Monday, April 23, 2012

வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?.!!!

Monday, April, 23, 2012
தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும். ஹீரோவாக நடிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

உள்ளத்தை அள்ளித்தா மாதிரியான படம்! கலகலப்பு பற்றி சுந்தர் சி.,!!!

Monday, April, 23, 2012
கலகலப்பு படம் உள்ளத்தை அள்ளித்தா படம் மாதிரியான முழுக்க முழுக்க நகைச்சுவை படம் என்று டைரக்டர் சுந்தர் சி., கூறினார். கலகலப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய டைரக்டர் சுந்தர் சி., இது நான் இயக்குகிற 25வது படம். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. கதை எழுதும்போதே யார் - யார் நடிக்க வேண்டும்? என்பதை மனதில் வைத்துதான் எழுதினேன். இதற்கு முன்பு நான் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா பாணியில், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கும்பகோணத்தில், 1920ம் வருடம் முதல் இருந்து வரும் மசாலா கபே என்ற ஹோட்டலை பற்றிய கதை. ஒரு காலத்தில், ஓஹோ என்று பிரபலமாக இருந்த அந்த ஹோட்டல், பிற்காலத்தில் டல் அடிக்கிறது. தாத்தா காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அந்த ஹோட்டலை பேரன்கள் விமல், சிவா இருவரும் மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள். இதில் அஞ்சலி சுகாதார ஆய்வாளராகவும், ஓவியா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். அஞ்சலியின் மாமாவாக சந்தானம் நடிக்கிறார். இதற்கு முன்பு 2 கதாநாயகிகளை வைத்து நான் சில படங்களை இயக்கியிருக்கிறேன். அவர்களை வைத்து படத்தை முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகி விடும். உடையலங்காரத்தில் இருந்து எல்லா விஷயத்திலும் இரண்டு கதாநாயகிகளும் சண்டை போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு இடையே பஞ்சாயத்து பண்ணுவதற்கே நேரம் சரியாக இருக்கும்.

ஆனால் அஞ்சலியும், ஓவியாவும் அதற்கு நேர் மாறாக இருந்தார்கள். இரண்டு பேரும் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள். ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு ஒற்றுமை. இருவரும் ஒருவரையொருவர், டார்லிங்... டார்லிங்... என்றுதான் அழைப்பார்கள். இதேபோல் விமலும், சிவாவும் மாமா... மச்சான்... என்று அழைக்கும் அளவுக்கு நட்பாகிக விட்டார்கள், என்றார்.

சினிமா இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் விதத்தில் பேசிய ஜெயம் ரவி!!!

Monday, April, 23, 2012
ஆந்திராவில் பிரபலமான “பவ்யா சிமெண்ட்ஸை’ சென்னையில் அறிமுகம் செய்யும் விழா சமீபத்தில் சென்னை வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பவ்யா சிமெண்ட்டை அறிமுகம் செய்து வைத்த ஜெயம் ரவி, பேசிய பேச்சு நம் திரைப்பட இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் விதத்தில் இருந்ததுதான் ஹைலைட்!

இனி ஜெயம்ரவி பேசுகிறார். நான்தான் பவ்யமான ஆளுன்னு பார்த்தால் பவ்யா சிமெண்ட் மேனேஜிங் டைரக்டர் ஆனந்த பிரசாத்தும் பவ்யா சிமெண்ட்டை தமிழகத்தில் வாங்கி விற்பனை செய்யவுள்ள பார்ரூன் நிறுவன தலைவரும் அம்பிகா டிரேடிங் எண்டர்பிரைசஸ் தலைவருமான ஜெ. ராமஞ்சிநேயலு மற்றும் இயக்குநர் சி.வி.ராவ் உள்ளிட்டவர்கள் என்னைவிட பவ்யம் காட்டுகின்றனர். பவ்யா சிமெண்ட்டை தமிழகத்திற்கு தர இருப்பவர்கள் விவசாய குடும்பத்தில் இரந்து வந்தவர்கள் என்பதால்தான் நான் இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன்.

என்னை வைத்து “பேராண்மை’ படம் தந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சொல்வார்., இந்தியாவின் தரிசு நிலங்களை விளைச்சலுக்கு ஏற்ற நிலங்களாக விவசாயிகள் முயற்சி செய்து மாற்றினால், உலகத்திற்கே இந்தியாவால் சோறு போட முடியும் என்பார். அதுமாதிரி ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களின் சிமெண்ட் தான் இந்த பவ்யா சிமெண்ட் என்பதால்தான் இங்கு வந்தேன். நான் இங்கு வந்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அது சிமெண்டுக்கும் சினிமாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இரண்டிலும் கலவை நன்றாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும்! சமீபமாக கலவை சரியில்லாமல் வரும் சினிமாக்கள் மாதிரி இல்லாமல் பவ்யா சிமெண்ட் சரியான கலவையில் உறுதியாக இருக்குமென்று நம்புகிறேன்! தமிழக மக்களும் நம்பட்டும்!! - என்று சிலேடையாக பேசி இன்றைய சினிமா இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் அளவிற்கு பேசினார்

இனி கோலிவுட்டில் அதிக கவனம்: தமிழில் ஒரு வருடத்துக்கு 5 தமிழ் படங்களுக்கு இனி இசையமைக்க திட்டம் ஏ.ஆர்.ரகுமான்!!!

Monday, April, 23, 2012
சமீபகாலமாக தமிழில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்கள் குறையாகவே உள்ளது. இதனால் இசைப்புயலின் ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். மேலும், பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக உள்ள ஏ.ஆர்.ரகுமான், குறிப்பிட்ட சில தமிழ் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார். இதனையடுத்து, தமிழில் ஒரு வருடத்துக்கு 5 தமிழ் படங்களுக்கு இனி இசையமைக்க திட்டமிட்டிருப்பதாக ஏ.ஆர்.ரகமான் தெரிவித்துள்ளார். தற்போது மணிரத்னம் படத்திற்கு இசையமைத்து வரும் ரகுமான், மேலும் நான்கு தமிழப் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். மணிரத்னத்தின் 'கடல்', ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்', தனுஷின் 'மரியான்', கௌதம் மேனனின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' போன்ற படங்களுக்கு ரகுமான் இசையமைக்கிறார்.

கோடம்பாக்கம் கோடங்கி!!!

Monday, April, 23, 2012
தன்னோட பர்மிஷன் இல்லாம மல்லிகை நடிகையின் கவர்ச்சி டான்ஸை படமாக்குன பாலிவுட் தயாரிப்போட ஆக்ஷனுக்கு பிரியமான இயக்கம் எதிர்ப்பு தெரிவிச்சாரு. இந்த மோதல் எதுலபோய் முடியுமோன்னு யூனிட்ல பயந்தாங்களாம்... பயந்தாங்களாம்... எடிட்டிங் டேபிளுக்கு இந்த பாட்டு வந்தப்போ அதை இயக்கம் கத்தரிச்சி எறிஞ்சிட்டாராம்... எறிஞ்சிட்டாராம்... தயாரிப்பும் எந்த எதிர்ப்பும் சொல்லாம கப்சிப் ஆயிட்டாராம். கோடிகளை கொட்டி தயாரிச்ச படம் ஒரு வழியா பிரச்னை இல்லாம ரிலீஸ் ஆனா போதும்னு தயாரிப்பு பின்வாங்கிட்டாராம்.

வாரண இயக்குனர் தன்னோட இந்தி படங்கள் பிளாப் ஆனதுக்கு ஹீரோக்கள்தான் காரணம்னு பழி சொன்னாரு. இதைகேட்டு பாலிவுட், கோலிவுட் ஹீரோக்கள் ஷாக் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... ஓடுன படத்துக்கு தான்தான் காரணம்னு சொல்ற இயக்கம் தோல்விக்கு ஹீரோ மேல பழி சொல்றதை ஏற்க முடியாதுன்னு அப்ஜெக்ட் பண்றாங்களாம். Ôரெண்டு தரப்புமே ஒருத்தர் மேல ஒருத்தர் பழிபோடாம இருந்தாதான் அடுத்தடுத்த படமாவது ஈகோ இல்லாம எடுக்க முடியும்Õனு வாரண இயக்குனரோட குருவான ராஜீவான மேன இயக்கம் அட்வைஸ் பண்றாராம்.

ரொம்ப நாளைக்குப் பிறகு சீயான் நடிகரோடு டேவிடான படத்தில் நடிக்க வந்திருக்கிறாரு தபு ஹீரோயின். கூடவே தாய்குலத்தையும் செட்டுக்கு கூட்டிட்டு வர்றாராம்... வர்றாராம்... இயக்கத்தை தவிர யாருமே நடிகைகிட்ட பேச தடையாம். புரொடக்ஷன் மேனேஜர், அசோசியேட் டைரக்டருன்னு யார்கிட்டேயும் பேசுறது கிடையாதாம். எதுவா இருந்தாலும் மேனேஜர்கிட்ட சொல்லித்தான் பதில் வாங்கணுமாம்.

ஹீரோவுடன் கிளுகிளுப்பான காட்சி : படத்திலிருந்து வெளியேறினார் பாவனா!!!

Monday, April, 23, 2012
ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா. ‘ஜெயம் கொண்டான்Õ, ‘சித்திரம் பேசுதடிÕ, ‘தீபாவளிÕ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை. மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான். சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் நெருக்கமாக நடிக்க சொன்னபோது அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் பல காட்சிகளில் அரைகுறை ஆடையுடன் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.

அப்படி நடிக்க முடியாது என்று கூறி படத்திலிருந்து விலகியுள்ளார் பாவனா. இது பற்றி பாவனா கூறும்போது, ‘Ôஇந்தி படத்தில் நடிக்க நான் தயங்கவில்லை. இம்ரானுடன் நடிக்கும் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இருக்கிறது. அவருடன் மிக நெருக்கமாக நடிக்க கேட்டதுடன், படுகவர்ச்சியாகவும் நடிக்க சொன்னார்கள். இது இம்ரான் படத்துக்கே உரித்தான முத்திரை. என் நிலை எனக்கு தெரியும். எப்படி நடிக்க வேண்டும் என்பதும் தெரியும். கவர்ச்சியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டிய அவசியம் இல்லை. உணர்வுபூர்வமான கதாபாத்திரம் மூலமே அறிமுகமாக விரும்புகிறேன்ÕÕ என்றார்.

ஆக்ஷன் குயினாக மாறி பைக்ரேஸில் அசத்திய சமீரா ரெட்டி!!!

Monday, April, 23, 2012
தீஸ் இந்திப் படத்துக்காக பைக் ரேஸ் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

பிரியதர்ஷன் இயக்கும் படம் தீஸ். இதில் அஜய் தேவ்கன், அனில் கபூர், சயீத் கான் ஆகியோருடன் இணைந்து சமீரா ரெட்டி நடித்துள்ளார்.

இந்தக் காட்சியில் நடித்தபோது, சமீராவுக்கு காயமும் ஏற்பட்டதாம். ஆனால் அதையெல்லாம் பொருபடுத்தாமல், அவர் சண்டைக் காட்சிகளில் நடித்துக் கொடுத்துள்ளார்.

இந்த ஆக்ஷன் அனுபவம் குறித்து சமீரா கூறுகையில், "ஆக்ஷன் படங்கள் ரொம்ப சவாலானவை. தீஸ் படத்தில் பைக் ரேஸ் காட்சி ஒன்றில் நடிக்க வேண்டிவந்தது.

மிகவும் விரும்பித்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால் பின்னர் அது சரியாக வருமா என்ற யோசனை வந்துவிட்டது. அப்படியே பின்வாங்கி விடலாமா? என்று கூட நினைத்தேன். ஆனால் நடித்துவிட்டேன். அந்த ஆக்ஷன் காட்சியில் எப்படி நடித்தேன் என்று இப்போது ஆச்சரியப்படுகிறேன்.

தீஸ் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்த சமயத்தில் எனக்காக செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்தது," என்றார்.

தீஸ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்துள்ளார். அடுத்தவாரம் ரிலீசாகிறது இந்தப் படம்.

எனது படங்கள் ஓடாததற்கு ஹீரோக்கள்தான் காரணம்!!!

Monday, April, 23, 2012
இந்தியில் நான் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததற்கு ஹீரோக்கள்தான் காரணம் என்றார் கவுதம் மேனன்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா. சிம்பு, த்ரிஷா நடித்திருந்தனர். இப்படத்தை ‘ஏக் தீவானா தா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் கவுதம் மேனன். பாலிவுட் ஹீரோ பிரதீக், மதராசபட்டினம் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன இப்படம் தோல்வி அடைந்தது. 10 வருடத்துக்கு முன்பு ‘மின்னலே படத்தை இயக்கினார். அப்படமும் இந்தியில் ரீமேக் செய்தபோது தோல்வி அடைந்தது. இது குறித்து கவுதம் மேனன் கூறியதாவது:

இந்தியில் நான் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததை ஏற்கிறேன். அதற்கு காரணம் கதை அல்ல. மின்னலேÕ படத்தில் மாதவன் நடித்தார். அவர் ஓவர் வெயிட் போட்டிருந்ததால் எடுபடவில்லை. அடுத்து ‘ஏக் தீவானா தா (விண்ணை தாண்டி வருவாயா) படத்துக்கு நான் செலக்ட் செய்த ஹீரோ பிரதீக் பொருத்தமானவராக அமையவில்லை. ஏற்கனவே 4 தோல்வி படங்களை அவர் தந்திருந்தார். ஹீரோவுக்கான இமேஜ் இல்லாமல் வில்லன் இமேஜ் கொண்டவர். பட ரிலீஸின்போது ஓபனிங் கூட இல்லை. இதே படத்தில் ரன்பிர் கபூர் ஹீரோவாக நடித்திருந்தால் படம் வெற்றி அடைந்திருக்கும்.

பில்லா 2 வெளியீட்டு உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!!

Monday, April, 23, 2012
அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

படத்தின் தயாரிப்பாளர் சுனீர் கேடர்பால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கேரளா தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதி வெளியீட்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன என்றார் சுனீர்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, தமிழக உரிமைக்கு மட்டும் ரூ 24.11 கோடியும், புதுவைக்கு ரூ 2 கோடியும் சேர்த்து, ரூ 26.11 கோடிக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் பிற மாநில உரிமைகள் அனைத்தும் சேர்த்து பெரும் தொகையை இந்தப் படம் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் மே மாதத்திலிருந்து படத்துக்கான விளம்பர வேலைகளைத் தொடங்குவதாக படத்தைத் தயாரிக்கும் இன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாரையும் பார்க்க விடாதீங்க... கண்டிஷன் போடும் தமன்னா!!!

Monday, April, 23, 2012
மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதற்கு ஒத்துக் கொண்டால், அவருக்கு ஓ.கேதானாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரி்த்துள்ளது. விளம்பரப் படங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனால் அவர் ரொம்பவே குஷியாக உள்ளார்.

தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசி. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது அவருக்கு வெள்ளை கலர் டிரஸ் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். தமிழில் அவர் கார்த்தியுடன் ஆடிய அடடா மழைடா, அடைமழைடா பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மழைக் காட்சிகளைப் படமாக்கும்போது ஈரம் சொட்ட சொட்ட ஆடும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவு போடுவது சரி பார்வையாளர்களை இயக்குனர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்களோ?