Wednesday, March 7, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்!!!

Wednesday, March 7, 2012
59வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்தமுறை தமிழுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.

FILEஇதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. குமாரராஜா தியாகராஜனுக்கு நமது மனப்பூர்வமான பாராட்டுகள். மேலும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதுக்கும் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரவீண் இந்த விருதைப் பெறுகிறார்.

சிறந்தப் பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான விருதை சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை வென்றுள்ளது. பாஸ்கர் சக்தியின் கதையைதான் சுசீந்திரன் அதே பெய‌ரில் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறுகிறார்.

சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான பி‌ரிவில் வாகை சூட வா விருது வென்றிருக்கிறது. மற்ற விருதுகள் மற்றும் ப‌ரிசுத் தொகை...

Best Feature Film: Shared by Deool (Marathi) and Byari (Byari)

Deool
Producer: Abhijeet Gholap
Director : Umesh VinayakKulkarni
Byari (Byari)
Producer: T.H. AlthafHussain
Director :Suveeran
SwarnaKamal: Rs.2,50,000/-

Indira Gandhi Award For Best Debut Film of a Director: Aaranyakandam (Tamil)

Producer:S.P.Charan
Director :Kumararaja Thiagarajan
SwarnaKamal: Rs.1,25,000/

Award for Best Popular Film Providing Wholesome Entertainment: AzhagarsamiyinKuthirai (Tamil)
Producer: P. Madan
Director :Suseentharan
SwarnaKamal: Rs.2,00,000/-

Best Children’s Film: Chillar Party(Hindi)
Producer: UTV Software Communications Ltd
Director : VikasBahl & Nitesh Tiwari
SwarnaKamal: Rs.1,50,000/-

Best Direction: GurvinderSingh for Anhe Ghorey Da Daan (Punjabi)
SwarnaKamal: Rs. 2,50,000/-

Best Actor: Girish Kulkarni for Deool (Marathi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Actress: Vidya Balan for The Dirty Picture (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Supporting Actress: Leishangthem Tonthoingambi Devi for Phijigee Mani(Manipuri)
Rajat Kamal: Rs.50,000/-

Best Child Artist (Shared): Partho Gupte for Stanley ka Dabba (Hindi)
Irrfan Khan, Sanath Menon, Rohan Grover, Naman Jain, Aarav Khanna, Vishesh Tiwari, ChinmaiChandranshuh, Vedant Desai, Divij Handa and Shriya Sharma for Chillar Party(Hindi)
Rajat Kamal: Rs.50,000/-

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?.!!!

Wednesday,March,07,2012
கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!!!

Wednesday,March,07,2012
செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!!!

Wednesday,March,07,2012
தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.

தேசிய விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் கிரீஷ் குல்கர்னி, சிறந்த நடிகை வித்யா பாலன்!!!

Wednesday,March,07,2012
டெல்லி::59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தியோல் மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாகை சூட வாவுக்கு விருது

சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அழகர்சாமியின்குதிரை படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்ஷன் படமான ரா ஒன்னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' (I Am) இந்திப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

மேலும் விவரங்கள் தொடரும்...

விருது பெறாதவர்களும் திறமையானவர்கள்தான் - டாப்ஸி!!!

Wednesday,March,07,2012
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் டாப்ஸி. தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். டாப்ஸிக்கு பெரிய விருதுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருப்பதாக கிசுகிசு பரவியது.

இது பற்றி டாப்ஸியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- விருது கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. விருதுகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதற்காக விருது பெறாத நடிகர், நடிகைகள் எல்லோரும் திறமைசாலிகள் அல்ல என்று கூற முடியாது.

எனது நடிப்பை பார்த்து என்னுடைய தாய் பாராட்டினாலே போதும் அது ஆஸ்காரை விட உயர்ந்த விருதாக இருக்கும். விருதுகளை எதிர்பார்த்து நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன்.

திருமணம் எப்போது? -நமீதா பேட்டி!!!

Wednesday,March,07,2012
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் நமீதா. தற்போது தமிழில் படங்கள் இல்லை. நமீதா அளித்த பேட்டி வருமாறு:-

பில்லா படத்தில் நான் நடித்த கேரக்டருக்கு தொடர்ந்து பாராட்டுகள் வருகிறது. மீண்டும் அது போல் நடிப்பீர்களா? என்று கேட்கின்றனர். விரைவில் அதுபோல் நிகழலாம். எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. பெற்றோர் பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்ததும் நடக்கும்.

எனக்கு மாப்பிள்ளையாக வரக்கூடியவர் உயரமாக இருக்க வேண்டும். கறுப்பாக இருக்கலாம். அழகானவராக, பிசினஸ்மேனாக, என் மேல் அன்பு செலுத்துவதுவராக இனிமையானவராக இருக்க வேண்டும். எனது அழகு ரகசியம் யோகாவும், தியானமும் தான். 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே அழகு வந்து விடும்.

இவ்வாறு நமீதா கூறினார்.

வேறு பெண் பார்த்ததால் விரக்தி அடைந்தார்: வினோத்குமார் தற்கொலைக்கு பெற்றோர்தான் காரணம்-நடிகை அல்போன்சா தம்பி ராபர்ட் பேட்டி!

Wednesday,March,07,2012
நடிகை அல்போன்சா தம்பி ராபர்ட். இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆவார். அல்போன்சா காதலர் வினோத்குமாரை இவர்தான் அடித்து கொன்றார் என்று பெற்றோர் பழி சுமத்தினர். ஆனால் ராபர்ட்டுக்கு இதில் தொடர்பு இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வினோத் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ராபர்ட் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வினோத்குமார் சாவுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வேலை செய்ய ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கிறேன். வினோத்குமாரை நாங்கள் சாய் என்று அழைப்போம். என் அக்காள் அல்போன்சாவும் அவரும் தீவிரமாக காதலித்தனர்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். குடிப்பழக்கத்தின் தீமையை வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். அதில் பாடல், இசை, நடனம் எல்லாவற்றையும் நானே செய்தேன். அப்படத்தில் வினோத்குமாரை நடிக்க வைக்கும்படி அல்போன்சா என்னிடம் வற்புறுத்தினார்.

வினோத்குமார் ஏற்கனவே கவசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் நின்று போனது. இந்த ஆல்பத்தில் நடித்தால் மீண்டும் சினிமா சான்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று அல்போன்சா நிர்ப்பந்தித்தாள். நானும் அதை ஏற்று வினோத்குமாரை நடிக்க வைத்தேன். அவர் ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லை.

எல்லா செலவையும் நானே பார்த்துக் கொண்டேன். நான் அந்த ஆல்பத்தில் நடிக்காமல் அல்போன்சா சொன்னதற்காக வினோத்குமாரும் நமக்கு சொந்தமாகி விட்டாரே என்று அவருக்கு விட்டு கொடுத்தேன். அந்த அளவுக்கு எல்லோரும் அவர் மேல் பாசம் வைத்திருந்தோம்.

வினோத்குமார் சாவதற்கு முந்தைய நாள் அல்போன்சா துபாயில் இருந்து திரும்பி வந்தார். நான் அவர் வீட்டுக்கு போகவில்லை. மறுநாள் 5-ந்தேதி அதிகாலை எனக்கு வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போன் வந்தது. பதறியடித்து ஓடினேன். அங்கு வந்த வினோத்குமாரின் தந்தை என்னை பார்த்து நீதான் அடித்து கொலை செய்து விட்டாய் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கத்தினார்.

அல்போன்சா-வினோத்குமார் குடியிருந்த பிளாட்டை சுற்றி நிறைய கேமிராக்கள் உள்ளன. லிப்டிலும் கேமிரா உள்ளது. 5 நாட்களாக அந்த வீட்டுக்கே நான் வரவில்லை என்று அந்த கேமிராக்கள் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது. அதோடு போனிலும் பேசவில்லை என்று செல்போனை ஆய்வு செய்து போலீசார் தெரிந்து கொண்டனர்.

எனது டான்ஸ் பள்ளியில் ஐந்து ஆண்டுக்கு முன் வினோத்குமார் நடனம் கற்க்க வந்தார். கதாநாயகனாக நடிக்க சான்ஸ் தேடிட்டு இருக்கேன் என்றார். சில மாதங்கள் என்னிடம் நடனம் கற்றார். பிறகு எனக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. உடனே டான்ஸ் ஸ்கூலை மூடி விட்டேன். அப்புறம் அவரை சந்திக்கவே இல்லை.

கவசம் படத்தில் வினோத்குமார் நடித்தபோது, அப்படத்துக்கு எனது அண்ணன் மனோஜ் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். அவர் மூலம் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமானார். ஒருநாள் வேளாங்கண்ணி கோவிலுக்கு வேனில் நாங்கள் போனோம். அப்போது நானும் வருகிறேன் என்று வேனில் வந்து ஏறிக் கொண்டார். அந்த பயணத்தில்தான் அல்போன்சாவுக்கும் வினோத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. எனது பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அக்காள் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவர் துபாயில் இருக்கிறார். அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு வினோத்குமாரை மணப்பதாக கூறி இருந்தார். வினோத்குமார் தற்கொலை செய்த அன்று இரவு 12 மணிக்கு ஊரில் இருந்து அவரது அம்மா போனில் பேசி உள்ளார். அவர் போன் வந்ததில் இருந்து டென்ஷனாக இருந்துள்ளார்.

அல்போன்சாவிடம் நான், நீ குழந்தை மூவரும் செத்து போகலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அல்போன்சா லூஸ் மாதிரி பேசாதே இப்பதான் சந்தோஷமாய் இருக்கோம் நாம் வாழனும் என்று கூறியுள்ளார். பெற்றோர் ஊரில் வினோத்குமாருக்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்யா விட்டால் செத்துப்போவேன் என்று அவரது தாய் சொல்லி இருக்கலாம். வினோத்குமார் அம்மா செல்லம். தாய் சொல்வதை மீற முடியாமலும் அல்போன்சாவை மறக்க முடியாமலும் தவித்துள்ளார். இதுவே தற்கொலை முடிவுக்கு தூண்டியுள்ளது.

பாத்ரூம் போய்ட்டு வர்றேன் என்று சொல்லிப்போனவர் நேராக இன்னொரு அறைக்கு போய் தூக்கில் தொங்கி விட்டார். அவர் சாவதற்கு முன் சந்தோஷமாக இருந்துள்ளார். குழந்தையுடனும் அக்காள் உடனும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தது ஐ பேடில் பதிவாகி உள்ளது.

துண்டு கட்டிய கோலத்தில் அக்கா வெளியே அலறியப்படி வந்தது கேமிராவிலும் பதிவாகி உள்ளது. அக்காளும் வினோத்குமாரும் நல்லா இருந்தால் போதும் என்றுதான் எல்லோரும் ஆசைப்பட்டோம்.

இவ்வாறு ராபர்ட் கூறினார்.

சிங்கப்பூரில் நடந்த சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழாவில் மங்காத்தா படம் 5 விருதுகளை வென்றது!

Wednesday,March,07,2012
சிங்கப்பூரில் நடந்த சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழாவில் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் 5 விருதுகளை வென்று அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி ஆகிய 5 விருது குவித்துள்ளது மங்காத்தா திரைப்படம் என்று வெங்கட்பிரபு தனது பிளாக் பக்கத்தில் போட்டுள்ளார்.

இப்படம் இத்தனை விருதுகளைப் பெற்றதற்கு, இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு மிக ஆர்வத்தோடு நடித்துக் கொடுத்த தல அஜீத்திற்கும், யுவன் சங்கர் ராஜாவிற்கும் நன்றியையும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!!

Wednesday,March,07,2012
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

அனுஷ்காவுடன் நடிக்க ஆசையா இருக்கு: ஜெயம் ரவி!!!

Wednesday,March,07,2012
நடிகர் ஜெயம் ரவிக்கு உயரமான நடிகை அனுஷ்காவுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை ஜெனிலியாவாம்.

ஜெயம் ரவி அமீரின் ஆதி பகவன் படத்திலும் பூலோகம் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர அவர் முதன் முதலாக விளம்பரம் படம் ஒன்றில் நடிக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த ரவி கூறியதாவது,

எனது தந்தை மோகனும், அண்ணன் ராஜாவும் நான் சினிமாத்துறையில் வளர உறுதுணையாக இருக்கின்றனர். கோலிவுட்டில் எனக்கு மிகவும் பொருத்தமான ஹீரோயின் என்றால் அது ஜெனிலியா தான். இருப்பினும் அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் சேர்ந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவுடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரவிக்கும் அந்த ஆசை வந்துள்ளது. ஆனால் அனுஷ்காவோ இந்த ஆண்டு கால்ஷீட் ஃபுல்லாக வைத்துள்ளார். அதனால் ரவி அனுஷ்காவுக்காக காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

கோச்சடையான்... ரஜினி அதிருப்தியா?.

Wednesday,March,07,2012
எந்திரனுக்குப் பிறகு ரஜினியின் படங்கள் குறித்து வருகிற செய்திகளில் எது உண்மை எது வதந்தி என்பதே தெரியாத நிலை வந்துவிட்டது.

ராணா படத்துக்கு மட்டும்தான் எல்லாமே அதிகாரப்பூர்வமாக நடந்தது. ரஜினியே பங்கேற்றார். மற்ற படங்கள் குறித்து வரும் செய்திகளை இதுவரை அவர் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையில்தான், கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷன் படம் எடுப்பது ரஜினியை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனிமேஷன் படத்தை விட, நிஜமான படத்தில் நடிக்க அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை அவரது குடும்ப பிஆர்ஓவான ரியாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள விளக்கம்:

ரஜினி சார் அதிருப்தி என்று வரும் செய்திகள் எல்லாமே பொய்யானவை. மார்ச் 15-ம் தேதியிலிருந்து கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த செய்திகளுக்கு அதுதான் சரியான விளக்கமாக இருக்கும். இந்தப் படத்தில் நடிப்பதில் ரஜினி சார் ஆர்வமாக உள்ளார்," என்றார்.

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகை அல்போன்சா: விசாரணை நடத்துவதில் போலீசுக்கு சிக்கல்!!!

Wednesday, March 07, 2012
விருகம்பாக்கம்::நடிகை அல்போன்சா தொடர்ந்து இரண்டு நாளாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நிலையில், அவரது காதலன் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை மேற்கொள்ள முடியாமல், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை அல்போன்சா, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். அவரது காதலர் வினோத்குமாரும், அதே வீட்டிலேயே தங்கினார். கடந்த 4ம் தேதி நள்ளிரவு, வினோத்குமார் மர்மமான முறையில் இறந்தார்.

தற்கொலை என உறுதி: வினோத்குமார் தூக்குப் போட்டு இறந்ததாக, அல்போன்சா தரப்பில் கூறிய நிலையில், வினோத்குமாரை கொலை செய்து விட்டதாக, அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதனால், வினோத்குமார் இறப்பில் மர்மம் நீடித்தது. இந்நிலையில், வினோத்குமாரின் உடல் நேற்று முன்தினம், பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகை: தொடர்ந்து, இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவிலே, அல்போன்சா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க நெருங்கிய உறவினர்களைக் கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல் நலம் பெற்று வருவதாக, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறினர். மருத்துவமனையில் அல்போன்சாவை சந்திப்பதற்காக, தாயார் ஓமனா, மகள் ஆலியா மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர்.

தந்தையிடம் விசாரணை: அல்போன்சா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விருகம்பாக்கம் போலீசார் அல்போன்சாவின் தந்தை அந்தோணியிடம், நேற்று மாலை விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை தொடரும் எனவும், நடிகை அல்போன்சா உடல் நலம் சரியானவுடன், அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போதுதான் அங்கு நடந்தவை பற்றிய உண்மைகள் வெளிவரும் என போலீசார் கூறினர்.

சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் - சூர்யா பேச்சு!!!

Wednesday, March 07, 2012
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. “நேருக்கு நேர்” படத்தில் நடித்த போது எனக்கு ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால் தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, சிபிராஜ், உதய நிதி ஸ்டாலின், விஷ்ணு, சந்தானம், நாயகி ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, பேரரசு, ராஜேஷ், தயாரிப்பாளர் துரை தயாநிதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.