Saturday, March 3, 2012

தயாரிப்புகளுக்கு பிரஷர் தரும் ஹீரோ!!!

Saturday, March 3, 2012
ஆஸ்கர் ஜெயிச்ச ரசூலான ஒலிப்பதிவு இயக்கம், ‘த்ரிÕ படத்துல ஒர்க் பண்றாரு. சவுண்டெல்லாம் ரியலா இருக்கணும்னு தனிபட்ஜெட் போட்டுக்கொடுத்தவரு, எங்கெல்லாம் ஷூட்டிங் நடந்துச்சோ அங்கெல்லாம் டீமை அழைச்சிட்டுபோய் ரெக்கார்டிங் பண்றாராம்... பண்றாராம்... ஒரு காட்சியில நாய் குலைக்கிற சவுண்ட் வந்தப்போ, ஷூட்டிங் நடந்த அதே இடத்துக்கு போயிட்டாராம். அங்கே நாயை பிடிச்சி வந்து குலைக்க வச்சாங¢களாம்... வச்சாங்களாம்...

சித்தார்த்தமான ஆக்டரு கோலிவுட்ல இடம் பிடிக்கணும்னு போராடுறாராம்... போராடுறாராம்... ஆனா வாய்ப்பு வரலையாம். மறுபடியும் டோலிவுட்தான் கைகொடுக்குதாம். ஆனாலும் முயற்சியை கைவிடாம தனக்கு வர்ற டோலிவுட் படங்களை, Ôதமிழ்லேயும் எடுங்க நல்ல பிஸ்னஸ் இருக்குன்Õனு சொல்லி தயாரிப்புக்கு பிரஷர் கொடுக்க¤றாராம்... கொடுக¢கிறாராம்...

ரன் ஹீரோக்கும் லிங்க இயக்கத்துக்கும் கோலிவுட்ல இருக்க¤ற அண்டர்ஸ்டாண்டிங் பாலிவுட்டுக்கு ஒத்துவரலையாம்... வரலையாம்... கோலிவுட்ல இயக்க¤ன ‘ஹன்ட்Õ படத்தை பாலிவுட்ல இயக்குறதுக்கு இயக்கம் முடிவு பண்ண¤னாராம். கோலிவுட்ல நடிச்ச அதே வேஷத்துல ரீமேக்லயும் நடிக்கணும்னு நடிகர்கிட்ட கேட்டனுப்பினராம். அவரோ ‘இப்போதைக்கு என்னால நடிக்க முடியாது. முட்டில பட்டிருக்கற அடிக்கு முதல்ல டிரீட்மென்ட் எடுக்கணும். அதுக்கப்ப¤றகுதான் படமெல்லாம்Õனு சொல்லி மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...

கேவி ஆனந்திடம் கதை கேட்டார் ரஜினி?.

Saturday, March 3, 2012
இப்போதெல்லாம் ரஜினி நடிக்கிறார் என ஒரு படத்தின் செய்தி வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளறும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த யூகங்கள் வந்துவிடுகின்றன.

சுல்தானில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ராணா பற்றிய செய்தி வந்தது. பின்னர் அறிவிப்பாக மாறியது.

ராணா படம் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், கோச்சடையான் அறிவிப்பு வந்தது.

கோச்சடையான் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஷங்கர் - ரஜினி படம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அட, இப்போது இன்னும் ஒரு படம் குறித்த வதந்தி.

இந்த முறை, ரஜினியின் வழக்கமான இயக்குநர்கள் இல்லை. இது வேற செட்டப்.

அயன், கோ இயக்குநரும், சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்திடம் ரஜினி கதை கேட்டுவிட்டார், ஈராஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது என்றெல்லாம் கொளுத்திப் போட்டுவிட்டனர்.

ஆர்வத்தோடு படித்த ரசிகர்கள், அடுத்து வதந்திக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்!

இன்டர்நெட்டில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட சினேகா உல்லால்!!!

Saturday, March 03, 2012
இன்டர்நெட்டில் தனது படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் சினேகா உல்லால். ‘என்னை தெரியுமாÕ படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்க இருந்தார். பின் திடீரென படத்திலிருந்து விலகினார். தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது படு கவர்ச்சியான வீடியோ ஆல்பத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். படுக்கையில் மெல்லிய ஆடை அணிந்து அவர் படுத்து உருளும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது: ஐதராபாத்தில் மழை தொடங்கி இருப்பதால் பட ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. இதனால் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் வீடியோ ஆல்பம் தயாரிக்கலாம் என்று எனது புகைப்பட நிபுணர் ஆலோசனை கூறினார். இதையடுத்து கவர்ச்சி வீடியோ ஆல்பத்தில் நடித்தேன். இதை வெளியிடும் எண்ணம் இல்லை. ஆனாலும் புகைப்பட நண்பர் இதை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார். வரவேற்பு நன்றாக இருக்கிறது. முதுகில் அடிபட்டிருந்ததால் ‘வானம்Õ படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதே போல் விஷாலுடன் சமரன் படத்துக்காக வந்த வாய்ப்பும் ஏற்க முடியவில்லை. இந்த ஆண்டு தமிழில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க உள்ளேன். தனுஷுடன் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதேபோல் ஜீவா, ஜெயம் ரவியுடனும் நடிக்க ஆசை. இவ்வாறு சினேகா உல்லால் கூறினார்.

பரீட்சை நேரம்... பாஸாகுமா அரவான்?.

Saturday, March 03, 2012
இந்த வாரம் கோடம்பாக்கத்தில் அரவான், கொண்டான் கொடுத்தான் மற்றும் யார் என மூன்று படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகத் திகழ்வது வசந்தபாலனின் அரவான். வரலாற்றுப் படம்.

வீ சேகரின் உதவி இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் கொண்டான் கொடுத்தான். வீ சேகர் பாணியிலான கிராமத்துக் குடும்பக் கதை.

மூன்றாவதாக வரும் 'யார்' ஒரு டப்பிங் த்ரில்லர் படம்.

அரவானுக்கு எந்த வகையிலும் போட்டியைத் தராத படங்கள் மற்ற இரண்டும். ஆனால் அரவான் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை, பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுதான். மற்ற வகுப்புகளுக்கும் கூட இன்னும் சில தினங்களில் பரீட்சே தொடங்கிவிடும். எனவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டுள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேநேரம், வரும் கோடையில் பெரிய படங்கள் வரிசையாக களமிறங்கக் காத்துள்ளன. அந்தப் போட்டியில் சிக்காமல், தனித்து நிற்க இந்த மார்ச் முதல்வார ரிலீஸ் உதவும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் கருதுகிறார்கள்.

பரீட்சையில், அரவான் பாஸாகிவிடுவானா... பார்க்கலாம்!

ஹாலிவுட் பாணியில் நைஜீரியாவில் சிங்கம் 2 !!!

Saturday, March 3, 2012
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் ‘பில்லா 2’. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து ‘பில்லா 2’ உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தென்ஆப்ரிக்கா, நைஜீரியாவில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஹரி.

அசத்தும் சந்தானம்-சிம்பு கூட்டணி!!!

Saturday, March 3, 2012
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. படத்திற்கு ஹீரோவாக 'சிம்பு' நடிக்கிறார். இந்த படம் காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதால், படத்தில் சந்தானம் நடிக்க உடனே கொண்டது படக்குழு. ஏற்கனவே சந்தானம்-சிம்பு கூட்டணி, 'வெற்றி கூட்டணி' என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்தில் தப்பினார்-வித்யா பாலன்!:-சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன் வித்யாபாலன்!

Saturday, March 3, 2012
கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார்.
இந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகை வித்யா பாலன். இவர் சமீபத்தில் வெளியான, "டர்ட்டி பிக்சர்' படத்தில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, அவர் தற்போது, "கஹானி' என்ற இந்திப் படத்தில், கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்தது.

அதில், நடிகை வித்யா பாலன் பிளாட்பாரத்தில் பின்னோக்கி செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த எடை பார்க்கும் மெஷினில் மோதினார். இதனால், நிலை தடுமாறிய அவர், பிளாட்பாரத்தில் இருந்து, கீழே இருந்த ரயில் பாதையில் விழப் போனார்.
அவருக்கு அருகிலேயே, கேமராவுக்கு பின் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த, இயக்குனர் சுஜோய் கோஷ், வேகமாக ஓடிச் சென்று, கீழே விழாமல் வித்யாவை தாங்கிப் பிடித்தார். இதனால், வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயில் பாதையில் விழுந்திருந்தால், அவர் தலையில் பலத்த அடிபட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் அல்லது அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தாலும், விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன் வித்யாபாலன்!!!

வித்யாபாலன் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

அர்ஜுன் படத்தில் மாற்றுத்திறன் சிறுவன்!!!

Saturday, March 3, 2012
அர்ஜுன் மகனாக காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுவன் நடிக்கிறான். இப்படம் குறித்து இயக்குனர் மனோஜ் சதி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் அர்ஜுன் நடிக்கும் படம் ‘பிரசாத்’. சாதாரண மெக்கானிக்கான தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் வளர்ந்து ஆளாகி குடும்ப கஷ்டத்தை போக்குவான் என்று எண்ணுகிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. மாற்று திறனாளியாக பிறக்கும் அக்குழந்தையால் வாய் பேச முடியாது. காது கேட்காது. அதன்பிறகு அர்ஜுன் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். அர்ஜுன் மகனாக சிறுவன் சங்கல்ப் நடிக்கிறார். இந்த சிறுவன் உண்மையிலேயே மாற்று திறனாளி. காது கேட்காது, வாய்பேச முடியாது. அர்ஜுன் என்றதும் ஆக்ஷன்தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் துளிகூட சண்டை காட்சி கிடையாது, டூயட்டும் கிடையாது. ஹீரோயின் மாதுரி பட்டாச்சார்யா. இசை இளையராஜா. தயாரிப்பு அசோக் கேணி.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, March 3, 2012
* ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்‘ படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கும் கார்த்திகா தெலுங்கில் தம்மு என்ற படத்தில் படுகிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.

* ‘எம்குமரன் சன் ஆப் மகாலட்சுமி‘ படத்தில் பாக்ஸர் வேடத்தில் நடித்த ஜெயம் ரவி மீண்டும் பூலோகம் என்ற படத்தில் பாக்ஸராக நடிக்கிறார்.

* பாலிவுட், கோலிவுட் ஹீரோக்கள் பாணியில் முதன்முறையாக குளிர்பான விளம்பர கம்பெனி அம்பாசிடர் ஆகி இருக்கிறார் டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு.

* ‘மறந்தேன் மன்னித்தேன்‘ படத்தில் ஆதி, சந்தீப், லட்சுமி மன்சூவுடன் நடிக்கிறார் டாப்ஸி.

* ‘மவுனகுரு‘ படம் இயக்கிய சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி, ஜீவா இருவரில் ஒருவர் நடிக்க பேச்சு நடக்கிறது.

* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பின்னணி பாடுகிறார் விஜய்.

* ‘வெனஸ்டே இந்தி படம் இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கும் புதிய படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். அவருக்கு ஜோடி அக்ஷய் குமார்.

* இயக்குனர் பி.வாசு அடுத்து புனித் ராஜ்குமார் நடிக்கும் கன்னட படத்தை இயக்க உள்ளார்.

* ஷேக்ஸ்பியரின் மெக்பத், தமிழ் நாடகமாக நடத்த உள¢ளனர். இதில் நடிக்கிறார் ‘அரவான் ஆதி.

* லிங்குசாமி இயக்கும் வேட்டை இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூர் நடிக்கிறார். இது ஆர்யா நடித்த கதாபாத்திரம்.