Wednesday, January 4, 2012

தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!:தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்!

Wednesday,January,04,2012
உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!

3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

"ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா" என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை. ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ். கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.

யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த செய்தி உண்மைதானா?அல்லது '3' படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.

தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்!

தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில்லாதவை என்று கமல் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் '3' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் பார்ட்டி, நிகழ்ச்சிகள் என ஒன்றாக சுற்றுவதாகவும், இது ரஜினி குடும்பத்தில் பெரும் புகைச்சலை உண்டாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் தொடர்பாக பல வதந்திகள் உள்ளதால், இந்த ஸ்ருதிஹாஸன் விவகாரத்தை வெறும் வதந்தியாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ருதிஹாஸனும் இப்போது மூன்றாவது முறையாக கிசுகிசுக்கப்படுகிறார்.

இந்த நிலையில், இப்போது தனுஷுடன் இணைத்து வெளியாகும் செய்திகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இது கொஞ்சமும் அடிப்படையில்லாத செய்தி. புத்தாண்டு அன்று நான் என் அம்மா, தங்கையுடன் கோவாவில் பார்ட்டி கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ். அதனால் அவருடன் அதிக நட்புண்டு. ஆனால் எனக்கு நல்ல பிரெண்டான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தொழில் ரீதியாகத்தான் எனக்கும் தனுஷுக்கும் நட்பு உள்ளது. வேறு எதுவும் இல்லை," என்கிறார் ஸ்ருதி.

தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

யூ டியூப்பில் விரைவில் 'கொலவெறி' வீடியோ!

Wednesday,January,04,2012
கொலவெறி பாட்டு, உலக முழுவதும் சூப்பர் ஹிட். யூ டியூப் முதல் ஃபேஸ் புக் வரை இந்த பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உலகின் வேறு எந்த ஒரு பட பாட்டுக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. அதுமட்டுமின்றி உலகமெங்கும் உள்ள மற்ற மொழியினரும், தங்கள் மொழியில் 'கொலவெறி' பாடலை உருவாக்கி யூ டியூப்பில் போட ஆரம்பித்துவிட்டனர். இதற்கு அடுத்தப்படியாக, தற்போது 'கொலவெறி' பாட்டின் வீடியோ காட்சிகளை விரைவில் யூ டியூப்பில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 'சூப் சாங்' எனப் பெயரிடப்பட்ட 'கொலவெறி' பாட்டின் வீடியோ காட்சிக்கு 'சூப் சாங் வீடியோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாட்டுக்கு நடனம் அமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்களை படக்குழுவினர் அணுகியுள்ளதாக தெரிகிறது. அதில் சிறந்த நடன இயக்குனரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்துள்ளது படக்குழு.

படம் இயக்குகிறார் விவேக்!

Wednesday,January,04,2012
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படம் இயக்க இருப்பதாக விவேக் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இதுவரை நான் நடித்த சில படங்களுக்கு நண்பர்களின் உதவியுடன் காமெடி டிராக் எழுதியுள்ளேன். இப்போது முதல்முறையாக படம் இயக்க ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. கிராமத்தில் தறுதலையாக இருக்கும் இளைஞன், எப்படி தபால்தலையில் இடம்பெறுகிறான் என்பது கதை. காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். தறுதலை இளைஞனாக நான் நடிக்கிறேன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

தமிழுக்கு திரும்புகிறார் ஷீலா!

Wednesday,January,04,2012
தமிழில் மீண்டும் நடிக்க இருப்பதாக ஷீலா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்ப் படங்களில் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மலையாளத்திலும் நடிக்கிறேன். இரண்டு மொழிகளில் நடிப்பதால் தமிழில் கவனமாக படத்தை தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது. இதனால் தமிழ் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டி வந்தது. தமிழில் கதை அம்சமுள்ள படங்கள் நிறைய வருகிறது. அவற்றில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழ் படத்தில் நடிப்பேன். தெலுங்கைப் போன்று தமிழிலும் எனக்கென்று தனி இடம் பிடிக்க ஆசை. இவ்வாறு ஷீலா கூறினார்.

அறுவடைக்கு காத்திருக்கிறது கும்கி டீம்!

Wednesday,January,04,2012
மைனா’ ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படம், ‘கும்கி’. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது: யானைகளின் பின்னணியின் இனிமையான காதல் கதையை சொல்கிறேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டது. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி சீசனுக்காக, கடந்த ஜூன் மாதம் வரை காத்திருந்து ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். அங்கு பல ரிஸ்கான காட்சிகளை படமாக்கியுள்ளோம். பிறகு அக்டோபர் மாதம் வரை மஞ்சள் பூக்கள் சீசனுக்காகக் காத்திருந்தோம். பின்னர் விசாகப்பட்டினத்தில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த இந்த பூக்களினிடையே படம் பிடித்தோம். இது விஷூவலாக புதுமையாக இருக்கும். இப்போது அறுவடை சீசனுக்காகக் காத்திருக்கிறோம். வரும் பிப்ரவரி மாதம் அறுவடை தொடங்கும். அப்போது சில முக்கியமான காட்சிகளை எடுக்க இருக்கிறோம். இந்த காட்சியை எடுத்தால் படம் முடிந்துவிடும். அதற்காக காத்திருக்கும் வேளையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.

படத்தயாரிப்பில் ஆர்யாவுடன் கூட்டு சேருகிறார் ஜீவா!

Wednesday,January,04,2012
புதிய படமொன்றை தயாரிப்பதில் நடிகர் ஆர்யாவும், நடிகர் ஜீவாவும் கூட்டு சேருகிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனான ஜீவாவுக்கு இதுவரை படத்தயாரிப்பில் நாட்டம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் ஆர்யாவின் ஆசை வார்த்தைகள் ஜீவாவை மயக்கி விட்டதுபோலும். முதன் முறையாக ஆர்யாவுடன் கூட்டு சேர்ந்து சினிமா தயாரிப்பில் இறங்குகிறார்.

இந்த ஹீரோக்கள் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பதும் இவர்கள்தானாம். படத்தை இயக்கவிருப்பவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் எம். என்பது கூடுதல் தகவல்.

ஜீவாவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா?

Wednesday,January,04,2012
ஜீவா இந்த வருடமும் பிசி தான். இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜீவாவுக்கு 5 படங்கள் கையில் உள்ளன. இதில் 'வாமனன்' இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தில் த்ரிஷாவை ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக த்ரிஷாவை சந்தித்து கதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அகமது. த்ரிஷாவும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வு தகவலும் வராததால் நம்மால் சரியாக சொல்ல இயலவில்லை.