும் படப்பிடிப்பு முடித்துவிட்டார்கள். இறுதியாக ரஜினிக்கு எடுக்க இருக்கிறார்கள். எந்த ஏரியா உரிமை யாருக்கு என்ற போட்டி நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்குவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், டப்பிங் உரிமைக்கே 28 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்து இருக்கிறார். கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் என்று பார்த்தால் இப்போதே வியாபாரம் 100 கோடியைத் தொடும் போலிருக்கிறது. சூப்பர் ஸ்டார் படம்னா என்ன சும்மாவா?

பாலிவுட் படத்தில் சமீரா ரெட்டி திடீர் மாற்றம்!!!

Tuesday, February 21, 2012
பிரியதர்ஷன் படத்திலிருந்து சமீரா ரெட்டி திடீரென்று நீக்கப்பட்டார். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் பாலிவுட் படம் ‘தேஸ்’. அஜய் தேவ்கன், அனில் கபூர், இஷா குப்தா நடிக்கின்றனர். இப்படத்தில் குத்துபாடல் ஒன்றில் சமீரா ரெட்டி நடிப்பதாக இருந்தது. திடீரென்று அவர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இதுபற்றி மல்லிகா தரப்பில் கூறும்போது,‘தேஸ் படத்தில் மல்லிகாவை நடிக்க கேட்டிருப்பது உண்மைதான். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த வாரம்தான் ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக மல்லிகா, லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டு சென்றார். பாலிவுட் படம் நடிக்க முடிவானால் உடனே திரும்பிவிடுவார். மல்லிகாவின் முதல் முக்கியத்துவம் பாலிவுட் படங்களுக்குதான். அடுத்த முக்கியத்துவம் இயக்குனர், பேனரின் காம்பினேஷனுக்கு தருவார்’ என்றனர்.

டபுள் ஹீரோக்கள் கதை அதிகரிக்க வேண்டும் : அர்ஜுன் பேட்டி!!!

Tuesday, February 21, 2012
நடிகர் அர்ஜுன் நடித்துள்ள கன்னட படம் ‘பிரதாப்’. இப்படம் பெர்லின் பட விழாவில் திரையிடப்படுகிறது. இதுபற்றி அர்ஜுன் கூறும்போது, ‘‘பெர்லின் பட விழாவில் ஷாருக்கான் நடித்த டான் 2 படம் திரையிடப்படுகிறது. அதே விழாவில் பிரதாப் படமும் திரையிடப்படுவது சந்தோஷம். பாலிவுட்டில் டபுள் ஹீரோக்கள் சப்ஜெக்ட் படங்கள் நிறைய வருகின்றன. தமிழில் அதுபோல் நிறைய வர வேண்டும். ஏற்கனவே கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அஜீத்துடன் ‘மங்காத்தா’ படத்தில் நடித்தேன். ஆக்ஷன் படங்களில் ஹீரோக்கள் ரிஸ்க் அதிகம் எடுக்க வேண்டும். அதுவும் காட்டுப்பகுதிகளில் கதை அமைந்துவிட்டால் கூடுதல் ரிஸ்க். சமீபத்தில் டினு வர்மா இயக்கத்தில் நான் நடித்த ‘காட்டுப்புலி’ முழுக்க காட்டு பகுதிகளில் எடுக்கப்பட்டது. டாக்டராக நான் நடித்தேன். ஆனால் காட்டுப்பகுதிக்குள் கதை நகர்ந்ததும் அதுவொரு ஆக்ஷன் கேரக்டராக மாறிவிடும். தமிழ், இந்தி, தெலுங்கு 3 மொழிகளில் உருவான இப்படத்தில் 3 ஜோடிகள் காட்டுவாசிகளிடம் சிக்கி எப்படி அவதிப்படுகின்றனர் என்பதை உள்ளடக்கிய கதை’’ என்றார்.

சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்...!!!

Tuesday, February 21, 2012
நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன். இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.